ShareChat
click to see wallet page
search
#கலைஞர்102 முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்தநாளை முன்னிட்டு, புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் கறம்பக்குடி தெற்கு ஒன்றிய தீத்தானிப்பட்டியில் மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் அணியின் துணை அமைப்பாளர் மழையூர் AVG.சத்யா ஒருங்கிணைபில் சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நடத்திய மாபெரும் இலவச பொது மருத்துவ முகாமினை மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் KK.செல்லபாண்டியன் அவர்கள் தலைமையேற்று துவக்கி வைத்தார். 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த முகாமில் பங்கேற்று பயனடைந்தனர். பொதுமக்களுக்கு சிறுநீரக கோளாறுகள், எலும்பு மற்றும் மூட்டு சிகிச்சை, காது மூக்கு தொண்டை சிகிச்சை, இரத்த அழுத்த பரிசோதனை, சர்க்கரை நோய், மின்னிதயபடம் (இசிஜி) பரிசோதனை உள்ளிட்டவை எடுக்கப்பட்டது. 150 நபர்கள் மேல்சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் SS.கருப்பையா, மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் வடவாளம் மணிமாறன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் NM.அய்யப்பன், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் N.ராஜாராம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். DMK Pudukottai
கலைஞர்102 - a 8 { [ 3144 n    a 8 { [ 3144 n - ShareChat