ShareChat
click to see wallet page
search
#🥰பிறந்தநாள் வாழ்த்துக்கள் பெருந்தலைவர் காமராஜர் 💐 *கர்ம வீரர் காமராஜர் பிறந்த தினத்தில் நினைவு கூர்வோம்!* காமராசர் வாழ்ந்த வாழ்வு ஒரு சகாப்தம். கடந்த பல ஆண்டுகளாகத் தமிழகத்தில் ஏற்படாத மறுமலர்ச்சியும் விழிப்பும் இப்போது ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம் நமது காமராசர்தான். ஊர்தோறும் தொழில்வளம் ஏற்பட்டுள்ளது. மூவேந்தர் காலத்தில்கூட நிகழாத இந்த அதிசயத்தைச் சாதித்த நமது காமராசரின் அறிவுத்திறனை மறுக்க முடியுமா? இப்படியொரு புகழாரத்தைக் காமராசருக்கு சூட்டியவர் யார் தெரியுமா.? தந்தை பெரியார்தான். திராவிடர் கழகத் தலைவர் பெரியார் காங்கிரசுக் கட்சியின் மாநிலக் கமிட்டித் தலைவராகவும் தேசியத் தலைவராகவும் இருந்த காமராசரை இந்த அளவிற்குப் பாராட்டவேண்டிய காரணம் என்ன? யார் இந்த காமராசர் தனது 16வது வயதில் காங்கிரசு மூத்த தலைவர் வரதராஜுலு நாயுடு அவர்களின் பேச்சால் ஈர்க்கப்பட்டு காங்கிரசுக் கட்சியில் உறுப்பினராகிறார் காமராசர். காங்கிரசுக் கட்சியில் சேர்ந்த உடனே, வேல்ஸ் இளவரசருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டம், ஒத்துழையாமைப் போராட்டம் எனக் காங்கிரசு தேசியத் தலைமை அறிவித்த அனைத்துப் போராட்டங்களிலும் ஆர்வத்துடன் பங்கேற்றார். ஒத்துழையாமை இயக்கத்தைக் காந்தி அறிவித்தபோது, சத்தியமூர்த்தி அய்யர் போன்ற மூத்த தலைவர்கள் அந்தப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. அப்போது இளையவரான காமராசர் தலைமையில் குழு அமைத்து தமிழகத்திலுள்ள பலரையும் அந்த போராட்டத்தில் பங்கேற்க வைத்தார். 1930ஆம் ஆண்டு நடைபெற்ற உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்று காமராசர் கைதானார். அதன் பிறகு ஏற்பட்ட காந்தி இர்வின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் காமராசர் விடுவிக்கப்பட்டார். 1936ஆம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரசுக் கமிட்டிக்கானத் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் காமராசரின் அரசியல் வழிகாட்டியான சத்தியமூர்த்தி அய்யர் போட்டியிட்டார். அவருக்கு எதிராக, முத்துரங்க முதலியார் என்னும் மூத்த காங்கிரசுத் தலைவரை ராஜாஜி நிறுத்தினார். அப்போது தனது தலைவரான சத்தியமூர்த்தியை தலைவராக்க வேண்டும் என்று காமராசர் முயற்சி செய்தார். அவரது முயற்சியின் பலனாகத் தலைவராக சத்தியமூர்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். செயலாளராகக் காமராசர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 37ஆம் ஆண்டு காங்கிரசுக் கமிட்டித் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ராஜாஜி தலைவரானார். 38ஆம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலில், சத்தியமூர்த்தி மீண்டும் போட்டியிட்டார். ஆனால், ராஜாஜி நேருக்கு நேர் மோதவில்லை, அவர் சார்பாக முத்துரங்க முதலியாரை நிறுத்தினார். இந்தத் தேர்தலில் முத்துரங்க முதலியார் வெற்றி பெற்றார். காமராசரின் முயற்சி இந்தத் தேர்தலில் தோற்றுப் போனது. 39ஆம் ஆண்டு நடைபெற்ற காங்கிரசுக் கமிட்டித் தேர்தலில், சத்தியமூர்த்தி மீண்டும் களமிறங்கினார். அப்போது, ராஜாஜி மீண்டும் நேரடியாகக் களமிறங்காமல், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரை களமிறக்கினார். இந்தத் தேர்தலில் சத்தியமூர்த்தி தோற்று ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தலைவரானார். 40ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரசுக் கமிட்டித் தேர்தலில் தான் களமிறங்காமல், தன்னுடைய மாணவரான காமராசரைப் போட்டியிடச் செய்தார் சத்தியமூர்த்தி அய்யர்.காமராசருக்கு எதிராக, ராஜாஜி தன்னுடைய ஆதரவாளரான சி.பி.சுப்பையாவைப் போட்டியிடச் செய்தார். இந்த முறை ராஜாஜி வெற்றி பெறமுடியவில்லை. காமராசர் தமிழ்நாடு காங்கிரசுக் கமிட்டித் தலைவரானார். கட்சியில் சேர்ந்து 21 வருடங்களில் தனது அயராத உழைப்பாலும். உண்மையானத் தொண்டுள்ளத்தாலும் 37 வயதில் காங்கிரசுக் கமிட்டித் தலைவராகும் வாய்ப்பைப் பெறுகிறார். 1946ஆம் ஆண்டு நடைபெற்றக் காங்கிரசுக் கமிட்டித் தேர்தலில் காமராசரைத் தோற்கடிக்க, முத்துராமலிங்கத் தேவரை நிறுத்தலாம் என்று ராஜாஜி விரும்பினார்.ஆனால், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை ஆதரிக்காத ராஜாஜியிடம் பேசுவதைக் கூட முத்துராமலிங்கத் தேவர் விரும்பவில்லை. ஆகையால், சா.கணேசனை ராஜாஜி போட்டியாக நிறுத்தினார். இறுதியில் காமராசரே மீண்டும் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1948ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் போட்டியே இல்லாமல் காமராசர் வெற்றி பெற்றார். 1950ஆம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலிலும், காமராசரும் சி.பி.சுப்பையாவும் போட்டி போட்டு மீண்டும் காமராசரே வெற்றிப் பெற்றார். 1940ஆம் ஆண்டு தமிழ்நாடுக் காங்கிரசுக் கமிட்டித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டக் காமராசர் 1954ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படும் வரை தமிழ்நாடுக் காங்கிரசுக் கமிட்டித் தலைவராக இருந்தார் என்பதை வெறும் செய்தியாக மட்டும் கடந்துவிட முடியாது. ராஜாஜி போன்ற இந்திய அளவில் செல்வாக்குப் பெற்ற தலைவர்கள் கோலாச்சிய அந்த காலகட்டத்தில், அவருடைய எதிர்ப்பையும் மீறிக் கட்சியில் அவரால் செல்வாக்குப் பெற முடிகிறதென்றால், காமராசர் என்கிற இந்த எளிய மனிதன் தன்னுடைய சிந்தையால் செயலால் காங்கிரசுத் தொண்டர்களை வென்றிருக்கிறார் என்றுதானே பொருள். கட்சிக்குள் தலைமை பதவியை தக்கவைத்தவர் மட்டுமல்ல. ஆட்சி நிர்வாகத்திலும் ஆரம்பத்திலிருந்தே பங்கு கொண்ட பெருமை காமராசரைச் சாரும். 1937ஆம் ஆண்டு நடைபெற்ற மாநில சட்டசபைத் தேர்தலில் சாத்தூர் விருதுநகர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 1946ஆம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலில், அதே சாத்தூர் அருப்புக்கோட்டைத் தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். காங்கிரசுக் கட்சி பெரும்பான்மை பெற்ற வெற்றி பெற்ற தேர்தலில், ராஜாஜியை முதலமைச்சராக்கவேண்டுமென்று காந்தி விரும்பினார். காங்கிரசுக் கமிட்டித் தலைவர் காமராசர் காந்தியின் கோரிக்கையை ஏற்கவில்லை. ஆகையால், பட்டாபி சித்தராமைய்யாவைச் சந்தித்து நீங்கள் முதலமைச்சராக முடியுமா? என்று கேட்டார் காந்தி. அதற்கு பட்டாபி உடனடியாக, அது காமராசர் கையில்தான் உள்ளது என்றார். இறுதியில், பிரகாசம் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கும் அதிருப்தி நிலவியதால், பிரகாசம் காமராசரை அணுகி நீங்கள் யாரை அமைச்சரவையில் சேர்க்க சொல்கிறீர்களோ?, அவர்களை நான் சேர்த்துக் கொள்கிறேன் என்றார்.
🥰பிறந்தநாள் வாழ்த்துக்கள் பெருந்தலைவர் காமராஜர் 💐 - கர்மவீரர் குமாரசாமி காமராஜ் ன்று பிறந்தநாள் 15/07/1903 2 அக்டோபர் 1975) காமராஜர் 5ஜூலை 1903 என்று அழைக்கப்படுபவர் ஒரு இந்திய சுதந்திர ஆர்வலர் மற்றும் அரசியல்வாதி ஆவார் அவர் 13 ஏப்ரல் 1954 முதல் 2 அக்டோபர் 1963 வரை சென்னை மாநிலத்தின் குமிழ்நாடு) முதலமைச்சராக பணியாற்றினார் கர்மவீரர் குமாரசாமி காமராஜ் ன்று பிறந்தநாள் 15/07/1903 2 அக்டோபர் 1975) காமராஜர் 5ஜூலை 1903 என்று அழைக்கப்படுபவர் ஒரு இந்திய சுதந்திர ஆர்வலர் மற்றும் அரசியல்வாதி ஆவார் அவர் 13 ஏப்ரல் 1954 முதல் 2 அக்டோபர் 1963 வரை சென்னை மாநிலத்தின் குமிழ்நாடு) முதலமைச்சராக பணியாற்றினார் - ShareChat