#கவிதை மழை🌨 நவஜோதி கவிதைகள் ✍️
ஒரு ஊர்ல
ஒரு ராஜா
கதைசொல்ல
ஒரு வீட்டுல கூட
ஒரு பாட்டி யில்லை
இப்போது
*இல்லாமை*
🍂🍂🍂🍂🍂🍂
தவறுக்கு
மன்னிப்பும்
மன்னிப்புக்கு
நன்றியும்
சொல்பவனைவிட
நன்றிக்கும்
நன்றி சொல்லி
நிற்பதே
*பண்புடைமை*
🍂🍂🍂🍂🍂🍂
மழலைகள்
மிதித்து
மிதித்து
விளையாட
முதுகுவலியில்
குப்புறபடுத்த
நிலம்
மனநிம்மதியில்//
*நிறைவுடைமை*
🍂🍂🍂🍂🍂🍂
மலைச்சாரலில்
மழைச்சாரலில்
இளையராஜா
பாடல்கேட்டபடியே...
ஏகாந்தத்தில்
பேருந்து வாகனம்.
*மகிழ்வுடைமை*
🍂🍂🍂🍂🍂🍂
எத்தனை முறை
நீ சரியாகக்
கூட்டிப் பெருக்கி
காட்டினால்கூட
உன்னை சிறந்த
கணிதமேதை
என மாட்டேன்.
வறுத்தத்தில்
வாத்தியார் வீட்டு விளக்குமாறு
*வறுத்தமுடைமை*
🍂🍂🍂🍂🍂🍂
பாதுகாப்பாய்
பலநாள்
கட்டிவைத்து
வளர்ப்பதெல்லாம்
ஓர் நாள்
வெட்டுவதற்குத்தான்
புரியாத ஆடு
பாசத்தில்
முதலாளியோடு.
*அறியாமை*
🍂🍂🍂🍂🍂🍂
கவிதை மழை
அ. நவஜோதி✍️