"லிபியாவைச் சேர்ந்த இந்த சகோதரர் பெயர் அமீர். இந்த வருடம் 2025 ஹஜ் செய்ய நாடி விமானம் ஏற தயார் நிலையில் விமான நிலையத்தில் இருந்தார்.
ஆனால் விமான நிலையத்தில் பாதுகாப்பு மற்றும் தாமதம் காரணமாக அவர் தனது விமானத்தைத் தவறவிட்டார். விமான நிலைய அதிகாரிகள் அவரிடம் சொன்னார்கள்: "ஒருவேளை ஹஜ் உங்களுக்காக எழுதப்பட்டிருக்காமல் இருக்கலாம்" என்று.
ஆனால் அமர் உறுதியுடன் பதிலளித்தார்: "என் நோக்கம் ஹஜ் செய்வதே. அல்லாஹ் விரும்பினால், நான் ஹஜ் செய்வேன்."
சுப்ஹானல்லாஹ், அவர் தவறவிட்ட விமானம் இயந்திரக் கோளாறால் திரும்ப அதே விமான நிலையத்தில் தரை இறங்க வேண்டி இருந்தது. அந்த நேரத்தில் கூட, விமானத்தின் பைலட் அமருக்கு உள்ளே வர அனுமதிக்க மறுத்தார்.
விமானம் மீண்டும் அவரை விட்டுவிட்டு புறப்பட்டது... ஆனால் மீண்டும் இயந்திர கோளாறால் திரும்ப வந்தது. இந்த முறையில் பைலட் சொன்னார்: "அமர் விமானத்தில் இல்லையெனில் நான் விமானத்தை எடுத்து பறப்பதில்லை" என்று. சுப்ஹானல்லாஹ், இறுதியில் அமர் விமானத்தில் ஏறினார்.அவர் ஹஜ்ஜை அடைந்தார்.
ஏனெனில் உங்களுக்காக எழுதியிருப்பது, உலகமே அதற்கு எதிராக இருந்தாலும், அது உங்களை வந்து சேரும்.
அமரின் கதை நமக்கு நினைவூட்டுவது:
அல்லாஹ் நமக்கு ஒரு நலவை நாடி இருந்தால் அதை இந்த முழு உலகமும் எதிர்த்தாலும் அதை யாராலும் தடுக்க முடியாது. அல்லாஹ் நமக்கு ஒரு தீங்கு நாடி இருந்தால் அதை இந்த முழு உலகமும் உதவி செய்தாலும் அதை தடுக்க முடியாது.
*"ஸுப்ஹானல்லாஹ் அல்லாஹூ அக்பர் ☝🏻😥✨❤️*
وَاِنْ يَّمْسَسْكَ اللّٰهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهٗۤ اِلَّا هُوَ وَاِنْ يُّرِدْكَ بِخَيْرٍ فَلَا رَآدَّ لِفَضْلِهٖ يُصِيْبُ بِهٖ مَنْ يَّشَآءُ مِنْ عِبَادِهٖ وَهُوَ الْغَفُوْرُ الرَّحِيْمُ
அல்லாஹ் உங்களுக்கு ஒரு தீங்கிழைக்கும் பட்சத்தில் அதை நீக்க அவனைத் தவிர மற்றெவராலும் முடியாது. அவன் உங்களுக்கு ஒரு நன்மையை நாடினால் அவனுடைய அக்கருணையைத் தடைசெய்ய எவராலும் முடியாது. அவன் அடியார்களில் அவன் விரும்பியவர்களுக்கே அதை அளிக்கிறான். அவன் மிக்க மன்னிப்பவன், மிகக் கருணையுடையவன் ஆவான்.
(அல்குர்ஆன் : 10:107)
قُلْ لَّنْ يُّصِيْبَـنَاۤ اِلَّا مَا كَتَبَ اللّٰهُ لَـنَا هُوَ مَوْلٰٮنَا وَعَلَى اللّٰهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُوْنَ
(ஆகவே, நபியே! அவர்களை நோக்கி) ‘‘அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர வேறொன்றும் நிச்சயமாக எங்களை அணுகாது. அவன் தான் எங்கள் இறைவன்'' என்று நீர் கூறுவீராக. நம்பிக்கையாளர்கள் அனைவரும் அல்லாஹ்விடமே பொறுப்பை ஒப்படைக்கவும்.
(அல்குர்ஆன் : 9:51) #islamicposts #HalalPost #islamic Way Of Life Official #islam #Miracle


