#கலைஞர்102
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்தநாளை முன்னிட்டு, புதுக்கோட்டை வடக்கு மாவட்ட மாணவரணி மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமணை & கீரனூர் Humanity Foundation இணைந்து மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் கோ.அண்ணாதுரை, செ.பிரசன்னா ஆகியோர் ஒருங்கிணைப்பில் அன்னவாசல் வடக்கு ஒன்றியம் மருதாந்தலை அரசு உயர்நிலைப்பள்ளியில் நடத்திய மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாமை மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் KK.செல்லபாண்டியன் அவர்கள் தலைமையேற்று தொடங்கி வைத்தார்.
500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்ற இந்த முகாமில் 100 நபர்கள் மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டனர்.
100 நபர்களுக்கு இலவச மூக்கு கண்ணாடி வழங்கப்பட்டன.
நிகழ்வில் ஒன்றிய செயலாளர்கள் RRS.மாரிமுத்து, KP.அய்யப்பன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் T.செல்வம், ஒன்றிய அவைத்தலைவர் மாரிமுத்து, மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் M.செல்வக்குமார், அரசு வழக்கறிஞர் பூங்குடி சிவா, கந்தர்வக்கோட்டை தொகுதி சமூக வலைதள பொறுப்பாளர் எழில் ராஜா, விராலிமலை தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் தமிழினியன், ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் வெள்ளைச்சாமி, ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் RRS.ராஜேஷ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள்,கீரனூர் Humanity Foundation நிறுவனர் பொறியாளர் க.சுரேஷ் மற்றும் மதுரை அரவந்த் கண் மருத்துவமணை மருத்துவர்கள் செவிலியர்கள் பங்கேற்றனர்.


