வள்ளுவனே
#கவிதை மழை🌨 நவஜோதி கவிதைகள் ✍️
வள்ளுவனே!
எழுந்து வா!
வாசற்கதவை
திறந்து...வா!
ஈரடியால்
இழிவுகள்
துடைத்து
கழிவுகள்
நீக்க...
இன்னுமிங்கே
மிச்சம்
இருக்கு..!
இன்னொரு
வள்ளுவன்
உனைப்போல்
கிடைக்கவில்லை.
நீயேத்
திரும்பி.. வா!
இந்த பூமியைத்
திருத்திப்... போ!
வள்ளுவம்
கிடைத்த
ஆணவம்
எப்போதும்
எம்முள் ... மலர!
அ. நவஜோதி- ✍️