#தந்தையர் கரம் பிடித்து
நடக்கிறேன்
கால்த்
தடுக்கிடாது
உன்னை
பிடிக்கிறேன்.
நீ அழுது நான்
பார்த்ததில்லை.
நான் அழுக
நீ விட்ட தில்லை.
நடுநிசி
நீ வந்தாலும்
தலை தொடும்
அந்த சுகம்.
நான் ஆசைப்பட்ட
எல்லாம்
நீ வாங்கித் தர
ஆசைப்படும் மனம்...!
வறுமையில்
வாய்ப்புகள்தேடி
வருத்திக்
கொள்கிறாய்.
என் வளர்ப்பில்
உன் வனப்பைத்
தொலைக்கிறாய்.
எனைத்தூக்கிச்
சுமந்தே
துயரமெல்லாம்
மறக்கிறாயே.
எனக்கு தோல்வியற்ற
வாழ்வைத்
தருகிறாய்.
*அப்பா*
கவிதை மழை
நவஜோதி- ✍️