பிரபல யூடியூப் ராப் பாடகராக இருந்து, தற்போது தென்னிந்திய திரைப்பட உலகிலும் தனது இசைத் திறமையால் தனித்தடம் பதித்திருக்கும் வேடன், தற்போது ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
கேரளாவின் கொச்சி திருக்காக்கரா காவல் நிலையத்தில், ஒரு இளம் பெண் மருத்துவர், வேடன் மீது பாலியல் வன்கொடுமை புகாரை அளித்துள்ளார். அந்தப் புகாரில், "திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் அளித்து, தன்னை பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி இருக்கிறார் வேடன்" என அந்தப் பெண் குற்றஞ்சாட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புகாரின் அடிப்படையில், திருக்காக்கரா காவல் துறையினர், வேடனுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கின் பின்னணியில், இருவருக்கும் இடையேயான தொடர்பு குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#😨பிரபல பாடகர் வேடன் மீது வன்கொடுமை புகார் #📢 ஆகஸ்ட் 1 முக்கிய தகவல்🤗 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩


