ShareChat
click to see wallet page
search
*இன்று*(2-7-2025) *ஆனித்திருமஞ்சனம்* *சிறப்பு பதிவு*! மஞ்சனம் என்றால் நீராடல் என்பது பொருள். இறைவனின் நீராடலைத் திருமஞ்சனம் என்று குறிப்பிடுவர். ஒவ்வொரு ஆண்டும் ஆனிமாத உத்திர நட்சத்திர நாளில் இவ்விழா நடத்தப்படுகிறது. இதையொட்டி முக்கிய சிவாலயங்களில் பத்துநாள் விழா நடக்கும். ஒன்பதாம் நாள் விநாயகர், சுப்பிரமணியர், நடராஜர், சிவகாமி,சண்டிகேஸ்வரர் தேர்களில் வலம் வருவர். பத்தாம் நாள் நடராஜருக்கு திருமஞ்சனம் என்னும் சிறப்பு நீராடல் விழா நடக்கும். அபிஷேகத்துக்குப் பின் ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு பூஜை நடைபெறும். உச்சிவேளையில் (மதியம்) நடராஜர் ஆனந்த நடனம் ஆடியபடியே சித்சபையில் எழுந்தருள்வார். அவருடன் சிவகாமி அம்மையும் இருப்பாள். பின் மகாதீபாராதனை நடக்கும். அன்று இரவு கொடி இறக்கப்படும். உதயத்திற்கு முன்பே. தினமும் நடைபெறும் பூஜைக்கு நித்தியம் என்றும், விசேஷ கால பூஜைக்கு நைமித்திகம் என்றும் பெயர். நித்திய பூஜையில் உண்டாகும் குறைகள் நைமித்திக பூஜையில் நீங்குவதாக ஐதீகம். நடராஜப்பெருமானுக்கு ஒரு ஆண்டில் ஆறுமுறை விசேஷ அபிஷேகம் நடக்கும். இதில் இரண்டு அபிஷேகம் திருவிழாவாக நடத்தப்படுகிறது. அவை மார்கழி திருவாதிரை, ஆனி உத்திர திருமஞ்சனம். இந்த இரு நாட்களிலும் சூரியோதயத்திற்கு முன்பே நடராஜருக்கு அபிஷேகம் நடைபெறும். நடராஜருக்கு ஆனி உத்திர நாளில் அபிஷேகம் நடைபெற்றஆனி உத்திர திருமஞ்சனம் "தோடுடைய செவி என் விடையேறியோர் தூவெண்மதி சூடி"என்ற பாடல் பின்னணியில் ஒலிக்கும் காணொளிக்காட்சி உங்களுக்காக கீழே!👇🏻🚩🕉🪷🙏🏻 #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #ஆனி திருமஞ்சனம் #இன்று ஆனி உத்திரம் ஆனி திருமஞ்சனம் #தில்லை நடராஜர்🙏🙏🙏🙏🙏
🙏🏼ஓம் நமசிவாய - ShareChat
01:59