முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அரசு ஆண்கள் மே.நி. பள்ளியில், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்திய, மாபெரும் தனியார்துறை சிறப்பு வேலை வாய்ப்பு முகாமில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் கலந்துகொண்டு நேர்முகத் தேர்வில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார். இந்நிகழ்வில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.S.காந்திராஜன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
#கலைஞர்100 #dmkdindigul

