ShareChat
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 கர்ம பந்தம் 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 பந்தமே கர்மத்தை உருவாக்கியது...உன் பந்தங்களால் ஏற்படும் நன்மை தீமை இன்பதுன்பங்கள் அனைத்தும் உன்னையே சார்ந்தது...உலகில் பிறந்துவிட்டாலே தொடர்பு இல்லாமல் வாழ முடியாது... எந்த ஒரு செயலுக்கும் காரணகாரியங்கள் தன்னாலேயே வந்துயடைகிறது..‌அந்த செயலுக்குரிய காரணகாரியங்களுக்கு பிறந்த ஒவ்வொருவரும் அதை முடிக்காமல் முக்தி பாதையை அடைய முடியாது.....,.. பந்தம் பாசம் உறவு உனக்கு பலவித உயர்வும் தாழ்வும் இன்பதுன்பம் நன்மைதீமையில் மூழ்க வைத்தாலும் உண்மை பாதையில் பயணிக்க அநுபவபாடம் அளிக்கிறது....இதுவே ஞானபாதையை தேட வைக்கும்..... நீ எத்தனை பிறவி எடுத்து கர்மாவினால் பாவம் புண்ணியம் செய்து இருந்தாலும் இன்று பிறந்த பிறவியில் உன்னால் கழிக்க முடியும் என்பதை மறவாதே.....அதற்கு உறுதுணையாக இருப்பது சத்தியதர்மபாதையே ஆகும்...... நீ பார்க்கும் அனைத்தும் மாயாவின் கட்டுபாட்டில் இருக்கிறது..அனைத்தும் பொய்யே..இவையெல்லாம் மறைந்து மீண்டும் மீண்டும் வளரும்...ஆனால் நீ செய்த காரியங்கள் மட்டும் நிலையானது...அதன் அநுபவத்தை அனுபவித்தே ஆக வேண்டும்....மாயாவே உனக்கு பாடங்களை புகுட்டுகிறது...அதே மாயாதான் உனக்கு ஆசை உருவாக்கி உன் எண்ணங்களை சிதறடிக்கும்...இந்த ஆசைதான் கர்மாவை தொடங்க வைக்கும்....... எந்த செயலுக்குரிய அதிர்வலைகள் இவ்பிரபஞ்சத்தில் மிதந்து வந்து கொண்டே இருக்கும்...அந்த அதிர்வலைகளில் அனைத்து செயல்பாடுகளின் சங்கமம் நிறைந்துள்ளது...அதில் உன் செயலின் அதிர்வலைகளும் மிதந்து வருகிறது..காலத்தை எதிர் நோக்கி பயணிக்கிறது...காலம் வரும் போது அவரவர் செய்த செயல்களின் விளைவு அவர்களை வந்துடையாமல் இருக்காது........ எத்தனையோ மானிடஜென்மம் கடந்து கரை கடந்தவர்கள் ஏராளம்..அவர்களே சித்தன் யோகி முனி தேவன் என்று போற்றுகிறார்கள்...அவர்களுக்கு இந்த பாதையின் நெளிவு சுழிவு அறிந்தவர்கள்.....அவர்கள் தங்களோடு பலரை அழைத்து சென்று உள்ளனர்..அழைத்து செல்ல காத்து கொண்டும் இருக்கிறார்கள்.....என் செய்வது....... மனிதன் ஆனவயகங்காரம் கோபம் குரோதம் தற்பெருமை காமம் கொண்டு தன்னை ஒவ்வொரு நிமிடமும் மனிதநேயத்தை மறந்துவிடுகின்றான்..... அந்த சுயநலம் அவனை விட்டு அகல அவன் விருப்பம் கொள்வதேயில்லை....அதில் வரும் மகிழ்ச்சியே பிரதானமாக கருதுகிறான்... சிறிய சிறிய ஆசையில் மூழ்கி அதை பேராசையால் மனதில் உருவெடுத்து சிற்றின்பத்தால் அது மீண்டும் மீண்டும் கிடைக்க ஏங்குகிறான்....பேரியின்பம் என்னவென்று அறியாமல் தவிக்கிறான்...... ஒரு செயலை செய்வதற்கு முன்பும் பின்பும் வரும் விளைவுகளை சிந்திக்க தவற விடுகின்றான்...நிதானம் இழக்கிறான்.....எந்த ஒரு செயலையும் சிந்தித்து செயல்படுபவன் தன்னை பற்றி அறிவான்... எவனோருவன் அன்பை மனதில் நிறுத்தி கருணையை பார்வையில் செலுத்தி செயலில் உண்மையை விதைக்கின்றானோ அவனே பூர்வஜென்ம பந்தங்களிலிருந்து விடுதலை பெறுகின்றான்... இதற்கு ஓர் எளிய வழி உண்டு.அதுவே சத்குருவிடம் சரனாகதி அடைவதே...சத்குருவிடம் உன்னை ஒப்படைத்துவிட்டு சத்குரு பாதையில் பயணிப்பதே உத்தமம்..இதுவே உன் உயர்வுக்கும் முக்திக்கும் வழி வகுக்கும்.....இதுவே கர்மாவிலிருந்து விடுதலை தந்து மோட்சத்தை அளிக்கும்......உன் தொடர்பை சத்தியதர்மபாதையில் இனைத்து விடு......... வாழ்க சத்குரு வளர்க தர்மசிந்தனை..... ஜெயமோகன்சாமி நாமக்கல் 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 #🔱 கடவுள்