ஒன்றிய அரசின் ஆதிக்க இந்தி மொழித் திணிப்பையும் - இந்தியா முழுவதும் ஒரே பொது நுழைவுத் தேர்வையும் திரும்பப் பெற வலியுறுத்தி திருவண்ணாமலை தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட இளைஞர் அணி மற்றும் மாணவரணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பட்டத்தில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் திரு.M.S.தரணிவேந்தன் அவர்கள், திருவண்ணாமலை MP திரு.C.N.அண்ணாதுரை அவர்கள், மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் Dr.எ.வ.வே.கம்பன் அவர்கள், வந்தவாசி MLA திரு.S.அம்பேத்குமார் அவர்கள், செங்கம் MLA திரு.M.P.கிரி அவர்கள், செய்யார் MLA திரு.O.ஜோதி அவர்கள், கலசப்பாக்கம் MLA திரு.P.S.T.சரவணன் அவர்கள் உட்பட கழக நிர்வாகிகள் பலர் பங்கேற்று எழுச்சி முழக்கமிட்டனர்.
#StopHindiImposition #🧑 தி.மு.க


