🌹🌹தை பூசம் ஸ்பெஷல்: 3
🌹சங்கத் தமிழில் வேல் வழிபாடு
🌹🌹முருகனுக்கும் தைப்பூசத்துக்கும் என்ன தொடர்பு?
***********************************************
●முருகன் பிறந்த நாள் = வைகாசி விசாகம்
●அறுவரும் ஒருவர் ஆன நாள் = கார்த்திகை யில் கார்த்திகை
●அன்னையிடம் வேல் வாங்கிய நாள் = தைப் பூசம்
●அசுரரை அழித்தாட்கொண்ட நாள் = ஐப்பசி யில் சஷ்டி
●வள்ளியை திருமணம்புரிந்த நாள் = பங்குனி உத்திரம்
இப்படி... அன்னையிடம் வேல் வாங்கி, முதன் முதலாக, திருக்கையில் வேல் ஏந்திய நாளே தைப்பூசம்.
இந்த வேல் வாங்கிய நாளிலே, "வேல்" என்றா ல் என்ன என்று தெரிந்து கொள்வோம்.
வேல் என்பது தமிழ்த் தொன்மத்தின் தனித்த அடையாளம்.வேல், சங்கத் தமிழில் எப்படியெ ல்லாம் வலம் வருகிறது என்று காண்போம்..
🌹🌹வேல் - பெயர்க்காரணம்:
************************************
வேலுக்கு அப்படி என்ன சிறப்பு:
வெல் = வேல்! 'வெல்' என்ற வினைச்சொல்லே நீண்டு 'வேல்' என்ற பெயர்ச்சொல் ஆகிறது. ஆகவே, வேல் = வெற்றி!
வேல் - தமிழ்த் தொன்மம்:
ஆயிரம் ஆயுதங்கள் இருப்பினும், தமிழ் மன்ன ரகளின் தனித்த பெருமிதம் = வேல்..
*ஆண்டாளே, வென்று பகை கெடுக்கும் நின் கையில் "வேல்" போற்றி-ன்னு தான் மாயோ னாகிய கண்ணனைப் பாடுகிறார்.
*வேலும் சங்கும் சங்கத் தமிழ் மரபு.. *திருமங்கை ஆழ்வார் கையில் இப்பவும் வேல் உண்டு..
சங்க காலத் தமிழ் மண்ணில், வேல் வழிபாடே மிகுந்து இருந்தது.. பின்னாளில் தான் ஆறு முகங்களும், பன்னிரு கரங்களும்! ஆகமம், அது இது-ன்னு நுழைத்த பின்பே, ஒரு சாரா ரின் தலையீட்டால், மற்ற வழிபாடுகள் மெல்ல மெல்லப் புகுந்தன..
சிலப்பதிகாரத்தில், வேலுக்கு எனத்தனிக் கோ ட்டமே இருக்கும். இந்த வேல் வழிபாடு நாள டைவில் நின்று விட்டது! வேல் வழிபாடு-ன்னா நாகரிகம் இல்லாதவர்கள் கும்புடுவது, விக்ர ஹாதி மந்திர வழிபாடே நாகரிகம் என்று ஆகி விட்டது:
பல தொன்மையான கோயில்களில் முருகன் சிலையே இருக்காது.. வெறும் வேல் வழிபாடு தான்..
பழமுதிர்சோலை, திருச்செங்கோடு, ஈழத்தில் செல்வர் சந்நிதி,மலேசியாவில் பத்துமலை,
மற்றும் பல கிராம ஆலயங்கள் எல்லாம் வேல் வழிபாடு தான்!
🌹🌹வேலின் அமைப்பு:
***************************
வேல் எப்படி இருக்கும்?
இதைச் சொல்லணுமா என்ன? வேலைப் பார்க்காத தமிழரும் உளரோ? ஆனா, வேலின் அமைப்பு பற்றி இலக்கியங்கள் என்ன சொல்கின்றன?
பொதுவாக, வேல், எஃகினால் செய்யப்படும் போர்க் கருவி. எஃகு ஒரு கலப்பு உலோகம்
இரும்பு + கரிமம் குறிப்பிட்ட அளவில் கலந்து, உலைக்களத்தில் வடிக்கப்படும் கருவி.
மன்னர்களின் வேல் எஃகு என்றால், சில வேடர்களின் வேல் கல்லால் செய்யப் பட்டு, நெடுமரத்தில் பொருத்தப்பட்டும் இருக்கும். ஆயர்களும், ஆநிரைகளைக் காக்க, வெட்சி/கரந்தைப் பூச்சூடி, கையில் வேல் வைத்து இருப்பார்கள்.
"கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்"-ன்னு ஆண்டாள் பாடுவதையும் நோக்கவும்..
ஆலயத்தில் அழகுக்காகச் சார்த்தப்படும் தங்க வேல், வெள்ளி வேல், திருச்செந்தூர் வைரவேல் இதெல்லாம் போர்க் கருவி அமைப்பில் வாரா.
தமிழ்த் திருமகனாம், முருகன் திருக்கை வேல் எஃகு வேலே!
🌹🌹வேலின் தோற்றம்
***************************
* வேலின் முகம் = சுடர் இலை போல இருக்ககுமாம்
* வேலின் மெய் = நீண்ட நெடு வேலாம்.
" சூர் மருங்கு அறுத்த சுடர் இலை நெடு வேல்;
சினம்மிகு முருகன் தண் பரங் குன்றத்து
அந்துவன் பாடிய சந்து கதெழு நெடுவரை.."
* வேலின் தண்டு இலகுவாகவும், தண்டின் உட்புறம் உள்ளீடற்று (hollow) ஆக இருக்கும்.
* வேலின் முகமோ, பளு+ கூர்மை உடையதாக இருக்கும்.
வேல் எறிந்தால், திரும்பித் தானாக வராது. அதெல்லாம் சினிமாவில் தான். ஆழி (எ) சக்கரம், திரும்பி வரும், சங்கத் தமிழில், முல்லை நிலக் காட்டுக் குடிகளின் ஆழி பற்றி இன்னொரு நாள் பார்ப்போம்!
🌹🌹வேலும் ஈட்டியும் ஒன்றா??
***********************************
வேலும் ஈட்டியும் வேறு வேறு ஆயுதங்கள்.
* வேலின் முகம் = அகன்று விரிந்து இருக்கும்! ஈட்டியின் முகம் அகலாது குறுகி இருக்கும்.
* வேலின் கீழ் நுனி = வட்டமாக முடியும்! ஈட்டியோ நேர்க்கோட்டில் முடியும்.
வேல் = பெருமை மிக்கது! மன்னர்களும், படைத் தலைவர்களுமே பெரும்பாலும் ஏந்துவார்கள்.
ஈட்டி = அனைத்து போர் வீரர்களிடமும் உண்டு.
வேல் எறிவதும், சிறந்த பகைவர்களை நோக்கியே. அனைவரின் மேலேயும் வேல் எறிந்து விடுவதில்லை!
கான முயல் எய்த அம்பினில் - யானை
பிழைத்த வேல் ஏந்தல் இனிது .
என்ற குறளே இதற்குச் சான்று. முயலுக்கு அம்பு, யானைக்கு வேல்.
🌹🌹வேலின் சிறப்புப் பெயர்கள்:
**************************************
கூர் வேல், நெடு வேல், சுடர் வேல், வீர வேல், வெற்றி வேல்...ன்னு வேலுக்குத் தான் எத்தனை எத்தனை அடைமொழிகள்!
வீர வேல், தாரை வேல், விண்ணோர் சிறை மீட்ட தீர வேல், செவ்வேள் திருக் கை வேல், - வாரி குளித்த வேல், கொற்ற வேல், சூர் மார்பும் குன்றும் துளைத்த வேல் உண்டே துணை
🌹🌹ஓம் சரவணபவ...
🌹கந்தா சரணம்... ஷண்முகா சரணம்...
🌹23.01.2026... நேசமுடன் விஜயராகவன்....
#🤔 ஆன்மீக சிந்தனைகள் #லதாநடராஜன் பக்தி படம் & ஆன்மீக சிந்தனைகள் & ஜோதிடம் #💐வாழ்த்து #LathaNataraj Edit'Z #🕉️ஓம் முருகா
#📸பக்தி படம் #ஸ்ரீ கணபதி போற்றி & பக்தி படம் #லதாநடராஜன் பக்தி படம் & ஆன்மீக சிந்தனைகள் & ஜோதிடம் #LathaNataraj Edit'Z #🌻வாழ்த்துக்கள்💐
#✡️ராசிபலன் #லதாநடராஜன் பக்தி படம் & ஆன்மீக சிந்தனைகள் & ஜோதிடம் #📅பஞ்சாங்கம்✨ #🔮தை மாத ஜோதிடம்✨ #👉🏼இன்றைய ராசிபலன்✡️
#🇮🇳இந்தியனாக பெருமை கொள்வோம்💪 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #✍️தமிழ் மன்றம் #🕴 என் தனிப்பட்ட திறமை #LathaNataraj Edit'Z
#📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺வைரல் தகவல்🤩 #🐶Pet Love❤ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #LathaNataraj Edit'Z
#🤔 ஆன்மீக சிந்தனைகள் #லதாநடராஜன் பக்தி படம் & ஆன்மீக சிந்தனைகள் & ஜோதிடம் #🕉️ஓம் முருகா #✡️ராசிபலன் #LathaNataraj Edit'Z
#📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #LathaNataraj Edit'Z
#📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #LathaNataraj Edit'Z
#📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #LathaNataraj Edit'Z
♦️♦️தை பூசம் ஸ்பெஷல்: 4
🌹 வள்ளலார்- பகுதி 1
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அன்பு உருவம் பெற்று அருள் நிலை அடைந்து இந்த மண் உலகினில் உயிர்கள் எல்லாம் வருந்தும் வருத்தத்தைப் போக்கவும் அகத்தே கருத்து புறத்தே வெளுத்திருக்கும் மக்கள் அனைவரையும் உலகத்தில் திருத்துவதற்கா க இறைவனால் வருவிக்கவுற்றவர் திருவருட் பிரகாச வள்ளலார்.
வாழையடிவாழையாக வந்த திருக்கூட்ட மரபி ல் வந்தவர் வள்ளலார். அன்றைய தென்னாற் க்காடு மாவட்டம் இன்றைய கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் மருதூர் என்ற ஊரில் 05-10- 1823 ஆம் வருடம் சுபானு வருடம் புரட்டாசி மாத ம் 21 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு சித்திரை நட்சத்திரத்தி ல் பிறந்து முத்திரைப் பதிக்க வந்தவர் வள்ளலார். இவர் இயற்பெயர் இராமலிங்கம்.
🌹பெற்றோர்கள்:
தந்தையார் : இராமையா பிள்ளை
தாயார் : சின்னம்மையார்
🌹உடன் பிறந்தோர் :
சபாபதி - அண்ணன்
சுந்தரம்மாள் - அக்கா
பரசுராமன் - அண்ணன்
உண்ணாமலை - அக்கா
ஐந்தாவது மகனாக வள்ளலார் பிறந்தார்.
🌹வள்ளலார் வாழ்ந்த இடங்கள்:
மருதூர் : 1823 - 1824
சென்னை : 1825 - 1858
கருங்குழி : 1858 - 1867
வடலூர் : 1867 - 1870
மேட்டுக்குப்பம் : 1870 - 1874
🌹வள்ளலார் இந்த உலகத்துக்கு வந்ததின் நோக்கம்:
மனிதன் மாமனிதனாக வாழ்ந்து மரணமிலா ப் பெருவாழ்வு வாழ வேண்டும் என்பது தான் வள்ளலார் நோக்கம். அதற்காகத்தான் அகம் கருத்தவர்களையும் புறத்தில் வெளுக்கச் செய்யும் நோக்குடன் கருணை நிறைந்த திரு வருட்பா பாடல்களையும் உரைநடைப் பகுதிகளையும் திருமுகங்கள் (கடிதங்கள்) மூலமும் பேருபதேசம் மூலமாகவும் ஆன்ம நேயத்துடன் இந்த மனித குலத்தை வாழ்விக்க தேனினும் இனிய திருவருட்பாக்கள் அளித்து மனிதன் நீடுழி வாழ நமக்கு அருள் புரிந்தார்கள்.
🌹வள்ளலார் கொள்கைகள்:
1. எத்துணையும் பேதமுறாது எல்லா உயிரும் தம் உயிர்போல் எண்ணும் உயர்ந்த நோக்கம் வேண்டும்.
2. ஜீவகாருண்யம் தான் மோட்ச வீட்டின் திறவுகோல்.
3. கடவுள் ஒருவரே: அவர் ஒளி வடிவானவர் (அருட்பெருஞ்ஜோதி).
4. ஜாதி சமய மதங்கள் எல்லாம் கடந்து ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் ஒருமை உணர்வாளராக இருக்க வழி செய்ய வேண்டும்.
5. கண்மூடி வழக்கெல்லாம் மண்மூடி போக வேண்டும்.
6. தானம் தவம் இரண்டும் இரு கண்கள் அதன் நுட்பங்களை விளக்கினார்.
7. புலால் மருப்பு உயிர் ஓம்புதல் பசித்தவர்க ளுக்கு பசித்தவிர்த்தல் புரிய வேண்டும்.
8. கடவுள் பெயரால் பலியிடக் கூடாது.
9. சிறு தெய்வ வழிபாடு கூடாது.
10. கணவன் இறந்தால் மனைவி தாலி வாங்க வேண்டாம்.
11. மனைவி இறந்தால் கணவன் மறுமணம் செய்ய வேண்டாம்.
12. இறந்தவர்களை புதைக்க வேண்டும். எரிக்கக் கூடாது.
13. கருமாதி திதி முதலிய சடங்குகள் செய்ய வேண்டாம்.
14. எதிலும் பொது நோக்கம் வேண்டும்.
🌹வள்ளலார் அருளிச் செய்தவைகள்:
தேனினும் இனிய திருவருட்பாக்கள் 5818 பாடல்களை அருளியுள்ளார்கள். இவை ஆறு திருமுறையாக வகுக்கப்பட்டுள்ளன.
இவற்றில் முத்தாய்ப்பானது அருட்பெருஞ் ஜோதி அகவல்.
உரை நடை நூல்கள்:
1. மனுமுறை கண்ட வாசகம்
2. ஜீவ காருண்ய ஒழுக்கம்
3. வியாக்கியானங்கள்
4. மருத்துவக் குறிப்புகள்
5. உபதேசங்கள்
6. திருமுகங்கள் (கடிதங்கள்)
7. அழைப்பிதழ்கள் அறிவிப்புகள் கட்டளைகள்
8. விண்ணப்பங்கள்
🌹வடலூரில் வள்ளலார் நிறுவிய தெய்வ நிலையங்கள்
1. சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் 1865
2. சத்திய தருமச்சாலை 1867
3. சத்திய ஞான சபை 1872
4. மேட்டுக்குப்பம் சித்தி வளாகம்
🌹வள்ளலார் ஒரு பன்முக படைப்பாளி:
1. நூலாசிரியர்
2. உரை ஆசிரியர்
3. பதிப்பாசிரியர்
4. பத்திரிகை ஆசிரியர்
5. போதகாசிரியர்
6. ஞானாசிரியர்
7. சித்த மருத்துவர்
8. வியாக்கியான கர்த்தர்
9. அருள் கவிஞர்
10. அருள் ஞானி
வள்ளலார் மணி ,மந்திரம், மருந்து இந்த மூன்றிலும் கைத்தேர்ந்தவர். இந்த தேகம் நீடிக்க வேண்டி பல்வேறு மருந்துகளை நமக்கு வள்ளலார் வழங்கியுள்ளார்.
485 வகையான மூலிகைகள் மற்றும் அதன் குணங்களை அட்டவணைப் படுத்தியுள்ளார்.
ஞான மூலிகைகள் என ஐந்து மூலிகைகளை கூறியுள்ளார். அவை 1.கரிசலாங்கண்ணி 2. தூதுவளை 3.வல்லாரை 4.முசுமுசுக்கை 5. பொன்னாங்கண்ணி
இவையல்லாமல் ஐந்து சஞ்சீவி மூலிகைகள் அதன் குணம் பற்றி கூறியுள்ளார்.
இந்ததேகம் நீடிப்பதற்கு நித்திய கருமவிதிகள் கூறியுள்ளார்.
உபதேசங்கள் பேருபதேசங்கள் செய்துள்ளார்.
1. ஆகாரம் அரை
2. நித்திரை அரைக்கால்
3. விந்து வீசம்
4. பயம் பூஜ்ஜியம்
🌹நான்கு விதமான ஒழுக்கங்கள் கூறியுள்ளர்
1. இந்திரிய ஒழுக்கம்
2. கரண ஒழுக்கம்
3. ஜீவ ஒழுக்கம்
4. ஆன்ம ஒழுக்கம்
🌹மனிதன் துர்மரணம் அடைவதற்கான காரணத் தை வள்ளலார் கூறியுள்ளார்.
1. அருந்துதல் (அதிகமான சாப்பாடு)
2. பொருந்துதல் (அதிகப்படியான உடல் உறவு)
🌹வள்ளலார் ஒரு வெள்ளாடை துறவி:
துறவியான வள்ளலார் பசித்த அனைவருக் கும் சத்திய தருமச்சாலையை நிறுவி 152 ஆண்டுகளாக அவர் மூட்டிய அடுப்பு இன்று வரை எரிந்து வருகிறது. சத்திய ஞான சபை யில் வள்ளலார் ஏற்றிவைத்த ஜோதி தரிசனம் 148 ஆண்டுகளாக நடந்து வருகிறது. சித்தி வளாகம் மேட்டுக்குப்பத்தில் வள்ளலார் திருக்கரங்களால் ஏற்றப்பட்ட திருவிளக்கு 146 ஆண்டுகளாக சுடர்விட்டு பிரகாசித்து கொண்டு வருகிறது.
" சாலை நடந்து வருகிறது, சங்கம் செயல் பட்டு வருகிறது, சபையில் ஜோதி தரிசனம் நடந்து வருகிறது, நானே சன்மார்க்கம் நடத்துகிறேன்
எனக்குள் தனித்து.." என்றார் வள்ளலார்..
அவர் சொல்படியே இன்றளவும் எல்லாம் சிறப் பாக நடந்து வருகிறது. இந்த செயல்பாடு களே வள்ளலாரால் தான் நடைபெறுகிறது என்பதற்கு வேறு சான்று வேண்டாம். “எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க” இந்த ஒற்றை வரி தான் வள்ளலார் வழிபாடு. உலகினில் உயிர்களுக்கு உறும் இடையூறுகள் எல்லாம் விலக நீ அடைந்து விலக்குக் மகிழ்கசுத்த சன் மார்க்க சுக நிலைப் பெறுக உத்தமன் ஆகுக: ஓங்குக என்பதே வள்ளலார் திருவாக்கு.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
வள்ளல் மலரடி வாழ்க வாழ்க
சற்குரு நாதா சற்குரு நாதா சன்மார்க்க சங்கம் தழைக்க அருள் தாதா வள்ளலார் கழல் வாழ்த்தல் வாழ்வாவதே.
🙏அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
🙏தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
🚩தொடரும்....
🌹24.01.2026.. நேசமுடன் விஜயராகவன்... #🕉️ஓம் முருகா #🤔 ஆன்மீக சிந்தனைகள் #லதாநடராஜன் பக்தி படம் & ஆன்மீக சிந்தனைகள் & ஜோதிடம் #✡️ராசிபலன் #LathaNataraj Edit'Z












