
Thyagarajan Velmurugan
@2290917095
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
"நாய்க்குப் போட்டாச்சா
நாய்க்கும் ஈந்த நாயகராக நமது சாஸ்திரக் காவலர்"
பெரியவா தமது அருள் ஆஃபீஸை மீண்டும் தொடங்கும் போது கேட்கும் முதற் கேள்வி நாய்க்குப் போட்டாச்சா என்பது தான்.
நாயைத் தாழ் பிறவியாகவே சாஸ்திரம் கூறும் ஆனால்
நாய்க்கும் ஈந்த நாயகராக நமது
சாஸ்திரக் காவலர் இருக்கிறார்.
1927-ம் வருஷத்தில் ஒரு நாய் மடத்து முகாமுக்குத் தானாகவே
வந்து காவல் காக்கத் தொடங்கியது.
தமது பிக்ஷை முடிந்தவுடன் அதற்கு ஆஹாரம் போடுமாறு
பெரியவா ஆக்ஞாபித்தார்.
விந்தையாக மடத்து பிக்ஷை சேஷத்தை உண்ண ஆரம்பித்த
பின் அது வேறெவர் எது கொடுத்தாலும் உண்ண மறுத்தது.
ஸ்ரீ மஹா பெரியவா பல்லக்கில் ஊர் ஊராக சென்று
கொண்டிருந்த காலத்தில் அந்த நாய் ஒன்று அந்தப் பல்லக்கின்
கீழேயே போகும் அல்லது
யானையின் தூண் போன்ற நாலு கால்களுக்கு உள்ளாகவே
போகும்.
பல்லக்கு நிறுத்தப்பட்டவுடன்
எட்டத்திற்கு ஓடிச் சென்று
பெரியவா இறங்கிச் செல்வதை அங்கிருந்தே கண்குளிரக்கண்ட
வாலை ஆட்டும்.
ஒரு முறை அதற்கு வெறிபிடித்து விட்டதாகச் சிப்பந்திகள் எண்ணினர் சேவகன் ஒருவனிடம் அதன் கண்ணைக் கட்டி நாற்பது கிலோமீட்டர் தள்ளியிருந்த
ஒரு கிராமத்தில் கயிற்றால் பிணித்து விட்டுத் திரும்பி வருமாறு பணித்தனர்.
அப்படியே அச்சேவகன் செய்து திரும்பினான் அவன் திரும்பும் முன்னரே பைரவனாரும்
திரும்பியிருந்தார் அவருக்கு வெறியில்லை என்று தெரிந்தது.
அன்றிலிருந்து மஹா பெரியவாளைத் தரிசிக்காமல்
உண்பதில்லை என்று அந்த நாய் உயிர் பிரியம் வரையில் விரதம் காத்தது.
"ஜெய சங்கர ஹர ஹர சங்கர"
#periyava #mahaperiyava #truestory
#kanchimahaperiyava #kanchimahan
#kanchipuram #kanchikamakshiamman #kamakshiamman
#mahaperiyavamagimaigal
#sageofkanchi #devotional #viralvideo #hindutamil #jai mahaperiyava #periyava mahaperiyava #🙏ஆன்மீகம் #🙏கோவில்
"நிறைவு பகுதி"
மற்றவர்களுக்கு அடுத்தடுத்த வீடுகளில் தலை வாழை இலையில் சாம்பார் ரசம் பொரியல் கூட்டு பொரித்த அப்பளம் வடை பாயசம் என்று அமர்க்களப்பட்டது.
செய்தி கேள்விப்பட்டு உள்ளூரிலிருந்தும் பக்கத்து கிராமங்களிலிருந்தும் சாரி சாரியாக மக்கள் வந்த வண்ணமிருந்தனர்.
மிராசுகளும் விவசாயிகளும் தொழிலாளர்களும் வந்தனர். ஒரு மூதாட்டி மடியில் கட்டி
வந்த தன் கூலி நெல்லை சுவாமியின் முன் சமர்ப்பித்து தெண்டனிட்டார்.
பழங்களும் தாமரைப் பூவுமாய் மக்கள் கொண்ட வந்த காணிக்கைகளால் திண்ணை நிறைந்துவிட்டது.
வடக்க இந்து முஸ்லிம் கலவரம் சதா நடந்திண்டிருக்கு ஒயரதே இல்லை ரத்த வெள்ளம் தான் அமைதியே இல்லை அமைதி உண்டாக பெரியவா தான் மனசு வைக்கணும்.
நம்ம ஊர்லயே மத மாற்றம் நிறைய நடக்க ஆரம்பிச்சாச்சு சிலுவைக்கு பாதி மசூதிக்கு பாதின்னு நிறைய மனுஷா மாறிண்டிருக்கா தடுத்து நிப்பாட்டணும் ஏதாவது வழி ஊர் மக்கள் கொட்டித் தீர்த்தார்கள்.
சாது எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டது மௌனமாய். விருப்பப்பட்டால் ஒரு பூவோ ஒரு துளசி விள்ளலோ ஒரு எலுமிச்சை பழத்தையோ எடுத்துக் கொடுத்தது.
சிலருக்கு அதுவும் கிடையாது ஆனால் யாருக்கும் ஒரு வார்த்தை வாய் திறக்க வில்லை இடையில் மாலியை சைகை செய்து கூப்பிட்டார் லிங்க வடிவில் அபினயம் செய்து கோபுர வடிவில் கைகளை உயர்த்தி எங்கே என்று வலது கை மடித்துக் கேட்டார்.
மற்றவர்கள் ஒன்றும் புரியாமல் மௌனமாய் நின்றனர் மாலி கற்பூரமாய் புரிந்து கொண்ட கூட்டத்தைப் பார்த்து கேட்டார்
இந்த ஊரில் சிவன் கோவில் எங்க இருக்கு கூட்டம் விழித்தது ஒருவருக்கும் தெரியவில்லை.
இந்தூர்ல ஒரு அய்யனார் கோயில் ஒரு மாரியம்மன் கோயில் ஒரு பெருமாள் கோயில் நத்தம் எல்லையில் ஒரு பிள்ளையார் கோயில் தான் உண்டு சிவன் கோயில் இல்லையே என்றார் தொன்னூரு வயது ரெங்கண்ணா.
இருந்திருக்கு நிச்சயமா தெருவின் மேல் கோடீல பெருமாள் கோவில் இருந்தா கீழ்க்கோடீல கண்டிப்பா சிவன் கோவில் இருந்திருக்கணுமே
இருந்தது கண்டிப்பா இருந்திருக்கு.
பதில் சொல்லத் தெரியாமல் கூட்டம் விழித்தது குழப்பமான மௌனம் நிலவியது அங்கே சிவன் கோவில் எங்கே எப்பொழுது இப்பொழுது எங்கே எப்படி என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது தான் லத்திஃப்பாயும் அவர் மனைவி
மெகருன்னிசாவும் வந்தனர். கொண்டு வந்திருந்த பேயன் பழம் இரண்டு சீப்பையும் கொழுந்து வெற்றிலை ஒரு கவுளியையும் அப்பொழுது தான் பறித்த இரண்டு ரோஜாப் பூக்களையும் சுவாமி முன் வைத்து வந்தனம் செய்தனர்.
தாமரைக் கண்கள் வந்தவர்களை பாதாதி கேசம் உற்றுப் பார்த்தது ஊடுருவிப் பார்த்தது ஆசிர்வதித்தது குளிறப் பண்ணிற்று லத்திஃபும் அவர் மனைவியும் மெய்மறந்து நின்றனர்.
நேற்று கொல்லைப்புறம் செத்தி கொத்திய பொழுது மண்வெட்டியில் ஏதோ தட்டுப்படடது கடப்பாறையைக் கொண்டு அழத்தோண்டி பார்த்தபொழுது பெரிய சிவலிங்கம் ஒன்று தட்டுப்பட்டது.
அடுத்து தளவரிசை படிந்து போன கருங்கற் தூண்கள் பின்னால் பாழடைந்த கிணறு என்று ஒவ்வொன்றாய்த் தட்டுப்பட்டது எனக்கு இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை.
ஒரே கலக்கமாகவும் இருந்தது என்ன செய்றது அல்லாவேன்னு ராத்திரி முழுக்க விசனப்பட்டு உட்கார்ந்திருந்த போது தான் பெரியவர் வந்திருக்கும் செய்தி வந்தது.
இதற்குமேல் கொண்டு என்ன செய்ய வேண்டும் என்று தாங்கள் தான் கூற வேண்டும்
லத்திஃப் சொல்லச் சொல்லக் கூட்டம் மெய்மறந்து உட்கார்ந்திருந்தது.
பல நூற்றாண்டுகளுக்கு முன் சிவன்கோயில் அங்கு இருந்திருக்கிறது. காலப்போக்கில் கவனிப்பாரில்லாது சிதிலற்று மண்ணுள் புதைந்து மறைந்து விட்டது.
எங்க வாப்பா பள்ளிவாசல் நிலங்களை சாகுபடி செய்யும்பொழுது கூடவே கோவில் நிலங்களையும் குத்தகைக்கு எடுத்து சாகுபடி செய்தாக நெல் அளக்கும் போது ஒரு மரக்கால் கூட குறையாம அளப்பாக சிவ சொத்து குல நாசம்ன்னு சொல்லி அல்லா சாட்சியா அத்தனை நேர்மையா அளப்பாக.
எனக்கும் அதே தர்ம புத்தி நியாபுத்தி உண்டு அப்படியும் பொறந்த ஒத்த பொம்பள புள்ளையும் மன வளர்ச்சி இல்லாததாவே இருந்து பத்து வருஷத்துக்கு முன்ன செத்து போச்சி.
அறியாம செய்த பாவத்துக்கே அந்த கூலி தெரிஞ்சும் பாவம் செய்ய மனம் ஒப்பலை மனசார எழுதித்தர்ரேன் எனக்கு பறம் பைசா வேண்டாம்.
சுயநினைவோட சுத்த மனசோட தர்ரேன் பழையபடி அங்க சிவன் கோவில் கட்டிக்குங்க ஊர் ஜனத்துக்கு பயன்பட்டா அல்லா சந்தோஷப்படுவார்.
இந்தாங்க கோவில் கட்ட எங்களால் ஆன் பணம் 101 இதை முதல் வரவா வச்சிகிங்க என்று வெற்றிலை பாக்கு தட்டில் வைத்து அவர் கொடுத்த பொழுத கூட்டத்தில் எல்லோருக்கும் உடம்பு சிலிர்த்தது.
படிக்கும் பையன்களிடமிருந்து ஸ்லேட்டும் குச்சியும் தருவிக்கப்பட்டு பெரியவாளிடம் கொடுக்கப்பட்டது.
மார்க்கக் கடமையை முடித்துவிட்டீர்களா ஸ்லேட் லத்தீஃப் தம்பதியை நோக்கித் திரும்பியது.
இன்னும் இல்லை பாவியாகத் தான் இருக்கோம் அதுக்குண்டான வசதியை இன்னும் அல்லா எங்களுக்குக் கொடுக்கலை.
பல வருஷமா எத்தனையோ முயற்சி பண்ணியும் மெக்கா மதீனா போறது இன்னைக்கு வரைக்கும் கனவாத்தான் இருக்கு இதைச் சொல்லம் பொழுது லத்தீஃப்பாய் மனைவியின் குரல் தழுதழுத்தது.
பெரியவா வைத்தாவைப் பார்த்தார் பார்வையின் பொருள் புரிந்த வைத்தா கூட்டத்தைப் பார்த்து இந்த உயர்ந்த மனிதர்களிடமிருந்து கோயில் கட்ட இடத்தை இனாமா வாங்கிக்கறேளளே.
பிறதியா நாம ஒண்ணும் செய்யவாண்டாமா அவாளுக்கு
பரபரவென்று யோசித்து சடாரென்று முடிவு செய்து அவங்க புனிதப் பயணம் போய் வர்ர செலவு அத்தனையும் எங்களோடுது ஏகமனதாய் கூட்டம் சொல்ல திண்ணையில் அமிர்தம் நிறைந்து வழிந்தோடியது.
லத்தீஃப் தம்பதி நெஞ்சில் கைவைத்து சிரம் தாழ்த்தி நன்றி நவின்றனர் கண்களில் நீர் வழிந்தது ஞானி
தாமரை கண்களால் எல்லோரையும் ஆசிர்வதித்தார்.
அபயஹஸ்த்தம் காட்டி ஆசிர்வதித்த மகான் எழுந்தார் தண்டத்தை எடுத்துக் கொண்டார் பல்லக்கு அருகில் வர ஏறிக் கொண்டார் யானை ஒட்டகமெல்லாம் தொடர்ந்து வர பயணம் மீண்டும் திருநாட்டியத்தான்குடி நோக்கிப் புறப்பட்டது.
"ஜெய சங்கர ஹர ஹர சங்கர"
#periyava #truestory #kanchimahaperiyava
#jai mahaperiyava #periyava mahaperiyava #🙏ஆன்மீகம் #🙏கோவில்
அந்த விடியற்காலை வேளையில் ஜெய கோஷத்துடனும் மாறாத நம்பிக்கையுடனும் யாத்திரை போய்க் கொண்டிருந்தது.
மாசிமாத ஊதற்காற்று உடலில் ஊசியாய் இறங்கிற்கு யானை ஒட்டகம் குதிரைகள் முன் செல்ல நடுவில் பல்லக்கு அசைந்து வந்தது.
பின்னே பக்தர் குழாம் நாகங்குடி சாத்தனூர் பழையனூர் கிளியனூர் என்று வெண்ணாற்று வடகரையில் தொடர்ந்து கொண்டிருந்தது பயணம்.
அடுத்து மாயனூர் திட்டச்சேரி ஹரிச்சந்திரபுரம் தாண்டி நத்தம் வந்த பொழுது பிள்ளையார் கோவில் முக்கில் இரு ஊராய் பிரந்தது பாதை.
பல்லக்கின் உள்ளிருந்து தண்டத்தால் பலகையைத் தட்டும் ஓசை கேட்டது பல்லக்கு நின்றது உள்ளிருந்த கை வலது பக்கப் பரிவில் போகச் சொல்லி சைகை செய்தது.
அவர்கள் பயணத் திட்டப்படி இடது பக்கப் பாதையில் நெடுங்கரை வழியாக ஆத்தூரைக் கடந்து நாட்டியத்தான் குடி செல்ல வேண்டும்.
ஆனால் திடீரென்று உத்தரவு வேறு விதமாக வருகிறதே என்று ஒன்றும் புரியாமல் திகைத்தது பின்னே வந்த கூட்டம்.
ஏன் நிப்பாட்டியாச்சு என்றார் வைத்தா இல்லே பிளான் படி
அந்தப்பக்கம்னா போக என்று முடிக்கவில்லை மகாலிங்கம்.
நீரும் நானும் யாருங்கானும் பிளான் பண்றத்துக்கு இந்தப் பக்கம் போகச்சொல்லி உத்தரவாச்சுன்னா கண்ண மூடிண்டு போய்த் தான் ஆகணும்.
ஒரு சின்ன அசைவுலையும் ஆயிரம் அர்த்தம் இருக்கும் காரண காரியத்தை கேட்டுக் கொண்டிருக்கப்படாது.
உமக்கும் எனக்கும் என்ன தெரியுமா பின்னாடி தான் புரியும் எல்லாம் என்றார் வைத்தா தீர்மானமாக.
இது எந்த ஊர் போற பாதை
மண மங்கலம் யப்பா யானை
ஒட்டகம் குதிரை எல்லாத்தையும் இந்தப் பக்கம் திருப்புங்கோ பிரயாணம் இந்த மார்க்கமா போப்போறது.
என்று அவர்குரல் கொடுத்ததும் இடது பக்கம் திரும்ப எத்தனித்த கூட்டம் வலது பக்கப் பாதையில் திரும்பிற்று.
என்னவாய் இருக்கும் என்று எண்ணியபடியே மாவு சம்புடத்தை மூடித் திண்ணைக் குறட்டில் வைத்துவிட்டு நிமிர்வதற்குள் காட்சி பிரசன்னமாயிற்று.
யானை ஒட்டகம் குதிரைகள் பல்லக்கு என்று ஒவ்வொன்றாய் வர விக்கித்துப் போய் பார்த்துக் கொண்டிருந்தாள் வேம்பு.
பல்லக்கின் உள்ளிருந்து தண்டத்தால் மீண்டும் தட்டல் பல்லக்கு நின்றது மீண்டும் ஒரு சின்ன தட்டில் கீழ் நோக்கி பல்லக்கு தரை இறங்கிற்று.
மெல்லிய இரண்டு பாத கமலங்கள் வெளிப்பட்டன வலது பாதத்தை முதலில் எடுத்த அழுந்த பூமியில் ஊன்றி அடுத்து இடது பாதத்தைத் தூக்கி வைத்து காவி முக்காட்டை சரிபண்ணியபடி தண்டம் ஊன்றி அந்தத் “திரு" எழுந்து நிற்கவும் வேம்புவிற்கு பாதாதிகேசம் சிலிர்ப்பு ஓடியது.
உடம்பே கிடுகிடுத்து கால்கள் துவண்டும் இற்றும் போய்விடும் போல் இருந்தது சிரமப்பட்டு வாசல் தூண் பிடித்து கீழிறங்கி “சர்வேசா" என்று கதறியபடி நமஸ்கரித்தாள்.
கமல விரல்கள் ஹஸ்த்தம் போல் காட்டி ஆசி வழங்கியதை எல்லாம் அவள் கவனிக்க இல்லை.
எழுந்து பின்னாலேயே நாலுத்தப்படி நடந்து வீட்டு வாயிற் கதவு தள்ளி உள்ளே கூடம் தாண்டி காமிரா உள்ளினுள் ஓடி கணவனை எழுப்பினாள்.
கலவரத்துடன் அவன் எழுந்து என்ன ஏது என்று கேட்டபொழுது
யானை குதிரை தெய்வம் பெரியவா….. என்று சொல்ல முடியாமல் திணறினாள்.
ஜன்னல் வழி வாசலில் எட்டிப் பார்த்த பொழுது காட்சி தெரிந்தது மண்டைக்குள் உரைத்த பொழுது உடம்பு சிலிர்த்தது.
ஓடிப்போய் கொல்லைக் கிணற்றில் நாலு வாளி இழுத்து தலையில் கொட்டிக் கொண்டு புதிது உடுத்தி விபூதி தரித்து வருவதற்குள் அவன் மனைவி நிறை குடமும் பூரண கும்பமும் ஆரத்தி தட்டும் தயார் செய்து வைத்த விட்டாள்.
பாதபூஜை செய்து கற்பூரம் ஏற்றி ஆரத்தி எடுத்து நமஸ்காரம் பண்ணி உள்ளுக்கழைக்கவும் பொழுது லேசாய் விடியவும் சரியாய் இருந்தது.
அதற்குள் யானையின் பிளிறலும் குதிரைகளின் கனைப்பொலியும் தெருவையும் ஊரையும் எழுப்பிவிட்டு விட்டது.
தீப்பிடித்தது போன்ற பரபரப்பு ஊருக்குள் திக் விஜயம் செய்திருக்கும் செய்தி பரவ ஆரம்பித்ததும் ஜனங்கள் சாரி சாரியாய் வர ஆரம்பித்தனர்.
சுத்தமாய் அலசிவிடப்பட்டு கோலத்துடன் காய்ந்திருந்த பெரிய திண்ணையில் நட்ட நடுநாயகமாக வெறுந்தரையில் அமர்ந்துவிட்டது “பரபிரம்மம்".
பக்கத்துத் தூணில் தண்டம் சார்த்தப்பட்டிருந்தது குளித்து முழுகி ஈரத்தலையுடன் தெரு மக்கள் பழத்தட்டு பூக்குடலை ஏந்தி ஜோடி ஜோடியாய் வந்து தெண்டனித்துச் சென்றார்கள்.
யானை ஒட்டகம் குதிரை யெல்லாம் வெண்ணாற்றுப் பக்கம் ஓட்டிச் செல்லப்பட்டன கூட வந்த குழாமிற்குத் தெரிந்து விட்டது.
உடனடியாக இந்த இடத்தை விட்டுப் புறப்படப் போவதில்லை என்று அடுத்தடுத்த திண்ணைகளில் மறைவாய் அமர்ந்து சிரமப் பரிகாரம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.
என்ன ஸ்ரீ மடம் இந்தப் பாதையில் வரப்போறதா தகவலே இல்லையே எப்படி என்றார் தெரு முக்கியஸ்த்தர் வைத்தாவிடம்.
நெடுங்கரை பக்கமா அப்படித் திரும்பறதாத்தான் பிளான் என்னவோ கையகாட்டி இந்தப் பக்கம் உள்ள வரச்சொல்லி உத்தரவு வந்ததது வந்துட்டோம்.
வைத்தி ஏதோ முக்கியமான காரணமிருக்கும் என்றார்
ஏன் பெரியவா வாயத் தொறக்கவே மாட்டேங்கறா.
ரெண்டு நாளா காஷ்ட்டிக மௌனம் இப்போ உபவாசமோ விரதமோ கிடையாது நம்ம பேச்சுக்கு ஓர் அர்த்தம்னா அவா மௌனம்கறது ஆழ்கடல் போல ஆயிரம் அர்த்தம் இருக்கும்.
அதுக்கு எப்போவேனா திருவாய் மலரலாம்
ஒரு வார்த்தை சொல்லி இருந்தா ஊர் எல்லையிருந்தே மேளதாளம் பூரண கும்ப மரியாதையோட அழைச்சுட்டு வந்திருப்பமே.
அதான் சொன்னேனே நாம என்ன செய்ய முடியும் அவாதிருவுளம் அப்படி திடும்னு திரும்பியாச்சு இப்படி
மாலியும் சேஷூவும் அலுக்காமல் கிராமத்தார் சந்தேகத்திற்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்தனர்.
ஸ்னானம் பூஜை சாப்பாடு என்று எல்லாம் நியமமாய் நடந்தேரியது பரப்பிரம்மம் பசும்பாலும் உலர்திராட்சையும் மட்டும் ஏற்றுக் கொண்டார்.
நாளை நிறைவு பகுதி.....
"ஜெய சங்கர ஹர ஹர சங்கர"
#periyava #mahaperiyava #truestory
#kanchimahaperiyava #kanchimahan
#kanchipuram #kanchikamakshiamman #kamakshiamman
#mahaperiyavamagimaigal
#sageofkanchi #devotional #viralvideo #hindutamil #jai mahaperiyava #periyava mahaperiyava #🙏ஆன்மீகம் #🙏கோவில்
சூரியனுக்கு களங்கம் உண்டோ அதிலும் ஞான சூரியனுக்கு.
நேத்திக்கு ஞாயிற்றுக்கிழமை மறந்துபோய் ராத்திரி பால் சாப்டுட்டேன்... தப்பு... தப்பு.
ஒரு மாத காலத்துக்கு பால் பழங்களை தவிர்த்த பெரியவா பிராயச்சித்தமாம்.
ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு பெரியவாள் பிக்ஷை ஏதும் செய்வதில்லை பால் கூட அருந்துவதில்லை.
பெல்காம் அருகில் ஸாம்ரா என்று ஓர் ஊர் பக்தர்கள் வந்து குறைகளைச் சொல்லி ஆசி பெற்றுக்கொண்டு சென்ற வண்ணமிருந்தார்கள்.
எல்லோருக்கும் பதில் சொல்லிச் சொல்லி பெரியவாளுக்குத் தொண்டை வலிக்குமே என்ற கவலை அணுக்கத் தொண்டருக்கு.
அன்று ஞாயிற்றுக்கிழமை என்பது ஞாபகமில்லை
பெரியவா ஓய்வுக்காக உள்ளே வந்ததும் பால் கொண்டு வந்து வைத்தார் தொண்டர்.
மறு நாள் காலை ஆகா....ஆகா என்று பதறினாற் போல் சொன்னார்கள் பெரியவா
தொண்டர்களுக்குத் திக் என்றது.
நேத்திக்கு ஞாயிற்றுக்கிழமை மறந்துபோய் ராத்திரி பால் சாப்டுட்டேன்...தப்பு...தப்பு.
அன்று முதல் ஒரு மாத காலத்துக்கு பால் பழங்களைத் தவிர்த்தார்கள் பெரியவா
பிராயச்சித்தமாம்.
சூரியனுக்கு களங்கம் உண்டோ அதிலும் ஞான சூரியனுக்கு.
"ஜெய சங்கர ஹர ஹர சங்கர"
#periyava #mahaperiyava #truestory
#kanchimahaperiyava #kanchimahan
#kanchipuram #kanchikamakshiamman #kamakshiamman
#mahaperiyavamagimaigal
#sageofkanchi #devotional #viralvideo #hindutamil #jai mahaperiyava #periyava mahaperiyava #🙏ஆன்மீகம் #🙏கோவில்
என்ன கேட்டது கிடைச்சுதா பெரியவா பிரசாதப் பையை தொலைத்த பெண்மணியிடம்.
யாருக்கு எது கிடைக்கணும்னு இருக்கோ அதை என்ன தான் முயற்சி பண்ணினாலும் தடுக்க முடியாது.
கிடைக்காதுன்னு இருக்கிறதை தக்கவைச்சுக்கவும் முடியாது
இதே மாதிரி ஒரு சம்பவம்.
ஒரு சமயம் ரொம்ப தொலைவுல இருக்கிற ஊர்ல இருந்து வசதி
உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவா சிலர் மகா பெரியவாளை
தரிசனம் பண்ண வந்திருந்தா.
ஆசிர்வாதம் பண்ணி கற்கண்டும் குங்குமமும் தந்த
மகா பெரியவா அவாகிட்டே ஒரு விஷயத்தைச் சொன்னார்.
நீங்க இங்கேர்ந்து புறப்படறச்சே வழியில் யாராவது நோயாளியைப் பார்த்தேன்னா
அவாளுக்கு உங்களால்
முடிஞ்ச உபகாரத்தைப் பண்ணிட்டுப் போங்கே அப்படின்னார்.
சரின்னு தலையை ஆட்டிட்டு வழக்கம் போல பிரசாதத்தை
வாங்கிண்டு புறப்பட்டா எல்லாரும்.
மடத்தோட வாசலைத் தாண்டறதுக்குள்ளே ஆசார்யா
சொன்னது மறந்துபோயிடுத்து அவாளுக்கு.
அதனால யாருக்கும் எந்த உதவியும் பண்ணாம ரயிலேறி நேரா ஊருக்குப் போய்ச சேர்ந்துட்டா.
அங்கே போனதும் பெரியவா தந்த பிரசாத குங்குமத்தை
எடுத்து சுவாமி மாடத்துல வைக்கலாம்னு பையைத்
தேடினப்ப தான் தெரிஞ்சுது,
பையையே எங்கேயோ
தொலைச்சுட்டோம்கறது அதுல பிரசாதம் மட்டுமில்லாம
கிட்டத்தட்ட ரெண்டாயிரம் ரூபாய் பணமும் வைச்சிருக்கா
அவா.
அது அந்தக் காலத்துல ரொம்ப பெரிய தொகை அப்போ தான் யோசிச்சிருக்கா அடடா
பரமாசார்யா சொன்னபடி உதவி பண்ணாம வந்துட்டோமே.
அதான் இப்படியெல்லாம்
நடந்திருக்குன்னு சரி அவசரத்துல மறந்துட்டோம்
தெரியாம பண்ணிட்டோம்னு
பரமாசார்யாகிட்டேயே மனசார வேண்டிப்போம்.
அவரே பையைத் திரும்ப கிடைக்க வைப்பார் அப்படின்னு
பையைத் திரும்ப கிடைக்க வைப்பார் அப்படின்னு தீர்மானம் செஞ்சா அதே மாதிரி வேண்டிண்டா.
ரெண்டு மூணு நாள் ஆச்சு தபால்ல ஒரு கவர் வந்தது
அவா ஆத்து முகவரிக்கு என்னவா இருக்கும்னு பிரிச்சுப்
பார்த்தா உள்ளே அவா தொலைச்ச பை இருந்தது.
அவசர அவசரமா பணம் இருக்கான்னு பார்க்க பையைக்
குடைஞ்சா ஊஹூம் உள்ளே மகாபெரியவா தந்த பிரசாதமும்
கூடவே ஒரு கடுதாசியும் மட்டும் இருந்தது.
உங்கள் பையை வீதியில் பார்த்தேன் அதில் உங்கள்
முகவரி அட்டையும் இருந்தது.
உரியவரிடம் சேர்த்து
விடலாம் என்று தான் எடுத்தேன்.
ஆனால் திடீரென்று என்
தந்தைக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதால்
அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக உங்கள் பையில்
இருந்த பணத்தை எடுத்து கொள்ள வேண்டியதாகிவிட்டது
மன்னிக்கவும்.
பையில் இருந்த பிரசாதத்தை இத்துடன் அனுப்பி இருக்கிறேன் கடிதத்தைப்
படித்தார்கள்.
ஆசார்யா குடுத்த பிரசாதம் திரும்பக் கிடைச்சுது
சந்தோஷமா இருந்தாலும் பணம் திரும்பக்
கிடைக்கலையேங்கற வருத்தம் அவாளுக்குள்ளே
இருந்தது.
கொஞ்ச நாள் கழிச்சு மறுபடியும் ஆசார்யாளை தரிசனம் பண்ண
வந்தா அந்தக் குடும்பத்தினர்.
அவாளோட முறை வந்ததும்
பெரியவாளுக்கு நமஸ்காரம் பண்ணினா.
என்ன கேட்டது கிடைச்சுதா அப்படின்னு அந்தக் குடும்பத்
தலைவியைப் பார்த்து கேட்டார் மகாபெரியவா.
இல்லை பெரியவா பையும் பிரசாதமும் மட்டும்தான்
கிடைச்சுது பணம் போனது போனது தான் அவசர
அவசரமா சொன்னார் அவாள்ல ஒருத்தர்.
இல்லையே பணத்தைப் பத்தி கேட்கலையே பிரசாதப் பை
கிடைச்சா போதும் பணம் உதவி பண்ணினதா இருந்துட்டுப்
போகட்டும்னு தானே வேண்டிண்டா.
பெரியவா சொல்லி
முடிக்கறதுக்கு முன்னாலயே ஆமாம் நான் அப்படித்தான்
வேண்டிண்டேன்.
பெரியவாளோட ஆணைப்படி யாருக்கோ உதவினதா
இருக்கட்டும்னு தழுதழுக்கச் சொன்னா அந்தப் பெண்மணி.
ஏழை நோயாளியோட சிகிச்சைக்கு இவாளோட பணம்
போய்ச் சேரணும்கறதை முன்கூட்டியே எப்படித்
தீர்மானிச்சார்.
பிரசாதம் திரும்ப கிடைக்கணும்னு
வேண்டிண்டவாளுக்கு அதை எப்படி திருப்பிக் கிடைக்க
வைச்சார்.
இதெல்லாம் பரமாசார்யாளுக்கு மட்டுமே தெரிஞ்ச பரம ரகசியம்.
"ஜெய சங்கர ஹர ஹர சங்கர"
#periyava #mahaperiyava #truestory
#kanchimahaperiyava #kanchimahan
#kanchipuram #kanchikamakshiamman #kamakshiamman
#mahaperiyavamagimaigal
#sageofkanchi #devotional #viralvideo #hindutamil #jai mahaperiyava #periyava mahaperiyava #🙏ஆன்மீகம் #🙏கோவில்
காஞ்சிபுரத்தில் மூன்று 'டை'கள் ரொம்ப பிரசித்தம் மூன்று
'கோடி'கள் நடை வடை குடை.
பரம்பரை பரம்பரையாகக் காஞ்சிபுரத்தில் வசித்துக் கொண்டிருப்பவர்களுக்குக் கூட இந்த செய்தித்துளிகள் தெரிந்திருக்காது.
காஞ்சிபுரத்தில் வரதராஜப் பெருமாள் - தேவராஜன் கோயில் இருக்கிறது.
அதை மலைக்கோயில் என்று தான் பெரும்பாலானோர் சொல்வார்கள் ஹஸ்திகிரியில் வாசம் செய்பவர் ஹஸ்திகிரி நாதர்.
இப்படி ஒரு பெயர் வரதருக்கு வருஷத்தில் ஏறக்குறைய முந்நூறு நாள்கள் உற்சவம் நடைபெறும் அந்தக் கோயிலில் உண்மையில் அவர் ராஜாதான் திருவிழா என்றால் அப்படி ஒரு கோலாகலம்.
நடை
வரதராஜர் பல்லக்கு அல்லது வாகனத்தில் பவனி வரும்போது அந்த நடை கண்கொள்ளாக் காட்சி பல்லக்கு,வாகனம் தூக்குபவர்களுக்கு அவ்வளவு பயிற்சி.
யுத்த வீரர்கள் நடையில் மிடுக்கு இருப்பதைப் போல பல்லக்குத் தூக்கிகள் நடையில் தெய்வீகமான அழகு பார்த்துப் பார்த்து ரசிக்கத்தக்கதாக இருக்கும்.
வடை
அடுத்தது காஞ்சிபுரம் மிளகு வடை காஞ்சிபுரம் இட்லி நாக்கு படைத்தவர்களுக்குப் பரமானந்த விருந்து காஞ்சிபுரம் மிளகு வடை பல நாள்கள் கெட்டுப்போகாமல் இருக்கும்.
குடை
காஞ்சிபுரத்தில்தான் கோயில்களுக்கான குடை தயாரிப்பவர்கள் பல பேர் ஆண்டாண்டுக் காலமாக இருந்து வருகிறார்கள்.
குடையிலும் பல தினுசுகள் வகை சின்னக் குடையிலிருந்து மிகப் பெரிய மிகவும் அழகான கை வேலைப்பாடுகள் செய்யப்பட்ட குடைகள் வரை தயாரிக்கப்படுகின்றன.
தமிழ்நாட்டின் கோயில்களுக்கு மட்டுமில்லாமல் வெளி நாடுகளுக்கும் குடைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
கோடிகள்
மூன்று 'டை'கள் போலவே மூன்று 'கோடி'கள் காஞ்சிபுரத்தில் இருக்கின்றன.
காமாட்சியம்மன் கோயில் விமானத்துக்கு காமகோடி விமானம் என்று பெயர் ஏகாம்பரேஸ்வரர் விமானம் ருத்ரகோடி விமானம் வரதராஜர் கோயில் விமானம் புண்யகோடி விமானம்.
இவ்வளவு நுட்பமான தகவல்களையும் கூறியவர்கள் மகா பெரியவா.
பரம்பரை பரம்பரையாகக் காஞ்சிபுரத்தில் வசித்துக் கொண்டிருப்பவர்களுக்குக் கூட இந்த செய்தித் துளிகள் தெரிந்திருக்காது.
பெரியவாளிடம் 'சூக்ஷ்மங்கள்' அதிகம்.
"ஜெய சங்கர ஹர ஹர சங்கர"
#periyava #mahaperiyava #truestory
#kanchimahaperiyava #kanchimahan
#kanchipuram #kanchikamakshiamman #kamakshiamman
#mahaperiyavamagimaigal
#sageofkanchi #devotional #viralvideo #hindutamil #jai mahaperiyava #periyava mahaperiyava #🙏ஆன்மீகம் #🙏கோவில்
ஆங்கரையை சார்ந்த சாத்தூர் சுப்ரமணியன் என்கிற சங்கீத வித்வான் அவர்களின் இல்லத்தில் நடந்த அபூர்வ சம்பவம்.
சாத்தூர் சுப்பிரமணியனின் தாயாருக்கு ஸ்ரீ மஹா பெரியவாளிடம் அசையாத பக்தி.
ஒருமுறை தன் இல்லத்தில் கோடி ராம நாம ஜபம் செய்ய ஏற்பாடு செய்திருந்தார் சங்கல்பம் செய்து ராமநாம ஜபம் ஆரம்பித்தாயிற்று.
ஆனாலும் ராம ஜபம் செய்ய அந்த ஊரில் அத்தனை பக்தர்கள் கூடி வரவில்லை தினமும் வந்த சொற்ப நபர்களை கொண்டு ராம நாம ஜபம் நடந்துக் கொண்டிருந்தது.
ஆரம்பித்த இரண்டு மூன்று நாட்களாக வந்து ராமஜபத்தில் கலந்து கொண்ட ஒரு மாமி ஏனோ திடீரென்று அடக்கமாட்டாமல் அன்று விசும்பி விசும்பி அழலானாள்.
சுப்பிரமணியனின் தாயாருக்கு அந்த மாமியின் இச்செயல் சற்று அச்சத்தையும் மெலிதான வருத்தத்தையும் உண்டாக்கியது.
ஏன் அழறே என்று அந்த மாமியை ஆறுதலாக கேட்ட போது எப்படி சொல்றதுன்னே புரியலை மாமி என்ற படி அந்த மாது தன் அனுபவத்தை விவரமாக கூறினாள்.
அந்த மாமிவீட்டில் நவராத்திரி பூஜைகள் நிறைவாக நடந்திருந்தது விஜயதசமி முடிந்தபின் கொலுவில் வாய்த்த பொம்மைகளை திரும்பவும் பாதுகாப்பாக துணிகளில் சுற்றி எடுத்து வைத்தபோது அதில் ஒரு பொம்மையை மட்டும் பரண்மேல் வைக்க வேண்டாமென்று அந்த மாமி நினைத்தாள்.
அதற்கான காரணம் இருந்தது அந்த பொம்மை தூய துறவியாம் மஹா பெரியவாளின் திரு உருவமாயிருந்தாலும் மிகவும் அழுக்கேறிய நிலையில் இருந்ததால் அதை அப்படியே சுற்றி வைத்து விட்டால் அடுத்த வருடமும் அதே நிலையில் கொலுவில் வைக்க வேண்டியிருக்குமாதலால் அழுக்கை அகற்றி பார்க்கலாமென்று மாமி நினைத்திருக்கலாம்.
அதனால் அந்த ஸ்ரீ பெரியவா பொம்மை மட்டும் விடப்பட்டு கொலுவிற்கு பிறகும் வீட்டு கூடத்தின் அலமாரியில் அனுக்கிரஹித்துக் கொண்டிருந்தது.
நவராத்திரி முடிந்த சில நாட்களில் சாத்தூர் வீட்டில் கோடி ராம நாம ஜபம் ஆரம்பத்தில் இந்த மாமி அங்கு சென்று வந்து ககொண்டிருந்தாள்.
தன் வீட்டிற்குள் நுழைந்த போது மாமியின் காதில் ஒரு அதிசயமான குரல் ஒலித்தது.
கூர்ந்து கவனித்தபோது என்னை சாத்தூர் ஆத்திலே கொண்டு விட்டுடு என்பதாக அது கேட்டது.
யார் பேசுவது என்ற மாமி திகைப்போடு குரல் வந்த இடத்தைப் பார்க்க அங்கே ஸ்ரீ மஹா பெரியவாளின் பொம்மையை தவிர வேறு யாருமில்லாதலால் மாமிக்கு வியப்பும் அச்சமுமாக இருந்தது.
சரி ஏதோ மனப்பிரமையாக இருக்குமென்று மாமி முதலில் அதை பொருட்படுத்தவில்லை தான்.
ஆனால் அடுத்தநாள் அதற்கடுத்த நாள் என்று மாமி கோடி ராம ஜபத்தில் கலந்து கொண்டு சாத்தூர் வீட்டிலிருந்து வந்தபோதெல்லாம் அந்த பொம்மை என்னை சாத்தூர் ஆத்திலே கொண்டு விட்டுடு என்று குரல் கொடுப்பது மிக தெளிவாக கேட்டபோது மாமிக்கு இது மனோபிரம்மையல்ல என்பதும் நிஜமாகவே ஸ்ரீ பெரியவா பதுமை பேசுவதும் ஊர்ஜிதமானது.
என்ன செய்வதென்று தோன்றாமல் மாமி குழம்பிக் கொண்டிருக்க இரண்டு மூன்று நாட்களில் ஸ்ரீ பெரியவா பொம்மையிலிருந்து இப்படி கேட்பது மெல்ல அதிகரித்து நாள் பூராவிலும் அந்த தெய்வீக பொம்மை தன்னை சாத்தூர் வீட்டில் கொண்டு போய் வைக்கச் சொல்லி கேட்பது நிரந்தரமாக காதில் ஒலித்துக் கொண்டே இருப்பது போலானது.
இந்த நிலையில்தான் மாமி அன்று சாத்தூர் ஆத்திற்கு வந்தபோது இதை நினைத்து அழலானாள் இப்படி ஒரு பொம்மை பேசுகிறதென்றால் யாராவது நம்பப் போகிறார்களா
இதை சொல்லாமல் பொம்மையை இங்கு கொண்டு வந்து உங்கள் ஆத்தில் இருக்கட்டும் என்றால் அதை இயல்பாக ஏற்றுக் கொள்வார்களா.
மேலும் ஒரு புதிய அழகான பொம்மையாயிருந்தாலும் வைத்துக் கொள்ள தயக்கம் காட்டாதிருக்க வாய்ப்புண்டு இப்படி தானே தன் வீட்டின் கொலுவில் வைக்க ஒப்பாமல் அழுக்காய் காணப்படும் பொம்மையை மற்றவர்கள் எப்படி தங்கள் வீட்டில் வைத்துக்கொள்ள சம்மதிப்பார்கள்.
இப்படி காதில் ஒலித்துக் கொண்டேயிருக்கும் பெரியவா குரலுக்கு எப்படித்தான் வழி செய்வது மாமியின் மனதில் எழுந்த சிந்தனைகளால் செய்வதறியாத நிலையில்தான் அன்று அவள் அழ நேரிட்டது.
சாத்தூர் சுப்ரமணியன் அவர்களின் அம்மா ஆறுதலாக கேட்டதில் மாமி நடந்தவைகளை எல்லாம் விவரித்து தான் குழம்பிக்கொண்டிருந்த காரணத்தையும் விளக்கியபோது ஸ்ரீ மஹா பெரியவாளெனும் பிரம்மஞானி எங்கும் வியாபித்தருளுவதில் சற்றும் சந்தேகம் கொள்ளாத மனப்பக்குவதோடு.
அடி அசடே அந்த பொம்மைக்குள்ளே இருந்து உன்கிட்டே பேசினது சாட்சாத்
ஸ்ரீ பெரியவாள்தான்னு உனக்கு நம்பிக்கையா தோணலையா
ஸ்ரீ பெரியவா இங்கே வந்து ராமநாம ஜபம் கேட்கணும்னு ஆசை படறா அதுக்கு உடனே ஏற்பாடு பண்றேன் என்று சாத்தூர் மாமி கூறியதோடு சகல மரியாதையோடு சாட்சாத் ஈஸ்வரரே உயிரூட்டியிருந்த ஸ்ரீ மஹாபெரியவா பொம்மையை தங்கள் இல்லத்திற்கு அழைத்து பெரும்பாக்யமடைந்தனர்.
ஸ்ரீ பெரியவா பொம்மை சாத்தூர் ஆத்திற்கு வந்து சேர்ந்ததோடு மாமியின் காதில் சதா சர்வகாலமும் விடாமல் ஒலித்துக் கொண்டிருந்தது எப்படியோ மாயமாக நின்று போனது.
இது ஒரு அதிசயமென்றால் சாத்தூர் வீட்டில் கோடி ராமநாம ஜபம் அதுவரை பக்தர்கள் சொற்பமாக வந்ததில் மிகவும் நிதானமாக நடந்து கொண்டிருக்க ஸ்ரீ மஹா பெரியவா எழுந்தருளியவுடன் எங்கிருந்தோ பக்தர்கள் திரளாக வர தொடங்க கோடி நாம ஜபம் தெய்வீகமாக நிறைந்தேறியது.
"ஜெய சங்கர ஹர ஹர சங்கர"
#periyava #mahaperiyava #truestory
#kanchimahaperiyava #kanchimahan
#kanchipuram #kanchikamakshiamman #kamakshiamman
#mahaperiyavamagimaigal
#sageofkanchi #devotional #viralvideo #hindutamil #jai mahaperiyava #periyava mahaperiyava #🙏ஆன்மீகம் #🙏கோவில்
"என் வயித்து வலியைக் கொண்டு போய், அந்த வைத்தீஸ்வரன்கிட்ட விட்டுட்டு வந்துட்டயாக்கும்"
நெல்லை அன்பரின் வயிற்று வலியை தான் வாங்கிக் கொண்ட மகா பெரியவா.
காஞ்சி மகான் பக்தர்களைக் கைவிடமாட்டார் அவர்களது துன்பங்களைத் தானே ஏற்று அவர்களைக் காப்பார் என்பது சத்தியம்.
ஒரு நாள் 34- 35 வயதுள்ள அன்பர் ஒருவர் தன் பெற்றோருடன் திருநெல்வேலியிலிருந்து வந்திருந்தார் அவர்களுக்குக் காஞ்சி மடம் புதிய இடமாதலால் பக்தர்கள் கூட்டத்தில் இருந்து சற்று விலகி நின்றிருந்தனர்.
அந்த அன்பர் வலியால் துடித்துக்கொண்டு இருந்ததை அவரது முகம் காட்டிக் கொடுத்தது இதை மகாபெரியவாளும் கவனித்திருக்கவேண்டும்.
தயக்கத்துடன் விலகி நின்றிருந்த அந்தக் குடும்பத்தாரை அருகில் வரும்படி அழைத்தார் அருகில் காஞ்சி மகானுக்குக் கைங்கர்யம் செய்து வந்த பாலு இருந்தார்.
பெரியவாளின் அருகில் வந்த நெல்லை அன்பர் எனக்குத் தீராத வயித்து வலி சுவாமி உயிர் போற மாதிரி வலிக்குது பார்க்காத டாக்டர் இல்லே பண்ணாத வைத்தியம் இல்லே கொஞ்சமும் குணம் தெரியலே.
பரிகாரம் கூட பண்ணியாச்சு ஒரு பலனும் கிடைக்கலே எங்க குருநாதர் சிருங்கேரி சுவாமிகளைத் தரிசனம் பண்ணி அவர்கிட்ட என் வயித்து வலி பத்திச் சொன்னேன்.
காஞ்சிப் பெரியவரை உடனே போய்த் தரிசனம் பண்ணு உன் கஷ்டத்தைச் சொல்லு அவர் தீர்த்து வைப்பார்னு சொன்னார்.
அதான் இங்கே வந்தோம் என்றார் குரல் தழுதழுக்க
ஓஹோ அப்படியா சொன்னார் என்று ஏதுமறியாதவராகக் கேட்டுக்கொண்டார் பெரியவா.
அவரின் திருமுகத்தைத் தரிசித்ததுமே நெல்லை அன்பருக்கு நம்பிக்கை பிறந்ததுபோலும் தொடர்ந்து எங்கே போயும் தீராத வயித்து வலி என்னை விட்டுப் போகணும் பெரியவா நீங்களே கதின்னு வந்திருக்கேன்.
உங்க அனுக்கிரகம் கிடைக்கலேன்னா இந்த வலியோடயே நான் இருக்கணுங்கறது தான் விதின்னா தினம் தினம் வலியால துடிதுடிச்சுக் கொஞ்சம் கொஞ்சமா சாகறதைவிட இங்கேயே இப்பவே என் உயிரை விட்டுடலாம்னு வந்துட்டேன்.
பெரியவாதான் என்னைக் காப்பாத்தணும் என்று கதறினார்
பெரியவா சிறிது நேரம் கண்மூடித் தவம் செய்யும் பாவனையில் அமர்ந்திருந்தார்
அங்கிருந்த எல்லோரும் அவரையே கவனித்துக் கொண்டிருக்க நெல்லை அன்பர் தனது வயிற்று வலி மெள்ள மெள்ள விலகுவதுபோல் உணர்ந்தார்.
சிறிது நேரத்தில் இப்ப என் வயித்து வலி பூரணமா போயிடுத்து, பெரியவா என்று வியப்பும் கண்ணீருமாகச் சிலிர்த்துச் சொன்னவர் பெரியவாளை சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார்.
அவருடைய பெற்றோரும் நமஸ்கரித்தனர் பிறகு, பெரியவாளிடம் அனைவரும் விடைபெற்றுக் கொண்டு திருநெல்வேலிக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
ஆனால் அன்றிலிருந்து பெரியவா என்னவோ போல் சோர்ந்து காணப்பட்டார் கருணையே உருவான காஞ்சி மகான் தனது வயிற்றில் ஏதோ வேதனை வந்தாற்போல் துன்பப்படுகிறார் எனத் தெரிந்தது.
பெரியவா அடிக்கடி சுருண்டு படுப்பதையும் புரண்டு தவிப்பதையும் கண்ட மடத்து பாலுசெய்வதறியாது கலங்கினார்.
பெரியவாளுக்கு பிக்ஷை தயார் செய்யும் கைங்கர்யத்தைச் செய்து வந்தவர் பாலு தான் பெரியவா படும் பாட்டைப் பார்த்து தான் பிக்ஷையில் ஏதேனும் தவறு இழைத்து விட்டோமோ என்கிற குற்ற உணர்ச்சியில் அவர் மருகத் தொடங்கினார்.
தன் குலதெய்வமான ஸ்ரீ வைத்தீஸ்வரனைத் தரிசித்துப் பிரார்த்தித்தால் தேவலை என்று அவருக்குத் தோன்றியது.
மறுநாள் ஏகாதசி என்பதால் சௌகரியமாகி விட்டது பாலுவுக்கு அன்றைய தினம் பெரியவாளுக்கு பிக்ஷை செய்து வைக்க வேண்டாம்.
ஆகவே வைத்தீஸ்வரன் கோயிலுக்குச் செல்வது எனத் திட்டமிட்டார் எனவே பெரியவாளிடம் சென்று எனக்கு என்னவோ எங்க குல தெய்வத்தைத் தரிசனம் பண்ணிட்டு வந்தா தேவலைன்னு தோணறது.
பெரியவா உத்தரவு தரணும் என்று தயக்கத்துடன் அனுமதி வேண்டினார் பாலு.
உடனே என் குலதெய்வமான வைத்தீஸ்வரன் வேற யாருமில்லே பெரியவாதான்னு அடிக்கடி சொல்வியே பாலு.
இப்ப ஏன் போகணும்கறே என்று குறும்புச் சிரிப்புடன் கேட்டார் பெரியவா எப்படியேனும் உத்தரவு வாங்கி விடுவதில் பரபரப்பாக இருந்தார் பாலு.
இல்லே பெரியவா சின்ன வயசுல முடி இறக்கினப்ப போனது அப்புறம் குலதெய்வத்தை தரிசனம் பண்ணப் போகவே இல்லை.
அதான் என்று கெஞ்சாத குறையாகச் சொன்னார் பாலு பெரியவா புன்னகையோடு உத்தரவு கொடுக்க பாலு கிளம்பிச் சென்றார்.
வைத்தீஸ்வரனுக்கு நேர்ந்துகொள்பவர்கள் நோய் தீருவதற்காக கை கால் என வெள்ளியாலான உறுப்புகளை வாங்கி ஸ்வாமிக்குக் காணிக்கையாகச் செலுத்துவார்கள்.
பெரியவாளின் வயிற்று வலி குணமாக வேண்டும் என்று வேண்டிக் கொண்ட பாலு வெள்ளியில் வயிறு வாங்கக் கடை கடையாக அலைந்தார். வயிறு கிடைக்கவே இல்லை.
உடலும் மனமும் சோர்ந்துபோனவராகக் கடை வீதியில் நடந்து கொண்டிருந்த பாலுவின் அருகில் கிழவி ஒருத்தி வந்து நின்றாள்.
என்ன சாமி வைத்தீஸ்வரருக்கு கொடுக்குறதுக்கு வயிறு தேடறியா அது கடைகள்ல கிடைக்காது.
ஆபீஸ்ல போய் கேளு யாரோ விசேஷமா சாமிக்குப் போட்டதை எடுத்துப் பத்திரமா வெச்சிருக்காங்க.
முக்கியமானவங்க யாருனா வந்து கேட்டா கொடுப்பாங்க நீ கேட்டுப் பாரு சாமி உனக்குக் கொடுத்தாலும் கொடுப்பாங்க என்று சொல்லிவிட்டு அந்தக் கிழவி நகர்ந்தாள்.
பாலுவுக்கு ஒரே குழப்பம் யார் இந்தக் கிழவி நான் வெள்ளியில் வயிறு வாங்க அலைவது இவளுக்கு எப்படித் தெரியும்.
வழியும் காட்டிவிட்டுச் செல்கிறாளே என வியந்தவர் கோயில் அலுவலகத்துக்குச் சென்றார்.
பெரியவாளுக்கு வயிற்று வலி என்று சொல்ல முடியுமா ஆகவே சாதாரண பக்தரைப் போல கோயில் அதிகாரியிடம் பேசினார் பாலு.
கஜானாவில் பத்திரமாக வைத்திருந்த வெள்ளி வயிற்றை 750 ரூபாய் ரசீதுடன் பாலுவுக்குக் கொடுத்தார் அந்த அதிகாரி.
பிறகென்ன சந்நிதிக்குச் சென்று ஸ்வாமியைத் தரிசித்து மனதாரப் பிரார்த்தித்து காணிக்கையைச் செலுத்திவிட்டுக் காஞ்சிபுரம் வந்துசேர்ந்தார் பாலு.
பெரியவாளின் வயிற்று வலி முற்றிலுமாக நீங்கியிருந்தது அவரது முகத்தில் பழைய மலர்ச்சி குடிகொண்டு இருந்தது.
என் வயித்து வலியைக் கொண்டு போய் அந்த வைத்தீஸ்வரன் கிட்ட விட்டுட்டு வந்துட்டயாக்கும் என்று புன்னகைத்தார் பெரியவா
"ஜெய சங்கர ஹர ஹர சங்கர" #jai mahaperiyava #periyava mahaperiyava #🙏ஆன்மீகம் #🙏கோவில்
ஸ்ரீ மடத்தின் நிர்வாகத்திலுள்ள கோவில்களில் நித்ய பூஜை விசேஷ பூஜை உற்சவம் எல்லாம் ஒழுங்காக நடைபெறவேண்டுமே.
அந்தக் காலத்தில் ஸ்ரீமடம் நிர்வாகத்திலிருந்த பல கோவில்களில் பொருளாதாரம் வரவு சிலவுக்கு ஈடுகட்ட முடியாத நிலையில் தான் இருந்தது.
ஸ்ரீ புதுப்பெரியவாள் இந்தத் துறையில் கவனம் செலுத்தினார்கள் ஸ்ரீ பங்காரு காமாக்ஷி அம்மன் நித்ய பூஜா டிரஸ்ட் என்ற அறக்கட்டளையைத் துவக்கினார்கள்.
அந்த அறக்கட்டளையின் முழு விவரத்தையும், மகாப்பெரியவாளிடம் விண்ணப்பித்து அவர்கள் இசைவைப் பெற்றுக்கொண்டு வரும்படி பணித்தார்கள் புதுப் பெரியவாள்.
டிரஸ்ட் நிர்வாகிகளுடன் ஸ்ரீ அம்மன் பிரசாதம் எடுத்துக் கொண்டு செல்லவேண்டும் என்று உத்திரவாயிற்று.
மகாப் பெரியவாள் ஷோலாப்பூர் அருகில் ஒரு கிராமத்தில் முகாம்இருப்பிடத்தைத் தேடிப்பிடித்துக்கொண்டு சென்றனர்.
பெரியவாள் முன்னிலையில் நின்றனர் அணுக்கத் தொண்டர் சற்று பெரிய குரலில் கூறினார்.
தஞ்சாவூர் பங்காரு காமாக்ஷி அம்மன் கோவில்
டிரஸ்டிகள் தரிசனத்துக்கு வந்திருக்கா ஸ்தானிகர்
பிரஸாதம் கொண்டு வந்திருக்கார்.
முதலில் பிரசாதம் கொடு என்று சமிக்ஞை ஒரு மூங்கில் தட்டில் ஒரு சாதரா வாடிப்போன நிர்மால்ய மாலை
புஷ்கலமாகக் குங்குமம்.
குங்குமத்தை நெற்றியில் இட்டுக் கொண்டு
மாலையை கண்ணில் ஒற்றிக்கொண்டார்கள் இன்னும் என்ன இருக்கு.
அம்பாள் பிரசாதமாக ஒரு சால்வை மகா பெரியவா கண்களில் ஒரு தேஜஸ் ஏதோ நெஞ்சில் நினைவோட்டம்.
ஸ்தானீகரைக் கூப்பிடு
சற்று அருகில் சென்றார் பாதாதிகேசம் அருட்புனலால்
ஒரு நீராட்டு சங்கரசாஸ்திரிகள்
புத்திரன் தானே.
ஆமா என்ன ஒற்றுமை பார் பட்டத்துக்கு வந்தபோது அவர் தான் சாதரா கொண்டு வந்து
பூவாலேயே அபிஷேகம் பண்ணி ஹ்ம் அப்புறம் பிரசாதம்
கொடுத்தார்.
மடத்தின் மூலமா அவருக்குப் பதில் மரியாதை கூடப்
பண்ணினோம் தெரியுமோ
அப்பா சொல்லியிருக்கார்
யுகமாகக் கழிந்த இரு விநாடிகள்.
நீயும் அவரைப் போலவே சாதரா நிர்மால்யம் குங்குமம் கொண்டு
வந்திருக்கே.
உனக்கும் பதில் மரியாதை
செய்யணும் ஆனா என்னிடம் ஒண்ணுமேயில்லை நான் அகிஞ்சனன் - ஒரு பைசா கூட வைத்துக்கொள்ளாதவன்.
ஸ்ரீ மடம் பொறுப்பிலிருந்து முற்றிலுமாக விலகிக்
கொண்டபடியால் இவ்வாறு கூறினார்கள்.
மௌன இடைவெளி இவனுக்கு
ஒரு முத்திரைப்பவுன் வாங்கி பதில் மரியாதை செய்தால்
தேவலை உங்களால்
யாராலேயாவது முடியுமோ.
அந்த கிராமத்தில் நகைக்கடை ஏது சில மாதர்கள் நகைகளைக்
கழற்றிக் கொடுக்கத்
தயாராக இருந்தார்கள்.
ஆனால் பெரியவா முத்திரைப்
பவுன் அல்லவா கேட்கிறார்கள்
இந்தப் பரபரப்பில் அழுகையே வந்து விட்டது.
பெரியவா தன்னைஅகிஞ்சனன் என்று எப்படிச் சொல்லலாம்
மனம் பரிதவித்தது.
கண்ணீர் விட்டபடியே நமஸ்காரம் செய்து
பெரியவாளோட அனுக்ரஹம் இருந்தால் போதும்
காமாக்ஷி கருணையிலே
நாங்கள் எல்லாம் சௌக்கியமாகவே இருக்கோம்.
விம்மினேன் பெரியவா பரிவுடன் கடாக்ஷித்தார்கள
இதே எண்ணத்தோடே இருந்து கொண்டிரு கடைசிவரை க்ஷேமமாய் இருப்பாய்.
ஆனால் பெரியவாள் வெற்றுச் சொல்லுடன் நின்று விடவில்லை முடிகொண்டான்
கிராமத்தைச் சேர்ந்த ஒரு
தனிகரிடம் சொல்லி விரைவில்
முத்திரைப் பவுன் அனுப்பிவைத்தார்கள்.
ஸ்தானீர்களாய நாங்கள் பங்காரு காமாக்ஷிக்கும்
பரமாசார்யாளுக்குமிடையே எந்த ஒரு பேதத்தையும் காண்பதில்லை.
"ஜெய சங்கர ஹர ஹர சங்கர"
#periyava #mahaperiyava #truestory
#kanchimahaperiyava #kanchimahan
#kanchipuram #kanchikamakshiamman #kamakshiamman
#mahaperiyavamagimaigal
#sageofkanchi #devotional #viralvideo #hindutamil #jai mahaperiyava #periyava mahaperiyava #🙏ஆன்மீகம் #🙏கோவில்
தமிழ் சுருக்கெழுத்து நூல்
தம் சிரசில் இருந்த வில்வ மாலையை எடுத்து அந்த நூலின் மேல் வைத்து திரும்பக் கொடுத்தார்கள் பெரியவா.
தமிழக அரசே அந்நூலை அச்சிட்டு 1964-ல் வெளியிட்டது 1998-ல் 4ம் பதிப்பு வெளி வந்து தமிழுக்கும் தமிழ் உலகுக்கும் பயன்படும் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறது.
1957-58-ம் ஆண்டு சென்னைக்கு காஞ்சி ஸ்ரீ மஹாஸ்வாமிகள் விஜயம் செய்தார்கள் வியாஸ பூஜை சென்னை மயிலாப்பூர் சம்ஸ்கிருத கல்லூரியில் நடை பெற்றது.
இரவு பூஜை ஆனவுடன் அவர்கள் உபந்நியாசம் செய்வார்கள் அவரது அமுத மொழியினை நான் அபடியே ஒரு வார்த்தைக்கூட விடாமல் சுருக்கெழுத்தில் எழுதிக்கொண்டு பின்னர் நேர் நடையில் செய்து வந்தேன்.
அவைதான் பின்னர் ஆசாரிய ஸ்வாமிகள் உபந்நியாசங்கள் என்ற தலைப்பில் கலைமகள் வெளியீடாக வந்தன.
ஒருநாள் ஸ்ரீ மஹாஸ்வாமிகள் ராஜா அண்ணாமலைபுரத்துக்கு விஜயம் செய்யும் நிகழ்ச்சி ஏற்பாடாகி இருந்தது போகும் வழியில் நாங்கள் நல்லப்பன் தெருவும் ஆடம் தெருவும் இணையும் இடத்திற்கே சென்று பெரியவாள் வருகைக்குக் காத்திருந்தோம்.
மேனா வந்தது பூர்ணகும்பம் கொடுத்து பெரியவாளை வணங்கிக் கொண்டோம் சட்டென்று பெரியவாள் என்னை அழைத்து நீ எங்கே இருக்கே என்றார்கள் இந்தத் தெருவில் தான் குடியிருந்து வருகிறேன் என்றபடி நல்லப்பன் தெருவைக் காட்டினேன்.
மேனாவை எங்கள் தெரு வழியாகப் போகச் சொல்லி விட்டார்கள் காரணம் புரியவில்லை நாங்கள் ஓடோடி வந்து வீட்டுக் கதவுகளைத் திறந்து விளக்கேற்றுவதற்குள் மேனா வந்துவிட்டது.
என்னைத் தன்னருகில் அழைத்து தமிழ் சுருக்கெழுத்து நூல் ஒன்றை நீ எழுதியிருப்பதாகச் சொன்னாயே அதை எடுத்துவா பார்ப்போம் என்றார்கள்.
வீட்டினுள் சென்று நூலின் கையெழுத்துப் பிரதியை எடுத்து வந்து அவரிடம் சமர்ப்பித்தேன்.
ஒவ்வொரு பக்கமாக அவசரமே காட்டாது குறுஞ்சிரிப்பு முகத்தில் தவழ அந்நூலை அவர்கள் கடைசிப் பக்கம் வரை பார்வையிட்டார்கள்.
அவர் முகம் தாமரை போல் சிவக்க ஆங்கில பிட்மனில் P என்றுள்ளதை ப என்றும் M என்றுள்ளதை ம என்றும் அப்படியே தமிழுக்கு ஏற்றாற்போல நூலைத் தமிழில் எழுதியிருக்கிறாய் என்று சொன்னபோது எதையும் பார்த்தவுடன் கிரகித்துக் கொள்ளும் அவரது நுண்ணிய அறிவுத்திறன் சிலிர்ப்படையச் செய்தது.
இந்நூல் அச்சாகிவிட்டதா என்று கேட்டார்கள் இல்லை என்றேன் தம் சிரசில் இருந்த வில்வ மாலையை எடுத்து அந்த நூலின் மேல் வைத்து திரும்பக் கொடுத்தார்கள்.
தமிழக அரசே அந்நூலை அச்சிட்டு 1964-ல் வெளியிட்டது 1998-ல் 4ம் பதிப்பு வெளிவந்து தமிழுக்கும் தமிழ் உலகுக்கும் பயன்படும் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறது.
"ஜெய சங்கர ஹர ஹர சங்கர"
#periyava #mahaperiyava #truestory
#kanchimahaperiyava #kanchimahan
#kanchipuram #kanchikamakshiamman #kamakshiamman
#mahaperiyavamagimaigal
#sageofkanchi #devotional #viralvideo #hindutamil #jai mahaperiyava #periyava mahaperiyava #🙏ஆன்மீகம் #🙏கோவில்


