Samsudeen
ShareChat
click to see wallet page
@2291896331
2291896331
Samsudeen
@2291896331
chennai
இந்தியாவில் இருக்கும் வக்ஃபு சொத்துகளின் மதிப்பு இந்தியாவில் இருக்கும் இஸ்லாமிய மக்களுக்கு தெரியவில்லையா? அல்லது தெரிந்தும் தெரியாததை போல நடிக்கிறார்களா? என்று தெரியவில்லை. இந்தியாவில் அதிக பரப்பளவு நிலங்களை வைத்திருப்பது இந்திய அரசு என்று சொல்லலாம். இந்திய அரசாங்கத்திற்கு அடுத்தபடியாக அதிக பரப்பளவு கொண்ட நிலங்களை வைத்திருப்பது இந்திய கிருஸ்துவ கத்தோலிக்க சபை இது சுமார் 17.29 கோடி ஏக்கர் (7 கோடி ஹெக்டேர்) என மதிப்பிடப்பட்டுள்ளது. மூன்றாவது இடம் வக்ஃபு வாரியம். இந்தியாவில் மொத்தம் 40 இலட்சம் ஏக்கர் வக்ஃபு நிலங்கள் இருக்கின்றன. இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவை மூலம் கத்தோலிக்க திருச்சபையானது நிர்வகிக்கப்படுகிறது. தரவுகளின்படி 2012-ல், கத்தோலிக்க திருச்சபையின் கீழ், இந்தியாவில் 2,457 மருந்தகங்கள், 240 மருத்துவ அல்லது நர்சிங் கல்லூரிகள், 28 பொதுக் கல்லூரிகள், 5 பொறியியல் கல்லூரிகள், 3,765 மேல்நிலைப் பள்ளிகள், 7,319 தொடக்கப் பள்ளிகள் மற்றும் 3,187 நர்சரிப் பள்ளிகள் உள்ளன. ஆனால் இந்தியாவில் உள்ள வக்ஃபு வாரியங்களால் பெரிதாக எந்த மாநிலத்திலும் கல்வி நிலையங்கள் மருத்துவ மனைகள் ஏற்படுத்தப்பட வில்லை என்று சொல்லலாம் . ஜம்மு காஷ்மீர் மாநில வக்ஃபு வாரியத்திற்கு உட்பட்டு பிபி ஹலிமா நர்சிங் கல்லூரி, ஆலம் தார் நர்சிங் கல்லூரி, சையத் மந்தாகி நர்சிங் கல்லூரி, சுல்தான்-உல்-ஆரிஃபீன் உயர்நிலைப் பள்ளி மற்றும் மந்தாகி நினைவு மேல்நிலைப் பள்ளி போன்றவை செயல்படுகின்றன. தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் மூலம் மதுரை வக்ஃபு கல்லூரி செயல்பட்டது தற்போது அது முறையாக செயல்படுவதில்லை பல்வேறு சிக்கல்களோடு உள்ளது. இந்தியாவில் சுமார் 38000 ம் மதரசாக்கள் இருப்பதாக கணக்கிடபடட்டுள்ளது அதில் 60 சதவீத மதரசாக்கள் உத்திரப்பிரதேசத்தில் இருக்கின்றன. இந்தியாவில் உள்ள கத்தோலிக்க திருச்சபைக்கு உட்பட்ட சொத்துகள் அதிகமாக ஆக்கிரமிப்பிற்கு உள்ளானதாக இல்லை காரணம் அந்த சொத்துக்கள் முழுமையாக சுற்றுச்சுவர் கட்டி நீண்ட காலமாக திட்டமிட்டு நிர்வகிக்கப்படுகிறது. கத்தோலிக்க திருச்சபை நிர்வாகத்தில் முறைகேடுகள் இருந்தாலும் அவை வக்ஃபு வாரிய முறைகேடுகள் மற்றும் பொறுபற்ற தன்மையோடு ஒப்பிடும் பொழுது அது பெரியளவில் இல்லை என்று சொல்லலாம். கத்தோலிக்க திருச்சபை சொத்துகளை கண்காணிக்க வக்ஃபு வாரியம் போல ஒரு அதிகார அமைப்பு இல்லை. இஸ்லாமிய மக்களுக்கு வக்ஃபு சொத்துகளை கண்காணிக்க பாதுகாக்க வக்ஃபு வாரிய அமைப்புகள் இருந்தாலும் அந்த வக்ஃபு வாரியங்கள் வக்ஃபு சொத்துகளை பாதுகாப்பை விட நாசம் செய்யும் அமைப்புகளாக இருக்கின்றன. வக்ஃபு வாரியங்களே தேவையில்லை அவற்றை வக்ஃபு சட்டத்தில் இருந்து நீக்க வேண்டும் அல்லது வக்ஃபு வாரிய முறைகேடுகளை விசாரணை செய்திட ஒரு ஊழல் கண்காணிப்பு பிரிவு உருவாக்கிட வேண்டும் என்பதே கோரிக்கையாக இருக்கிறது. - --- #💝இதயத்தின் துடிப்பு நீ #💖நீயே என் சந்தோசம்🥰 #💖காதல் ஸ்டேட்டஸ்🥰
💝இதயத்தின் துடிப்பு நீ - ShareChat
#💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #💖நீயே என் சந்தோசம்🥰 #💝இதயத்தின் துடிப்பு நீ ஒளியில் விஞ்ஞானம்..!* *50.நீரின்றி அமையாது உலகு..!* *கப்ளிசேட்* 🔮⚖️ *வானத்திலிருந்துஅளவோடு தண்ணீரை இறக்கினோம். அதைப் பூமியில் தங்க வைத்தோம். அதைப் போக்கி விடுவதற்கும் நாம் ஆற்றலுடையவர்கள்.* *(திருக்குர்ஆன் 23:18)* *"உங்களில் அழகிய செயல்பாடுகள் உள்ளவர் யார்?' என்பதைச் சோதிப்பதற்காக அவனே வானங்களையும்,பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். அவனது அர்ஷ் தண்ணீரின் மீது இருந்தது. "மரணத்திற்குப் பின் உயிர்ப்பிக்கப்படுவீர்கள்'' என்று நீர் கூறினால் "இது தெளிவான சூனியமே அன்றி வேறில்லை'' என்று (ஏகஇறைவனை) மறுப்போர் கூறுகின்றனர்.* *(திருக்குர்ஆன் 11:7)* நீரே உலகின் 79% ஐ ஆக்ரமித்துள்ளது. மீதமுள்ள 21% நிலமாக உள்ளது. இதிலும் 79% நீரில் நல்லநீர் வெறும் 3% மட்டுமே. பூமியில் இருக்கும் நீரின் ஆதாரம் (Feeder) என்ன? நீர் பூமியிலேயே தோன்றியதா? அல்லது பூமிக்கு நீர் எங்கிருந்து எப்படி கிடைத்தது? இதில் 97% உப்புநீராகும். இந்த 3% நன்னீரில் பனிப்பாறைகளும், பனிக்கட்டிகளும் உருகி 69% நல்ல நீர் கிடைக்கிறது. நிலத்தடியில் இருந்து 30% நீர் கிடைக்கிறது. 1% நீர் ஏரிகள், ஆறுகள்,சதுப்பு நிலங்கள் ஆகியவற்றில் இருந்து கிடைக்கிறது. மொத்த நன்னீரில் ஆறுகள், கிணறுகள், ஏரிகள் என மிக குறைந்தளவு நீரே உள்ளது. நாம் காணும் மிகப்பெரிய ஆறுகள், ஏரிகள், மிகப்பெரிய நீரூற்றுகள், ஏராளமான கிணறுகள், குளங்கள் போன்றவைகள் உலகிலுள்ள நீரில் 1% என்று கூறப்படும் போது மற்ற நீரின் பிரமாண்டங்களை புரிந்து கொள்ளலாம். நிலத்தடி நீர் , ஆறுகள், குளங்கள் ஏரிகள், கிணறுகள் நிரூற்றுகள் என அனைத்திற்குமான நீர் ஆதாரங்கள் என்ன? அது இயற்கையாக பூமியில் உருவாகிறதா என்று ஆராயும்போது, பல ஆச்சரியமான தகவல்கள் கிடைக்கின்றன. கடல் நீரின் பரப்பு 97% எனும்போது, அதன் பரப்பளவு 1,49,400,000 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். இதில் பசிபிக் பெருங்கடல் 35.25%, அட்லாண்டிக் பெருங்கடல் 20.09%, இந்துமகா பெருங்கடல் 14.65%, மீதமுள்ள கடல்பரப்புகளை சிறு கடல்கள் ஆக்ரமித்துள்ளன. பூமியுள்ள கடலின் நீரின் அளவு 1.3×10(18) டன் என்று கூறுகிறார்கள். நன்னீர் அளவில் பனிக்கட்டி/பனிமலை 69% ,நிலத்தடி நீர் 30.1%, மேற்பரப்பு நீர் 0.3%, மற்றவை 0.6% எனவும் கூறப்படுகிறது. மேற்பரப்பு நீரில் ஏரிகள் 87%, சதுப்பு நிலங்கள் 11%, ஆறுகள் 2% கொண்டதாக உள்ளன. மொத்த உத்தேச நீர் அளவு 326,000,000 மில்லியன் (மூன்று மடங்கு)கன அடிகள் ஆகும். இதுபோன்ற இந்த பூமியை சூழ்ந்துள்ள நீரின் அளவுகள் இன்னும் துல்லியமாக கணக்கிடப் பட்டுள்ளன. பூமியின் மேற்பரப்பில் தண்ணீர் இருப்பதுபோல, பூமியின் கீழ்ப்பரப்பிலும் பெரிய ஆறுகளும், ஏராளமான தண்ணீரும் உள்ளன. கடல்நீர் மணல் வழியாக கீழே இறங்கி அதுதான் நிலத்தடி நீராக சேமிக்கப்படுகிறது என்று நீண்ட காலங்களாக நம்பப்பட்டது. கடல்நீர் நிலத்தடி நீராக சேமிக்கப்பட்டால், நிலத்தடி நீரும் கடல் நீரைப் போல எப்போதும் குறையாமலும் இருக்கவேண்டும். ஆனால் அதுபோல இல்லாமல் பல நகரங்களில் நிலத்தடி நீர் இல்லாமல் ஆகிவிட்டதால், நிலத்தடி நீருக்கும், கடல் நீருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அறிய முடிகிறது. வானிலிருந்து பெய்யும் மழையே பூமியில் சேமிக்கப்பட்டு நிலத்தடி நீராக இருக்கிறது என்று கி.பி 1580 ஆம் ஆண்டுகளில் நீரியல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தார்கள். இதனால்தான் கடற்கரையிலேயே இருக்கும் ஊற்று நீர் உப்பாக இருப்பதில்லை. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பூமி நெருப்புக் கோளாக இருந்த போது, இதிலிருந்து வெளியான நீராவியும், வாயுக்களும், வளிமண்டலத்தில் நிறைந்திருந்தது. பின்பு பூமி குளிர்ந்தபோது, வளிமண்டல நீராவியும் குளிர்ந்து மழையாக பொழிந்தது. பூமியின் தாழ்வான பகுதிகளில் பெய்த மழையால் ஏரிகளும், கடல்களும் உருவாயின. கடும் வெப்பமான பூமி மீது விண்வெளியில் நிறைந்துள்ள ஆஸ்ட்ராயிடு என்ற நீர் நிறைந்த விண்கற்களும், பனிப்பந்து,வால் நட்சத்திரங்களும் தொடர்ந்து மோதி பெரும் வெள்ளத்தை பூமிக்கு கொண்டு வந்து கடல் உருவானதாக கூறப்படுகிறது. வானத்திலிருந்து தண்ணீர் வந்தால் கடல் மட்டும் ஏன் உப்பாக இருக்கிறது என கேள்வி எழுகிறது. பலகோடி ஆண்டுகளாக ஆறுகள் மூலமாக நிலத்திலிருந்து கடலுக்கு அடித்து வரப்படும் கனிமங்கள், மற்றும் உப்புக்கள், கடலில் சேர்ந்து நீர் ஆவியாகும் போது, இவைகள் கடலில் தங்கி விடுவதே காரணமாகும். சிறிதளவு உப்புத்தன்மை உள்ள மழைநீர் பாறைகளில் உள்ள சோடியம், குளோரைடு ஆகிய கனிமங்களை கடலில் சேர்ப்பதால் கடல் நீர் உப்பாக இருக்கிறது. கடலில் சேரும் உப்புகளின் நிலைக்கேற்பவே கடலின் பல பகுதிகளில் உப்பின் அளவில் மாறுபாடுகள் இருக்கின்றன. பல மில்லியன் ஆண்டுகளாக கடலில் உப்புகள் சேர்ந்து கடல் உப்பு மயமாக இருக்கிறது. அவனது அர்ஷ் தண்ணீரின் மீது இருந்தது என்ற திருக்குர்ஆன் வசனமும், தண்ணீர் வானித்திலிருந்தே இறங்கியது என்று கூறுகிறது. ரிக் வேதம் கிரேக்க புராணங்கள், புதிய ஏற்பாடு என்று அனைத்து மத நூல்களும் தண்ணீர் வானத்திலிருந்து தான் இறங்கியது என்று கூறுகின்றன. வானிலிருந்து அளவோடு தண்ணீரை இறக்கினோம்.அதை பூமியில் தங்க வைத்தோம் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. ஆகவே இன்றும் நீர் ஆவியாகி மேகமாகி குளிர்ந்து மழையாக பொழிவதே பூமிக்கான நீர் ஆதாரமாகும். மழை பொய்யாத பகுதிகளில் நிலத்தடி நீர் குறைந்து இன்று பல நகரங்களில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதை காணலாம். திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..! *50 நாட்கள், 50 தலைப்புகளில் எழுதிய இந்த தொடரை இன்றுடன் நிறைவு செய்கிறேன்*. ஏராளமான ஆய்வுக் கட்டுரைகளை மிக விரிவாக எழுத வேண்டும். சிறிது இடைவெளி விட்டு இறைவன் நாடினால் தொடர்கிறேன். 🔮⚖️ *கப்ளிசேட்* *26.01.26*
💖காதல் ஸ்டேட்டஸ்🥰 - ShareChat
*முதல் குடியரசு தினம்* #💝இதயத்தின் துடிப்பு நீ #💖நீயே என் சந்தோசம்🥰 #💖காதல் ஸ்டேட்டஸ்🥰
💝இதயத்தின் துடிப்பு நீ - ShareChat
01:29
#💝இதயத்தின் துடிப்பு நீ #💖நீயே என் சந்தோசம்🥰 #💖காதல் ஸ்டேட்டஸ்🥰
💝இதயத்தின் துடிப்பு நீ - ShareChat
00:22
#💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #💖நீயே என் சந்தோசம்🥰 #💝இதயத்தின் துடிப்பு நீ
💖காதல் ஸ்டேட்டஸ்🥰 - ShareChat
00:11
#💝இதயத்தின் துடிப்பு நீ #💖நீயே என் சந்தோசம்🥰 #💖காதல் ஸ்டேட்டஸ்🥰
💝இதயத்தின் துடிப்பு நீ - ShareChat
00:18
#💖நீயே என் சந்தோசம்🥰 #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #💝இதயத்தின் துடிப்பு நீ
💖நீயே என் சந்தோசம்🥰 - ShareChat
00:31
#💝இதயத்தின் துடிப்பு நீ #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #💖நீயே என் சந்தோசம்🥰
💝இதயத்தின் துடிப்பு நீ - ShareChat
00:22
#💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #💖நீயே என் சந்தோசம்🥰 #💝இதயத்தின் துடிப்பு நீ
💖காதல் ஸ்டேட்டஸ்🥰 - ShareChat
00:09
#💝இதயத்தின் துடிப்பு நீ #💖நீயே என் சந்தோசம்🥰 #💖காதல் ஸ்டேட்டஸ்🥰
💝இதயத்தின் துடிப்பு நீ - ShareChat
00:16