புரட்சித்தலைவர் எம்ஜிஆரை என் வாழ்க்கையில் மறக்கவே முடியாது. நாடோடி மன்னன் படம் எனக்கு தமிழில் முதல் படம். அந்த படத்தில் நான் வரும் காட்சியில் இருந்து கலர் படமாக மாற்றினார். இதில் நான் அறிமுக நடிகை. அனைவருக்கும் என்னை தெரிய வேண்டும் என்பதற்காக அப்படி செய்தார். அந்த படமும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது என சரோஜா தேவி கூறியுள்ளார்.
தெய்வம் வாழும் வீடு
எம்ஜிஆர் எனக்கு நிறைய விசயங்களை கற்றுக் கொடுத்தார். அவருடன் சேர்ந்து நிறைய படங்களில் நடித்திருக்கிறேன். ஒருவரிடம் எப்படி பேச வேண்டும், எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் அவரிடம் இருந்தே தெரிந்துகொண்டேன். சென்னையில் உள்ள ராமாபுரம் தோட்டத்தை பார்க்கும் போதெல்லாம் வருத்தமாக இருக்கும். தமிழகத்தில் உள்ள அனைவரும் அவரை தெய்வம் என்று போற்றி மதிக்கிறார்கள். நானும் ராமாபுரத்திற்கு சென்று பலமுறை உணவு சாப்பிட்டிருக்கிறேன். எனவே அவரை நீங்கள் எல்லோரும் தெய்வம் என்று கூறி நிறுத்தி விடாதீர்கள். அது தெய்வம் வாழும் வீடாக புனிதமாக போற்றி மதிக்க வேண்டும். அவர் இல்லை என்றால் இந்த சரோஜா தேவி இல்லை. அவர் மூலம் வந்தவர் தான் சரோஜா தேவி. எம்ஜிஆரை போன்று நடிகர் சிவாஜி கணேசனிடம் நிறைய கற்றுக்கொண்டேன். அவர் சிறந்த நண்பராகவும் இருந்திருக்கிறார் என சரோஜா தேவி தெரிவித்துள்ளார்.
#எனக்கு பிடித்த நடிகை #எம் ஜி ஆர் #எம் ஜி ஆர் கருத்துள்ளது