UMA maheswari
ShareChat
click to see wallet page
@304650741
304650741
UMA maheswari
@304650741
मुझे Sharechat pin deleteपर फॉलो करें!
#📠இன்றைய தகவல்📃 #🙏ஆன்மீகம் யார் ?-காஞ்சி மஹான்* ஒரு பாதிரியார் பெரியவாளை தர்சனம் பண்ண வந்தார். ஒரு பெரிய தட்டு நிறைய பழங்களை சமர்ப்பித்து விட்டு, தங்கள் மத வழக்கப்படி தலை, மார்பு, தோள்கள் இவற்றை விரல்களால் தொட்டு, ஒரு கிராஸ் போட்டுவிட்டு தன் வணக்கத்தை தெரிவித்துக் கொண்டார். அவர் நிறைய படித்தவர்; அபரிமிதமான பேச்சாற்றலால், மதக் கொள்கைகளை அடுக்கிக் கொண்டே போனார். தங்கள் மதத்தைத் தவிர வேறு எந்த மதத்திலும் இப்பேர்ப்பட்ட அருமையான கொள்கைகள் இல்லவேயில்லை என்று நிலை நாட்ட விரும்பிய வேகம், வெறி அவர் பேச்சில் தொனித்தது......யாரிடம்? "அன்புதான் எங்க கொள்கையில ரொம்ப முக்கியமானது; எல்லோரிடமும் வேற்றுமை பாராட்டாமல், அன்பு செலுத்தியவர் எங்கள் பிதா.." மேற்கொண்டு அவரை பேசவிடாமல் அவருடைய மனசாக்ஷியே தடுத்தது போல், பேச்சை நிறுத்திக் கொண்டார். காரணம், எங்கள் பிதா... என்று அவர் சொல்லி முடித்ததும் பெரியவா லேஸாக புன்னகைத்ததும், பாதிரியாரின் பேச்சு நின்றது. "ஹிந்து மதத்லேயும் அன்புக்கு ரொம்ப முக்யத்வம் உண்டு! "அன்பே சிவம்"...ங்கறது பெரியவால்லாம் சொன்ன வாக்கு! திருமூலர்ன்னு ஒரு பெரியவர் திருமந்திரம்ன்னு ரொம்ப ஒசத்தியான புஸ்தகம் எழுதியிருக்கார். அதுல அன்பைப்பத்தி, மனித நேயத்தைப் பத்தி ரொம்ப அழுத்தமா சொல்லியிருக்கார். விஷ்ணு சஹஸ்ரநாமம்...ன்னு மஹாபாரதத்ல வருது. அதுல, "கரணம், காரணம், கர்த்தா, விகர்த்தா"ன்னு பகவானுக்கு பேர் சொல்லப்பட்டிருக்கு. நீங்களும் ஜீஸஸ்ஸை கர்த்தர்..ன்னு சொல்லறேள். உங்க மதத்துக்கு எத்தனையோ காலத்துக்கு முன்னாடியிலிருந்தே....நாங்க பகவானை "கர்த்தர்"ன்னு சொல்லிண்டிருக்கோம்! ஒங்களோட மதப்ரசாரங்கள் எல்லாத்துலயும், எங்களோட மதம், இதிஹாஸ புராணங்கள்,கடவுள்கள் எல்லாத்தையும் நிந்தை பண்றேள்! ஆனா, நாங்க எந்த மதத்தையோ, மதத் தலைவர்களையோ, தெய்வத்தையோ நிந்தனையாவோ, கொறையாவோ பேசறதில்லை! ஏன்னா ஹிந்து மதம்தான் மிச்ச எல்லா மதங்களுக்கும் தாயார் மாதிரி ! ஒரு தாயார், தன்னோட கொழந்தை துஷ்டனா இருந்தாக் கூட திட்ட மாட்டா!..... நீங்கள்ளாம் ஹிந்து சமயப் பண்டிதாளை மீட் பண்ணறதுக்கு விரும்பாம, எதுவுமே தெரியாத பாமர ஜனங்கள் கிட்டப் போய் வாசாலகமா [வாய் ஜாலமாக] பேசறேள் ! எங்களுக்கு அனுஷ்டானம் முக்யம் ; ஒங்களுக்கு ப்ரசாரம் முக்யம்; அதோட பாமர ஜனங்கள் ..கிட்ட போனதுமே ஒங்களோட மதத் தத்துவத்தை சொல்றதில்லை; பால் பவுடர், ரொட்டி, துணிமணி...ன்னு குடுத்து ஆசை காட்டி இழுத்துக்கறேள்! மொதல்ல அவாளுக்கு காப்பு மாதிரி பணம் குடுக்கறேள்... அப்றமா மதத்தைப் பத்தி பேசறேள்...." பாதிரியார் சங்கடமாக நெளிந்தார்! உண்மையை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. ஆனாலும் பெரியவாளுடைய ஒவ்வொரு சொல்லும் அவரைக் கட்டிப் போட்டுவிட்டது! "எங்கள் கர்த்தர்....தன் ரத்தத்தாலே பாவிகளின் பாவங்களைக் கழுவுகிறார்" கட்டக்கடைசியாக எதையோ சொல்ல வேண்டும் என்று சொன்னார். பெரியவா மறுபடியும் புன்னகைத்தார்...."கர்த்தர்...ரொம்ப கருணையானவர்...ங்கற ஸ்துதி ஞாயந்தான்! ஆனா மத்தவாளை நிந்திக்கக் கூடாதுங்கறதும் ஞாயந்தானே ?...." பாதிரியார், "நிந்தனை பத்தி என்னை சிந்தனை செய்ய வெச்சிட்டீங்க!.." என்று முக மலர்ச்சியோடு கூறவும், ஒரு பழத்தை ப்ரசாதமாக குடுத்தார் பெரியவா. அவருக்கும் திருக்கரத்தை உயர்த்தி ஆசி வழங்கினார். நம்முடைய மதத்தைப் பற்றி நாம் யாரிடமும் ப்ரசாரம் பண்ணி எதையும் ஸ்தாபிக்க அவச்யமேயில்லை! ப்ரசாரம் பண்ணுவதற்கு "இவ்வளவுதான் இதில் இருக்கிறது" என்ற full stop ப்பை நம்முடைய மத நூல்களுக்கு [இதிஹாஸ,புராணங்கள், சாஸ்த்ரங்கள் என்று நீண்டு கொண்டே போகும்] நம்மால் வைக்க முடியாது. சங்கரர், மத்வர், ராமானுஜர், ஆழ்வார்கள், நாயன்மார்கள் இன்னும் ஏகப்பட்ட பக்த சிரோன்மணிகள் கூட ப்ரசாரம் பண்ணாமல், சாஸ்த்ர சம்மதமான தங்கள் அனுஷ்டானத்தில் நமக்கெல்லாம் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். எனவே அவரவர் எந்தக் கடமையை செய்ய வேண்டுமோ, அதை ஒழுங்காக பண்ணிக் கொண்டிருந்தாலே, நம் மதத்துக்கு எந்த ஹானியும் வராது என்பதே மஹான்களின் வாக்கு! ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர ! ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர!🌹
📠இன்றைய தகவல்📃 - ShareChat
#📠இன்றைய தகவல்📃
📠இன்றைய தகவல்📃 - ShareChat @laibala1825 Good morning ShareChat @laibala1825 Good morning - ShareChat
#📠இன்றைய தகவல்📃 #🙏ஆன்மீகம் Srinivasa
📠இன்றைய தகவல்📃 - melkote perumal alankaram Thennangur melkote perumal alankaram Thennangur - ShareChat
#📠இன்றைய தகவல்📃 #🙏ஆன்மீகம்
📠இன்றைய தகவல்📃 - ShareChat @Bindu ShareChat @Bindu - ShareChat
#📠இன்றைய தகவல்📃 #🙏ஆன்மீகம்
📠இன்றைய தகவல்📃 - UAI SHREE RAM SUBHODAYAM UAI SHREE RAM SUBHODAYAM - ShareChat
#📠இன்றைய தகவல்📃
📠இன்றைய தகவல்📃 - Coot moting Coot moting - ShareChat
#📠இன்றைய தகவல்📃 #🙏ஆன்மீகம்
📠இன்றைய தகவல்📃 - ஔகருஷமுநத்ததுர்த்தி @D. கிருத்திகைவிரதம் புரப்பாசி அகீடோபரீ 24 10 Krishna moorthy தெய்வங்களின்ஆசியுடன் னியவெள்ளிக்கிழமை காலைவணக்கம் ஔகருஷமுநத்ததுர்த்தி @D. கிருத்திகைவிரதம் புரப்பாசி அகீடோபரீ 24 10 Krishna moorthy தெய்வங்களின்ஆசியுடன் னியவெள்ளிக்கிழமை காலைவணக்கம் - ShareChat
#📠இன்றைய தகவல்📃 #🙏ஆன்மீகம்
📠இன்றைய தகவல்📃 - Saird Om HAPPY THURSDAY GOOD MORNING dailyhunt] Vieu SeIton Dotnidaid Play it on App Store Google Saird Om HAPPY THURSDAY GOOD MORNING dailyhunt] Vieu SeIton Dotnidaid Play it on App Store Google - ShareChat
#📠இன்றைய தகவல்📃
📠இன்றைய தகவல்📃 - Coot moting Coot moting - ShareChat
#📠இன்றைய தகவல்📃
📠இன்றைய தகவல்📃 - ShareChat @laibala1825 Good morning ShareChat @laibala1825 Good morning - ShareChat