இயக்குனர் மாரி செல்வராஜ்-க்கு பெரியார் விருது வழங்கிய விழாவில் அவர் பேசிய பேச்சு வைரலாகி வருகிறது.
"..சினிமா துறையில் என்னை ஒரு ஆளாக்கியது ராம் சார் தான். அவர் என்கிட்ட அடிக்கடி சொல்ற வார்த்தை என்னானா 'அவரை விட சிறந்த இயக்குனர்னு நான் பேரு வாங்கனும். அதுதான் அவருக்கான மகிழ்ச்சி. அப்பத்தான் ராம் சரியா சொல்லி கொடுத்துருக்கானு தனக்கு திருப்தியாக இருக்கும்' சொல்லுவாரு.
அதுக்கு பேரு தான் "ஆசானை மீறுதல்"னு சொல்லுவாங்க. கத்துகொடுத்தவர மீறி ஜெயிச்சு வரணும்.
ஆனா பெரியார் கிட்ட இருந்து தொடங்கிட்டு நாலு வரி கோர்வையாக மேடையில் பேச தெரிஞ்சதும் அவரையே திட்டி அவதூறு செஞ்சு அதுல கிடைக்குற விளம்பரத்தை வெற்றினு சொல்ல முடியாது.
உண்மையிலேயே பெரியாரை நீங்க மீறிவரணும்னா அவருடைய வாழ்நாள்ல அவரு செஞ்சதை விட ஒரு படி மேல நீங்க செய்ங்க அப்புறம் பேசலாம்னு.." சீமான் கன்னத்தில் பளார்னு அடிச்சிருக்காரு நம்ம மாரி.
இதை கேட்ட போது 15ஆண்டுகளாக மே17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி ஒவ்வொரு மேடையிலும், விமர்சனம் என்ற பெயரில் பெரியாரை அவதூறு பரப்பி வரும் சங்கி சீமான் ஐயா மணியரசன் போன்றோருக்கு கொடுத்துவரும் பதிலடியை வழிமொழிந்திருக்கிறார் என்பது மிகுந்த மகிழ்ச்சி. உண்மைகள் யார் சொன்னாலும் ஒரே மாதிரிதான் இருக்கும்.
மாரியின் இந்த பேச்சு GenZ தலைமுறையினரால் அதிகம் பரப்பப்பட்டு வருகிறது.
பிரம்மாண்ட வெற்றிகளை குவித்து வரும் இயக்குனர் மாரி செல்வராஜ் போன்றோர் தெளிந்த அரசியலோடு சரியான வழியில் பயணிக்கின்றனர். ஆனாலும் பாருங்க காலாவதியான இயக்குனர் சீமானுக்கு சொல் புத்தியும் இல்லை சுய புத்தியும் இல்லை. #🤭அரசியல் மீம்ஸ் #🎙️அரசியல் தர்பார் #🚨கற்றது அரசியல் ✌️ #💪 மே17 இயக்கம் #மாரி செல்வராஜ்
#தோழர் திருமுருகன் காந்தி பதிவிலிருந்து
விவசாய சங்கத்தின் தலைவர் தோழர் ஈசன் மற்றும் ஒன்பது விவசாயிகள் பொங்கல் விழா நாளிலிருந்து திமுக அரசால் சிறைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். திமுக ஆட்சியில் விவசாயிகள் அமைப்பினர் மீது கடுமையான நெருக்கடியை உருவாக்க காரணமென்ன. கடந்த மாதம் விவசாயிகள் கோரிக்கைகளை முன்னிறுத்தி திருவண்ணாமலையில் திமுக அரசின் கவனத்தை ஈர்க்க முயற்சி செய்த தோழர் அருள் ஆறுமுகம் உள்ளிட்ட விவ்சாயிகளை கைது செய்து சிறையில் அடைத்தது திமுக அரசு. திமுக ஆட்சியில் இரண்டுமுறை அருள் ஆறுமுகம் சிறைப்பட்டார். ஒருமுறை குண்டர் சட்டம் ஏவப்பட்டது. மாஞ்சோலை தோட்ட விவசாய தொழிலாளர்கள் கோரிக்கையையும் திமுக அரசு கைகழுவியது.
அதிமுக காலத்தில் காவிரி டெல்டா பகுதியில் ஓ.என்.ஜி.சி எதிர்த்து போராடியோர் மீது அதிமுக அரசு போட்ட பொய் வழக்குகளை கடமையாக திமுக அரசு நடத்தி தண்டனை பெற்றுத் தருகிறது. விவசாய சங்கத்தின் தோழர் பி.ஆர்.பாண்டியன் கடுமையான தண்டனையை சில மாதங்களுக்கு முன் பெறவேண்டிய நிலை ஏற்பட்டது. டெல்டாவில் அதிமுக அரசால் போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுவதாக சொன்ன திமுக, கடந்த 5 ஆண்டுகளாக வழக்குகளை தீவிரமாக நடத்தி வருகிறது. பேரா.ஜெயராமன் உள்ளிட்ட பல திராவிடர், தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்கள், பெரியாரிய தோழர்கள் இன்றளவும் வழக்குகளுக்காக வாரம் தோறும் நீதிமன்ற படியேறிக் கொண்டிருக்கின்றனர்.
கொங்குப் பகுதியில்
பலவேறு உழவர் கோரிக்கைக்காக போராடி வருபவர் தோழர் ஈசன். உழவர்களுக்கான மின்சார கட்டணம் குறித்தான கடந்த அதிமுக காலத்தின் குழப்பமான நிலையின் பொழுது என் தந்தை திரு.காந்தி அவர்களின் ஆலோசனையில் கோரிக்கைகளை அவர் வடிவமைத்த சமயத்திலும், பின்னர் ஐ.டி.பி.எல் குழாய் பதிப்பிற்கு எதிரான போராட்டம் வழியாகவும் மே17 இயக்கத்திற்கு அறிமுகமான தோழர்.
கடந்த ஆண்டில் 'இந்து அறநிலையத்துறை' இனாம் நில உரிமை எனும் அடிப்படையில் வெகுமக்களின் நிலங்களை கையகப்படுத்தும் அராஜக நிலையை எதிர்த்த போராட்டத்தை குறித்து விளக்கப்படுத்தி, இதுகுறித்து மே17 இயக்கமும் தனது குரலை உழவர்கள், சாமானிய மக்களின் கோரிக்கைகளுக்காக எழுப்பியது.
இந்நிலையில், கொங்குப்பகுதியில் கறிக்கோழி வளர்ப்பவர்களிடத்தில் மிகக்குறைந்த விலைக்கு கோழிகளை வாங்கி பெருத்த லாபம் சேர்க்கும் நிறுவனங்களிடம் கோழிக்கான விலையை உயர்த்தக் கோரிக்கை வைத்து போராட்டம் தொடங்கப்பட்டது.
2013ம் ஆண்டில் நிர்ணயம் செய்யப்பட்ட கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ6.50 எனும் நிலையிலிருந்து கிலோவிற்கு ரூ20 ஆக உயர்த்த கறிக்கோழி வளர்ப்பாளர்கள் கோரிக்கை வைத்தனர். இரை, நில வாடகை, மின்சாரம், கூலி உயர்வு உட்பட பலவேறு செலவினம் அதிகரிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு மிக நியாயமான கோரிக்கையை முன்னெடுத்தனர்.
இக்கோரிக்கையை முன்னெடுத்து கறிக்கோழி நிறுவனங்கள் கொள்முதல் விலையை கூட்டித்தரக் கோரி போராட்டத்தை தோழர் ஈசன் ஒருங்கிணைப்பில் நடத்தப்பட்டது.
கறிக்கோழி உற்பத்தியாளர்கள் என்போர் சிறு விவசாயிகள், சிறுகுறு முதலீடு செய்தவர்கள். இவர்களுடைய கோரிக்கையை பெருநிறுவனங்களிடம் பேசி முத்தரப்பு ஒப்பந்தத்தை செய்ய திமுக அரசு முன்வந்திருக்க வேண்டும். 2022ல் ஃபோர்டு நிறுவனத்தில் தொழிலாளர்களுடைய போராட்டத்தின் பொழுது ஃபோர்டு நிறுவனத்திற்கு அழுத்தம் கொடுக்கும் சூழல் உருவானதையடுத்து திமுக அமைச்சர்கள் தலையிட்டு தொழிலாளர் கோரிக்கையை நிறைவேற்ற அழுத்தம் கொடுத்து போராட்ட வெற்றியை சாத்தியப்படுத்தினர். இதேபோல கோழி இறைச்சி பெருநிறுவனங்களிடம் பேசி இச்சிக்கலை தீர்த்திருக்க இயலும். ஆனால், போராடிய விவசாயிகளை கைது செய்து சிறையில் அடைத்தது திமுக அரசு.
தோழர் ஈசன் உள்ளிட்ட உழவர்களை விடுதலை செய்து, வழக்குகளை திரும்பப்பெற்று, கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய கடமை திமுக அரசிற்கு உண்டு. நீதிமன்றத்திற்கு கொண்டு வரும் போது, கைதான தோழர்களை கடுமையான பாதுகாப்பை ஆயுதப்பிரிவு காவலர்களைக் கொண்டு தீவிரவாதிகளைப் போல ஏன் நடத்துகிறது திமுக அரசு?
விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றாமலும், தோழர் ஈசன் உள்ளிட்டோரை விடுதலை செய்யாமலும் திமுக அரசு அடக்குமுறையை தொடருமெனில், விவசாயிகளுக்கும், போராடுகின்ற சமானிய கறிக்கோழி உற்பத்தியாளர்களுக்கும் ஆதரவாக மே பதினேழு இயக்கம் போராட்டத்தை தொடங்கும். சனநாயக இயக்கங்கள் நியாயமான கோரிக்கைக்கும், தோழர் ஈசன் உள்ளிட்ட 9 பேரின் விடுதலைக்காக குரல் கொடுக்க முன்வர வேண்டும். #💪 மே17 இயக்கம் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #தமிழ்த்தேசியம் #📰தமிழக அப்டேட்🗞️
#🚨கற்றது அரசியல் ✌️ #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #💪 மே17 இயக்கம் #தமிழ்நாடு தமிழருக்கே! #தோழர் திருமுருகன் காந்தி
#🚨கற்றது அரசியல் ✌️ #🎙️அரசியல் தர்பார் #📰தமிழக அப்டேட்🗞️ #தமிழ்த்தேசியம்
திகார் நிறைய மாறியிருக்கிறது. எங்களின் சிறைக்கூடத்தில் கிட்டத்தட்ட 50 பேர் இருக்கின்றனர். கொள்ளளவு தாண்டிவிட்டது. முன்பை விட அமைதி இப்போது குறைந்திருக்கிறது. உச்சநீதிமன்றம் பிணை மனுவை நிராகரித்தற்கு பிறகு அமைதியின்மையின் சத்தம் இங்கு இன்னும் அதிகரித்திருக்கிறது.
தீர்ப்புக்கு பிறகான ஊடகப் புயலிலிருந்து இன்னும் நான் மீளவில்லை. ஆனால் சிறைவாசிகள் பலருக்கும் முன்பை விட என்னை தற்போது தெரிந்திருக்கிறது. என்னை குறித்து தொடர்ந்து பேசி வரும் தொலைக்காட்சிகளும் செய்தித்தாள்களுமே காரணம். இப்போது அனைவரும் என்னிடம் சற்று நேரம் பேச விரும்புகின்றனர். ஆர்வத்தாலா திகைப்பிலா என தெரியவில்லை. ஆனால் நானோ உண்மையில் தனியாக இருக்கவே பெரிதும் விரும்புகிறேன்.
என்னுடைய சிறையும் சற்று வித்தியாசம் பூண்டிருக்கிறது.
இடைக்கால பிணை முடிந்து வீட்டிலிருந்து நான் கிளம்பியபோது, தீர்ப்பு சாதகமாக இருக்குமென ஏதோவொரு மூலையில் கொஞ்சம் நம்பிக்கை இருந்தது. எனவே என் புத்தகங்கள், குறிப்புகள், படங்கள், அட்டைகள் எல்லாவற்றையும் மூட்டை கட்டி வீட்டுக்குக் கொண்டு சென்றிருந்தேன். ஆனால் பிணை நிராகரிக்கப்பட்டுவிட்டது. இனி இந்த இடத்தை விட்டு குறைந்தபட்சம் ஒரு வருடத்துக்கு செல்ல முடியாது. என் சிறையில் நான் உருவாக்கியிருந்த வெளி, காலிப் பலகை போல் வெறித்துக் கொண்டிருக்கிறது. ஒருவேளை இது நன்மைக்காகவும் இருக்கலாம். இது ஒரு புது தொடக்கமாகவும் இருக்கலாம்.
ஒரு தீர்ப்பு வந்த பிறகு, சில நாட்களுக்கு கொஞ்சம் சிரமம் இருக்கும். உச்சநீதிமன்றம் என் பிணையை நிராகரித்தபோது, 2022ம் ஆண்டில் முதன்முறையாக விசாரணை நீதிமன்றம் என் பிணையை நிராகரித்த நினைவை மனம் மீட்டிக் காட்டியது. திடுமென வந்து சேர்ந்த செய்தி முன்பை போலவே இப்போதும் என்னை உலுக்கியிருந்தது.
ஐந்து வருடங்களில் மூன்று நீதிமன்றங்களால் ஐந்து முறை என் பிணை மறுக்கப்பட்டிருக்கிறது.
கையறுநிலையில் உழலுவது பழக்கமாகிவிட்டது. வாடைக்குளிர் வாட்ட சால்வை, சூடான ஆடைகள் ஆகியவற்றுக்கு அடியில் சுருண்டு கிடக்கிறேன். இரவுப்பொழுதில் இரும்புக் கம்பிகளினூடாக வரும் கூர்மையான காற்றால் சிமெண்ட் தளத்தில் படுப்பதை கடினம். காலைப் பொழுதுகளில் பிரச்சினை இல்லை. வெளியே சென்று வெளிச்சம் இருக்கும் வரை நடக்க அனுமதிக்கப்படுகிறோம். ஆனால் பிற்பகல் 3 மணிக்கு பிறகு, சிறைக்குள் அடைக்கப்படும் நேரம் வருகையில், மனம் விழத் தொடங்கி விடுகிறது. முடிவற்ற இருளில் அலையும் மனம், விடுதலை பெற்று வெளியே சென்றுவிட முடியுமா என பதறுகிறது.
ஒருவேளை பிணை கிடைத்தாலும் என்ன செய்வது?
பிணை கொடுக்கப்பட்டவர்களுக்கு வெளியே இருக்கும் கட்டுப்பாடுகள், வாழ்க்கையை அனுபவிக்க முடியாதளவுக்கு கொடுமை நிறைந்தவை. அதுவும் கிட்டத்தட்ட சிறைவாசம்தான். இந்த இருளுக்குள் இருந்து கடுமையாக போராடிதான் ஒவ்வொருமுறையும் விடுபடுகிறேன்.
திகாரின் விலங்குகள்தான் எனக்கு ஆறுதல். ஷில்பா, ஷ்யாம்லால் என்ற இரு பூனைகளுக்கு உணவளிக்கிறேன். ஷில்பா இரண்டு குட்டிகளை போட்டது. ப்ளாக் பாந்தர், ஸ்டூவர்ட் லிட்டில் என பெயரிட்டிருக்கிறேன். அவற்றின் அன்றாட விளையாட்டுகள் வேடிக்கையாகவும் மனதுக்கு இதமாகவும் இருக்கின்றன. சக மனிதர்களை விட அவற்றுடன் நேரம் செலவழிக்க அதிகம் விரும்புகிறேன்.
இன்னொரு சுவாரஸ்யம்! வெளியே பல குற்றங்கள் சாட்டப்பட்டு உள்ளே வந்தவர்கள் பூனைகள், பறவைகள், பல்லிகள், எறும்புகள் என பல விலங்குகளுக்கு உணவளித்து நேரம் கழிக்கின்றனர். விலங்குகளுக்கு உணவளித்தால், சீக்கிரம் விடுதலை கிட்டும் என ஒரு மூட நம்பிக்கை. இதனால்தான் ரொட்டியின் சிறு துண்டுகளையோ சர்க்கரை துணுக்குகளையோ கூட இங்கு நீங்கள் பார்க்க முடியாது. எல்லா எறும்புகளுக்கும் நல்ல தீனி.
ஒருமுறை ஒரு மரத்துக்கு நீரூற்றியவருக்கு இரு வாரங்களில் பிணை கிடைத்தது. அடுத்த நாள் அவர் சென்ற பிறகு, வேறு மூன்று பேர் அந்த மரத்துக்கு தொடர்ந்து நீரூற்றத் தொடங்கினர். அவர்களுக்கும் ஒரு நம்பிக்கைதான். சிறைபட்டாலும் நம்பிக்கை மட்டும்தான் அடைபடாமல் இருக்கும் ஒரே விஷயம், இல்லையா?
பிணை மறுப்பு கொடுத்த கலக்கத்தை தாண்டி மீண்டும் வாசிப்புக்கு செல்லலாமென இருக்கிறேன். வாசிக்கவென ஒரு புத்தகப் பட்டியலை யோசித்து வைத்திருக்கிறேன். இம்முறை விடுதலைக்கான காத்திருப்பு அதிகமாக இருக்கக் கூடும். எனவே மனம் தளர்ந்து விடாமல் இருக்க தேவையானவற்றை நான் செய்ய வேண்டும். குறிப்பாக என் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளின் மீதான சந்தேகம், நிச்சயம் என்கிற நிலைக்கு பொதுப்புத்தியில் மாற்றப்பட்டிருக்கும் இந்த சூழ்நிலையில்!
வெகுஜன ஊடகங்களில் என்னை குறிக்க பயன்படும் வார்த்தை ‘தேசவிரோதி’ என்பதில் இருந்து இப்போது ‘தீவிரவாதி’ என மாற்றம் பெற்றுவிட்டது.
அரசு என்னை பற்றி சொல்பவற்றை நம்புபவர்களை நான் மாற்ற முடியாது. அதே நேரம் எனக்கு ஆதரவாக நிற்பவர்களிடம் ஒன்றை மட்டும் கேட்டுக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டவனாக என்னை சித்தரிக்கும் போக்கை நீங்கள் கைவிட வேண்டும்.
முடிவற்ற காத்திருப்பில் வலி இருப்பது உண்மைதான். ஆனால் அதிலும் ஓர் அழகு இருக்கிறது. நான் இருக்கும் இடத்தில் திருப்தி கொள்கிறேன். எனக்கு நிகழ்த்தப்படுவதை குறித்து எந்தக் கவலையும் எனக்கு இல்லை. ஏனெனில் இது எனக்கு மட்டுமானது இல்லை!
என்னுடைய சிறைவாசம் எனக்கு மட்டுமானது இல்லை. அதிகாரத்தில் இருப்பவர்கள் விரும்பாத கேள்விகளை கேட்கும் எவருக்கும் என் நிலைதான் வாய்க்கும் என அனைவருக்கும் உணர்த்த என்னை பயன்படுத்துகின்றனர். எனவே என்னுடைய போராட்டம் என்பது தனிப்பட்ட போராட்டம் அல்ல. அது என்னையும் தாண்டிய அளவிலான போராட்டம்!
இதனால்தான் எனக்கு ஆதரவாக நிற்பவர்கள் என்னை குறிக்க பயன்படுத்தும் சொல்லாடல்களை மாற்றும்படி கேட்கிறேன்.
நம்முடைய போராட்டம் என்பது ஓர் இலக்கை நோக்கிய போராட்டம்!
அனைவரும் சமமற்று வாழ நிர்ப்பந்திக்கப்படும் காலத்தில் நாம் இந்த போராட்டத்தை தொடுக்கிறோம்!
உறுதிதான் என்னுடைய இந்த வலியை சகித்துக் கொள்ள வைக்கும் பலம்!
கிறிஸ்துவை போல, பகத் சிங்கை போல!
இருவரும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தங்களின் உயிர்களை ஈந்தார்கள். அந்த வரிசையில் வரலாறு என்னையும் இன்று கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது என்பதை புரிந்து கொள்ளும்போது பேருவகை அடைகிறேன்.
இதனால்தான் அன்றாடம் விழித்தெழுந்ததும் பார்வையில் படுவது போல பகத் சிங்கின் வாசகங்களை சிறை சுவற்றில் எழுதி வைத்திருக்கிறேன்:
“சாம்பலின் ஒவ்வொரு அணுவையும் என் வெப்பம் இயக்குகிறது.
சிறையில் கூட சுதந்திரமாக இருக்குமளவுக்கு சுதந்திரப் பித்து பிடித்தவன் நான்!”
- Outlook இதழில் வெளியாகியிருக்கும் தோழர் உமர் காலீத் கட்டுரையின் மொழிபெயர்ப்பு! #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #🚨கற்றது அரசியல் ✌️ #🎙️அரசியல் தர்பார் #😠மானம்கெட்ட மோடி அரசாங்கம்😠 #மோடி அரசாங்கம்
அம்மா பேராசிரியர் சக்குபாய் அவர்கள் நம்மை விட்டு பிரிந்தார். அய்யா பேராசிரியர் நெடுஞ்செழியனின் இணையர், அவரோடு இணைந்து தமிழ் மெய்யியல் ஆய்வுகள் நடத்தியவர். பெரியாரிய பற்றாளர், திராவிடர் இயக்க களச் செயற்பாட்டாளர். தமிழ்த்தேசிய சிந்தனையாளர். ஈழப்பிராட்டத்திற்கு தம் மகனை ஒப்புவித்த ஒப்பில்லா தாய். பேராசிரியர் சக்குபாய் அவர்களின் மறைவு ஈடு செய்ய இயலாதது.
இந்த இணையர் இல்லையெனில் தமிழுலகத்தின் மெய்யியல் சிறப்புகளை நாம் சமகாலத்தில் அறிந்திருக்க இயலாது. பேரா.நெடுஞ்செழியன் அவர்கள் தமிழர் மெய்யியல் ஆய்வுகளை நிகழ்த்தி, 'ஆசீவகத்தின் மரபுகள்' குறித்து விரிவான தகவல்களை உலகிற்கு அளித்தார். தக்க சான்றுகளுடன் தமிழ் மெய்யியல் ஆரியவைதீகத்துடன் நடத்திய போராட்டங்களை குறித்த நூல்களை இருவரும் நமக்களித்தனர்.
அம்மா சக்குபாய் அவர்களை ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் நேரில் சந்தித்து நீண்டநேரம் உரையாட வாய்ப்பிருந்தது. இதற்கு முன்னதாக எங்களது தமிழ்த்தேசிய பெருவிழா நிகழ்வில் பேரா.நெடுஞ்செழியன் அவர்களுக்கு மரியாதை செய்யும் வகையில் அவருக்கு 'அருந்திறள் தமிழர்' எனும் வாழ்நாள் விருதை அளிக்க ஒப்புதல் பெற்ற பொழுது பேசினேன்.
பேரா.நெடுஞ்செழியன் அவர்களது வைதீக எதிர்ப்பு அகத்திணை மரபுகள் ஆய்வு குறித்து நீண்ட நேரம் தொலைபேசியில் எனக்கு விளக்கமளித்து புரியவைத்தார். அவ்வப்போது அவரது நூல்களை வாசித்து மேலதிகமாக புரிந்துகொள்ள முயல்வதுண்டு. பொங்கல் சமயத்தில் கூட அவரது 'பக்தி இயக்கங்களும் வைதீக எதிர்ப்பும்' குறித்த நூலை மீள வாசித்துக் கொண்டிருந்த பொழுது அம்மாவின் நினைவு வந்தது. நேரில் சென்று பேசினால் நன்றாக இருக்குமென நினைத்திருந்தேன். இந்நூலின் பதிப்பாசிரியராக சக்குபாய் அம்மா இருந்தார். நெடுஞ்செழியன் அவர்களது 'தமிழர் தோற்றம் என்பது இடப்பெயறுதலால் நிகழவில்லை' மாறாக இந்நிலத்தில் இயற்கையாக வாழ்ந்து வளர்ந்த நாகரிகத்தின் சொந்தக்காரர்கள் எனும் ஆய்வு குறித்து அம்மா என்னிடம் நீண்டநேரம் உரையாடினார். இந்த ஆய்வை முடிக்க இயலாது அய்யா நெடுஞ்செழியன் மறைவுற்று சில ஆண்டுகளில் அம்மாவையும் இழந்துள்ளோம். முடிவுறா ஆய்வு குறித்து அம்மா ஆதங்கத்துடன் பேசியது நினைவில் நிற்கிறது. பேரா.நெடுஞ்செழியன் அவர்களை இறுதியாக மருத்தவமனையில் சந்தித்த பொழுது அவர் பேச முயன்றதும், சிகிச்சை காரணமாக இயலாமல் போனதும் நினைவில் இன்றும் நின்று உறுத்துகிறது. தனது ஆய்வு முடியாமல் விடைபெற நேர்ந்தது குறித்தான ஆதங்கத்தை நான், இறுதியாகக் கண்ட அவரது முகம் சொல்லியது. இந்த ஆய்வைப்பற்றி பேசி இதை நிறைவு செய்ய இயலாது போனதை அதே ஆதங்கத்துடன் சக்குபாய் அம்மாவும் பேசியது என்பது இருவரின் தமிழினப் பற்றினை நமக்கு விளக்கும்.
தனது மகனை தமிழீழ போராட்டத்திற்கு ஒப்புவித்த தாய் அவர். ஈழப்போராட்டத்தில் அவர் வீரமரணமெய்தினார். தனது மகனின் இறுதி முகத்தைக்கூட காண இயலாத தாய் என்றாலும், தமிழினப் போராட்டத்திற்காக தன் மகனை கொடையாக அளித்த அவரது துணிவு எளிதில் எவருக்கும் வராது.
தமிழிய ஆய்வுகளை நடத்தினார் என்பதற்காக இந்திய அரசு பொய் வழக்கில் பேரா.நெடுஞ்செழியன் அவர்களை கொடுஞ்சிறையில் கர்நாடகத்தில் தள்ளியது. ஆண்டுகள் கடந்து அவர் சிறைப்பட்டார். நீண்ட போராட்டத்தின் பின்னர் அவர் விடுதலை பெற்றார் என்றாலும் அவரது விடுதலைக்காக அம்மாவின் போராட்டம் அளப்பறியது. இத்தனை இழப்புகளைக் கடந்தும் தமிழினம் மீதும், திராவிடர் இயக்கத்தின் மீதுமான அவர்களது பற்று ஈடு இணையில்லாமல் இறுதிநாள் வரை இருந்தது.
மிக எளிமையாகவும், அன்புடனும் இல்லம் வரும் ஒவ்வொருவரையும் வரவேற்று இன்முகத்துடன் உபசரித்து போற்றும் தமிழிய மரபுக்கு சொந்தக்காரர் அம்மா சக்குபாய் அவர்கள். அவரை சேலத்தில் உடல்நலமில்லாத சமயத்தில் சந்தித்த பொழுதும் கூட, வீட்டிற்கருகே எதுவும் வாங்க இயலவில்லையென தமது வீட்டு மாம்பழத்தை பறித்து அனைவரும் பகிர்ந்து கொடுத்து உண்ணச்செய்தார்.
அவரது அன்பும், இன்முகமும், புன்னகையும் நெஞ்சிலிருந்து என்றும் அகலாதவையாக வாழ்நாள் முழுதும் நீடிக்கும்.
இருவரிடமும் எனக்கு நேரில் பரிச்சியம் இல்லாத பொழுதில் ஈ*ழப்போராளி அய்யா வேலுச்சாமி அவர்கள் வழியே அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் எங்களது திருச்சி கருத்தரங்கம் காவல்துறையால் தடைப்பட்டு பல இடங்கள் மாற்றப்பட்டு, சிறு அரங்கில் நடந்த பொழுது அய்யாவும், அம்மாவும் நேரில் வந்திருந்தது மிக நெகிழ்ச்சியான நினைவுகள். 'ஆசிவகம்' குறித்து எம் தோழர்களுக்கு நெடுநேரம் விளக்கப்படுத்திய அவரது அரசியல் உரை மறக்க இயலாதது.
திருச்சியில் 2018ல் கருஞ்சட்டைப் பேரணி முடிந்த சில நாட்களில் அவரது இல்லத்தில் சந்தித்து உரையாடிக் கொண்டிருந்த சமயத்தில் 'பெரியார் மீதான அவதூறுகளை' குறித்து பேசிவிட்டு, 'இதையெல்லாம் கடந்தவர் பெரியார்' என்று நம்பிக்கை உணர்வோடு எங்களுக்கு சொன்னதை இன்று நினைத்துப்பார்க்கிறேன்.
அம்மா சக்குபாய் அவர்களுக்கு நேரில் சென்று மரியாதை செய்ய இயலாத நிலை பெரும் துயரைத் தருகிறது. அவரது புகழ் தமிழினம் வாழும் வரை மங்காது உயர்ந்து நிற்கும்.
தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர், பெரியாரிய சிந்தனையாளர், திராவிடர் இயக்கப் போராளி
அம்மா பேராசிரியர் சக்குபாய் அவர்களுக்கு மே பதினேழு இயக்கத்தின் வீரவணக்கம். #வீரவணக்கம் #தமிழ்த்தேசியம் #தமிழ்நாடு தமிழருக்கே! #📰தமிழக அப்டேட்🗞️ #🚨கற்றது அரசியல் ✌️
#🎥Trending வீடியோஸ்📺 #📺அரசியல் 360🔴 #தமிழின எதிரி ஆர்.எஸ்.எஸ் - பிஜேபி #🚨கற்றது அரசியல் ✌️ #தோழர் திருமுருகன் காந்தி










![ஜீவா - பொதுவுடைமை தோழர், தொழிலாளர்களின் தலைவர் தோழர் ப ஜீவானந்தம் அவாகளின்டுவது நினைவுநாள் (18.01.1963] ஜாதி மத விவகாரங்களில் மட்டுமல்லாமல் அரசியலில் விவகாரங்களிலும் நம் சுயமபியாதையைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும்" தோழர் ஜீவானந்தம் மே பதினேழு இயக்கம் 9884864010, 9444327010 பொதுவுடைமை தோழர், தொழிலாளர்களின் தலைவர் தோழர் ப ஜீவானந்தம் அவாகளின்டுவது நினைவுநாள் (18.01.1963] ஜாதி மத விவகாரங்களில் மட்டுமல்லாமல் அரசியலில் விவகாரங்களிலும் நம் சுயமபியாதையைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும்" தோழர் ஜீவானந்தம் மே பதினேழு இயக்கம் 9884864010, 9444327010 - ShareChat ஜீவா - பொதுவுடைமை தோழர், தொழிலாளர்களின் தலைவர் தோழர் ப ஜீவானந்தம் அவாகளின்டுவது நினைவுநாள் (18.01.1963] ஜாதி மத விவகாரங்களில் மட்டுமல்லாமல் அரசியலில் விவகாரங்களிலும் நம் சுயமபியாதையைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும்" தோழர் ஜீவானந்தம் மே பதினேழு இயக்கம் 9884864010, 9444327010 பொதுவுடைமை தோழர், தொழிலாளர்களின் தலைவர் தோழர் ப ஜீவானந்தம் அவாகளின்டுவது நினைவுநாள் (18.01.1963] ஜாதி மத விவகாரங்களில் மட்டுமல்லாமல் அரசியலில் விவகாரங்களிலும் நம் சுயமபியாதையைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும்" தோழர் ஜீவானந்தம் மே பதினேழு இயக்கம் 9884864010, 9444327010 - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_459895_2361592e_1768758458224_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=224_sc.jpg)
