Shared from Tamil Bible 8.5
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible #✝பிரார்த்தனை #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள்
நான் துதிக்கும் தேவனே, மவுனமாயிராதேயும்.
சங்கீதம் 109:1
துன்மார்க்கனுடைய வாயும், கபட்டுவாயும், எனக்கு விரோதமாய்த் திறந்திருக்கிறது, கள்ளநாவினால் என்னோடே பேசுகிறார்கள்.
சங்கீதம் 109:2
பகையுண்டாக்கும் வார்த்தைகளால் என்னைச் சூழ்ந்துகொண்டு, முகாந்தரமில்லாமல் என்னோடே போர்செய்கிறார்கள்.
சங்கீதம் 109:3
என் சிநேகத்துக்குப் பதிலாக என்னை விரோதிக்கிறார்கள், நானோ ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கிறேன்.
சங்கீதம் 109:4
நன்மைக்குப் பதிலாக எனக்குத் தீமைசெய்கிறார்கள், என் சிநேகத்துக்குப் பதிலாக என்னைப் பகைக்கிறார்கள்.
சங்கீதம் 109:5
அவனுக்கு மேலாகத் துஷ்டனை ஏற்படுத்திவையும், சாத்தான் அவன் வலதுபக்கத்தில் நிற்பானாக.
சங்கீதம் 109:6
அவன் நியாயம் விசாரிக்கப்படும் போது குற்றவாளியாகக்கடவன், அவன் ஜெபம் பாவமாகக்கடவது.
சங்கீதம் 109:7
அவன் நாட்கள் கொஞ்சமாகக்கடவது, அவன் உத்தியோகத்தை வேறொருவன் பெறக்கடவன்.
சங்கீதம் 109:8
அவன் பிள்ளைகள் திக்கற்றவர்களும், அவன் மனைவி விதவையுமாகக்கடவர்கள்.
சங்கீதம் 109:9
அவன் பிள்ளைகள் அலைந்து திரிந்து பிச்சையெடுத்து, தங்கள் பாழான வீடுகளிலிருந்து இரந்துண்ணக்கடவர்கள்.
சங்கீதம் 109:10
கடன் கொடுத்தவன் அவனுக்கு உள்ளதெல்லாவற்றையும் அபகரித்துக்கொள்வானாக, அவன் பிரயாசத்தின் பலனை அந்நியர் பறித்துக்கொள்ளக்கடவர்கள்.
சங்கீதம் 109:11
அவனுக்கு ஒருவரும் இரக்கங்காண்பியாமலும், அவனுடைய திக்கற்ற பிள்ளைகளுக்குத் தயவுசெய்யாமலும் போவார்களாக.
சங்கீதம் 109:12
அவன் சந்ததியார் நிர்மூலமாகக்கடவர்கள், இரண்டாந்தலைமுறையில் அவர்கள் பேர் அற்றுப்போவதாக.
சங்கீதம் 109:13
அவன் பிதாக்களின் அக்கிரமம் கர்த்தருக்கு முன்பாக நினைக்கப்படக்கடவது, அவன் தாயின் பாவம் நீங்காமலிருப்பதாக.
சங்கீதம் 109:14
அவைகள் நித்தமும் கர்த்தருக்கு முன்பாக இருக்கக்கடவது, அவர்கள் பேர் பூமியிலிராமல் நிர்மூலமாவதாக.
சங்கீதம் 109:15
அவன் தயைசெய்ய நினையாமல், சிறுமையும் எளிமையுமானவனைத் துன்பப்படுத்தி, மனமுறிவுள்ளவனைக் கொலைசெய்யும்படி தேடினானே.
சங்கீதம் 109:16
சாபத்தை விரும்பினான், அது அவனுக்கு வரும், அவன் ஆசீர்வாதத்தை விரும்பாமற்போனான், அது அவனுக்குத் தூரமாய் விலகிப்போம்.
சங்கீதம் 109:17
சாபத்தை அவன் தனக்கு அங்கியாக உடுத்திக்கொண்டான், அது அவன் உள்ளத்தில் தண்ணீரைப்போலவும், அவன் எலும்புகளில் எண்ணெயைப்போலவும் பாயும்.
சங்கீதம் 109:18
அது அவன் மூடிக்கொள்ளுகிற வஸ்திரமாகவும், நித்தமும் கட்டிக்கொள்ளுகிற கச்சையாகவும் இருப்பதாக.
சங்கீதம் 109:19
இதுதான் என்னை விரோதிக்கிறவர்களுக்கும், என் ஆத்துமாவுக்கு விரோதமாய்த் தீங்கு பேசுகிறவர்களுக்கும் கர்த்தரால் வரும்பலன்.
சங்கீதம் 109:20
ஆண்டவராகிய கர்த்தாவே, நீர் உமது நாமத்தினிமித்தம் என்னை ஆதரித்து, உமது கிருபை நலமானதினால், என்னை விடுவித்தருளும்.
சங்கீதம் 109:21
நான் சிறுமையும் எளிமையுமானவன், என் இருதயம் எனக்குள் குத்துண்டிருக்கிறது.
சங்கீதம் 109:22
சாயும் நிழலைப்போல் அகன்று போனேன், வெட்டுக்கிளியைப்போல் பறக்கடிக்கப்படுகிறேன்.
சங்கீதம் 109:23
உபவாசத்தினால் என் முழங்கால்கள் தளர்ச்சியடைகிறது, என் மாம்சம் புஷ்டியற்று உலர்ந்து போகிறது.
சங்கீதம் 109:24
நான் அவர்களுக்கு நிந்தையானேன், அவர்கள் என்னைப் பார்த்து, தங்கள் தலையைத் துலுக்குகிறார்கள்.
சங்கீதம் 109:25
என் தேவனாகிய கர்த்தாவே எனக்குச் சகாயம்பண்ணும், உமது கிருபையின்படி என்னை இரட்சியும்.
சங்கீதம் 109:26
இது உமது கரம் என்றும், கர்த்தாவே, தேவரீர் இதைச் செய்தீர் என்றும், அவர்கள் அறிவார்களாக.
சங்கீதம் 109:27
அவர்கள் சபித்தாலும், நீர் ஆசீர்வதியும், அவர்கள் எழும்பினாலும் வெட்கப்பட்டுப்போவார்களாக, உமது அடியேனோ மகிழக்கடவன்.
சங்கீதம் 109:28
என் விரோதிகள் இலச்சையால் மூடப்பட்டு, தங்கள் வெட்கத்தைச் சால்வையைப்போல் தரித்துக் கொள்ளக்கடவர்கள்.
சங்கீதம் 109:29
கர்த்தரை நான் என் வாயினால் மிகவும் துதித்து, அநேகர் நடுவிலே அவரைப் புகழுவேன்.
சங்கீதம் 109:30
ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவர்களினின்று எளியவனுடைய ஆத்துமாவை இரட்சிக்கும்படி அவர் அவன் வலதுபாரிசத்தில் நிற்பார்.
சங்கீதம் 109:31
Shared from Tamil Bible 8.5
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible #✝பிரார்த்தனை #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள்
www.bible2all.com
Shared from Tamil Bible 8.5
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible #✝️இயேசு #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள்
கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா.
சங்கீதம் 127:1
கர்த்தர் நகரத்தைக் காவாராகில் காவலாளர் விழித்திருக்கிறது விருதா.
சங்கீதம் 127:2
நீங்கள் அதிகாலையில் எழுந்து, நேரப்பட வேலையிலே தரித்து, வருத்தத்தின் அப்பத்தைச் சாப்பிடுகிறதும் விருதா, அவரே தமக்குப் பிரியமானவனுக்கு நித்திரை அளிக்கிறார்.
சங்கீதம் 127:3
இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்.
சங்கீதம் 127:4
வாலவயதின் குமாரர் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்.
சங்கீதம் 127:5
அவைகளால் தன் அம்பறாத்தூணியை நிரப்பின புருஷன் பாக்கியவான், அவர்கள் நாணமடையாமல் ஒலிமுகவாசலில் சத்துருக்களோடே பேசுவார்கள்.
சங்கீதம் 127:6
Shared from Tamil Bible 8.5
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible #✝பிரார்த்தனை #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள்
www.bible2all.com
Shared from Tamil Bible 8.5
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible #✝பிரார்த்தனை #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள்
இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?
சங்கீதம் 133:1
அது ஆரோனுடைய சிரசின்மேல் ஊற்றப்பட்டு, அவனுடைய தாடியிலே வடிகிறதும், அவனுடைய அங்கிகளின்மேல் இறங்குகிறதுமான நல்ல தைலத்துக்கும்,
சங்கீதம் 133:2
எர்மோன்மேலும், சீயோன் பர்வதங்கள்மேலும் இறங்கும் பனிக்கும் ஒப்பாயிருக்கிறது, அங்கே கர்த்தர் என்றென்றைக்கும் ஆசீர்வாதத்தையும் ஜீவனையும் கட்டளையிடுகிறார்.
சங்கீதம் 133:3
Shared from Tamil Bible 8.5
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible #✝பிரார்த்தனை #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள்
www.bible2all.com
Shared from Tamil Bible 8.5
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு
ஜனங்களே, நீங்கள் எல்லாரும் இதைக் கேளுங்கள்.
சங்கீதம் 49:1
பூமியின் குடிகளே, சிறியோரும் பெரியோரும் ஐசுவரியவான்களும் எளியவர்களுமாகிய நீங்கள் எல்லாரும் ஏகமாய்ச் செவிகொடுங்கள்.
சங்கீதம் 49:2
என் வாய் ஞானத்தைப் பேசும், என் இருதயம் உணர்வைத் தியானிக்கும்.
சங்கீதம் 49:3
என் செவியை உவமைமொழிக்குச் சாய்த்து, என் மறைபொருளைச் சுரமண்டலத்தின்மேல் வெளிப்படுத்துவேன்.
சங்கீதம் 49:4
என்னைத் தொடருகிறவர்களுடைய அக்கிரமம் என்னைச் சூழ்ந்துகொள்ளுந் தீங்குநாட்களில், நான் பயப்படவேண்டியதென்ன?
சங்கீதம் 49:5
தங்கள் செல்வத்தை நம்பி தங்கள் திரளான ஐசுவரியத்தினால் பெருமைபாராட்டுகிற,
சங்கீதம் 49:6
ஒருவனாவது, தன் சகோதரன் அழிவைக் காணாமல் இனி என்றைக்கும் உயிரோடிருக்கும்படி,
சங்கீதம் 49:7
எவ்விதத்தினாலாவது அவனை மீட்டுக்கொள்ளவும், அவனிமித்தம் மீட்கும்பொருளை தேவனுக்குக் கொடுக்கவுங்கூடாதே.
சங்கீதம் 49:8
அவர்கள் ஆத்துமமீட்பு மிகவும் அருமையாயிருக்கிறது, அது ஒரு போதும் முடியாது.
சங்கீதம் 49:9
ஞானிகளும் மரித்து, அஞ்ஞானிகளும் நிர்மூடரும் ஏகமாய் அழிந்து, தங்கள் ஆஸ்தியை மற்றவர்களுக்கு வைத்துப்போகிறதைக் காண்கிறான்.
சங்கீதம் 49:10
தங்கள் வீடுகள் நித்தியகாலமாகவும், தங்கள் வாசஸ்தலங்கள் தலைமுறை தலைமுறையாகவும் இருக்குமென்பது அவர்கள் உள்ளத்தின் அபிப்பிராயம், அவர்கள் தங்கள் நாமங்களைத் தங்கள் நிலங்களுக்குத் தரிக்கிறார்கள்.
சங்கீதம் 49:11
ஆகிலும் கனம்பொருந்தியவனாயிருக்கிற மனுஷன் நிலைத்திருக்கிறதில்லை. அழிந்துபோகும் மிருகங்களுக்கு ஒப்பாயிருக்கிறான்.
சங்கீதம் 49:12
இதுதான் அவர்கள் வழி, இதுதான் அவர்கள் பைத்தியம், ஆகிலும் அவர்கள் சந்ததியார் அவர்கள் சொல்லை மெச்சிக்கொள்ளுகிறார்கள். (சேலா.)
சங்கீதம் 49:13
ஆட்டுமந்தையைப்போலப் பாதாளத்திலே கிடத்தப்படுகிறார்கள், மரணம் அவர்களை மேய்ந்துபோடும், செம்மையானவர்கள் அதிகாலையில் அவர்களை ஆண்டுகொள்வார்கள், அவர்கள் தங்கள் வாசஸ்தலத்தில் நிலைத்திருக்கக்கூடாதபடி அவர்களுடைய ரூபத்தைப் பாதாளம் அழிக்கும்.
சங்கீதம் 49:14
ஆனாலும் தேவன் என் ஆத்துமாவைப் பாதாளத்தின் வல்லமைக்குத் தப்புவித்து மீட்பார், அவர் என்னை ஏற்றுக்கொள்வார். (சேலா.)
சங்கீதம் 49:15
ஒருவன் ஐசுவரியவானாகி, அவன் வீட்டின் மகிமை பெருகும்போது, நீ பயப்படாதே.
சங்கீதம் 49:16
அவன் மரிக்கும்போது, ஒன்றும் கொண்டுபோவதில்லை, அவன் மகிமை அவனைப் பின்பற்றிச் செல்வதுமில்லை.
சங்கீதம் 49:17
அவன் உயிரோடிருக்கையில் தன் ஆத்துமாவை வாழ்த்தினாலும்: நீ உனக்கு நன்மையை நாடினாய் என்று மனுஷர் அவனைப் புகழ்ந்தாலும்,
சங்கீதம் 49:18
அவன் என்றென்றைக்கும் வெளிச்சத்தைக் காணாத தன் பிதாக்களின் சந்ததியைச் சேருவான்.
சங்கீதம் 49:19
கனம் பொருந்தினவனாயிருந்தும் அறிவில்லாத மனுஷன் அழிந்துபோகும் மிருகங்களுக்கு ஒப்பாயிருக்கிறான்.
சங்கீதம் 49:20
Shared from Tamil Bible 8.5
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு
www.bible2all.com
Shared from Tamil Bible 8.5
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு









