
முனைவர் ச.சு.ஜைனுதீன் நிறுவனத் தலைவர் மு.ம.க.
@479671514
நல்லதே நினை! நல்லதே பேசு!! நல்லதே செய்!!!
#நல்லதே நினை நல்லதே ! நல்லதே பேசு!! நல்லதே செய்!!! கிராமத்தில் பொங்கல் விழா –முஸ்லிம் மக்கள் கழகத்தின் சார்பில்
விளையாட்டு போட்டி வெற்றியாளர்களுக்கு பரிசளிப்பு
விழுப்புரம் ஜன-19 விழுப்புரம் மாவட்டம்
வானூர் வட்டத்திற்குட்பட்ட
பெரும்பாக்கம் கிராமத்தில்
பொங்கல் விழா சிறப்பாக
கொண்டாடப்பட்டது.
இதனை முன்னிட்டு
17.1.2026 சனிக்கிழமை
மாலை நேரத்தில்
பல்வேறு விளையாட்டு
போட்டிகள் நடத்தப்பட்டன.
மாணவ, மாணவிகளுக்காக
ஓட்டப்பந்தயம்,
கயிறு இழுத்தல்,
எலுமிச்சை ஸ்பூன்,
கபடி உள்ளிட்ட
போட்டிகள் நடைபெற்றன.
போட்டிகளில்
ஆர்வமுடன் கலந்து கொண்ட
மாணவ, மாணவிகள்
தங்கள் திறமையை
வெளிப்படுத்தினர்.
இதில் வெற்றி பெற்ற
மாணவ, மாணவிகளுக்கு
பரிசளிப்பு விழா
நடைபெற்றது.
விழாவில்
முஸ்லிம் மக்கள் கழகத்தின்
மாநில இளைஞர் அணி தலைவர் வி. விக்ரம்
சிறப்பு விருந்தினராக
கலந்து கொண்டார்.
அவருடன்
அவரது குடும்பத்தாரும்
விழாவில் பங்கேற்று
வெற்றி பெற்றவர்களுக்கு
பரிசுகளை வழங்கினர்.
பரிசளிப்பு நிகழ்வின் போது
மாணவ, மாணவிகள்
மிகுந்த மகிழ்ச்சி
அடைந்தனர்.
கிராம மக்கள்,
பெற்றோர்கள் மற்றும்
இளைஞர்கள் திரளாக
கலந்து கொண்டு
நிகழ்ச்சியை
சிறப்பித்தனர்.
விழா
இனிய பொங்கல்
வாழ்த்துகளுடன்
மகிழ்ச்சியான
சூழலில்
நிறைவடைந்தது.
#நல்லதே பேசு நல்லதே நினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு முஸ்லிம் மக்கள் கழகத்தின் நிறுவன தலைவர் முனைவர் ச.சு ஜைனுதீன்இனிய உழவர் திருநாள் மற்றும் தைப்பொங்கல் வாழ்த்துகள்
தெரிவித்துள்ளார்.
திண்டிவனம் ஜன-15
தமிழக முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி
மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு
முஸ்லிம் மக்கள் கழகத்தின் சார்பில்
தை மாதத்தின் இனிய நல்வாழ்த்துகள்.
திராவிட மக்களின் சார்பாகவும்
உழவர் திருநாள் வாழ்த்துகள் தெரிவிக்கப்படுகின்றன.
தைப்பொங்கல் திருநாள்
தமிழர்களின் உழைப்பையும்
பண்பாட்டையும் போற்றும் நாளாகும்.
விவசாயிகளின் தியாகம்
இந்த நாளில் நினைவுகூரப்படுகிறது.
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு
உழவர் சமூகம் அடித்தளமாக உள்ளது.
அவர்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும்.
தமிழக அரசு மேற்கொண்டுவரும்
சமூகநீதிச் செயல்பாடுகள்
மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன.
குறிப்பாக சிறுபான்மை மக்களின்
உரிமைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் உருவாகும்
பாசிச சக்திகளின் சூழ்ச்சிகளை
தவிடுப்படியாக்கும் பணியில்
உங்கள் தலைமையகம்
உறுதியுடன் செயல்படுகிறது.
அந்த முயற்சிகளுக்கு
தமிழக மக்கள் முழு ஆதரவு அளிக்கின்றனர்.
இஸ்லாமிய மக்களின் பாதுகாப்பும்
அமைதியும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மத நல்லிணக்கம்
தமிழகத்தின் அடையாளமாக திகழ்கிறது.
அந்த மரபு தொடர
உங்கள் ஆட்சி அவசியமாகிறது.
மீண்டும் தமிழகத்தின்
ஆட்சிப் பொறுப்பை ஏற்க
நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்று
இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
மக்கள் நலன் சார்ந்த
திட்டங்கள் தொடர்ந்து செயல்பட
உங்கள் தலைமை தேவைப்படுகிறது.
சமூக ஒற்றுமை
சமத்துவ வளர்ச்சி
ஆகியவற்றின் காவலனாக
நீங்கள் திகழ வேண்டும்.
தமிழகத்தின் அமைதிக்கும்
முன்னேற்றத்திற்கும்
உங்கள் பங்களிப்பு
தொடர வேண்டும் என
மனப்பூர்வமாக வாழ்த்துகிறோம்.
இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்
தெரிவித்துள்ளார்
#நல்லதே நினை நல்லதே ! நல்லதே பேசு!! நல்லதே செய்!!! புதிய பேருந்து நிலையத்திற்கு முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் என சூட்டப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம் திறப்பு குறித்து முதல்வர் விரைவில் அறிவிப்பார் என நகராட்சி நிர்வாகமும் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே. என். நேரு அவர்கள் தெரிவித்தார்கள்.
திண்டிவனத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.26.50. கோடியில் புதிய பேருந்து நிலையக் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே. என். நேரு, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் மற்றும் மாநில நகராட்சி நிர்வாகம் ஆகியோர் திங்கட்கிழமை பார்வையிட்டு பணிகளின் தற்போது நிலை குறித்து கேட்டறிந்தனர். இதை தொடர்ந்து அமைச்சர் நேரு அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது
இந்தப் பேருந்து நிலையம் 51 பேருந்துகள் நிறுத்தும் வசதியுடனும் மற்றும் 61 கடைகளை உள்ளடக்கி கட்டப்பட்டுள்ளது. இதில் உணவகங்கள்.,பொருள்கள் வைப்பறை,ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கான அறைகள், சுத்திகரிக்கபட்ட சுகாதாரமான குடிநீர் வசதி மற்றும் கழிவறை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் 99 சதவீத பணிகள் முடிந்து உள்ளன. சிறு ,சிறு பணிகள் நடைபெற்று வருகின்றன
திண்டிவனம் நகராட்சியின் தீர்மானத்தின் படி பேருந்து நிலையத்திற்கு முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும், பேருந்து நிலைய திறப்பு குறித்து முதல்வர் விரைவில் அறிவிப்பார் என அமைச்சர் நேரு கூறினார். மேற்படி
இந்த ஆய்வில் முன்னாள் அமைச்சர் செஞ்சி கே. எஸ். மஸ்தான் எம்எல்ஏ, விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ அன்னியூர் சிவா, புதுச்சேரி மாநில எதிர்க்கட்சித் தலைவர் சிவா, திண்டிவனம் நகராட்சி தலைவர் ஆர். எஸ். ரவிச்சந்திரன், திண்டிவனம் நகர செயலாளர் ஆசிரியர் கண்ணன், ஒலக்கூர் ஒன்றியக்குழு தலைவர் சொக்கலிங்கம், மாவட்ட இளைஞர் அணிதுணை அமைப்பாளர்கள் டி. கே. பி .சுரேஷ், எம்.டி. பாபு, மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் பிரகாஷ் மற்றும் மருத்துவர் அணி துணை அமைப்பாளர் சூரிய பிரகாஷ் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
#நல்லதே நினை நல்லதே ! நல்லதே பேசு!! நல்லதே செய்!!! பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கல்
27-வது வார்டு மக்களுக்கு ரூ.3,000 விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பொது மக்களுக்கு வழங்கினார்
திண்டிவனம், ஜன. 8:
கழக தலைவர், தமிழக முதல்வர் மாண்புமிகு தளபதி அவர்களின் ஆணைப்படியும், மண்டல பொறுப்பாளர் மற்றும் தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் மாண்புமிகு எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்களின் ஆலோசனைப்படியும், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டத்திற்குட்பட்ட 27-வது வார்டில் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில், கழகத் தலைவர் அறிவித்தபடி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.3,000 பொங்கல் சிறப்பு தொகுப்புகள் வழங்கப்பட்டன. விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சரும், செஞ்சி சட்டமன்ற உறுப்பினருமான கே.எம். மஸ்தான் அவர்கள் பொதுமக்களுக்கு கரும்புடன் இணைந்து ரூ.3,000 பொங்கல் தொகுப்புகளை வழங்கினார்.
27-வது வார்டு நகர மன்ற உறுப்பினர் கு. ஷாபியுல்லா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், முஸ்லிம் மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் முனைவர் ச.சு. ஜைனுதீன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மேலும், திமுக திண்டிவனம் நகர செயலாளர் ஆசிரியர் கண்ணன், முன்னாள் நகர செயலாளர் கபிலன், திமுக கதிர்வேல், சித்த மருத்துவர் ஆர். சூரியபிரகாஷ், நகர துணை செயலாளர் டி.எம்.கே. தாஜ், தோல் மண்டி ஹாஜ் ஷெரீப், ஆர்.எம்.ஜி. அப்துல் ரசாக், நைனா முகமது, 27-வது வார்டு பிரதிநிதி மு. மஸ்தான், 27-வது வார்டு இளைஞர் அணி அமைப்பாளர் அசாருதீன், திமுக பி. சித்திக், மெக்கானிக்கல் மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு உதவும் வகையில் இந்த சிறப்பு தொகுப்பு வழங்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
#நல்லதே நினை நல்லதே ! நல்லதே பேசு!! நல்லதே செய்!!! பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கும் விழா
27-வது வார்டில் ரூ.3,000 பொங்கல் தொகுப்பு வழங்கல்
திண்டிவனம்: ஜன- 08
கழக தலைவர் தமிழக முதல்வர் மாண்புமிகு தளபதி அவர்களின் ஆணைப்படியும், மண்டல பொறுப்பாளர் தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் மாண்புமிகு எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்களின் ஆலோசனைப்படியும், விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டத்தில் உள்ள 27-வது வார்டில் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில், கழகத் தலைவர் அறிவித்தபடி ரூ.3,000 பொங்கல் தொகுப்பை 27-வது வார்டு நகர மன்ற உறுப்பினர் கு. ஷபியுல்லா பொதுமக்களுக்கு வழங்கினார்.
இந்நிகழ்வில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் விழுப்புரம் மாவட்ட வடக்கு பொருளாளர் வழக்கறிஞர் ரமணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவரைத் தொடர்ந்து முஸ்லிம் மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் முனைவர் ச.சு. ஜைனுதீன் கலந்து கொண்டார்.
மேலும், திமுக நகர துணை செயலாளர் டி.எம்.கே. தாஜ், மனிதநேய மக்கள் கட்சி நகர செயலாளர் டி.சி.எம். தோல் மண்டி ஹாஜ் ஷெரீப், ஆர்.எம்.ஜி. அப்துல் ரசாக், உசேன், திமுக 27-வது வார்டு வாழ்க கிளைக் கழக செயலாளர் சாகுல் அமீது, எஸ். எஸ். பி .சலீம்.சுல்தான், அசாருதீன், நைனா முகமது, 27-வது வார்டு பிரதிநிதி மு. மஸ்தான், திமுக பி. சித்திக், மேஸ்திரி ஜெயவேல், துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு உதவும் வகையில் இந்த சிறப்பு தொகுப்பு வழங்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
#நல்லதே பேசு நல்லதே நினை அன்புக்கும் பாசத்துக்கும் உரிய சகோதரர் ஜைனுதீன் அவர்களுக்கு என் மனம் நிறைந்த நன்றியும் வாழ்த்துக்களையும் தெரிவித்து எல்லாம் வல்ல இறைவனின் அருள் எல்லோருக்கும் கிடைத்திட 2026 சட்டமன்றத் தேர்தலில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையில் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டியும் இல்லமெல்லாம் இன்பம் பொங்கிட வெல்வோம் ஒன்றாக.
தொடரட்டும் ஸ்டாலின்! வெல்லட்டும் தமிழ்நாடு!
வாழ்க வளமுடன்! நன்றி வணக்கம்!
#🤗🤗நல்லதே நினை நல்லதே நடக்கும்🙏🙏😌😌 திமுக முன்னாள் நிர்வாகியின் மகன் திருமண அழைப்பிதழ் – முஸ்லிம் மக்கள் கழக நிறுவனர் தலைவரிடம் வழங்கல்
விழுப்புரம் ஜன-08
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்ட கழக துணைச் செயலாளரும், வழக்கறிஞருமான கோ.அசோகன் – ஹேமலதா தம்பதியரின் மூத்த குமரன் டாக்டர் அ.விக்னேஷ் என்பவருக்கு வருகிற 8.2.2026 (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணிக்கு திருமணம் நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு, கடந்த 7.1.2025 அன்று முஸ்லிம் மக்கள் கழகத்தின் நிறுவன தலைவர் முனைவர் ச.சு.ஜைனுதீன் அவர்களை நேரில் சந்தித்து, தனது மகனின் திருமண அழைப்பிதழை கோ.அசோகன் வழங்கினார்.
இந்த நிகழ்வின் போது, திண்டிவனம் முன்னாள் திமுக 27வது வார்டு செயலாளர் மோகன் உடன் இருந்தார். சமூக நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்த சந்திப்பு அமைந்தது.
#நல்லதே பேசு நல்லதே நினை நிக்காஹ் திருமணம் – முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் 27வது வார்டு உமர் சாகிப் தெருவைச் சேர்ந்த அ. அஜிம்துல்லா – பரிதா பேகம் தம்பதியரின் இளைய மகன் இன்ஜினியர் அ. முகமது ரியாஸ் – டாக்டர் மீ. அல்மாஸ் ஆகியோரின் நிக்காஹ் திருமணம் இன்று (5.1.2026) திங்கட்கிழமை மதியம் 12 மணியளவில் திண்டிவனம் – பாண்டி ரோடு தேசிய நெடுஞ்சாலை ஓமந்தூரில் அமைந்துள்ள பிரவாஸ் பேலஸ் சொகுசு ஹாலில் நடைபெற்றது.
மஸ்ஜிதே உஸ்மானியா பள்ளிவாசல் ஜமாத்தார் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிக்காஹ் விழாவில் முஸ்லிம் மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் முனைவர் ச. சு. ஜைனுதீன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் திண்டிவனம் 27வது வார்டு நகர மன்ற உறுப்பினர் கு. ஷபியுல்லா, நவாப் பள்ளிவாசல் இமாம் மௌலானா ஹாஜி ஏ. நியாஸ் அஹமத், மஸ்ஜிதே ரஹ்மானியா பள்ளிவாசல் இமாம் மௌலானா ஹ. முஹம்மத் ஜாவித், தாருஸ்ஸலாம் பள்ளிவாசல் இமாம் மௌலானா முஹம்மத் ஹாரூன், மதினா பள்ளிவாசல் இமாம் மௌலானா ஹபீபுல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்கள் வாழ்வில் சிறப்பும் சுபீட்சமும் பெற துவா பிரார்த்தனை செய்தனர்.
இந்த நிக்காஹ் விழாவில் ஏராளமான உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஜமாத்தார் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
#நல்லதே நினை நல்லதே ! நல்லதே பேசு!! நல்லதே செய்!!! .12.2025 அன்று முஸ்லிம் மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் முனைவர் ச.சு.ஜைனுதீன் அவர்கள் அமைந்தகரை ஜாமியா மஸ்ஜித் கபரஸ்தானில் புகைப்படம் என்னை தொழுகைக்கு முன் நான் தொழுது கொள்ள வேண்டும் என்பதனை அதனை நினைவூட்டும் வகையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்
#🤗🤗நல்லதே நினை நல்லதே நடக்கும்🙏🙏😌😌












