@50415921
@50415921

Kanavugal

I don't expect anyone

#

💊போதை பொருள் ஒழிப்பு தினம்

எத்தனை முயற்சி செய்தாலும் போதை பொருட்களையும் உபயோகிப்பவர்களையும் மாற்ற முடியாது காரணங்கள் பல வைத்திருப்பார்கள் ஒருவரை 24 மணி நேரமும் கண்கானிக்க முடியாது மது,புகையிலை,கஞ்சா,பான்பராக்,பீடா போதை மாத்திரைகள் அணைத்தும் தடை செய்யப்பட்டவை ஆனால் தடையின்றி கிடைத்துக் கொண்டு தானே இருக்கிறது விற்பதால் உபயோகிக்கிறோம் என்று சிலர்,உடல் வலி,காதல் தோல்வி, மனக்கவலை,இப்படி பல காரணங்கள் ஒரு மனிதனின் செயல்களையும் எண்னங்களையும் தீர்மானிப்பது அவனது மூளை அதை செயல்பட விடாமல் தடுப்பது போதை இதில் அவனின்றி அவனைச் சேர்ந்தவர்களும் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர் என்பதே உண்மை சிந்திப்பீர்களா
194 காட்சிகள்
25 நாள் முன்
#

🎥மோசடி

ஒரு வாரம் முன்னர் நடை பெற்ற மோசடி சென்னையில் ஜன நடமாட்டம் அதிகமுள்ள பகுதியான தி,நகரில் எனது நன்பர் குடும்பம் சாலையோரம் கடைகளை வேடிக்கை பார்த்தவாறே நடந்து கொண்டிருந்தனர் அப்போது திடீரென ஒரு இளம் பெண் அருகில் வந்து ஐயா என் அம்மாவுக்கு தலையில் அடிபட்டு ஆஸ்பிட்டலில் சேர்த்தி்ருக்கிறோம் ஸ்கேன் எடுக்க வேண்டும் கையில் பணம் இல்லை அம்மாவின் கழுத்திலிருந்து தாலியை எடுத்து வந்திருக்கிறேன் இது அரை பவுன்,இங்கு எனக்கு யாரையும் தெரியாது ,நகைகடையில் விற்க சென்றேன் பணமாக தரமாட்டோம் பொருளாக வாங்கிக்கோங்கனு சொல்லிட்டாங்க எனக்கு ஐந்து ஆயிரம் மட்டும் கொடுங்கள் போதும் என்று கூறி அழுதாள் நன்பர் வேண்டாம் என்று எவ்வளவோ சொல்லியும் அவள் காலில் விழாத குறையாக அழுதாள் நன்பரின் குடும்பமும் இரக்கப்பட்டு நகையை வாங்கிக் கொண்டு பணத்தை கொடுத்து விட்டு வீடு வந்து சேர்ந்தனர் இரண்டு நாட்கள் கழித்து அருகில் உள்ள நகைகடையில் அந்த தாலியை எடுத்து சென்று அதன் மதிப்பை அறிய முற்பட்ட போது அது தங்கமுலாம் பூசப்பட்ட செம்புதகடு என்று தெரிய வந்தது எவ்வளவு பெரிய மோசடி பணம் போனால் போகிறது இரக்கப்பட்டதினால் வந்த வினை அம்மா சென்டிமென்ட்டை வைத்து ஏமாற்றி விட்டாளே கண்ணீரைக்கண்டு இரக்கப்பட்டு ஏமாந்தது எங்கள் தவறு என்று புலம்பிக்கொண்டு இருக்கிறார்கள் எப்படி எல்லாம் மோசடி செய்கிறார்கள் உஷாராக இருங்கள்
262 காட்சிகள்
1 மாசத்திற்கு முன்
#

தமிழ் வாழ்க

உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் சேர்ந்ததே தமிழ் அதனால்தான் தமிழை அமுதம்{அமிர்தம்] என்றும் உயிர் என்றும் போற்றினர் தமிழ் மொழி போல் இனிதானது எங்கும் காணேன் என்றார் பாரதி தமிழருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு,தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்றெல்லாம் தமிழை சிறப்பித்துள்ளனர் செந்தமிழ்,அன்ணைத் தமிழ்,கன்னித் தமிழ்,உரைநடைத் தமிழ்,இலக்கியத் தமிழ்,இலக்கணத் தமிழ்,வழக்குத் தமிழ்,பேச்சுத் தமிழ் , வடசென்னைத் தமிழ்,பிழைத் தமிழ் என பலவாக பிரித்தாலும் தமிழ் தமிழ் தான் தமிழை வளர்ப்போம் தமிழன் என்பதில் பெருமை கொள்வோம்
192 காட்சிகள்
1 மாசத்திற்கு முன்
#

😭சென்னை தண்ணீர் தட்டுப்பாடு

தண்ணீர் தட்டுபாட்டை நாங்கள் சமாளிக்கும் விதம் துணிகள் துவைத்து அலசும் நீரை பாத்ரூம்,கழிவறை கழுவ உபயோகிக்கிறோம் இரண்டு நாளைக்கு ஒருமுறை துணிகள் துவைக்கிறோம் சாப்பிடுவதற்கு முன்னும் ,பின்னும் கைகள் கழுவும் நீரை வாளியில் சேகரித்து செடிகளுக்கு விடுகிறோம் செடிகள் உள்ள தொட்டியில் சிறிது களிமண்னும் தேங்காய் நாரும் போட்டு அதன்மேல் நீர் ஊற்றுவதால் செடிகள் காய்ந்து போவதில்லை எப்போதும் ஈரப்பதத்துடனே இருக்கிறது அரிசி களையும் நீர்,காய்கறிகள் கழுவும் நீர் ,சாதம் வடித்த கஞ்சி சேகரித்து கால்நடைகளுக்கு வைக்கிறோம் ஏசி பெட்டியில் வெளிவரும் நீரை துணிகள் துவைக்க உபயோகப் படுத்துகிறோம் துணிகளும் வெள்ளையாக உள்ளது தண்ணீர் சிக்கனம் தேவை இக்கணம் என்பதை உணர்ந்திருக்கிறோம்
395 காட்சிகள்
1 மாசத்திற்கு முன்
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
அன்பாலோவ்
காப்பி லிங்க்
புகார்
தடுக்க
நான் புகார் தெரிவிக்கிறேன் ஏனெனில்