~எதற்கும் வளைந்து
கொடுக்காதவளை
வானவில்லாக்கி
அதில் வண்ணங்களாக
நிறப்பிரிகை அடையும்
ரசனைக்காரன் நீ...
இணைந்தும் பிரிந்தும்
இன்பமும் துன்பமும்
சேர்த்தே
நீயாகிறாய்...
நான் தெரிகிறேன்...
ஒளிர்தலின் விதிப்படி
நனையாமல் நனைகிறது
காதல் கண்சிமிட்டியபடி...😍❤️
#❤️காதல்💘 #📷நினைவுகள் #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #💞Feel My Love💖 #💑பெஸ்ட் ஜோடி ஸ்டேட்டஸ்🥰
~நிலவில் வசிக்க
முடியுமா...என்று
யோசித்து
கொண்டிருக்கும்
மனிதர்களுக்கு மத்தியில்....!!
உன் நினைவுகளில்
வசிப்பதே சுகமாகிப்
போனது எனக்கு...!!
#💞Feel My Love💖 #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #👩❤️👨Long Distance Relationship #📷நினைவுகள் #❤️காதல்💘
~பிடித்தவர்களின்.....
பிரிவுக்கு பின்....
பிடித்தமான
பாடல் வரிகளில்
மட்டும்
வாழ்ந்து கொண்டு
இருக்கிறார்கள் ❤️
#📷நினைவுகள் #👩❤️👨Long Distance Relationship #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #💞Feel My Love💖 #💘Love feel Forever 💌
~நமக்குள் இந்தக் காதல்
வேண்டாம் என்றுதான்
முடிவெடுத்தோம்.
ஒவ்வொருநாளும்
பேச்சின் ரசவாதங்கள்
காதலை நோக்கியே இழுத்தது.
நெருங்கிக் கொண்டே இருந்தோம்.
இந்தக் காதலின் மாயத்தில் இருந்து
தப்பித்து
நாளை இயல்பாகப் பேசிவிடுவோம் என்று
ஒவ்வொரு நாளாகக்
கடத்திக் கொண்டிருந்தோம்.
நாட்கள் தான் கடந்தன
சரி பேசிக்கொள்ளவேண்டாம்
என்று
வலுக்கட்டாயமாக நம்மை நிறுத்திக் கொண்டோம்.
உன்னையே நாடிவரும்
இம்மனத்தைத் தான்
கட்டிவைக்க ஆகவில்லை.
இதுவரைக்கும் எப்படியோ
இவ்வாழ்வில் நீயின்றி இனி
ஒரு நொடியைக் கூட நகர்த்த முடியாது.
நீ என்னிடம் வந்துவிடு என்பதை
ஆணையாகச் சொன்னேன்.
மறுபேச்சின்றி வந்துவிட்டாய்.💕💕💕
#💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #💞Feel My Love💖 #👩❤️👨Long Distance Relationship #📷நினைவுகள் #💝இதயத்தின் துடிப்பு நீ
~என் அனைத்து
குணங்களையும் பிடித்தவரால்
மட்டுமே
என்னை முழுவதுமாய்
நேசிக்க முடியும்
உண்மை அதுதான்
நான் தான் பைத்தியக்காரி ஆகிற்றே
என்னை நேசிப்பது போல்
ஒரு பிம்பத்தை உருவாக்கி கொள்கிறேன் கதைகளில்....💔🫰
#💑பெஸ்ட் ஜோடி ஸ்டேட்டஸ்🥰 #👩❤️👨Long Distance Relationship #📷நினைவுகள் #💞Feel My Love💖 #💖காதல் ஸ்டேட்டஸ்🥰
~நினைவுகளைச் சுமந்தவர்கள் இரு ரகம்
மறக்கக் கூடாதெனத் துடிப்பவர்களும்...
மறந்து விடவே வேண்டுமென அடம்பிடிப்பவர்களும்...
ஆனால்
ஒரு விடயத்தை திரும்பத்திரும்ப நினைவுக்குக் கொண்டுவருதால் மறக்க வேண்டுமென நினைப்பவைகள் நினைவுக்கு வருவது தான் அதிகமாகி விடும் 💞
#💞Feel My Love💖 #📷நினைவுகள் #👩❤️👨Long Distance Relationship #💝இதயத்தின் துடிப்பு நீ #💑பெஸ்ட் ஜோடி ஸ்டேட்டஸ்🥰
~சலிக்க சலிக்க
சொற்களைக் கழுவி எடுத்து வந்தாலும்
நீ வந்த பிறகுதான்
அது கவிதையாகிறது
ஒற்றை வரி தான்
ஆனாலும் பாரேன்
நீயென்று எழுதிய பிறகுதான்
அது என்னவோ செய்கிறது....
#❤️காதல்💘 #👩❤️👨Long Distance Relationship #📷நினைவுகள் #💞Feel My Love💖 #💖காதல் ஸ்டேட்டஸ்🥰
~வாழ்வதற்க்கு
தான்
நீ
வேண்டும்...
நேசிப்பதற்க்கு
உன்
நினைவுகளே
போதும்....💔
#💘Love feel Forever 💌 #💞Feel My Love💖 #📷நினைவுகள் #👩❤️👨Long Distance Relationship #❤️காதல்💘
~நீ தொலைந்ததெப்படியென
நீயும்…
நான் தொலைந்ததெப்படியென
நானும்…
கேட்டுக் கொண்டே
தொலைந்தே விளையாடுவோம்
நித்தம் நித்தம்!!!
பிரிதலிலும் சேர்தலிலும்
தேடலின் மிகைநிலையில்
கனத்தாலும்….
இன்பமே காதலில்!!
#📷நினைவுகள் #👩❤️👨Long Distance Relationship #💞Feel My Love💖 #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #💘Love feel Forever 💌
~அவனும் அவளும்
ஒரே மூச்சின் இரு துளிகள்
விழியோடு விழி பார்த்தாலே
உலகமே நிமிர்ந்து நிற்கும் அமைதி!!!
அவள் பேசவில்லை
அந்த மௌனமே…
அவன் நெஞ்சை
ஆயிரம் உணர்வுகளால் நிரப்பியது!!!
பேச்சுகள் தேவையில்லை,
பார்வையே போதும்…
அவன் சொல்வதை அவள் புரிந்து கொள்ள
அவள் நினைப்பதை அவன் உணர!!!
காற்று கூட மெதுவாக நின்று
இருவருக்குள் ஒளிந்த காதலைக் கேட்டது!!!
இது ஒரு உரையாடல்…
இரண்டு இதயங்கள்
மெதுவாகச் சொல்லிக் கொள்ளும்
மௌனக் கதை!!!
அவனும்… அவளும்…
ஒரே கதையின்
இரு இதய துணுக்குகள்…
ஒருவரை ஒருவர் பார்த்தாலே
அரங்கேறும் மென்மையான
காதல் இசை!!!
#❤️காதல்💘 #💘Love feel Forever 💌 #📷நினைவுகள் #💞Feel My Love💖 #👩❤️👨Long Distance Relationship



