#news update | *நாகூரில் முக்கிய இடங்களில் சாலை வசதியும் நாகூர் கடற்கரையில் ஹெலிபேட் வசதியும் செய்து தர தமிழக அரசிடம் கோரிக்கை.*
நாகூர் தர்கா உலக புகழ்பெற்றது, இத்தகைய நாகூர் தர்கா நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளது. உலகெங்குமிருந்து ஜாதி மத பேதமின்றி பல லட்சகணக்கான பக்தர்கள் நாகூர் தர்கா தினமும் வருகை புரிகின்றனர். நாகூர் தமிழக அரசின் சுற்றுலா துறையில் மிக முக்கிய அங்கம் வகிக்கிறது. நாகூரில் ஹெலிகாப்டர் இறங்கும் தள வசதி இல்லை. தமிழக அரசு இதனை நாகூரில் அமைத்திட வேண்டும், நாகூர் தர்காவிற்க்கு சொந்தமாக 4 ஏக்கர் இடம் நாகூர் கடற்கரை அருகே உள்ளது. அங்கு இந்த ஹெலிகாப்டர் தரையிறங்கும் வசதி அமைத்தால் மிகவும் வசதியாக இருக்கும் ஆகவே தயவு கூர்ந்து அரசு அடுத்து அறிவிக்க கூடிய நல திட்டத்தில் இதனை செய்து தர வேண்டும் என்றும் மேலும் சமீபத்தில் ஒரு தனியார் நிறுவனம் நாகூர் தர்காவிற்க்கு ஒரு பேட்டரி கார் நன்கொடையாக கொடுத்தது. அதனை நாகை மாவட்ட ஆட்சியர் அவர்கள் திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டுக்கு விடும் விழாவில் கலந்து கொண்டார். நாகூருக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இன்னும் புதிய சாலை வசதி செய்து தராத காரணத்தால் இந்த பேட்டரி கார் இன்னும் மக்கள் பயன்பாட்டு வரவில்லை. மேலும் தற்போதைய சாலை போடும் டெண்டரில் தர்காவை சுற்றியுள்ள வீதிகளில் மட்டும் சாலை வசதி போடும் படியாக டெண்டர் விடப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் பயன்பாட்டிற்க்காக இந்த பேட்டரி கார்களை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. நாகூர் தர்காவில் இருந்து செய்யது பள்ளி தெரு, பீரோடும் தெரு வழியாக கடற்கரை வரும் செல்லும் சாலைகளையும், நாகூர் தர்காவில் இருந்து மணவரா வடபுறம் தெரு வழியாக தெருப்பள்ளி தெரு வழியாக ரயில் நிலையம் செல்லும் சாலைகளையும், நாகூர் தர்கா கிழக்கு வாசலில் இருந்து கலீபா சாஹிப் தெரு, குளத்தடி தெரு வழியாக யுசுப் நைனா தெரு வழியாக ரயில் நிலையம் செல்லும் சாலைகளையும், நாகூர் தர்காவில் இருந்து கடைத்தெரு வழியாக புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலைகளையும் புதிதாக நல்ல விதத்தில் அமைத்தால் மட்டுமே இந்த பேட்டரி கார்களை இலகுவாக இயக்கி மக்கள் பயன்பாட்டிற்க்கு விட முடியும் என்றும் ஆகவே உடனடியாக மேற்கன்ட இடங்களில் சாலை வசதி அமைத்து தந்திடுமாறு நாகூர் தர்கா பரம்பரை அறங்காவலரும் பரம்பரை ஆதீனமுமாகிய முஹல்லி முத்தவல்லி ஹாஜி S. செய்யது முஹம்மது கலீபா சாஹிப் காதிரி ஹாசிமி தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
#justin | ஆளுநர் வழக்கு -ஆக. 19ம் தேதி முதல் விசாரணை
|ஆளுநர் வழக்கு தீர்ப்பில் குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்டது தொடர்பாக ஆக.19ம் தேதி விரிவான விசாரணையைத் தொடங்குகிறது உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு.
விளக்கம் கேட்டதை ஆதரிக்கும் தரப்பு ஆக. 19, 20, 21, 26 தேதிகளிலும், எதிர்க்கும் தரப்பு ஆக.28, செப்.2, 3,9ம் தேதிகளிலும் வாதங்களை முன்வைக்கலாம். ஆக.12ம் தேதிக்குள் அனைத்து தரப்புகளும் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய ஆணை
#📺அரசியல் 360🔴 | "ஓபிஎஸ் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்திருப்பேன்"
"என்னிடம் கூறி இருந்தால், ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடியிடம் பேசுவதற்கு
வழிவகை செய்திருப்பேன்"
- பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
#pmmodi #ops #NainarNagendran #BJP #Zero1 Media Online News
#breaking news | ஆபரேஷன் சிந்தூர் - மக்களவையில் இன்று விவாதம்
ஆபரேஷன் சிந்தூர் குறித்து
மக்களவையில் விவாதம் இன்று தொடக்கம்
மதியம் 12 மணிக்கு விளக்கம் அளிக்கிறார்
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
ஆபரேஷன் சிந்தூர் குறித்து மக்களவையில்
16 மணி நேரம் விவாதம்
#OperationSindoor #rajnathsingh #loksabha
#🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ | 3 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்
சென்னையில் 7 மண்டலங்களில் ஜூலை 30 முதல் ஆக.1 காலை 10 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தம்.
செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து குழாய் இணைப்பு பணி நடக்க உள்ளதால் இந்த அறிவிப்பு!
அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு ஆகிய பகுதிகளில் விநியோகம் நிறுத்தப்படும்
#newsupdate | பணியை தொடங்கிய முதல்வர்
சிகிச்சைக்கு பின் ஓய்வில் இருந்த
முதல்வர் ஸ்டாலின்
அலுவல் பணிகளை தொடங்கினார்
தலைமைச் செயலாளர் முருகானந்தம்
மருத்துவமனை வருகை, அரசின் திட்டங்கள்
குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை
#CMSTALIN #hosptalised #apollohospital
#📺அரசியல் 360🔴 | மோடியை - சந்திக்கும் ஈபிஎஸ்
இன்று இரவு 10.45 மணிக்கு
திருச்சி விமான நிலையத்தில்
பிரதமரை வரவேற்கவுள்ள ஈபிஎஸ்
கே.பி முனுசாமி, நத்தம் விஸ்வநாதன்,
எஸ்.பி.வேலுமணியுடன் சேர்ந்து
பிரதமரை சந்திக்கும் ஈபிஎஸ்
#pmmodi #EPSadmk #Pmmodiintamilnadu
#newsupdate | "அன்புமணி நடைபயணத்திற்கு தடை விதிக்கவில்லை"
அன்புமணி நடைபயணத்திற்கு தடை விதிக்கவில்லை
- தமிழக காவல்துறை விளக்கம்
அந்தந்த காவல் ஆணையர், எஸ்.பி-க்கள் மனுக்களை பெற்று பரிசீலனை செய்து அனுமதி கொடுக்குமாறு டிஜிபி சுற்றறிக்கை கொடுத்துள்ளதாக தகவல்
நிறுவனரின் அனுமதி இல்லாமல் நடைபயணம் மேற்கொள்ளக்கூடாது என ராமதாஸ் தரப்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளதால் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்
#PMK #Anbumani #Ramadoss
#📺அரசியல் 360🔴 | பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் - முதல்வர் விமர்சனம்
பீகாரில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்
"பின்தங்கிய, கருத்து வேறுபாடு கொண்ட சமூக வாக்காளர்கள் அழிக்கப்பட்டு, பாஜகவுக்கு சாதகமாக களம் மாற்றப்படுகிறது
இந்திய ஜனநாயகத்திற்கு ஏற்படும் எந்தவொரு அச்சுறுத்தலும் உறுதியான எதிர்ப்பை எதிர்கொள்ளும்
தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு எதிராக தமிழ்நாடு முழு பலத்துடன் குரல் கொடுக்கும்
தேர்தல் ஆணையத்தின் இந்த அநீதியை அனைத்து ஜனநாயக ஆயுதங்களாலும் எதிர்த்துப் போராடுவோம்"
- முதல்வர் ஸ்டாலின்
#CMStalin #SIR #ElectionCommission #Zero1 Media Online News













