#💔 காதல் தோல்வி #😓காதல் துரோகம் #💌நெஞ்ஜோடு கலந்திட்ட படங்கள்💔 #😭காதல் தோல்வி ஸ்டேட்டஸ் #💓காதல் வலிகள்
#😢I miss You #💞Feel My Love💖 #👩❤️👨Long Distance Relationship #🥰Girls Love feeling #💝இதயத்தின் துடிப்பு நீ
#💖நீயே என் சந்தோசம்🥰 #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #😘மாமா பாப்பா லவ்👧 #💑என் முதல் காதல்😊 #🥰Girls Love feeling
#💌நெஞ்ஜோடு கலந்திட்ட படங்கள்💔 #😍Old மூவிஸ் #🥺சோக வாழ்க்கை #😫சோக ஸ்டேட்டஸ் #😢Sad Feelings💔
#🤗சிம்பு - STR #💌நெஞ்ஜோடு கலந்திட்ட படங்கள்💔 #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #👨அன்புள்ள அப்பா
#💕 காதல் ஸ்டேட்டஸ் வீடியோஸ் #💞Feel My Love💖 #😘மாமா பாப்பா லவ்👧 #❤️எங்கேயும் காதல் #🥰Girls Love feeling
#💕 காதல் ஸ்டேட்டஸ் வீடியோஸ் #😢I miss You #😘மாமா பாப்பா லவ்👧 #💑நீயும் நானும் அன்பே #💖நீயே என் சந்தோசம்🥰
கணவன் மனைவி கீழ் கண்ட முறைப்படடி வாழ்ந்துவந்தால் வீடு நன்றாக இருக்கும்
1.எண்ணங்கள் வெவ்வேறாக இருந்தாலும் , ஒருவர் எண்ணத்திற்கு ஒருவர் மதிப்பு தந்து சொல்வதை காதில் வாங்க வேண்டும்.
2.கணவன் மட்டுமே வேலைக்கு செல்லும் வீட்டில் ,தன்னால் தான் குடும்ப பொருளாதாரம் இயங்குகிறது என்பதை எப்போதும் கணவன் வார்த்தைகளில் வெளிப்படுத்தக் கூடாது.
3.மனைவியும் வேலைக்கு செல்லும் வீட்டில், நானும் தான் வேலைக்கு போறேன் என்ற வார்த்தையை மனைவி அடிக்கடி சொல்லக் கூடாது.
4.இவரிடம்/இவளிடம் இதைச் சொன்னால் பெரிய பூகம்பமே வெடிக்குமோ என்ற பயத்தை ஒரு போதும் மனைவிக்கு கணவனும், கணவனுக்கு மனைவியும் தரக்கூடாது.பொய்யின் ஆரம்பமே பயம் தான்.
5.எவ்வளவு பெரிய சண்டை என்றாலும் உங்கள் இருவர் பற்றி மட்டும் தான் பேச வேண்டும்.கணவன் குடும்பத்தாரை பற்றி மனைவியும், மனைவியின் குடும்பத்தாரை பற்றி கணவனும் பேசவே கூடாது.தவறுகளில் மிகப்பெரிய தவறு இது.
6.மனைவியை தன்னில் ஒரு பாதியாக பார்க்காவிட்டாலும் வேலைக்காரியாய் பார்க்காமல் இருப்பது கணவனுக்கு அழகு.
7.மனைவியை ஏற்றது போல் அவள் குடும்பத்தையும் முழுமனதாய் கணவன் ஏற்க வேண்டும்.கணவனை ஏற்றது போல் அவன் குடும்பத்தையும் முழுமனதாய் மனைவி ஏற்க வேண்டும்.( இப்படி வாழ்ந்தால் முதியோர் இல்லங்கள் நிச்சயம் குறையும்)
8.கணவன் நண்பர்களுடன் ஊர் சுற்றி விட்டு நேரம் கழித்து வீடு வருவது. மனைவியை மட்டும் வீட்டுக்குள்ளே ஆயுள் கைதி ஆக்குவது, அவளை வெளியுலகம் அறியவிடாமல் செய்வது தவறு. படிப்பறிவில்லா பெண்களை சில ஆண்கள் இப்படித்
தான் நடத்துகின்றனர்.
9.கணவனும் மனைவியும் தனித் தனியே வெளியில் சென்றால் நேரமாய் வீடு திரும்ப வேண்டும் .அப்படி நியாயமான காரணத்திற்காக தாமதம் ஏற்பட்டால் ஒருவர் சொல்லும் காரணத்தை ஒருவர் நம்பி ஏற்றக் கொள்ளவேண்டும்.
10.அம்மாவின் சமையல் பக்குவத்தை எதிர்பார்த்து மனைவியின் சமையலை சாப்பிட்டு, ஏமாற்றம் என்றதும் அவளை திட்டக் கூடாது. அப்படி திட்டுவேன் தான் என்றால் அதற்கு முன் ஒன்றை யோசியுங்கள். திருமணம் ஆன புதிதில் உங்க அம்மாவும் இப்படித் தான் உங்க அப்பாவிடம் திட்டு வாங்கி இருப்பார்கள் சமையலுக்காக.பக்குவம் பார்த்ததும் வந்து விடக்கூடியதல்ல.பல வருட அனுபவத்தில் வருவது.
நரகமாய் இருக்கும் வீடு சொர்க்கம் ஆவதும், சொர்க்கமாய் இருந்த வீடு நரகம் ஆவதும் கணவன் மனைவி நடந்து கொள்ளும் விதத்தில் தான் இருக்கிறது
பா பாலா 🙏🪖
#💪ஊக்குவிக்கும் கதைகள் #💑கணவன் - மனைவி #💑என் காதல் கணவா💞 #💑கணவன் மனைவி காதல்💞 #👩 பாக்கியலட்சுமி
நல்ல தாம்பத்யம் என்றால் என்ன?
தாம்பத்யம்
கணவன் மனைவி ஒருவரை ஒருவர் நேசித்து ஒன்றாக வாழ்தல் மட்டுமல்ல ஒருவருக்கு ஒருவர் பாலியல் இன்பங்களை தடையின்றி வழங்கி இருவரும் திருப்தியுடன் மகிழ்ச்சியாக வாழ்தல்.
கணவன் மனைவி இருவரும் உளவியல் ரீதியான புரிதலும் இருவரையும் மேலும் இணைத்து பிடிக்கும்.
கணவன் மனைவி ஒன்றாக மகிழ்ச்சியாக வாழ வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் நல்ல குழந்தைகளாக வளர்வார்கள்.
கணவன் மனைவி இருவரும் குறிப்பிட்ட வருடங்களுக்குப் பிறகு திருமணம் முடித்து வாழ்க்கையில் இணைபவர்கள். எனவே இருவருக்கும் வேறு வேறு மாதிரியான சூழ்நிலைகளில் வளர்க்கப்பட்டிருப்பார்கள். இருவரும் வேறு வேறு பாலினம் என்பதால் இருவருக்கும் வேறு வேறு ஆசைகள் வேறு வேறு லட்சியங்கள் வேறு வேறு பாதைகள் இருக்கும்.
இவர்கள் இருவரும் இணைந்து ஒரு வீட்டில் வசிக்கும் பொழுது பல கருத்து வேறுபாடுகள் வரத்தான் செய்யும் என்ற புரிதல் அவசியம். அப்படிப்பட்ட கருத்து வேறுபாடுகளின் மீறி தாம்பத்தியம் இருவரையும் இணைத்து பிடித்து இருக்கும்.
குழந்தைகள் என்பது அவர்களின் எதிர்காலத்தை நோக்கி செல்வதற்கான வழிகளாக அமையும். அப்படிப்பட்ட வாழ்க்கையில் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்தால் முடிந்த அளவிற்கு மகிழ்ச்சியாக வாழ்வதற்கான வழிகள் பிறக்கும்.
சில தம்பதிகள் இயற்கையிலேயே ஒத்த கருத்து உள்ளவர்களாக இணைந்து இருப்பர். ஆனால் பலர் வேறு வேறு கருத்துக்கள் கொண்டவர்களாக அமைந்திருப்பதால் தான் குடும்ப சண்டைகள் அதிகமாக வருகிறது.
1) இருவருக்குமான புரிதல்.
ஒருவரை ஒருவர் தன் வழிக்கு கொண்டு வர முயலக்கூடாது.
ஒருவர் லட்சியத்தை மற்றவர் மதிக்க வேண்டும்
ஒருவரை ஒருவர் ஆலோசனைகள் கேட்க வேண்டும். சொல்லப்படும் ஆலோசனைகள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று திணிக்க கூடாது.
முன்தினம் சண்டைகளை இருவரும் நினைவு கூறுதல் கூடாது
நீ ஏன் தான் என் வாழ்க்கையில் வந்தாயோ நான் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டால் இன்னும் நன்றாக இருப்பேன் என்றெல்லாம் தேவையற்ற வசனங்களை பேசக்கூடாது
குழந்தைகள் முன் ஒருவரை ஒருவர் அவமானப்படுத்தி சண்டையிடக்கூடாது
திருமண இணை என்பது நமது வாழ்க்கையின் அச்சாணி என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
2) கணவன் மனைவி எப்படி நடத்தக்கூடாது
மனைவியின் குடும்பத்தாரை கேலி கிண்டல் செய்து மகிழக் கூடாது
கணவன் என்பவன் மனைவியை தன் முதல் மகளாக பாவித்து நேசிக்க வேண்டும்
மனைவியின் அழகை ரசித்து பாராட்ட வேண்டும்
பெண்கள் எப்போதும் உணர்ச்சிபூர்வமாக சிந்திப்பவர்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். (Feeling oriented)
பெண்கள் மன அழுத்தத்தில் (Depression )இருக்கும் போது பல பெண்களுடன் பேசி ஆசுவாசப்படுத்திக் கொள்வார்கள் என்பதை ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும்
மனைவியை பாராட்டுவதும். (Suprise Gift) பரிசுப்பொருட்கள் வழங்குவதும், வெளியூர் சென்று திரும்பும்போது குழந்தைகளுக்கு வாங்கி வருவது போல ஏதாவது வாங்கி வர வேண்டும்.
சண்டை வரும்போது கோபத்தில் அம்மா வீட்டுக்கு போ அண்ணன் வீட்டுக்கு போ என்று சொல்லக்கூடாது.
வீடு மனைவியுடையது
நாடு கணவனுடையது. எனவே வீட்டில் உள்ள பொருட்களை மனைவிக்கு தெரியாமல் யாருக்கும் தரக்கூடாது
மனைவியின் பகல் பொழுது சந்தோஷமாக அமைந்திருப்பின் கணவனின் இரவு பொழுது சந்தோஷமாக அமையும்.
மனைவியின் முன் எந்த பெண்ணையும் எதற்காகவும் பாராட்ட கூடாது.
மனைவியின் சந்தோஷம் குடும்பத்தின் சந்தோஷத்தினை அதிகப்படுத்தும் என்பதை கணவன் உணர வேண்டும்.
வயது வித்தியாசம் இல்லாமல் பெண்கள் தங்களை அழகுபடுத்திக் கொள்ளும் குணம் கொண்டவர்கள் என்பதை ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
3) மனைவி கணவனை எப்படி நடத்தக்கூடாது
கணவரை அவரின் குடும்ப உறுப்பினர்கள் முன் எதிர்த்து பேசுவது, சண்டையிடுவது, அவமானப்படுத்துவது போன்றவற்றை செய்யவே கூடாது.
மனைவி கணவரை மதிக்க வேண்டும் தன் தந்தைக்கு அடுத்த நிலையில் வைத்து மரியாதையாக நடத்த வேண்டும்
கணவனின் திறமைகளை மதித்து பாராட்ட வேண்டும்
ஆண்கள் எப்போதும் முடிவுகளின்படி படி சிந்திப்பார்கள் (Solution Oriented) என்பதை பெண்கள் புரிந்துகொள்ள வேண்டும்
ஆண்கள் மன உளைச்சலில் (Depression) இருக்கும் பொழுது தனிமையில் இருக்கவே விரும்புவார்கள் என்பதை புரிந்து கொண்டு மனைவிகள் அவர்களுடன் பேசாமல் இருத்தல் நல்லது.
கணவரை தன்னுடைய அப்பா உடனும் அல்லது தன் சகோதரனுடனும் எக்காரணம் கொண்டும் ஒப்பிட்டு அவமானப்படுத்தக் கூடாது.
தொழிலில் பிரச்சனை ஏற்படும் அல்லது அலுவலகத்தில் பிரச்சனை ஏற்படும் கணவனுக்கு சாதகமாக பேச வேண்டும். பணம் போய்விட்டதே தொழில் போய்விட்டதே என்று புலம்புவதை நிறுத்திவிட்டு நான் இருக்கிறேன் அவரகளுக்கு சொல்லி ஆறுதலாக இருக்க வேண்டும்.
உணவு பரிமாறும் பொழுது பிரச்சனைகளை பற்றி பேசக்கூடாது
(ஆணவம், அகங்காரம், தான் என்ற திமிர், ஈகோ, எனக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணம் உள்ள நபர்கள் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவர்களை மாற்றவே முடியாது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
#family #wifeylife #👩❤️👨Relationship Goals #💑கணவன் - மனைவி #💑என் காதல் கணவா💞 #💑கணவன் மனைவி காதல்💞
பா பாலா 🙏🪖
#💑பெஸ்ட் ஜோடி ஸ்டேட்டஸ்🥰
#🛕ஐயப்பன் கோவில்கள்🙏🏼 #✡️கார்த்திகை மாத விரதம்🙏 #🙏🏻சரணம் ஐயப்பா #😇மண்டல பூஜை🛕 #🛕ஐயப்பன் ஸ்பெஷல் பிரசாதம்🍚





