
ஆந்தை ரிப்போர்ட்டர்
@aanthaireporter
Online Update Magazine
தமிழ் சினிமாவில் காதலைப் பேச ஆயிரம் இயக்குனர்கள் இருக்கலாம், ஆனால் காதலை உணர வைத்தவர்கள் சிலரே. அதில் மிக முக்கியமானவர் கௌதம் வாசுதேவ் மேனன். மின்னலே தொடங்கி துருவ நட்சத்திரம் வரை, இவரது படங்கள் வெறும் காட்சிகளாக மட்டுமல்லாமல், ரசிகர்களின் மனதுக்கு நெருக்கமான கவிதைகளாகவே திரையில் விரிந்தன. #ஆந்தை பொழுது போக்கு
ஒரு காலத்தில் இளைஞர்கள் என்றாலே பிரம்மாண்டமான மல்டிப்ளக்ஸ் திரையரங்குகள், விலை உயர்ந்த சொகுசு விடுதிகள் மற்றும் 'எலைட்' என்று சொல்லப்படும் பிரத்யேக கிளப்களைத் தேடித்தான் ஓடுவார்கள் என்ற பிம்பம் இருந்தது. #ஆந்தை அப்டேட்
ஸ்மார்ட்போன் வந்த பிறகு பேங்கிங் சேவைகள் அனைத்தும் கைக்குள் வந்துவிட்டன. ஆனால், அதே வேகத்தில் டிஜிட்டல் மோசடிகளும், தேவையற்ற விளம்பரத் தொல்லைகளும் அதிகரித்துள்ளன. இதனைத் தடுக்கும் பொருட்டு, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தற்போது டிஜிட்டல் வங்கிச் சேவை விதிமுறைகளை அதிரடியாகக் கடுமையாக்கத் திட்டமிட்டுள்ளது. #ஆந்தை அப்டேட்
இயற்கையின் சொர்க்கமாகத் திகழும் இமாச்சலப் பிரதேசம், தற்போது இயற்கையின் சீற்றத்தில் சிக்கித் தவிக்கிறது. இமாச்சலப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் நிலவி வரும் கடும் குளிருக்கு மத்தியே, மாநிலத்தின் 8 முக்கிய மாவட்டங்களில் அடுத்த சில மணிநேரங்களுக்குப் பனிப்பொழிவு மற்றும் கடும் பனிப்புயல் வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) எச்சரிக்கை விடுத்துள்ளது. சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர் மக்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். #ஆந்தை அப்டேட்
கன்னடத் திரையுலகில் அழுத்தமான கதைகளைத் தேர்வு செய்து நடிப்பதில் தனி முத்திரை பதித்தவர் நடிகர் சதீஷ் நினாசம். இவர் நடிப்பில், பீரியட் ஆக்ஷன் என்டர்டெய்னராக உருவாகியுள்ள 'ரைஸ் ஆஃப் அசோகா' (Rise of Ashoka) திரைப்படம் விரைவில் ஐந்து இந்திய மொழிகளில் வெளியாக உள்ளது. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவன், தன் அடிப்படை உரிமைகளுக்காக நடத்தும் போராட்டத்தை மையமாக வைத்து இந்தப் படம் தயாராகியுள்ளது. #ஆந்தை பொழுது போக்கு
நீதிமன்ற வழக்காடல்களை விட விரைவாகவும், எளிமையாகவும் தீர்வுகளைக் காண்பதற்காகவே 'மத்தியஸ்தம்' (Arbitration) முறை கொண்டுவரப்பட்டது. ஆனால், நடைமுறையில் இந்தத் திட்டமும் நீதிமன்றங்களின் நீண்ட கால தாமத வலைக்குள் சிக்கித் திணறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #ஆந்தை அப்டேட்
மத்திய அரசின் கீழ் இயங்கும் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (NABARD), தற்போது 2026-ஆம் ஆண்டிற்கான டெவலப்மெண்ட் அசிஸ்டண்ட் மற்றும் டெவலப்மெண்ட் அசிஸ்டண்ட் (ஹிந்தி) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. #ஆந்தை அப்டேட்
இரண்டு ஆண்டுகளுக்கு முன், தமிழ் சினிமாவில் சர்ச்சையுடன் விவாத அலைகளை உருவாக்கிய ‘ஹாட் ஸ்பாட்’ படத்தின் சீக்வலாகத் தடம் பதித்துள்ளது இந்த “ஹாட் ஸ்பாட் 2 மச்”. முதல் பாகத்தைப் போலவே இதிலும் இயக்குநரின் ‘எக்ஸ்பிரிமெண்டல்’ பாணி தொடர்கிறது. #ஆந்தை பொழுது போக்கு
வரலாற்றில் பல அரசர்களும் தலைவர்களும் வாள் மற்றும் விஷம் மூலம் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆனால், ஒரு நாட்டின் தலைவரை முதன்முதலில் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்த சம்பவம் 1570-ஆம் ஆண்டு இதே போன்ற ஒரு ஜனவரி 23-ஆம் தேதிதான் அரங்கேறியது. #ஆந்தை அப்டேட்
*#இன்றைய_பஞ்சாங்கம்*
*#விசுவாவசு_ஆண்டு*
தை-9
1,*#நாள்*:வெள்ளிக்கிழமை.
(23-01-2026)
2,*#நட்சத்திரம்*:பூரட்டாதி மதியம் 02:08 வரை பின்பு உத்திரட்டாதி.
3,*#திதி*:பஞ்சமி நாள் முழுவதும்.
4,*#யோகம்*: சித்தயோகம்.
5,*#கர்ணம்*: பவம் மதியம் 01:30 வரை பின்பு பாலவம்.
*#நாமயோகம்*:பரிகம் மாலை 03:46 வரை பின்பு சிவம்.
ஜீவன்-1/2
நேத்ரம்-1
நல்ல நேரம்
09:30 - 10:30 கா / AM
04:30 - 05:30 மா / PM
கௌரி நல்ல நேரம்
12:30 - 01:30 கா / காலை
06:30 - 07:30 மா / மாலை.
சுகம் காலை 06:39 - காலை 08:04
சோரம் காலை 08:04 - காலை 09:30
உதி காலை 09:30 - காலை 10:55
விஷம் காலை 10:55 - மதியம் 12:20
அம்ரிதா மதியம் 12:20 - மதியம் 13:45
ரோகம் பிற்பகல் 13:45 - மதியம் 15:11
லாபம் பிற்பகல் 15:11 - 16:36
தனம் மாலை 16:36 - மாலை 18:01
*#சூலம்* :மேற்கு
பரிகாரம்- வெல்லம்
*#சந்திராஷ்டமம்*
ஆயில்யம்+மகம்.
*#நாள்* கீழ் நோக்கு நாள்.
*#லக்னம்*: மகர லக்னம் இருப்பு நாழிகை 03 வினாடி 48.
*#சுபகாரியம்*: ஆபரணம் அணிய, தொழில் ஆரம்பம் செய்ய, சுபம் பேச சிறந்த நாள்.
*#சூரிய_உதயம்* - காலை 6:39 மணி
*#சூரிய_அஸ்தமனம்* - மாலை 6:01 மணி.
*#சந்திர_உதயம்* - ஜனவரி 23 காலை 9:38
*#சந்திர_அஸ்தமனம்* - ஜனவரி 23 இரவு 10:01.
*#ராகுகாலம்* - 10:55 AM - 12:20 PM
*#யமகண்டம்* - 3:11 PM - 4:36 PM
*#குளிகை* - காலை 8:04 – காலை 9:30.
*#துர்முஹூர்த்தம்* - 08:56 AM - 09:41 AM, 12:43 PM - 01:28 PM.
*#வாஜ்யம்* - 12:01 AM - 01:36 AM.
மங்களகரமான காலம்
*#அபிஜித்_முஹூர்த்தம்* - 11:57 AM - 12:43 PM.
*#அமிர்த_காலம்* - 06:59 AM - 08:35 AM.
*#பிரம்ம_முகூர்த்தம்* - 05:03 AM – 05:51 AM.
ஆனந்தாதி யோகம்
துலாங்க்ஷா வரை - பிற்பகல் 02:32 மணி த்வஜா.
சூரிய ராசி
மகர ராசியில் சூரியன்
சந்திர ராசி.
ஜனவரி 23, காலை 08:33 மணி வரை கும்ப ராசியில் சந்திரன் பயணித்து மீன ராசிக்குள் நுழைகிறார்.
சந்திர மாதம்/ஆண்டு
அமந்தா - மாகா
பூர்ணிமந்தா - மகா
விக்ரம் ஆண்டு - 2082, கலாயுக்தி
ஷாகா ஆண்டு - 1947, விசுவசுவா
சாகா ஆண்டு (தேசிய நாட்காட்டி) - மாகா 3, 1947.
அக்னிவாசம் - பிருத்வி (பூமி) ஜனவரி 24 - 01:46 AM வரை ஆகாசம் (சொர்க்கம்)
சந்திர வாசா - மேற்கு காலை 08:33 மணி வரை வடக்கு
ராகுகால வாசம் - தென்கிழக்கு.
___________________________
வசந்த பஞ்சமி
ஜனவரி 23
ஷஷ்டி விரதம்
ஜனவரி 24
ரத சப்தமி
ஜனவரி 25
பீஷ்ம அஷ்டமி
ஜனவரி 26
கார்த்திகை விரதம்
ஜனவரி 27
ஏகாதசி
ஜனவரி 29
_________________________
*#தோற்றம்*
1814 – அலெக்சாண்டர் கன்னிங்காம், பிரித்தானியத் தொல்லியலாளர், படைத்துறைப் பொறியாளர் (இ. 1893)
1832 – எடுவார்ட் மனே, பிரான்சிய ஓவியர் (இ. 1883)
1833 – முத்து குமாரசுவாமி, இலங்கைத் தமிழ் அரசியல்வாதி, வழக்கறிஞர் (இ. 1879)
1862 – டேவிடு இல்பேர்ட்டு, உருசிய-ஜெர்மெனியக் கணிதவியலாளர் (இ. 1943)
1869 – எர்பெர்ட்டு குரோலி, அமெரிக்க கல்வியாளர், இதழாளர் (இ. 1930)
1893 – ஆர். அனந்த கிருஷ்ணர், ஆந்திர கர்நாடக இசைக் கலைஞர் (இ. 1979)
1894 – ஜோதிர்மாயி தேவி, இந்திய எழுத்தாளர் (இ. 1988)
1897 – சுபாஷ் சந்திர போஸ், இந்திய விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி (இ. 1945)
1907 – ஹிடேகி யுகாவா, நோபல் பரிசு பெற்ற சப்பானிய இயற்பியலாளர் (இ. 1981)
1926 – பால் தாக்கரே, இந்திய ஊடகவியலாளர், அரசியல்வாதி (இ. 2012)
1930 – டெரெக் வால்காட், நோபல் பரிசு பெற்ற செயிண்ட் லூசிய எழுத்தாளர் (இ. 2017)
1971 – நிரோஷா, தென்னிந்திய திரைப்பட நடிகை.
1984 – விமலா ராமன், தெனிந்தியத் திரைப்பட நடிகை
*#மறைவு*
1744 – கியாம்பாட்டிஸ்டா விக்கோ, இத்தாலிய வரலாற்றாளர், மெய்யியலாளர் (பி. 1668)
1791 – யொகான் பிலிப் பப்ரிசியஸ், செருமனிய கிறித்தவ மதப் போதகர், தமிழறிஞர் (பி. 1711)
1944 – எட்வர்ட் மண்ச், நோர்வே ஓவியர் (பி. 1863)
1966 – த. மு. சபாரத்தினம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி, சட்டவறிஞர் (பி. 1895)
1967 – அரியக்குடி இராமானுஜ ஐயங்கார், கர்நாடக இசை வித்துவான் (பி. 1890)
1975 – தியடோர் சாமர்வெல், ஆங்கிலேய மருத்துவர், மலை ஏற்ற வீரர், ஓவியர் (பி. 1890)
1989 – சால்வதோர் தாலீ, ஸ்பானிய ஓவியர் (பி. 1904)
2002 – பியரே பூர்டோ, பிரான்சிய சமூகவியலாளர், மானிடவியலாளர் (பி. 1930)
2002 – ரோபேர்ட் நோசிக், அமெரிக்க மெய்யியலாளர், எழுத்தாளர் (பி. 1938)
2014 – எஸ். ஸ்ரீஸ்கந்தராஜா, இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைமை நீதிபதி (பி. 1953)
2015 – சவூதி அரேபியாவின் அப்துல்லா (பி. 1924)
2015 – இரா. இளவரசு, தமிழகத் தமிழறிஞர், கல்வியாளர் (பி. 1939)
2017 – யாரோஸ்லாவ் வாஸ்செக், செக் தமிழறிஞர், இந்தியவியலாளர் (பி. 1943)
*#சிறப்பு_நாள்*
தேசிய வலிமை தினம்.
சுபாஷ் சந்திர போஸ் ஜெயந்தி (ஒடிசா, திரிபுரா, மேற்கு வங்காளம்)
__________________________
*#இன்றைய_ராசிபலன்கள்*
(23-01-2026. வெள்ளிக்கிழமை)
💐மேஷம்
மேஷ ராசி நண்பர்களே, குடும்ப சிக்கல்கள் வெகுவாக குறையும்.பணப்புழக்கம் காணப்படும்.தேவையானதை வாங்க முடியும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பர். கடன் வாங்குவது, கொடுப்பதை தவிர்க்கவும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
💐ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, புதிய முயற்சியில் சாதகமான பலன் கிடைக்கும். பெற்றோர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடல் நலம் சீராகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.தொழில் வியாபாரங்கள் லாபத்தை தரும்.
💐மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, திட்டமிட்டபடி பயணம் செய்ய முடியும்.பயணத்தால் ஆதாயம் உண்டு. பொருளாதாரம் ஏற்ற தாழ்வு இல்லாமல் சமமாக இருக்கும். திடீர் மருத்துவ செலவுகள் வரும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.
💐கடகம்
கடக ராசி நண்பர்களே, புது நபர்களை நம்பி எதையும் செய்ய வேண்டாம். பண விவகாரங்களில் கவனம் தேவை. தள்ளி போன காரியங்கள் விரைவில் முடியும். சோர்வு நீங்கி உற்சாகம் ஏற்படும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும்.தொழில் வியாபாரங்கள் மிதமான லாபத்தை தரும்.மதியம் 02:08 வரை சந்திராஷ்டமம் உள்ளது.
💐சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, அந்நியர்களால் பண விரயமும் வீண் அலைச்சலும் ஏற்படும்.உடல் நல குறைபாடுகளும் மருத்துவ சிலவுகள் உண்டாகும். உறவினர்கள் அன்பு பாராட்டுவர். திருமணம் காரியம் கைகூடும். உத்யோக மாற்றம் ஏற்படும்.மதியம் 02:08 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குகிறது.
💐கன்னி
கன்னி ராசி நண்பர்களே,மன அமைதி கிடைக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் மகிழ்ச்சி ஏற்படும். தொந்தரவு தந்தவர்கள் தானாக விலகுவர். கடன் தொல்லைகள் சிறுக சிறுக குறையும்.வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
💐துலாம்
துலாம் ராசி நண்பர்களே, குடும்ப செல்வாக்கு உயரும். ஆடம்பர செலவுகளால் சேமிப்புகள் கரையும்.மனதில் எதிர்மறை எண்ணங்கள் வந்து செல்லும்.கணவன் மனைவிக்குள் தேவையற்ற விவாதங்களை தவிற்க்கவும். வாகனம் யோகம் உண்டு. சொந்த தொழில் மேன்மையடையும்.
💐விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, குடும்பத்தில் இதமான சூழல் நிலவும். எப்போதும் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். புது வீடு மாற்றம் ஏற்படும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.தொழில் வியாபாரத்தில் புதிய முதலீடுகளால் லாபம் அதிகரிக்கும்.
💐தனுசு
தனுசு ராசி நண்பர்களே, தெய்வ சிந்தனை அதிகரிக்கும்.ஆன்மீக பயணங்கள் மேற்கொள்வீர். பிரபலங்கள் அறிமுகமாவர். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம்.யாருக்கும் ஜாமீன் தராதீர்கள். தொழில், வியாபாரம் சீரான பாதையில் செல்லும்.
💐மகரம்
மகர ராசி நண்பர்களே, மனதில் நினைத்த காரியம் நிறைவேறும். பண விவகாரங்களில் கூடுதல் கவனம் தேவை. உறவினர்கள் உதவி கரம் நீட்டுவர். உதவிகள் கிடைக்கும் தேவைகள் பூர்த்தியாகும்.புதிய வாகன யோகம் உண்டு.தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
💐கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள் தன வரவு உண்டாகும்.விலை உயர்ந்த பொருட்களை வாங்க முடியும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் கிடைக்கும். நட்பு வழியில் சில தொந்தரவுகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
💐மீனம்
மீன ராசி நண்பர்களே, குடும்பத்தில் விவாதங்களை தவிர்க்கவும். அடுத்தவர் மனசு காயபடும்படி பேச வேண்டாம். சமூகத்தில் அந்தஸ்து உயரும். தொழில், வியபாரத்தில் சுமாரான லாபம் வரும்.வெளியூர் பயணங்களால் ஆதாயம் பெறுவீர்கள்.
🥀Aanthaiyaar 🥀 #🌻🌻காலை வணக்கம்🌻🌻












