@admkkallakurchi
@admkkallakurchi

AIADMK Kallakurichi

AIADMK's Official account of Kallakurichi District

கள்ளக்குறிச்சியில் மாவட்ட தலைமை நூலகம் அமைத்து தருமாறு மாண்புமிகு அமைச்சர் @KASengottaiyan அவர்களிடம் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.பிரபு அவர்கள் கோரிக்கை மனு அளித்தார். #📠 📃 செய்தி
கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதியில் பொதுகுப்பைக் கிடங்கு அமைக்க இடம் தேர்வு செய்வதற்காகவும், உழவர்சந்தை பகுதியில் மக்களுக்கு இடையூறாக உள்ள மின்மாற்றியை இடமாற்றம் செய்திட கோரியும் சட்டமன்ற உறுப்பினர் திரு.பிரபு அவர்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு அளித்தார். #🧑 அ.தி.மு.க #📠 📃 செய்தி
மக்கள் திலகம் டாக்டர்.எம்.ஜி.ஆர் அவர்களின் 32-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி கள்ளக்குறிச்சியில் உள்ள Dr.எம்.ஜி.ஆர் அவர்களின் சிலைக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.இரா.குமரகுரு அவர்கள், திரு.பிரபு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். #MGR #🧑 அ.தி.மு.க
கள்ளக்குறிச்சி மாவட்ட காது கேளாதோர் நல சங்க அலுவலகத்தை சட்டமன்ற உறுப்பினர் திரு.பிரபு அவர்கள் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். #🧑 அ.தி.மு.க
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் அருகேயுள்ள செல்லியம்பாளையம் கிராமத்தில் மர்மக் காய்ச்சல் பரவுவதை தொடர்ந்து சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். #📠 📃 செய்தி
விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களின் எல்லைப் பகுதியில் இரண்டாகப் பிரிந்துள்ள கருவேப்பிலை பாளையம் கிராமத்தை ஒரு மாவட்டத்தின் எல்லைக்குள் கொண்டு வருவது குறித்து தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் அவர்கள் மற்றும் இரு மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு மேற்கொண்டார். #TNGovt #📠 📃 செய்தி
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் மலைப் பகுதியிலுள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.13 லட்சம் மதிப்பில் 2 கூடுதல் வகுப்பறைக் கட்டிடங்கள் கட்டுவதற்கான பணிகளை சட்டமன்ற உறுப்பினர் திரு.பிரபு அவர்கள் துவக்கி வைத்தார். #🧑 அ.தி.மு.க