இல்லாமல் போவதென்பது இயல்பாய் நடப்பது தானே....
நேற்று இருந்தது இன்று இல்லை...
இன்று இருப்பது நாளை இல்லாமல் ஆகலாம்..
ஆனால் இல்லாமல் செய்வது அத்தனை சுலபமானது இல்லை....
அது ஒட்டபட்ட இடத்தில் இருந்து விலகி ஒட்டாமல் நிற்பது....
நான் யாரோ நீ யாரோ என்ற போர்வைக்குள் ஒளிந்து கொள்வது...
உனக்கும் எனக்கும் எதுவுமில்லை என்பதை உரக்க சொல்வது...
ஆம் நம்மை நாமே இல்லாமல் செய்வது...
அத்தனை சுலபமானதல்ல...
அது வெறுப்புகளின் உச்சம்..
வேதனைகளின் மிச்சம்...
நமக்கான இடத்தை தர மறுப்பவர்களுக்கு
நம்மால் கொடுக்க முடிந்த சிறிய பரிசு
நம்மை அவர்கள் வாழ்வில் இல்லாமல் செய்வது...!
#💔 காதல் தோல்வி #💔Breakup Quotes😔 #😢Sad Feelings💔 #📷நினைவுகள் #😞Sad Quotes