ஐப்பசி அடைமழையாய்
நனைக்கிறாய்...
சொற்களின் அடர்வுகளால்
ஓயாது முத்தமிடுகிறாய்...
சிதறி உடைந்து கிடந்த
வார்த்தைகளால்
அணைக்கிறாய்...
கலங்கியிருந்த என்னை
ஆற்றுப்படுத்துகிறாய்...
திரண்ட விழி நீரை
விழ வைக்கவில்லை நீ..
சிறு துளி
ஏக்கத்தை தரவில்லை நீ...
புனைவுகளோடு
தஞ்சமாகி
விடுகிறேன்....
உன்னோடு பிணைந்திருப்பதில்
மீச்சிறு வலியில்லை...
ஆதலால்
உன்னை நான் காதலிக்கிறேன்
என் கவிதையே... #📷நினைவுகள் #👩❤️👨Long Distance Relationship #💖நீயே என் சந்தோசம்🥰 #😔தனிமை வாழ்க்கை 😓 #💔 காதல் தோல்வி