
Allah podumanavan ☝
@allahpodumanavan
Hasbunallah wa Ni ' mal wakeel ☝
ஆயத்துல் குர்ஸி ❤️
#🤲இஸ்லாமிய துஆ #நாளும் ஒரு நபிமொழி #🕌இஸ்லாமிய புனித ஸ்தலங்கள்🕋 #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ்
அனுமதிக்கப்பட்ட மூன்று பொய்கள்!
#🕌இஸ்லாமிய புனித ஸ்தலங்கள்🕋 #🤲இஸ்லாமிய துஆ #நாளும் ஒரு நபிமொழி #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ்
நமக்கு சொந்தம் இல்லாத ஒன்றை விற்க கூடாது!
#🤲துஆக்கள்🕋 #நாளும் ஒரு நபிமொழி #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #🕌இஸ்லாமிய புனித ஸ்தலங்கள்🕋
ஏழைகளின் தந்தை, இரு இறக்கை உடையவர் ஜஃபர் இப்னு அபூதாலிப் ரலியல்லாஹு அன்ஹு சுருக்கமான வாழ்கை வரலாறு!
• ஜஃபர் இப்னு அபூதாலிப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அபூதாலிப் இப்னு அப்துல் முத்தலிப் அவர்களின் மூன்றாவது மகனாவார். அலீ (ரழி) அவர்களின் மூத்த சகோதரரும், நபி (ஸல்) அவர்களின் பெரிய தந்தையின் மகனும் ஆவார்.
• இஸ்லாமிய ஆரம்ப காலத்திலேயே இவரும், இவரது மனைவி அஸ்மா பின்த் உமைஸ் (ரழி) அவர்களும் இஸ்லாத்தினை ஏற்றார்கள். ஜஃபர் (ரழி) அவர்கள் தோற்றத்தில் நபி (ஸல்) அவர்களை போன்றே இருப்பார்கள்.
• மக்காவில் காஃபிர்கள் இஸ்லாத்தை ஏற்றவர்களை அதிகம் கொடுமை செய்த சமயம் நபி (ஸல்) அவர்கள் விரும்பியவர்களை அபிசீனியா நாட்டிற்கு ஹிஜ்ரத் செய்ய சொன்னார்கள். அந்த நாட்டு அரசர் நஜ்ஜாஷி அவர்கள் ஒரு கிறிஸ்தவர் இருந்தாலும் நற்குணமுடையவர் எல்லோரிடமும் சமமாவும் நீதியாகவும் ஆட்சி செய்ய கூடியவர் என்று கூறி அனுப்பினார்கள்.
• இதில் 12 ஆண்கள், 4 பெண்களும் ஹிஜ்ரத் செய்தனர். இந்த குழுவிற்கு ஜஃபர் இப்னு அபூதாலிப் (ரழி) அவர்களே தலைமை தாங்கினார்கள்.
• அபிஸீனியா நாட்டிற்கு முஸ்லீம்கள் சென்ற விசியம் காஃபிர்களுக்கு தெரிய வர, அவர்களை மீண்டும் மக்காவிற்கு கொண்டு வர காஃபிர்கள் முடிவு செய்து அப்துல்லாஹ் பின் அபீ ரபீஆ மற்றும் அம்ர் பின் ஆஸ் (இவர் பின்னால் இஸ்லாத்தை ஏற்று கொண்டார்) என்பவரிடம் ஏராளமான பொருட்கள் கொடுத்து அபிஸீனியவிற்கு அனுப்பி வைத்தார்கள்.
• அந்த நாட்டு மன்னர் நீதியாக ஆட்சி செய்ததால் தகுந்த காரணம் எதுவும் இல்லாமல் முஸ்லீம்களை திரும்ப அனுப்ப மாட்டேன் என்று கூறி விட்டார். மக்கா காஃபிர்களின் இரு தூதரும் மன்னரிடம் சாதுரியமாக பேசினார்கள் அந்த சமயம் முஸ்லீம் சார்பாக ஜஃபர் இப்னு அபூதாலிப் (ரழி) அவர்களே பேசி அவர்களின் எல்லா குற்ற சாட்டிற்கும் அல்குர்ஆன் மூலம் பதில் அளித்தார்கள்.
• அவரின் அல்குர்ஆன் ஓதலை கேட்ட மன்னன் அழலனார்கள். பின்பு எவ்வளவு பொருட்கள் கொடுத்தாலும் இவர்களில் ஒருவரை கூட திரும்ப அனுப்ப மாட்டேன் என்று கூறி விட்டார்.
• இவ்வாறே பத்து ஆண்டுகள் அபிஸீனியவில் அமைதியான பாதுகாப்பான வாழ்க்கை முஸ்லீகளுக்கு கிடைத்தது. அமைந்திருந்தது முஸ்லிம்களுக்கு. ஜஅஃபர் (ரழி) அவருக்கும் அவரின் மனைவி அஸ்மா (ரழி) அவர்களுக்கும் அப்துல்லாஹ், முஹம்மது, அவ்ன் எனும் மூன்று குழந்தைகளை பிறந்தன.
• ஜஅஃபர் (ரழி) அவர்களின் இந்த மார்க்க பிரச்சாரமே பிற்காலத்தில் நஜ்ஜாஷி முஸ்லீமாக மாற ஒரு காரணமாக அமைந்தது, நஜ்ஜாஷி அவர்கள் இறந்த செய்தி கேட்ட நபி (ஸல்) அவர்கள் மதினாவிலயே அவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தினார்கள்.
(நூல் : ஸஹீஹ் புகாரி : 1333)
• பின்பு சில வருடம் கழித்து நபி (ஸல்) அவர்கள் அபிசீனியா நாட்டில் உள்ள முஸ்லீம்களை மதினாவிற்கு வர கடிதம் எழுதி அனுப்பினார்கள். அத்தனைபேரும் பயணம் புரிய இரண்டு படகுகளைத் தயார் செய்து அளித்தார் நஜ்ஜாஷி மன்னர். முஸ்லீம்களும் மதினா வந்தடைந்தனர். நபி (ஸல்) அவர்கள் அந்த நேரம் கைபரில் போருக்கு சென்று இருந்தார்கள்.
• ஜஅஃபர் (ரழி) அவர்களுக்கு அபுல் மஸாகீன் (ஏழைகளின் தந்தை) என்ற சிறப்பு பெயரும் உண்டு அதற்கான காரணம் அபூஹுரைரா (ரழி) அவர்கள் விவரிக்கிறார்கள் :
மதீனாவில் வாழ்ந்து வந்த ஏழைகளாகிய எங்கள் மீது அளவற்ற பரிவு கொண்டவர் ஜஅஃபர் இப்னு அபீதாலிப் (ரழி). எங்களை அவரது வீட்டிற்கு அழைத்துச்சென்று அவரிடம் என்ன உணவு இருக்கிறதோ அதை எங்களுடன் பகிர்ந்து கொள்வார். அப்படி அவரிடம் உணவு ஏதும் இல்லையெனில், வெண்ணெய் இருந்த ஜாடியை எடுத்துவருவார். அதை உடைத்து, ஒட்டிக் கொண்டிருக்கும் கடைசிச் சொட்டுவரை எங்களுக்கு அளிப்பார்.
• முஅத்தா போரின் ஜஃபர் (ரழி) அவர்களிடம் இஸ்லாமிய கொடி வந்தது. போர் கடுமையாக நடைபெற்றது. இதில் ஜஃபர் (ரழி) அவர்களின் இரண்டு கைகளும் வெட்டப்பட்டன அப்போதும் அவர் கொடியை கீழே விடாமல் இரு தோல் புஜத்தில் தாங்கி பிடித்தார்கள். பின்பு அவரின் கால்களும் வெட்டப்பட்டு உடலிலும் பல காயம் ஏற்பட்டு அதே இடத்தில் ஷஹீத் ஆனார்கள்.
• ஜஃபர் (ரழி) அவர்கள் மலக்குகளுடன் சுவர்க்கத்தில் பறப்பதை நான் கண்டேன் என்று நபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள்.
(நூல் : சுனன் திர்மிதி : 3763)
• இதே பின்னே இந்த ஸஹாபிக்கு இஸ்லாமிய வரலாற்றில், இரு இறக்கைகளுள்ளவர் எனப் பொருள்படும் ‘ துல் ஜனாஹைன் ’ மற்றும் ‘ ஜஃபர் அத் தையார் ’ என்ற சிறப்புப் பெயரும் ஏற்பட்டன. ஜஃபர் இப்னு அபூதாலிப் ரலியல்லாஹு அன்ஹு!
@அல்லாஹ் போதுமானவன் 💞
#🕌இஸ்லாமிய புனித ஸ்தலங்கள்🕋 #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #🤲துஆக்கள்🕋 #நாளும் ஒரு நபிமொழி
அன்பளிப்பு 🎁
#🤲இஸ்லாமிய துஆ #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #🕌இஸ்லாமிய புனித ஸ்தலங்கள்🕋 #நாளும் ஒரு நபிமொழி
மார்க்க கல்வி இல்லாமல் பிறருக்கு மார்க்க சட்டம் கூறக்கூடாது!
#🤲துஆக்கள்🕋 #நாளும் ஒரு நபிமொழி #🕌இஸ்லாமிய புனித ஸ்தலங்கள்🕋 #🤲இஸ்லாமிய துஆ #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ்
தாயின் சகோதரி ❤️
#☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #🕌இஸ்லாமிய புனித ஸ்தலங்கள்🕋 #நாளும் ஒரு நபிமொழி #🤲துஆக்கள்🕋 #🤲இஸ்லாமிய துஆ
அல்லாஹ்வின் மன்னிப்பு இவருக்கு உண்டு!
#நாளும் ஒரு நபிமொழி #🤲துஆக்கள்🕋 #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #🤲இஸ்லாமிய துஆ #🕌இஸ்லாமிய புனித ஸ்தலங்கள்🕋
கலிமாவை தூய்மையான உள்ளத்துடன் கூறும் பொழுது வானத்தின் கதவுகள் திறக்கின்றன!!!
#🤲துஆக்கள்🕋 #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #நாளும் ஒரு நபிமொழி #🖌பக்தி ஓவியம்🎨🙏
மனிதர்களில் மிகவும் தீயவன்!!!
#🖌பக்தி ஓவியம்🎨🙏 #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #நாளும் ஒரு நபிமொழி #🤲துஆக்கள்🕋