சிவபெருமானை சுமக்கும் அம்பாள்
""''''''"""""""""""""""""""""""""""""
தஞ்சாவூரில் அமைந்துள்ள அருள்மிகு கோடியம்மன் திருக்கோயில் மிகவும் விசேஷமானது
பொதுவாக சிவபெருமானின் ஜடாமுடியில் கங்கை அல்லது பிறைச்சந்திரன் இருப்பதை நாம் பார்த்திருப்போம் ஆனால் இங்கே அம்பாள் சிவபெருமானையே தன் தலையில் சுமக்கிறாள்
தஞ்சன் என்ற அசுரன் ஹலோ தேவர்களை துன்புறுத்தி வந்தான் அவனை அழிக்க சிவபெருமானின் உத்தரவுபடி அம்பிகை களமிறங்கினாள்
அசுரன் கோடி உருவங்கள் எடுத்து போரிட்டான் அவனை வீழ்த்த அம்பிகையும் பெரும் கோபத்துடன் உருவெடுத்து கோடி அசுரங்களையும் அழித்தாள் கோடி உருவம் கொண்ட அசுரனை அழித்ததால் இவள் கோடி அம்மன் என்று அழைக்கப்படுகிறார்
இந்த ஆலயத்தின் மிக முக்கியமான மற்றும் அரிதான அம்சம் அம்பாளின் திருவுருவம்
போர்க்களத்தில் அசுரனை அழித்து ஆவேசமாக நின்ற அம்பிகை சாந்தப்படுத்த சிவபெருமான் அவள் தலையில் அமர்ந்ததாக கூறப்படுகிறது இதனால் இங்கு மூலவர் கோடி அம்மன் தனது தலையில் சிவபெருமானே தாங்கியபடி காட்சி தருகிறாள்
அம்பாள் சிவனை சுமப்பதன் அடையாளமாக இந்த கோயிலில் அம்மனுக்கு சிம்ம வாகனத்திற்கு பதிலாக சிவனுக்குரிய நந்தி வாகனம் அமையப் பெற்றுள்ளது இது ஒரு அபூர்வ அமைப்பாகும்
இக்கோயிலில் மூலவர் அம்மனாக இருந்தாலும் உற்சவராகளாக பச்சைக்காளி மற்றும் பவளக்காளி திகழ்கின்றனர்
அசுரனை அழிக்க சென்ற போது காளி தேவி முதலில் அமைதியாக பச்சை நிறத்திலும் பின்னர் கோபத்தின் உச்சத்தில்
பவள அதாவது சிகப்பு நிறத்திலும் உருவெடுத்ததை இது குறிக்கிறது
ஆண்டுதோறும் பங்குனி மாதத்தின் நடைபெறும் காளியாட்டத் திருவிழா தஞ்சையில் மிகவும் பிரபலம்
இந்த அம்மனை வழிபடுவதால் தீய சக்தி பாதிப்பு அல்லது செய்வினை கோளாறுகள் தடைகள் நிவர்த்தியாகும்
நீண்ட நாட்களாக குழந்தை இல்லாதோர் குழந்தை வரம் வேண்டி அம்மனை வழிபட குழந்தை பாக்கியம் ஏற்படும்
தஞ்சாவூர் சென்றால் பெரிய கோயில் மட்டும் தரிசிக்காமல் அசுரனை அழித்து காத்த இந்த தஞ்சபுரி கோடியமனையும் தரிசிக்க வேண்டும் #பக்தி





