
S.ANTHONY✝️YESUMARY
@anthonymundiyampakkam
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
before sleeping⭐*
Heavenly Father,
in the quiet sanctuary of my heart, Your whispers echo, stirring the dreams You've tenderly placed within me. I come before You with a spirit of gratitude, acknowledging that every aspiration is a divine seed You have sown. Lord, walk beside me as I traverse the path You've laid out, guiding my steps with Your unwavering presence.
May my life story, woven by Your grace, inspire authenticity and purpose that resonates with the melody of Your love. In moments of doubt, bolster my resolve with the assurance that You are the architect of the impossible. I seek to align my will with Yours, to be a vessel of Your extraordinary plans. In the sacred name of Jesus, my Savior and the author of my faith, I offer this prayer.
Amen. #✝️இயேசுவே ஜீவன் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள்
இரவு ஜெபம் †*_
_*எல்லாம் வல்ல இறைவா, என் களைப்பை நீக்கி எனக்குச் சக்தி அளிக்க இந்த இரவைத் தந்ததற்காக உமக்கு நன்றி கூறுகின்றேன். இன்றைய நாள் முழுவதும் நான் பெற்றுக் கொண்ட அனைத்து நன்மைகளுக்காகவும், உம்மைப் போற்றுகின்றேன். என் பாவங்கள் உம்முடைய அளவில்லாத மகிமைக்கும், நன்மைத் தனத்திற்கும் விரோதமாயிருப்பதால் இவைகளை மனம் நொந்து வெறுக்கின்றேன். என் பாவங்களையெல்லாம் மன்னிக்கும்படி உம்மைப் பணிந்து வேண்டுகின்றேன். இந்த இரவில் என்னைத் திடீர் மரணத்திலிருந்தும், தீய கனவுகள் மற்றும் அனைத்து சோதனைகளிலிருந்தும் விடுவித்தருளும்.*_
_*மூவொரு இறைவா, என்னை முற்றிலும் உமக்களிக்கின்றேன். குறிப்பாக என் மரண நேரத்தை உமக்கு ஒப்புக் கொடுக்கின்றேன். இப்போதும், எப்போதும் உம் அருள் பிரசன்னத்தால் என்னை நிரப்பியருளும். என் இறுதி நேரத்தில் உம்மைச் சந்திக்க மிக்க ஆவலுடன் எதிர்பார்த்திருந்து என் உயிர் பிரியவும், உம் நித்திய பேரின்பப் பாக்கியத்தில் என்னை ஏற்றுக் கொள்ளவும், கருணை புரிந்தருளும். என் ஆத்துமத்தையும், சரீரத்தையும் இன்றிரவு உம் அன்பின் கரங்களில் ஒப்புக் கொடுக்கின்றேன். எனக்கு நல்ல தூக்கத்தைத் தந்து என்னை ஆசீர்வதித்தருளும். என் நல்ல காவல் தூதரே! என் பக்க பலமாக இருந்து என்னைப் பாதுகாத்தருளும்.*_
_*மரியாயே எங்கள் நல்ல தாயாரே.. இந்த ராத்திரியிலே சகல பாவங்களிலும் சடுதி மரணத்தினின்றும் எங்களை தற்காத்துக் கொள்ளும்.*_
_*இயேசுவுக்கே புகழ்.! இயேசுவுக்கே நன்றி.! மரியே வாழ்க.!!*_
_*தந்தை,மகன்,தூய ஆவியாரின் பெயராலே...*_
_*ஆமென்.*_ #✝பைபிள் வசனங்கள் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன்
*மறைசாட்சி புனித தேவசகாயத்திடம் வேண்டும் ஜெபங்கள். மற்றும் 9மன்றாட்டுக்கள்.*
🌿⚜️🌿⚜️🌿⚜️🌿⚜️🌿⚜️🌿
⚜️🌺⚜️🌺⚜️🌺⚜️🌺⚜️🌺⚜️🌺
*1.மறைசாட்சி புனித தேவசகாயத்திடம் ஜெபம்*
⚜️🌺⚜️🌺⚜️🌺⚜️🌺⚜️🌺⚜️🌺
புனித தேவசகாயமே !
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
தமிழகத்தின் தென் கோடியில் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு... இயேசுவை அதிகமாக அறிவிக்கப்படாத காலத்தில், இயேசுவை அதிகமாக அறிந்து, அன்பு செய்து ,கிறிஸ்துவுக்காக வேதசாட்சியாக மரித்த புனித தேவசகாயமே...
நாங்கள் உம்மை போல் வேதசாட்சியாக மரிக்காவிட்டாலும் ,நல்ல கிறித்தவ வாழ்க்கை வாழ்ந்து மரிக்க எங்களுக்காக பரிந்து பேசும்.
கிறிஸ்துவ வாழ்க்கை வாழ எங்களுக்கு தடையாக இருக்கும் எங்கள் பாவங்களை மன்னித்து...
இயேசுவின் சொந்த பிள்ளைகளாக வாழ எங்களை ஆசீர்வதியும்...
*🙏🏻ஆமென்🙏🏻*
🌹(1பர 1அருள்..பிதா...)🌹
⚜️🙏🏻⚜️🙏🏻⚜️🙏🏻⚜️🙏🏻⚜️🙏🏻⚜️🙏🏻
*2.மறைசாட்சி புனித தேவசகாயம் செய்து வந்த செபம்*
⚜️🙏🏻⚜️🙏🏻⚜️🙏🏻⚜️🙏🏻⚜️🙏🏻⚜️🙏🏻
நித்திய நரகத்தில் விழும் திரளில் நின்று என்னைக் காத்திட திருவுளமான என் இயேசுவே!
மனிதரின் மீட்பிற்காய் கல்வாரி மலையில் சிலுவையில் இறந்த என் இயேசுவே!
உமது அன்பிரக்கத்திற்காக உமக்கு நன்றி கூறுகிறேன்.
வசந்த காலத்தில் தென்றல் காற்றில் அசைந்தாடும் மணமிகும் ரோஜா மலரைப்போன்று எனது இதயத்தைத் தூயதாக்கி, அதனை உம் தூய அடிகளில் அர்ப்பணிக்கின்றேன்.
தண்ணீர் பாய்ந்தோடும் நீர்மிகு நதியினைப்போல் என் வாய் மொழியால் உம்மை புகழ்வேன்.
எனது நன்றியறிதல் அணுவினைப்போல் மிகவும் சிறியதானதே.
திருக்கண்ணி மரியின் திருக்கரங்களால் சீராட்டப்பெறும் பாலனான இயேசுவே!
உமது புன்னகையால் என் பாவங்களனைத்தையும் அகற்றிடும்.
நான் உடலிலும் மனதிலும் ஆவியிலும் இப்பொழுது துயருறுகிறேன்.
சாவின் கொடூரப்பிடியிலும் உம்மைப் பின் செல்வதற்கான அருளைத் தாரும் ஆண்டவரே!
– *🙏🏻ஆமென்🙏🏻*
👑🌹👑🌹👑🌹👑🌹👑🌹👑🌹
*3.மறைசாட்சி புனித தேவசகாயத்தை நோக்கி நவநாள் செபம்*
👑🌹👑🌹👑🌹👑🌹👑🌹👑🌹
உம்மைத் தேடிவந்து வாடிநிற்கும் மக்களை தயவாய்க் கரம் பிடித்து காக்கும் புனித தேவசகாயமே! அதிகமானத் துன்பங்களையும் மனதுயரங்களையும் ஏற்று மக்களின் குறைதீர்க்கும் வரம் பெற்ற வள்ளலே! உமக்கு நாங்கள் நன்றி செலுத்துகிறோம். இறைவன் உமக்கு மறைசாட்சி புனிதர் என புனித மகுடம் கொடுத்து அலங்கரித்ததற்காக அவருக்கு நன்றியுடன் கூடிய புகழ் செய்கிறோம். அதிசயங்களின் ஆலயமே! உம்பாதம் பட்டவுடன் பட்ட மரங்களெல்லாம் புதுப்பொலிவுடன் துளிர் விட்டதுவே! பாறையும் நீர் ஊற்றியதுவே! உம் வல்லமை மிகுந்த செபத்தால் எமக்கு வேண்டிய வரத்தை நீர் பெற்றுத்தருவீர் என்று எமக்குத் தெரியும். உமக்கும் வாழ்வின் வழியுமாயிருக்கிற எம் இறைவனுக்கும் சித்தமானால்....
(வேண்டியதை உறுதியோடு கேட்கவும்) .....
இந்த வேண்டுதல்கள் நிறைவேற வேண்டுமென்று கெஞ்சி மன்றாடுகிறோம்.
- 3 பர அருள் பிதா
*⚜️செபிப்போமாக!⚜️*
எல்லாம் வல்ல இறைவா! உம் ஊழியர் புனித தேவசகாயத்தின் மனமாற்றத்தாலும், உறுதிகலந்த போதனையாலும், அழியா அற்புதங்களினாலும் பல தரப்பு மக்கள் உம் திருமகன் இயேசு நிறுவிய திருச்சபைக்கு வர சித்தமானீரே! அவருடைய பாதையைப் பின்பற்றி உறுதியான விசுவாசத்துடனும், உமது பிள்ளைகளாய் உம்மை எதிரொலிக்கும் ஊடகமாக நாங்கள் இருக்க அருள் புரிந்தருளும். இந்த மன்றாட்டுக்களை எல்லாம் இயேசுநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும் சுவாமி - ஆமென்.
முதல் : இயேசுகிறிஸ்து திருவாக்குத்தத்தங்களுக்கு நாதருடைய நாங்கள் தகுதியுள்ளவர்களாகும் படிக்கு...
துணை : கரம் பிடித்து காக்கும் மறைசாட்சி புனித தேவசகாயமே..
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!
*🙏🏻ஆமேன்.🙏🏻*
🌹⚜️🌹⚜️🌹⚜️🌹⚜️🌹⚜️🌹⚜️
*4.மறைசாட்சி புனித தேவசகாயம் வழியாக கேட்கும் ஒன்பது மன்றாட்டுகள்*
🌹⚜️🌹⚜️🌹⚜️🌹⚜️🌹⚜️🌹⚜️
1. நல் ஞானம் பெற்று இளவயதில் நல்லதை தேர்ந்து தெளிந்து கிறிஸ்தவ மதம்மாறி "கிறிஸ்தவர் களுக்காகவும் கிறிஸ்தவ மறைக்காகவும் தான் துன்பப்பட தயார்" என அரசவை பணியை விட்டு மறைசாட்சிகளின் பாதையைத் தேர்ந்த மறைசாட்சி புனித தேவசகாயமே! உலகத் திருச்சபையையும், நாட்டை வழிநடத்தி வரும் தலைவர்களையும், பொது நிலையினர்களையும் இறைவன் இதயத்தில் வைத்துக் காத்து பராமரித்து பாதுகாத்து வழிநடத்திட நீர் மன்றாட வேண்டுமென்று உம்மைப்பார்த்து வேண்டுகிறோம்.
*- ஒரு பர.அரு. பிதா..*
2. அஞ்சா நெஞ்சத்துடனும், உறுதியான விசுவாசத்துடனும் குற்றவாளியாக்கிய அரசர் முன்னிலையிலும், கொடுமைப்படுத்திய விசாரணை அதிகாரிகள் மற்றும் வேடிக்கை பார்க்க வந்த மக்கள் முன்னிலையிலும் வேதத்தைப் போதித்து பலரும் மறையைத் தழுவக் காரணமான மறைசாட்சி புனித தேவசகாயமே! துன்ப சோதனைகளிலும், வருத்தங்களிலும் நாங்கள் உறுதியாய் இருந்து உண்மைக் கடவுளுடன் ஒன்றித்து, திருச்சபையின் உண்மை மக்களாக வாழ, நீரே இறைவனை மன்றாடும்படி உம்மைப் பார்த்து வேண்டுகிறோம்.
*- ஒரு பர. அரு. பிதா..*
3. நீர் துன்பத்திலிருந்த போதும், நோயினால் வேதனைப்பட்ட போதும், சிறையில் தனிமைப் படுத்தப்பட்டபோதும் தியானித்து, தமக்காக வேண்டுமாறு கேட்ட மக்களுக்குப் போதித்து, அவர்களின் பிணி அகற்றி, துன்பம் துடைத்து, அருள்வரம் பொழிந்த மறைசாட்சி புனித தேவசகாயமே! நோய் நொடியினால் அல்லல்பட்டு, அமைதியிழந்து அலையும் எங்களுக்காக இறைவனிடம் மன்றாடி அமைதி மனத்தையும், அர்ப்பண வாழ்வையும் பெற்றுத் தர உம்மைப் பார்த்து வேண்டுகிறோம்.
*- ஒரு பர.அரு. பிதா..*
4. பெற்ற நம்பிக்கையை மறுதலிக்க ஓயாமல் நச்சரித்த போதும், அதிகப்படியான தண்டனைகளையும் அனுதினம் அனுபவித்த போதும், பாடுகளினால் இரத்தம் பாய்ந்தோடிய போதும், உம் வாழ்வில் துணைபுரிந்தவர்களுக்காகவும், அரசருக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் செபித்து பிறரன்புப் பாதைக்குப் படிக்கல்லான பாத்திரமே! மறைசாட்சி புனித தேவசகாயமே! எங்களை துன்புறுத்துவோரையும், எங்களுக்கு எதிராக தீங்கு செய்வோரையும் நாங்கள் மன்னித்து, நாங்களும் பிறருக்கு எதிராக எந்தவித தீங்கும் செய்யாமல் தூய்மையான வாழ்வு வாழ எங்களுக்காக ஆண்டவரிடம் மன்றாட உம்மைப்பார்த்து வேண்டுகிறோம்.
*- ஒரு பர. அரு. பிதா..*
5. கொடிய நடைபயணத்திலும், எருமை ஊர்வலத்திலும், துன்பங்களை புன்முறுவலுடன் ஏற்று "இயேசுவே துணையாக வாரும்" என வேண்டி, தீயசக்திகளை அடக்கி ஒடுக்கிய, பாசமிகு மரிஅன்னையின் பரிவன்பினை நாடி, வேண்டிய மறைசாட்சி புனித தேவசகாயமே! உம்மைப் போல் நாங்களும் விசுவாசத்தில் உறுதியாய் இருந்து, நாளும் செபமாலை செபித்து, தீயதை அழித்து, துணையாக இறைவனை வேண்டி துதிக்கவும், அதன் மூலம் எங்கள் உள்ளம் தூய்மை பெறவும், எங்களுக்காக இறைவனிடம் வேண்டுமாறு உம்மைப் பார்த்து வேண்டுகிறோம்.
*- ஒரு பர. அரு. பிதா..*
6. நீர் கிறிஸ்தவராக வாழ்ந்த காலத்தில், கிறிஸ்தவ மக்கள் மீது நீர் வைத்திருந்த அன்பை நினைத்தருளும். கைகளும் கால்களும் சங்கிலியால் கட்டப்பட்டு கஷ்டங்கள் அனுபவித்த நிலையிலும் மக்களுக்காகப் பரிந்து பேசி, அவர்களுக்காகக் கவலைப்பட்டு, வேண்டும் போது வேண்டிய புதுமைகளையும், நல்ல வாழ்க்கை நிலையையும் வழங்கிய வள்ளலே! மறைசாட்சி புனித தேவசகாயமே! சகாயம்தேடி, உம்மை நோக்கி அழும் எங்கள் இதயங்களைச் சுத்தமாக்கி இறைவனுக்கு உகந்ததாக்க உதவியருளும். உமக்கும், உமக்குவரம் தந்து வழிநடத்திய நம் இறைவனுக்கும் பிரமாணிக்கமுள்ள பிள்ளைகளாக வாழ வேண்டிய வரத்தை இறைவனிடமிருந்து பெற்று தந்தருள வேண்டுமென்று உம்மைப் பார்த்து வேண்டுகிறோம்.
*- ஒரு பர. அரு. பிதா..*
7. பாறையில் செபித்து தண்ணீர் வரச் செய்து, பாவிகளை மனந்திருப்பி, தூற்றியவரும் போற்றும்படி செய்து, கைமுட்டையும், கால்முட்டையும் காற்றாடிமலை பாறையில் சின்னமாகப்பதியச் செய்த மறைசாட்சி புனித தேவசகாயமே! இறைவனை இறுகப் பற்றிக்கொண்டு, எண்ணத்திலும் செயலிலும் உம்மைப் போல் பிறருக்கு மறையை போதித்து, இறைமதிப்பீடுகளின் விதையை விதைக்க வேண்டிய வரத்தை இறைவனிடமிருந்து எங்களுக்குப் பெற்றுத்தர வேண்டுமென்று உம்மைப் பார்த்து வேண்டுகிறோம்.
*-ஒரு பர. அரு. பிதா..*
8. கடின ஒறுத்தல் முயற்சிகளிலும், கலையாத தவத்தாலும் நிலைத்து நின்று, வேதசாட்சிகளின் வாழ்வைத் தெரிந்து கொண்டு ஊக்கம் பெற்ற மறைசாட்சி புனித தேவசகாயமே! புனிதர்களின் வாழ்வையும், அவர்களின் போதனைகளையும் நாங்கள் ஏற்று, மறைசாட்சிகளின் விசுவாச வாழ்வை மனதில் பதித்து, குடும்ப செபத்திலும், இறை உறவிலும் நிலைத்துநின்று பிறருக்கு முன் மாதிரியான உண்மையான கிறிஸ்தவ வாழ்வு வாழ வேண்டிய வரத்தை இறைவனிடமிருந்து பெற்று தர வேண்டுமென்று உம்மை வேண்டுகிறோம்.
*- ஒரு பர. அரு. பிதா..*
9. காற்றாடிமலையில் 5 குண்டுகளால் துளைக்கப்பட்டு, உயிர்பிரிந்து, விண்ணக அரியணையில், இறை அருளால் மறைசாட்சி மகுடம் பெற்று, கோட்டாறு தூய சவேரியார் பேராலயத்தின் பீடத்தின் முன்பு அடக்கம் செய்யப்பட்டு, ஆயரால் தெதேயும் பாடி மகிமைப் படுத்தப்பட்ட மறைசாட்சி புனித தேவசகாயமே! எங்கள் மரண நேரத்தில் எங்கள் ஆன்மாவைத் தூய்மையாக்கி, அழியா பேரின்பத்தில் உம்முடன் சேர்ந்து நாங்களும் இறைவனின் விண்ணக வீட்டில் அவர் புகழ்பாட வரம் வேண்டி எங்களுக்காக இறைவனிடம் மன்றாட வேண்டுமென்று உம்மைப்பார்த்து வேண்டுகிறோம்.
*- ஒரு பர. அரு. பிதா*
இயேசு கிறிஸ்துவின் திருவாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் தகுதியுள்ளவர்களாகும்படிக்கு, கரம்பிடித்துக் காக்கும் மறைசாட்சி புனித தேவசகாயமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
*🌹🙏🏻செபிப்போமாக🙏🏻🌹*
⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️
துன்பங்கள் பலவற்றை ஏற்று, வேதனைகளை அனுபவித்து இயேசுவின் பாடுகளோடு இணைந்தவரே! நற்கருணை நாதரைப் பற்றிக் கொண்டு செபமாலையின் சக்தியால் சாத்தானை அடக்கியவரே! மன்றாட்டின் பயனாய் இறையருளை நிரம்பச் பெற்றவரே! சாவினை முன்னேற்பாடாகத் தெரிந்து கொண்டு சாந்தகுணம் நிறைந்தவராய் நறுமணம் பரப்பியவரே! எங்கள் மன்றாட்டுகளில் உமது வல்லமையுள்ள பரிந்துரையைச் சேர்த்து எங்களுக்கு உதவி செய்ய விரைந்து வாரும். நாங்கள் வாழும் இடங்களில் நற்செய்தியை அறிவிக்க எங்களுக்கு உதவுபவர் நீரே! உலகமெங்கும் இறைவார்த்தை பரவ உதவி செய்தருளும் படி எங்களுக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்ளும்.
*🙏🏻ஆமென்.🙏🏻*
🌹⚜️🌹⚜️🌹⚜️🌹⚜️🌹⚜️🌹⚜️
#✝️இயேசுவே ஜீவன் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள்
*சேசு சுவாமியின் ஐந்து திருக்காய ஜெபமாலை:*
⚜️🌹⚜️🌹⚜️🌹⚜️🌹⚜️🌹⚜️
"என்னிடம் வாருங்கள்" (மத்: 11/28)
*🙏🏻தொடக்க செபம்:🙏🏻*
புனித அருட்சாதனமே! தெய்வீகத் தேவ அருட்சாதனமே! எல்லோருடைய புகழும், நன்றியறிதலும் எக்காலமும் உமக்கே உரியனவாகுக.
வாருங்கள் நம் நற்கருணை நாதரைப் புகழ்வோம். முடிவில்லா மகிமையுடைய மன்னரைப் புகழ்வோம்.
வாருங்கள்; ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள். நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்; புகழ்ப்பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம். வாருங்கள் நம் நற்கருணை நாதரைப் புகழ்வோம், முடிவில்லா மகிமையுடைய மன்னரைப் புகழ்வோம்.
ஆண்டவர் மாண்புமிகு இறைவன்! தெய்வங்கள் அனைத்திற்கும் மேலான பேரரசர்! பூவுலகின் ஆழ்பகுதிகள் அவர்தம் கையில் உள்ளன, மலைகளின் கொடுமுடிகளும் அவருக்கே உரியன. வாருங்கள், நம் நற்கருணை நாதரைப் புகழ்வோம், முடிவில்லா மகிமையுடைய மன்னரைப் புகழ்வோம்.
கடலும் அவருடையதே! அவரே படைத்தார்; உலர்ந்த தரையையும் அவருடைய கைகளே உருவாக்கின. வாருங்கள்; தாழ்பணிந்து அவரைத் தொழுவோம்; நம்மை உருவாக்கிய ஆண்டவர் முன் முழந்தாளிடுவோம். அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்; நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள். வாருங்கள் நம் நற்கருணை நாதரைப் புகழ்வோம், முடிவில்லா மகிமையுடைய மன்னரைப் புகழ்வோம்.
புனித அருட்சாதனமே, தெய்வீக தேவ அருட்சாதனமே! எல்லோருடைய புகழும் நன்றியறிதலும் எக்காலமும் உமக்கே உரியனவாகுக.
*⚜️விசுவாச முயற்சி:⚜️*
இறைவா! நீர் இந்தப் பீடத்தில் உண்மையாகவே வீற்றிருக்கிறீர் என்று விசுவாசிக்கிறோம். உம் திரு முன்னிலையில் எங்களைத் தரை மட்டும் தாழ்த்தி, மனம் மொழி மெய்யால் மரியாதை செலுத்துகிறோம். மனமே, இயேசுவின் அருகில் இருப்பதும், அவரோடு உள்ளம் திறந்து பேசுவதும், நமக்கு எத்துணை ஆறுதல்.
ஆண்டவரே! இம்மையில் உம்மை ஆராதிக்கும் நாங்கள், மறுமையிலும் இன்னும் சிறந்த முறையில் உம்மை ஆராதிக்க அருள் தாரும். ஆமென்.
*💞அன்பு முயற்சி:💞*
அன்பு நிறை இயேசுவே! உமது அன்புக்கு எல்லைதான் உண்டோ? உமது உடலாலும் இரத்தத்தாலும் எமக்கு ஒரு தெய்வீக விருந்தினை தயார் செய்துள்ளீர். அதில் உம்மை முழுவதும் எமக்கு கொடுக்கின்றீர். இந்த அன்பின் உச்ச நிலைக்கு உம்மை தூண்டியது உமது இதயமன்றோ! அன்பொழுகும் இதயமன்றோ?
ஆராதனைக்குரிய இயேசுவின் திரு இருதயமே, தேவ அன்பின் சூளையே! உமது திருக்காயத்தினுள் என்னை ஏற்றுக்கொள்ளும். அன்பு புகட்டப்படும் அப்பள்ளியில், அளவிறந்த அன்பினை வியத்தகு முறையில் காட்டும் ஆண்டவருக்கு நான் காட்ட வேண்டிய அன்பின் கடமையை உணர்வேனாக.
*🙏🏻ஆமென்🙏🏻*
*✝️திருக்காய ஆராதனை✝️*
*🩸†இடக்கால் காயம்† :🩸*
இயேசுவே! இந்தத் திருவருட்சாதனத்தில் இருக்கும் உம் முன் நான் தாழ்ந்து ஆராதிக்கின்றேன். நீர் உண்மையாகவே கடவுள், உண்மையாகவே மனிதன் என்று ஏற்றுக் கொள்கிறேன்.
தேவரீர் எம் ஆலயங்களில் இடைவிடாமல் வீற்றிருக்கின்றீர். உம்மை முழுவதும் எமக்களிக்க அன்போடு ஏங்குகின்றீர். எனினும், உமது ஆலயத்தை அடுத்துசெல்லும் எத்தனை பேர், ஏன் உமதுபீடத்தின் அருகில் வரும் எத்தனை பேர், உமக்கு உகந்த மரியாதை செலுத்தத் தவறுகின்றனர். பழங்காலத்தில் இஸ்ராயேல் மக்கள் பாலைவனத்தில் செய்தது போல, இன்றும் எத்தனை பேர் நற்கருணை என்னும் உயிருள்ள மன்னா மீது பற்றுக் கொள்ளாமல் அதை புறக்கணிக்கிறார்கள்.
இவர்களுடைய பாவங்களுக்கு பரிகாரமாக என் அற்ப ஆராதனையைக் கொடுக்கிறேன். இவர்களுடைய கல்மன செயலுக்குப் பரிகாரமாக, உமது இடக்கால் காயத்திலிருந்து வழிந்த இரத்தத்தை உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன். அக்காயத்தில் நான் தங்கி, எங்கும் கேட்குமாறு இறைந்து, இடைவிடாது கூறுவேன்.
புனித அருட்சாதனமே, தெய்வீகத் தேவ அருட்சாதனமே! எல்லோருடைய புகழும், நன்றியறிதலும் எக்காலமும் உமக்கே உரியனவாகுக.
ஆமென்.
1- பரலோகத்தில், 10 -அருள்நிறைந்த,
ஓ என் இயேசுவே, திரித்துவ ஆராதனை
*🩸†வலக்கால் காயம்† :🩸*
இயேசுவே! உம் திருமுன் நான் தாழ்ந்து ஆராதிக்கிறேன், இந்தப் பீடத்தில் நீர் வீற்றிருக்கின்றீர் என்று ஏற்றுக் கொள்கிறேன். நோயுற்றவர்களுக்கு குணம் அளிக்க விண்ணக வீட்டுக்கு விரைந்து செல்வோருக்கு துணை நிற்க தேவரீர் எம் தெருக்களில் செல்லும் போது, எத்தனையோ மக்கள் உம்முடன் வர மறுக்கின்றனர். உமக்கு மரியாதை காட்ட மறக்கின்றனர். இவர்கள் செயலுக்கு பரிகாரம் செய்ய விழைகின்றேன். மரியாதையற்ற இவர்கள் நடத்தைக்குப் பரிகாரமாக உமது வலக்கால் காயத்திலிருந்து வழிந்த இரத்தத்தை உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன். அக்காயத்தில் நான் தங்கி, எங்கும் கேட்குமாறு இறைந்து, இடைவிடாது கூறுவேன்.
புனித அருட்சாதனமே, தெய்வீகத் தேவ அருட்சாதனமே! எல்லோருடைய புகழும், நன்றியறிதலும் எக்காலமும் உமக்கே உரியனவாகுக.
ஆமென்.
1- பரலோகத்தில், 10 -அருள்நிறைந்த,
ஓ என் இயேசுவே, திரித்துவ ஆராதனை
*இடக்கை காயம்:*
இயேசுவே! நித்திய வாழ்வுதரும் உணவே, உம் திருமுன் நான் தாழ்ந்து ஆராதிக்கிறேன். கோயில்களில் அப்ப இரசத் தோற்றத்தில் நீர் அமைந்திருந்து உம் மக்களின் ஆராதனை அன்பு பெற ஆவலோடு காத்திருக்கின்றீர். ஆனால் எத்தனையோ கோயில்களில் மக்கள் அன்பின்றி அச்சமின்றி நடந்து கொள்கின்றனர். இதற்கெல்லாம் பரிகாரமாக என் ஆராதனையை ஒப்புக் கொடுக்கிறேன். இவர்களுடைய மரியாதையற்ற செயலுக்குப் பரிகாரமாக உமது இடக்கை
காயத்திலிருந்து வழிந்த இரத்தத்தை உமக்கு ஒப்புக் கொடுக்கிறேன். அக்காயத்தில் நான் தங்கி, எங்கும் கேட்குமாறு இறைந்து, இடைவிடாது கூறுவேன்.
புனித அருட்சாதனமே, தெய்வீகத் தேவ அருட்சாதனமே! எல்லோருடைய புகழும், நன்றியறிதலும் எக்காலமும் உமக்கே உரியனவாகுக.
ஆமென்.
1- பரலோகத்தில், 10 -அருள்நிறைந்த,
ஓ என் இயேசுவே, திரித்துவ ஆராதனை
*🩸†வலக்கை காயம்†:🩸*
இயேசுவே! விண்ணின்று வந்த வாழ்வு தரும் உணவே, உம் திருமுன் நான் தாழ்ந்து ஆராதிக்கிறேன். எம் ஈடேற்றத்திற்காக நீர் கல்வாரி மலையில் நிறைவேற்றிய அதே பலியை பீடங்களில் இரத்தம் சிந்தா முறையில் புதுப்பிக்கின்றீர். ஆனால் அந்தப் பலியின்போது எத்தனையோ மக்கள் மரியாதை குறைவாக நடந்து கொள்கின்றனர். இதற்குப் பரிகாரம் செய்ய விரும்புகின்றேன். மக்கள் நற்கருணைப் பலியில் நடந்து கொள்ளும் நன்றி மறந்த நடத்தைக்குப் பரிகாரமாக, நீர் உம் வலக்கை காயத்திலிருந்து சிந்திய இரத்தத்தை உமக்கு ஒப்புக் கொடுக்கிறேன். அக்காயத்தில் நான் தங்கி, எங்கும் கேட்குமாறு இறைந்து, இடைவிடாது கூறுவேன்.
புனித அருட்சாதனமே, தெய்வீகத் தேவ அருட்சாதனமே! எல்லோருடைய புகழும், நன்றியறிதலும் எக்காலமும் உமக்கே உரியனவாகுக.
ஆமென்.
1- பரலோகத்தில், 10 -அருள்நிறைந்த,
ஓ என் இயேசுவே, திரித்துவ ஆராதனை
*🩸†திருவிலாக்காயம்† :🩸*
இயேசுவே! பாவங்களுக்குப் பரிகாரம் செலுத்தும் பலிப்பொருளே. உம திருமுன் தாழ்ந்து ஆராதிக்கிறேன். எத்தனையோ பேர் சாவான பாவத்தோடு உம்மை அணுகி நற்கருணை வாங்குகின்றனர். இந்த நன்றிகெட்ட மக்களின் தேவ துரோகத்திற்காக பரிகாரம் செலுத்த விரும்புகிறேன். இவர்களுடைய வெறுக்கத்தக்க தேவ துரோகங்களுக்குப் பரிகாரமாக, உமது திருவிலாக் காயத்தில் நீர் சிந்திய இரத்தத்தை உமக்கு ஒப்புக் கொடுக்கிறேன்.
ஆராதனை, அன்பு, நன்றியறிதல் உணர்வோடு நான் அக்காயத்தில் நுழைந்து நற்கருணைப் பக்தி மிகுந்த உத்தரிக்கும் நிலையில் உள்ள ஆன்மாக்களோடு சேர்ந்து உரத்த குரலில் கூறுகிறேன்.
புனித அருட்சாதனமே, தெய்வீகத் தேவ அருட்சாதனமே! எல்லோருடைய புகழும், நன்றியறிதலும் எக்காலமும் உமக்கே உரியனவாகுக.
1- பரலோகத்தில், 10 -அருள்நிறைந்த,
ஓ என் இயேசுவே, திரித்துவ ஆராதனை
*🙏🏻செபிப்போமாக:🙏🏻*
⚜️🌹⚜️🌹⚜️🌹⚜️🌹⚜️
பீடத்தில் வீற்றிருக்கும் அன்பார்ந்த இயேசுவே! உமக்கு என்றென்றும் நன்றி கூறிப் புகழ் செலுத்துகிறோம். விண்ணிலும் மண்ணிலும் எல்லோருடைய அன்புக்கும் உகந்த பேரன்பே, நன்றிகெட்டப் பாவியான என் மீது நீர் வைத்த அளவற்ற அன்பினால் மனித இயல்பை எடுத்தீர், கொடிய கசையடிகளால் விலையுயர்ந்த இரத்தத்தை சிந்தினீர், எங்களது நித்திய நன்மைக்காக அவமான சிலுவையில் உயிர் துறந்தீர். இப்பொழுது வாழ்வில் விளங்கும் விசுவாசம் எனக்கு வழிகாட்ட என் உள்ளத்தின் அன்பு ஆர்வமெல்லாம் உம் அடியில் அள்ளி வைத்து நான் தாழ்ச்சியுடன் இந்த 53 ஜெபமாலையுடன் உமது சமூகத்தில் அன்னை மாமரியாயின் மாசற்ற திரு இருதயத்தின் வழியாக வேண்டுகிறேன். வேதனை நிறைந்த உம் பாடுகளின் அளவற்ற பேருபலன்களை முன்னிட்டு எனக்கு மன உறுதியும் ஊக்கமும் தந்தருளும். என் இதயத்தில் ஆதிக்கம் செலுத்தும் தீய இச்சை ஒவ்வொன்றையும் கொன்று வீழ்த்த, மாபெரும் துன்பத்திலும், உம்மை புகழ என் கடமைகளை எல்லாம் சரியாக நிறைவேற்றி உம்மை மகிமைப்படுத்த, முக்கியமாக எல்லாப் பாவத்தையும் வெறுத்து, அவ்வழியாய் ஒரு புனிதனாக வாழ எனக்கு மன உறுதியும் ஊக்கமும் தந்தருளும்.
*† இயேசுவின் மதுரமான திரு இதயமே! எங்கள் மீது இரக்கமாயிரும். (3) †*
*🙏🏻மன்றாட்டு🙏🏻*
⚜️🌹⚜️🌹⚜️🌹⚜️
அன்புக்குரிய மீட்பரே! உம்மை ஆராதித்தோம், உமக்கு நன்றி கூறினோம், பாவங்களுக்குப் பரிகாரம் செய்ய முயன்றோம், இப்பொழுது ஏழைகளாகிய எமக்கும், எம்மை சேர்ந்தோருக்கும் வேண்டிய உதவிகளைத் தாழ்மையோடு கேட்க விரும்புகிறோம்.
இயேசுவே! முடிவில்லா நன்மை சுரக்கும் ஊற்றே! உமது உலக வாழ்வில், துன்புற்றோருக்கு ஆறுதல் அளித்தீர், நோயாளிகளுக்கு நலம் அருளினீர், தளர்ச்சி அடைந்தோருக்கு ஊக்கம் தந்தீர், உம் திருமுன் இருக்கும் என்னை ஆசீர்வதித்துப் புனிதப்படுத்தியருளும். என் நினைவை, அறிவை, மனதை, உடலை, உள்ளத்தை ஆசீர்வதியும். என்னுடைய கருத்துக்கள் நிறைவேறும்படி ஆசீர்வதித்தருளும்.
*🙏🏻(நமது தனிப்பட்ட கருத்துகளுக்காக வேண்டுதல் செய்வோம்)🙏🏻*
இனிய மீட்பரே! இங்கு வந்து உம்மை ஆராதிக்க இயலாத அனைவரையும் ஆசீர்வதியும். எங்கள் இல்லங்களை, முதியோரை, பெற்றோரை, இளைஞரை, சிறுவர்களை, உற்றார், நண்பர்களை ஆசீர்வதியும். அனைவரையும் அணைக்கும் மீட்பரே, எம் பங்கில் உள்ள அனைவரையும் சிறப்பாக ஏழைகளை, தாழ்வுற்றவரை, நோயாளிகளை, துன்புற்றோரை, ஆசீர்வதியும்.
நித்திய குருவே உமக்குத் துணை செய்யும் குருக்களை தேர்ந்தெடுத்து பயிற்சி அளிப்பதில் தனி அக்கறை காட்டினீர். உலகில் உமக்காக உழைக்கும் குருக்கள் அனைவரையும் ஆசீர்வதித்து புனிதப்படுத்தியருளும்.
*🙏🏻ஆமென்🙏🏻*
🌺✨🌺✨🌺✨🌺✨🌺✨🌺
#✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச்
*உத்தரிக்கும் ஆன்மாக்களுக்கான ஜெபம்..!!*
⚜️🌺⚜️🌺⚜️🌺⚜️🌺⚜️🌺⚜️🌺
பலர் இந்த ஜெப பக்தி முயற்சியை அறிந்து இருக்கலாம். அறியாது இருப்பவர்களுக்கு இந்த பதிவு.
உத்தரிக்கும் ஆன்மாக்களுக்காக நாம் ஜெபிப்பது நம் இறைவனாம் ஆண்டவருக்கு மிக பிடித்தமான ஒன்று.
நாம் உத்தரிக்கும் ஆன்மாக்களுக்காக ஜெபிக்கும் பொழுது நம் ஜெபத்தின் பலனாக விண்ணகம் செல்லும் ஆன்மாக்கள் நமக்காக இறைவனிடம் பரிந்து பேசுவார்கள் என்று நாம் அறிவோம்.
உத்தரிக்கும் ஆன்மாக்களுக்காக ஜெபிக்க சிறந்த நேரம் பகல் 3.00 மணி. இந்த பகல் 3.00 மணி மாபெரும் இரக்கத்தின் நேரம், இந்த நேரத்தில் நாம் உத்தரிக்கும் ஆன்மாக்களுக்காக ஜெபிக்கும் போது நம் ஜெபத்திற்கு சிறப்பான பலன் கண்டிப்பாக உண்டு என்று *"புனித பாஸ்டினா அம்மாளுக்கு"* நமது இரக்கத்தின் ஆண்டவர் கூறி உள்ளார்.
(கீழ் கண்ட ஜெபத்தை, நாம் ஒவ்வெரு முறை ஜெபிக்கும் போதும் உத்தரிக்கும் நிலையில் உள்ள 1000 ஆன்மாக்கள் விண்ணகம் செல்லும் என்று நமது ஆண்டவர்
*"புனித ஜெர்த்ரூத் அம்மாளுக்கு"*
வெளிப்படுத்தி உள்ளார்.)
*🙏🏻ஜெபம்..!!🙏🏻*
⚜️⚜️⚜️⚜️⚜️⚜️
*"என்றும் வாழும் தந்தாய்! உமது தெய்வ மகனாகிய இயேசுவின் விலைமதிப்பற்ற திரு இரத்தத்தை இன்று உலகெங்கிலும் செலுத்தப்படும் திருப்பலிகளோடு ஒன்றித்து உத்தரிக்கும் ஆன்மாக்கள் அனைவருக்காகவும், உலகெங்குமுள்ள பாவிகளுக்காகவும், அகில திருச்சபையிலுள்ள பாவிகளுக்காகவும், எனது இல்லத்திலும் குடும்பத்திலுமுள்ள பாவிகளுக்காகவும் உமக்கு அர்பணிக்கிறேன்."*
3.00 மணிக்கு ஜெபிக்க தவறினால், நமக்கு நேரம் கிடைக்கும் போது இந்த ஜெபத்தை ஜெபிக்கலாம் பலன் உண்டு.
*நாம் இந்த சிறு ஜெபத்தை ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் ஜெபிக்கலாம். இந்த ஜெப பக்தி முயற்சியை பற்றி அறியாத கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு நாம் இந்த ஜெபபக்தி முயற்சியை பற்றி தெரியப்படுத்தலாம்.*
நன்றி.🙏
⚜️🩸⚜️🩸⚜️🩸⚜️🩸⚜️🩸⚜️
*சகல ஆத்துமாக்களுக்காக வேண்டிக்கொள்ளும் செபம்*
⚜️🩸⚜️🩸⚜️🩸⚜️🩸⚜️🩸⚜️
ஆண்டவரே அளவில்லா வேதனையில் உம்மை நோக்கி கூவிஅழைக்கின்றேன்.
ஆண்டவரே என் கூக்குரலுக்கு செவிசாய்த்தருளும். என் வேண்டுதலின் குரலை உம் செவிகள் கவனமுடன் கேட்கட்டும்.
ஆண்டவரே! யான் செய்த பாவங்களை நினைவுகூர்வீராகில் உமக்கு முன் யார் நிற்க முடியும்?
வணக்கமுடன் நாங்கள் உமக்கு ஊழியம் செய்யுமாறு, நீர் பாவங்களை மன்னிக்கின்றிர்.
ஆண்டவர் மீது நம்பிக்கை வைக்கிறேன்; அவரது வாக்குறுதியில் என் ஆன்மா நம்பிக்கை கொண்டுள்ளது.
என் ஆன்மா ஆண்டவரை எதிர்நோக்குகின்றது; இரவின் காவலர் உதயத்தை எதிர் நோக்குவதைவிட, அதிக ஆர்வமுடன் எதிர்நோக்குகிறது.
காவலர் உதயத்தை எதிர்பார்ப்பதற்கு மேலாக, இஸ்ராயலர் ஆண்டவரை எதிர் பார்ப்பார்களாக்
ஏனனில் ஆண்டவரிடம் இரக்கம் உள்ளது; அவருடைய மீட்புத் துனை பொங்கி வழிகின்றது.
இஸ்ராயேலரை அவர் மீட்பார்; அவர்கள் செய்த பாவங்களை; அனைத்தினின்றும் அவர்களை மீட்டுக்கொள்வார்.
*🌹முதல்:* நித்திய இளைப்பாற்றியை அவர்களுக்கு அளித்தருளும் ஆண்டவரே.
*🌻துணை:* முடிவில்லாத ஒளி அவர்கள் மீது ஒளிர்வதாக.
*🙏🏻செபிப்போமாக:🙏🏻*
⚜️🌹⚜️🌹⚜️🌹⚜️🌹⚜️
சகல விசுவாசிகளுடைய சிருஷ்டிகரும் இரட்சகருமாகிய சர்வேசுரா! மரித்த உமது அடியோகளுக்காகச் செய்யப்படுகிற பக்தியுள்ள மன்றாடுக்களை அங்கரித்து, அவர்கள் மிகுந்த ஆவலோடு விரும்பிக் காத்திருக்கிற பாவப் பொறுத்தலை கிருபை செய்தருள வேண்டுமென்று மன்றாடுகிறோம். இந்த மன்றாட்டுக்ளையெல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசு நாதருடைய திரு முகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும்
-ஆமென்.🙏🏻
*🌹முதல்:* நித்திய இளைப்பாற்றியை அவர்களுக்குத் அளித்தருளும் ஆண்டவரே.
*🌻துணை:* முடிவில்லாத ஒளி அவர்கள் மீது ஒளிர்வதாக.
*🌹முதல்:* அவர்கள் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவார்களாக.
*🌻துணை:* ஆமென்.
🌸🕊️🌸🕊️🌸🕊️🌸🕊️🌸🕊️🌸
#⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள்
தொன் போஸ்கோ நவநாள் செபம்*
*ஆறாம் நாள்*
*மாற்றம் தந்தவர் தொன் போஸ்கோ:*
பாடல்:
இளைஞரின் தந்தை போஸ்கோவே...
*முன்னுரை:*
மாற்றமில்லாத வாழ்வு அர்த்தமற்றது. நம் வாழ்வை பிறர்மதிக்க வேண்டுமெனில் மாற்றம் என்ற கருவியை நம் கரங்களில் ஏந்துவோம். நம் மாற்றம் பிறரின் உருமாற்றமாக அமைய வேண்டும். தொன் போஸ்கோவின் மாதத்தில் இருக்கின்ற நாம், ஒவ்வொரு நாளும் பல கோணங்களில் அவரை அவராகவே தியானிக்க முற்படுகின்றோம். அவ்வாறே இன்று தொன் போஸ்கோ மாற்றம் தந்தவர் என்ற தலைப்பிலே சிந்திக்கவும் பின்பு செயல்படவும் நமக்கு அழைப்பு விடப்படுகின்றது. ‘அப்படி என்ன மாற்றத்தை அவர் கொணர்ந்துவிட்டார்?” அவர் கொண்டு வந்த மாற்றங்கள் ஏராளம் ஏராளம்.
புனிதத்தன்மைக்கு வயது வரம்பு இல்லை என்பதை நிருபித்தவர், உன்னையும் என்னையும் புனிதனாக்க முனைந்தார். வீட்டினுள் வாழ்ந்த குருகுலத்தை வீதியிலே பணிசெய்ய அழைத்தார் என அவர் கொணர்ந்த மாற்றங்களை இவ்வாறு அடுக்கிக் கொண்டே போகலாம்.
மாற்றம் இன்றைய சூழலில் அவசிய தேவையாக உள்ளது. ‘பத்து நல்ல இளையோரை கொடுங்கள், இவ்வலகையே மாற்றிக்காட்டுகிறேன்” என்றார் விவேகானந்தர். இவ்வாறான மாற்றத்தை கொணரவே தொன்போஸ்கோ ஏழைகள் மத்தியில் உதித்தார். நம்மால், ஏன் மாற்றங்களைக் கொணர முடியாது? மாற்றங்கள் நம்மிலே உதயமாகி பிறரில், ஒளிர்ந்திட மாற்றங்களை கொணர்ந்த தொன் போஸ்கோ வழியாக இறையருளை நாடுவோம். பக்தியோடு இச்செப வழிபாட்டில் பங்கேற்போம்.
*நவநாள் செபம்:*
அன்பே உருவான எம் இறைவா, உம்மை வாழ்த்திப்போற்றி புகழ்கின்றோம். ஏழை எளிய உள்ளங்களை நல்முறையில் வழிநடத்தவும், அவர்களை உமது அன்பின் அரவணைப்பிற்கு அழைத்துச் செல்லவும், தூய தொன்போஸ்கோவை தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி கூறுகின்றோம். தூய தொன்போஸ்கோவுக்கு இருந்த ஆன்மாவைக் காக்கும் அதே தீராத ஆர்வம் எங்களுக்குள்ளும் பற்றியெறிந்திடவும், எம் ஆன்மாவை காத்து இன்னும் பல ஆன்மாக்களை உம்மிடம் அழைத்து வரவும் நாங்கள் உமது அன்பில் என்றும் வாழ்ந்திடவும் அருள்புரியும். எங்கள் ஆண்டவராம் இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்! †
பர-1; அரு-1; தந்தைக்கும் மகனுக்கும் ... #✝பைபிள் வசனங்கள் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன்
அருளானந்தர் நவநாள் செபம்!*
நாள் -2
செந்தமிழ் நாட்டிலே இயேசுமறையைப் போதிக்க வந்த மகிமை நிறைந்த அப்போஸ்தலரே! சொல்லிலும், செயலிலும் வல்லமை மிகுந்த புனித அருளானந்தரே, எங்களைக் கருணையுடன் நோக்கியருளும். எங்கள் குடும்பங்கள், உற்றார் உறவினர் மீதும், மாந்தர் அனைவர் மீதும் இரங்கியருளும். இறைவனின் ஏவுதலுக்கு இடைவிடாது செவிசாய்த்த உமது வியப்புக்குரிய பிரமாணிக்கத்தையும், கடின பயணங்களை மேற்கொண்டு. வேதனைகள், துன்பங்களைத் தாங்க உம்மைத் தூண்டின தளராத ஊக்கத்தையும் எண்ணி உம்மைப் புகழுகிறோம். உமது இதயத்தில் பற்றியெரிந்த அன்புத் தீ எங்கள் இதயத்திலும் பற்றியெரியச் செய்தருளும். மீட்புப் பணியினை நாங்களும் மனமுவந்து நிறைவேற்ற எங்களைத் தூண்டியருளும்
மகிமை நிறைந்த பாதுகாவலரே! மறவ நாட்டின் நல்ல ஆயரே! உம்முடைய உழைப்புகளையும், செப தவங்களையும், வீரத் தியாகத்தையும் முன்னிட்டு இறைவனிடமிருந்து நாங்கள் கேட்கும் மன்றாட்டைப் பெற்றுத் தந்தருளும். – ஆமென்.
(தேவையான மன்றாட்டை மௌனமாகக் கூறவும்)
இறைவா, உம்மிடம் நாங்கள் சமர்ப்பித்த இவ்வேண்டுதல்களுக்கு கனிவுடன் செவிகொடுத்து, புனித அருளானந்தர் அடிகளாரின் வேண்டுதலால் அவற்றை நாங்கள் பெற்றுக்கொள்ள எங்களுக்கு அருள் தாரும். இதைத் தூய ஆவியுடன், ஒரே இறைவனாக என்றும் வீற்றிருப்பவரும், ஆட்சி புரிபவருமான, உம் திருமகன், எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வழியாக மன்றாடுகின்றோம்.
ஆமென்.
*சிந்தனை:*
*உயிர் பிழைக்க வாய்ப்பிருந்தும், சாவைத் துணிவோடு ஏற்ற ஜான் தெ பிரிட்டோ!*
தாகத்தோடு இருந்த ஜான் தெ பிரிட்டோவிற்கு நெல்லூரில் இருந்த பெண்மணி மோர் தந்ததால் அவ்வூருக்கு ஆசி வழங்கிய அவர் அங்கிருந்து ஓரியூருக்குப் படைவீரர்களால் இழுத்துச் செல்லப்பட்டார். அவர் ஓரியூரை அடைந்த நாள் பிப்ரவரி 03.
அப்போது ஓரியூரில் ஆளுநராக இருந்தவன் சேதுபதி மன்னனின் சகோதரரனான உதயன் என்பவன். இவன் ஒற்றைக் கண்ணன். தொழுநோயால் பாதிக்கப்பட்டவன். இவன் ஜான் தெ பிரிட்டோவைப் பற்றிக் கேள்விப்பட்டு, தனது தொழுநோயைப் போக்கி, தனக்குப் பார்வையளிக்குமாறு அவரிடம்
கேட்டுக்கொண்டான். அவ்வாறு செய்தால் அவரை அவன் சிறையிலிருந்து விட்டுவிப்பதாகவும் உறுதியளித்தான். ஜான் தெ பிரிட்டோவோ அதெல்லாம் முடியாது என்று மறுத்துவிட்டார்.
உதயனின் வார்த்தைக்கு ஜான் தெ பிரிட்டோ மறுப்புத் தெரிவித்ததையடுத்து, உதயனின் மனைவி ஜான் தெ பிரிட்டோவிடம், அவன் சொன்ன அதை வார்த்தைகளைச் சொல்லி, தன் கணவருக்கு நலமளிக்குமாறு கேட்டுக்கொண்டாள். அதற்கு ஜான் தெ பிரிட்டோ அவளிடம், "மறைச்சாட்சியாக உயிர் துறப்பதற்குத்தான் இத்தனை நாள்களும் நான் காத்துக் கொண்டிருந்தேன். இப்போது அந்த நாள் நெருங்கி வந்துவிட்டது. இனி நான் அதை வேண்டாம் என்று சொல்வேனா?" என்றார்.
இச்செய்தியை இராணிதேவி தன் கணவன் உதயனிடம் சொன்னபோது, அவன் வெகுண்டெழுந்து, ஜான் தெ பிரிட்டோவை அருகில் இருந்த பெருமாள் கோயிலின் உள்ளே தள்ளினான்.
ஆம், ஜான் தெ பிரிட்டோ பிழைத்துக் கொள்வதற்குத் தனக்கு வாய்ப்பு கிடைத்தபோதும், அதை மறுத்துவிட்டு, சாவை ஏற்கத் தயாரானார். இவ்வாறு நாம் ஒவ்வொருவரும் கிறிஸ்துவுக்காக நம் உயிரை இழக்கத் தயாராக வேண்டும் என்ற செய்தியை அவர் நமக்குத் தருகின்றார்.
யோவான் நற்செய்தியில் இயேசு கூறுவார்: "கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்" (யோவா 12:24).
எனவே, நாம் புனித ஜான் தெ பிரிட்டோவைப் போன்று இயேசுவுக்காக நம் உயிரையும் இழந்து, இறையாசியைப் பெறுவோம்.
*இறுதி செபம்:*
கிறிஸ்துவின் அன்பினால் நிறைந்த புனித அருளானந்தரே, அரண்மனை வாழ்வையும், உலக இன்பங்களையும், உற்றார் உறவினரையும், சொந்த நாட்டையும் துறந்து, தொலை நாடாகிய இந்தியாவுக்கு வந்து, மறவ நாட்டிலே கிறிஸ்துவின் அரசை நிறுவ, எண்ணில்லாத் துன்ப துயரங்களையும் இன்னல் இடைஞ்சல்களையும் பொருட்படுத்தாது, பத்தொன்பது ஆண்டுகளாய் உழைத்து, கணக்கற்ற ஆன்மாக்களை திருமந்தையில் சேர்த்த ஒப்பற்ற வீரரே! உமது குருதியால் புனிதமாக்கப்பட்ட தமிழ்நாட்டின் மக்களாகிய எங்கள் மீது உம் கருணைக் கண்களைத் திருப்பியருளும்.
புனித சவேரியாரைப் பின்பற்றி மெய்மறையைப் பரப்ப வந்த உத்தம போதகரே! மறவ நாட்டு மாணிக்கமே! எல்லார்க்கும் எல்லாமாக விளங்கி, எங்கள் முன்னோர்க்கு வாழ்வுதரும் நற்செய்தியை அறிவித்தீர். சோர்வின்றி நல்லன செய்யவும், அஞ்சா நெஞ்சத்தோடு ஆபத்துக்களை எதிர்கொள்ளவும், சோதனைகளையும், சாவையும் உறுதியுடன் ஏற்றுக் கொண்டீர்.
ஓ வீரம் மிகுந்த தியாகியே! இயேசு சபையின் ஒப்பற்ற மறைச்சாட்சியே! உம் அடிச்சுவடுகளைப் பின்பற்றி இந்த நாட்டில் உழைத்து வரும் குருக்களுக்கும் திருத்தொண்டர், துறவியர், வேதியர் அனைவருக்கும் உமக்கிருந்த இறையன்பும், ஆன்ம தாகமும், உயிரையும் பொருட்படுத்தாத தீரமும் உண்டாகச் செய்தருளும். கிறிஸ்துவின் மந்தையைச் சேராத எத்தனையோ இலட்சம் ஆடுகள் இந்நாட்டில் உண்டு. அவர்களுக்கெல்லாம் வழிகாட்டி ஒளியேற்ற இன்னும் பல குருக்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளராகிய ஆண்டவரை மன்றாடியருளும். தவிர, துன்பத்தாலும் நோயாலும் வறுமையாலும் நலிந்து வாழும் ஏழை மக்கள் மீதும்; இரக்கமாயிரும். அனைவர் நடுவிலும் கிறிஸ்துவின் அன்பும் அமைதியும் நிலைத்து நிற்பனவாக!
இறுதியாக, புனித அருளானந்தரே, எங்கள் ஆயர்கள், குருக்கள், துறவியர், மக்கள் அனைவரையும் உமது பாதுகாவலில் வைக்கிறோம். அவர்கள் எல்லாரும் நம் ஆண்டவர் கிறிஸ்துவின் அன்பில் எல்லா நலன்களையும் பெற்று, பரம தந்தையின் திருவுளத்துக்கு அமைந்து, புனிதர்களாய் வாழ்ந்து, என்றும் மாறாத பேரின்ப வாழ்வுக்கு வந்து சேரச் செய்தருளும்.
*– ஆமென்.* #✝️இயேசுவே ஜீவன் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள்
#✝பைபிள் வசனங்கள் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன்
#✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச்
#⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள்









