2026 தேர்தல் முன்னிட்டு அடுத்தகட்ட நகர்வை நோக்கி அதிமுக தீவிரம்…
அதிமுக பொதுக்குழு கூட்டம் பரபரப்பான அரசியல் சூழலில், அதிமுக செயற்குழு – பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடக்கிறது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் நடக்கும் இந்த பொதுக்குழு கூட்டம், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. சென்னையில் பரபரப்பை கிளப்பும் அரசியல் சூழ்நிலையில், அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டங்கள் இன்று வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் தொடங்கின. வரவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்வைத்து நடைபெறும் இக்கூட்டம், கட்சிக்குள் பல அரசியல் மாற்றங்கள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. […]