மகாலட்சுமி சீரியல்
நினைப்பு பிழைப்பை கெடுத்த மாதிரி.புருசனப் பத்தி கொஞ்சம் கூட கவலை இல்லாம ,இப்டி ஆடம்பரத்தை விரும்பும் பொம்பள இருந்தா குடும்பம் எப்டி உருப்படும். வீட்டில இருக்க குடும்ப தலைவியே இதப்பத்தி ஒரு தடவை வாய் திறந்து பேசி இருப்பாளா சொல்லுங்க. #சன்டிவி
லட்சுமி சீரியல்.
ஜோசியம் பார்க்க போறவுங்க பூனைய மடில கட்டிக்கிட்டு போவாங்களா? வீட்டில தண்ட சோறு திண்ணுக்கிட்டு, வாழா வெட்டியா இருக்கிறாள். புருசனப்பத்தி கூட குடும்பத்துல யாருக்கும் தெரியாம பத்து வயசு வரைக்கும் பெத்த பொண்ண அதே வீட்டில வளர்த்துக் கிட்டு வராளே அவதான் கில்லாடி.புருசனப்பத்தி எந்த கேள்வியும் கேட்காம அவள வீட்டில வச்சு #சன்டிவி தண்டமா சோறு போட்டுக்கிட்டு இருக்காங்களே இது குடும்பமா? இவ்வளவு யோக்கியமானவள கம்பெனில சேத்து ....அது உருப்பட்ட மாதிரி தான்.
சிங்கப்பெண்ணே சீரியல்
ஆனந்தி conceive ஆகி இருக்கா ன்னு டாக்டர் சொல்லியே 3 மாசமாச்சு . அப்ப 6 மாசமான பொண்ணு கிட்ட இருக்க வேண்டிய மாற்றம் ஒன்னுமே #சன்டிவி தெரியலையே. அவளோட friends க்கு கூட தெரியலையா.? மாசக்கணக்கு தெரியாம அவபாட்டுக்கு தாவனிய போட்டுக்கிட்டு சுத்திட்டு இருக்கா. இது யாரு காதுல பூ சுத்துற வேல...
புது வசந்தம் சீரியல்
வாய் கொழுப்பு சேலையில ன்னு தான் சொல்ல கேள்வி பட்டு இருக்கிறோம். ஆனால் இங்கே வாய் கொழுப்பு வீதியில...சரி தானே . #சன்டிவி
புது வசந்தம் சீரியல்
சீரியல்ல பார்த்த மகா வா இந்த மாதிரி டான்ஸ் ( தமன்னா காஸ்ட்யூம்ல ) ஆடுறாங்க ன்னு , எதிர்பார்க்லைன்னா கூட அடிப்பாவின்னு ஏத்துக்கிட்டுத் தானே ஆகனும். தமன்னா மாதிரி 6, 7 இடத்தில கிழிச்ச்சுக்கிட்டு ஆட முடியலையே ன்னு மகா வருத்தப்பட்டாலும் இந்த அளவுக்கு முயற்சி செஞ்சிருக்கீங்க. ரசிகர்களாகிய எங்களைத் தான் புளிப்பு முஞ்சிய காட்ட வச்சிட்டீங்க. #சன்டிவி
புது வசந்தம் சீரியல்
ஒரு second 2 second dubbing ல late ஆனாலும் இப்படித்தான் கேரக்டர் உள்ளே வந்த பிறகு தான் குரல் may I come in sir என்று நமக்கு கேட்கும் . இதை எல்லாம் #சன்டிவி யாரு கண்டுக்க போறாங்கன்னு நினைக்காதீங்க. மறுபடியும் ஓட்டிப் பாருங்களேன் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் . Mr. டைரக்டர் சார்.
எதிர் நீச்சல். சீரியல்.
வீட்ல நல்ல காரியம் நடந்துட்டு( நலங்கு வைபவம் ) இருக்க ற நேரத்துல மூத்தவன் என்ன எருமை சாணிய மூஞ்சில அப்புன மாதிரி, கப்பல் கவுந்தது போல இப்ப சமீபத்துல நடந்துச்சு அப்படி கண்ணத்துல கைய வச்சிட்டு உட்காந்திருக்கான்? #சன்டிவி🌞
அன்னம் சீரியல்.
இந்த காட்சி பழைய படம் '' இரு கோடுகள்" ஜெமினி கணேசன், சவுகார் ஜானகி நடித்த இயக்குநர் "சிகரம் பாலச்சந்தர் " எடுத்த சிறந்த படங்களில் ஒன்றை நினைவூட்டுகிறது. இது புதியவர்களுக்கு தெரியாது என்று சீரியல் இயக்குநருக்கும் தெரியும். #சன்டிவி
அழகு சுந்தரம் சீரியல்
சுமார் 5 நிமிஷத்துக்கு மேல திருடனோட சண்டை நடந்துக்கிட்டு இருக்கு இந்த தீக்குச்சி அப்படியே மரம் மாதிரி நின்னிண்டு இருக்கான். வயித்துல புள்ளய வச்சிண்டு அவள பாக்க பாவமா இருந்துச்சு. #சன்டிவி
அன்னம் சீரியல்
அன்னம் கல்யாணம் முடிந்த அன்றே துணிகளை துவைக்க எடுக்கும் போது ,அத்தை அதாவது வாத்தியார் பொண்டாட்டி தன்னோட சேலை ,பிளவுஸ் இன்னும் எல்லாத்தையும் சுருட்டி எடுத்துக் #சன்டிவி கொண்டு வந்து போடுவா. அவைகளை துவைக்கும் மட்டும் அன்னத்தோட கைபடாதோ? அப்ப தீட்டு படாதோ?அவ துவைத்த சேலை முதல் எல்லாத்தையும் மடித்து வைக்கும் போது மட்டும் தீட்டு பட்டிருச்சா? உடனே அவைகளை கொளுத்திடுவியா?இத கேக்குறதுக்கு உங்களுக்கு துப்பில்லாம போச்சு. என்னாலும் அப்டி இருக்க முடியாது.யாரு கிட்ட கேக்குறது? நம்ம டைரக்டர் கிட்ட தான்.