#படித்ததில் பிடித்தது😇 👉"புத்தாண்டு அன்று மருத்துவமனைக்கு சென்றால், வருடம் முழுவதும் மருத்துவமனைக்கு போய்கிட்டே இருக்கிற மாதிரி ஆயிடும் "
என்ற எண்ணம் பலருக்கும் உண்டு.
👉அதனால், நேற்று வராத கூட்டம் இன்று சேர்த்து வைத்து மொத்தமாக வந்து என்னை திக்கு முக்கு ஆக வைத்து விட்டனர்.
⚠️" முந்தா நாளே மாத்திரை தீர்ந்து போச்சு. நேத்து பாட்டியம்மை . அதான் வரலை. இன்னக்கி வந்திருக்கிறேன். ரெண்டு நாளா மாத்திரை போடலை " என்று கூறும் முதியவர்கள் பலரைப் பார்த்துள்ளேன்.
⚠️உடம்பிற்கு முடியவில்லை என்றால் நாள் கிழமையெல்லாம் பார்க்காதீர்கள் நண்பர்களே.
அதுவும் இருதய நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளுக்கு மருந்து உண்ணும் நபர்கள், ஒரு நாள் கூட மாத்திரைகளை தவற விடக் கூடாது.
✴️கல்யாணம், காதுகுத்து, கிரகப்பிரவேசம் போன்ற சுபதினங்களுக்கு நாள் , கிழமை பாருங்கள்.
✴️மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்வதில் நாள் கிழமை பார்த்து காலம் தாழ்த்த வேண்டாம் என்பது எனது பணிவான கருத்து 🙏