@borbiedoll
@borbiedoll

A 🌹 A🌹🌹:- R🌹$🌹I🌺F🌺

respect you' r mother because you' r mother is door to this world you' r mother will be door to the jannah

#

நான் எழுதிய கதை

உண்மையே உன்னத வாழ்க்கை (ஒரு தேவதையின் கதை) ஒரு கிராமத்தில் மிகவும் வறுமையோடு ஏழ்மை நிலையில் ஒரு தாயும் மகளும் வாழ்ந்து வந்தார்கள் பிறரிடம் தர்மம் பெற்று வாழ்வதே அவர்களின் தினசரி வாழ்க்கை ஆகும். ஒரு நாள் தாயும் மகளும் வழக்கம் போல்தர்மம் பெறுவதற்காக வெளியில் சென்றார்கள் அவர்கள் வெகு தூரம் சென்று அவர்களுக்கு உணவு கிடைக்கவில்லை மிக தொலைவில் ஒரு மரத்தின் அடியில்.தேவதை ஒன்று மனிதனின் தோற்றத்தில் அமர்ந்து உணவு உண்டு கொண்டிருந்தது அதை கண்டு தாயும் மகளும் அவரின் அருகே சென்றார்கள் பிறகு அந்த தாய் அவரிடம் சென்று ஐயா.! என் மகள் பசியோடு இருக்கிறாள் உண்ண உணவு ஏதாவது இருந்தால் தாருங்கள் ஐயா! என்று கேட்டால் அவர் அவள் கையில் ஒரு ரொட்டியை கொடுத்தார் அதை பெற்றுக்கொண்டு தான் தங்கியிருந்த இடத்திற்க்கு திரும்பிச் சென்றால் அவள் செல்லும் வழியில் அதே் தேவதை ஒரு முதியவர் தோற்றத்தில் அவள் முன் வந்து அம்மா! எனக்கு பசிக்கிறது உண்ண உணவு ஏதாவது தாருங்கள் அம்மா! என்று கேட்டார் அதற்க்கு அவள் ஐயா! என் கையில் ஒரு ரொட்டி மட்டும் தான் இருக்கிறது அதுவும் என் மகளுக்காக என்னால் உங்களுக்கு உதவ முடியாது என்னை மண்ணித்து விடுங்கள் ஐயா! என்று கூறினாள் அதற்க்கு மீண்டும் அவர் அம்மா! எனக்கு மிக அதிகமாக பசிக்கிறது சிறிது உணவாவது தாருங்களேன் என்று கேட்டா அதை கேட்ட அந்த சிறுமி தன் தாயின் கையில் இருந்து ரொட்டியை வாங்கி அந்த முதியவர் கையில் கொடுத்தால் அவர் அதை வாங்கிக்கொண்டு அங்கிருந்து சென்று விட்டார் பிறகு அந்த தாய் தன் மகளை நம்மிடம் ஒரு ரொட்டிதான் இருந்தது அதையும் அவரிடம் கொடுத்து விட்டாயே நீ பசி என்று அழுதல் உனக்கு உண்பதற்க்கு நான் என்ன? தருவேன் என்று திட்டிக்கொண்டே அவள் தங்கியிருக்கும் இடத்திற்க்கு அழைத்துச் சென்றால் பிறகு அந்த சிறுமி தன் தாயை பார்த்து அம்மா எது யாருக்கென்று எழுதி வைத்துள்ளதோ அவர்களுக்கு அது கிடைத்தே தீரும் என்று கவலை கொல்லாதீர்கள் அம்மா நமக்கானது நம்மிடம் வந்து சேரும் அதை கேட்ட தாய் தன் மகளின் பக்குவத்தை கண்டு கண்ணீரோடு தன் மகளை அள்ளி அனைத்துக்கொண்டால் பிறகு அதே தேவதை அதே முதியவர் தோற்றத்தில் வந்து அந்த தாயிடம் அம்மா உங்கள் மகள் கூறியது உண்மை தான் அம்மா இந்த ரொட்டி உங்களுக்கானது தயவு செய்து மறுப்பு கூறாமல் இதைவாங்கிக கொள்ளுங்கள் அம்மா! என்று சொன்னார் பிறகு அந்த சிறுமியின் தாய் அதை வாங்கிக் கொண்டால் அந்த முதியவரும் அங்கிருந்து சென்றுவிட்டார் அவள் அந்த ரொட்டியை ஒரு பாத்திரத்தல் வைத்து மூடி வைத்தால் சிறிது நேரம் கழித்து அவள் தன் மகளுக்கு ரொட்டியை தருவதற்காக அந்த பாத்திரத்தை எடுத்து பார்த்தாள் அந்த பாத்திரம் நிறைய உணவு நிறம்பியிரந்தது அது மட்டுமின்றி அவள் வீட்டில் உணவு பொருட்கள் தானியங்கள் ஆடைகள் என செல்வ செழிப்போடு காணப்பட்டன அதை கண்டு அவள் பெரும் குழப்பத்தோடு இருந்தாள் தன் மகளிடம் எதையும் காட்டிக்கொல்லாமல் அவள் அதை ஏற்றுக் கொண்டு குழப்பத்தோடு செல்வ செல்வ செழிப்போடு வாழ்ந்து வந்தாள் சிறிது காலம் கழித்து அதே தேவதை வேரொருவர் தோற்றத்தில் அவள் முன் தோற்றமளித்து அவளிடம் செனறு அம்மா எனக்கு மிகவும் பசிக்கிறது உண்ண உணவு ஏதாவது தாருங்கள் அம்மா என்று கேட்டார் அவளும் உணவு எடுத்து வந்து கொடுத்தாள் அவர் அதை வாங்கிக் கொண்டு அவர் அந்த தாயிடம் அம்மா நான் உங்களிடம் ஒன்று கேட்கலாமா என்று கேட்டார் அவள் ஐயா! தயக்கமின்றி கேளுங்கள் என்று கூறினாள் அவர் அம்மா! நான் உங்களை முன்பே பார்த்திருக்கிறேன் நீங்கள் வறுமை நிலையில் தானே வாழ்ந்துக் கொண்டிருந்தீர்கள் எப்படி? திடீர் என்று இவ்வளவு செழிப்போடு வாழ்கிறீர்கள் என்று கேட்டார் அதற்க்கு அவள் ஐயா! நான் ஒரு நாள் தர்மம் பெறுவதற்காக சென்று ஒருவரிடம் இருந்து ஒரு ரொட்டியை வாங்கி வந்தேன் என்னிடமிருந்து அந்த ரொட்டியை ஒரு முதியவர் பசி என்று கூறி வாங்கிச்சென்று மீண்டும் என்னிடமே எடுத்து வந்து கொடுத்து விட்டார் அதன் பிறகு தான் இவ்வாறு செல்வ செழிப்போடு வாழ்கிறேன் என்று கூறினாள் பிறகு அந்த தேவதை தன் உண்மையான தோற்றத்தில் அவள் முன் தோற்றமளித்து அம்மா! உங்களிடம் முதலில் ரொட்டியை கொடுத்து மீண்டும் உங்களிடம் இருந்து அந்த ரொட்டியை வாங்கிச்சென்று மீண்டும் உங்களிடமே கொடுத்தது அனைத்தும் நானே என்று கூறியது அதற்க்கு அவள் ஐயா! யார் நீங்கள் ஏன் இதையெல்லாம் செய்தீர்கள்? என்று கேட்டாள் அம்மா! நான் ஒரு தேவதை உங்களை சோதிக்கவே இதையெல்லாம் செய்தேன் உங்கள் நேர்மையை பார்த்து வியந்தேன் என்று கூறி நீங்கள் மென்மேலும் செல்வ செழிப்போடு வாழ வேண்டும் என்று கூறி சென்று விட்டது அவளின் குழப்பமும் தீர்ந்தது தாயும் மகளும் செல்வ செழிப்போடு ஆணந்தமாய் வாழ்ந்தார்கள் ஆரிபா
97 காட்சிகள்
1 நாள் முன்
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
அன்பாலோவ்
காப்பி லிங்க்
புகார்
தடுக்க
நான் புகார் தெரிவிக்கிறேன் ஏனெனில்