
செ.சாா்லஸ் செபஸ்டின்
@charlesrani2390
♥அன்பு சகலத்தையும் வெவல்லும் ஆற்றல்உடையது♥
#✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன் கிறிஸ்தவர்களுக்கான நேர்மறை விசுவாச அறிக்கைகள்
* என்னைப் பலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பெலன் உண்டு.
(பிலிப்பியர் 4:13)
* நான் பயப்படுவதில்லை, ஏனெனில் தேவன் எனக்கு பயமுள்ள ஆவியைக் கொடுக்கவில்லை.
(2 தீமோத்தேயு 1:7)
* நான் பிரமிக்கத்தக்க அதிசயமாக உண்டாக்கப்பட்டிருக்கிறேன்.
(சங்கீதம் 139:14)
* நான் தேவனால் நேசிக்கப்படுகிறேன்.
* நான் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன்.
* நான் வல்லமையினால் நிரப்பப்பட்டிருக்கிறேன்.
(மீகா 3:8)
* தேவன் என்மேல் சிறந்த திட்டங்களை வைத்துள்ளார்.
(எரேமியா 29:11)
* தேவன் என்னை விட்டு விலகுவதுமில்லை, என்னைக் கைவிடுவதுமில்லை.
(உபாகமம் 31:6)
கடவுளின் அற்புதமான கிருபை
#✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள் விண்ணுலகையே அசைத்த ஒரு வரி!
இஸ்ரவேலில் இருந்து கடத்தி வரப்பட்டு, ஒரு அந்நிய தேசத்தில் வாழக் கட்டாயப்படுத்தப்பட்ட ஒரு சிறுமி—வேதத்தில் இவளுக்குப் பெயர் கூட இல்லை. தன் குடும்பத்தைப் பிரிந்து, ஒரு அதிகாரமிக்க மனிதனின் வீட்டில் பணிப்பெண்ணாக இருக்கும் இவளது வாழ்க்கை, இழப்புகளாலும் அநீதியாலும் உருவானது. ஆனாலும், தேவன் அவளை ஒரு அற்புதத்தின் மையப்புள்ளியாக மாற்றுகிறார்.
மன்னர்களால் மதிக்கப்பட்டவனும், படைகளால் அஞ்சப்பட்டவனுமான நாகமான் என்ற தளபதியின் மனைவியிடம் அவள் பணிவிடை செய்கிறாள். அவனிடம் அந்தஸ்து, அதிகாரம், கௌரவம் என அனைத்தும் இருந்தது. ஆனால் இவை எல்லாவற்றிற்கும் பின்னால், எந்தப் பதவியாலும் குணப்படுத்த முடியாத ஒரு நோயைச் சுமந்து கொண்டிருந்தான். நாகமான் ஒரு குஷ்டரோகி.
அந்தச் சிறுமிக்கு அவனது நிலை தெரியும். அதைவிட முக்கியமாக, சுகம் எங்கிருந்து வரும் என்பதும் அவளுக்குத் தெரியும். இஸ்ரவேலில் ஒரு தீர்க்கதரிசி இருக்கிறார் என்பதை அவள் அறிந்திருந்தாள். மௌனமாக இருப்பதற்கோ அல்லது கசப்பான வார்த்தைகளைப் பேசுவதற்கோ பதிலாக, அவள் விசுவாசத்தைத் தேர்ந்தெடுக்கிறாள்.
> “என் ஆண்டவன் சமாரியாவிலுள்ள தீர்க்கதரிசியினிடத்தில் போவாரானால் நலமாயிருக்கும்; அவர் இவருடைய குஷ்டரோகத்தை நீக்கிவிடுவார்.”
> — 2 இராஜாக்கள் 5:3
>
அது ஒரு தனிப்பட்ட இடத்தில் மெதுவாகச் சொல்லப்பட்ட ஒரே ஒரு வாக்கியம். எந்தக் கூட்டமும் அதைக் கேட்கவில்லை. யாரும் அவளைப் பாராட்டவில்லை. ஆனாலும், அந்த ஒரு வரிக்காக தேவன் அசைந்தருளினார். அந்த வாக்கியம் நாகமானை எட்டியது; ராஜாக்களைச் சென்றடைந்தது; ஒரு அற்புதத்தைத் தொடங்கி வைத்தது.
இந்தத் தருணத்தை வலிமையாக்குவது எதுவென்றால், அவள் யாரிடம் பேசினாள் என்பதுதான். நாகமான், அவளுடைய சுதந்திரத்தைப் பறித்த அந்த அமைப்பின் பிரதிநிதியாக இருந்தான். இருப்பினும், அவளுக்கு அவன்மேல் இரக்கம் பிறந்தது. வலி அவளுடைய விசுவாசத்தை மௌனமாக்கவில்லை. அடிமைத்தனம் தேவன் மீதான அவளது நம்பிக்கையை அழிக்கவில்லை. அவளது சூழ்நிலை மாறியது, ஆனால் அவளது விசுவாசம் மாறவில்லை.
பெருமையினால் நாகமான் இந்த அற்புதத்தை ஏறக்குறைய தவறவிட்டிருப்பான். ஆனால் சுகம் என்பது தாழ்மையின் மூலமும் கீழ்ப்படிதலின் மூலமும் மட்டுமே கிடைக்கிறது.
> “அப்பொழுது அவன் போய், தேவனுடைய மனுஷன் சொன்னபடியே யோர்தானில் ஏழுதரம் மூழ்கினபோது, அவன் மாம்சம் ஒரு சிறுபிள்ளையின் மாம்சத்தைப்போல மாறி, அவன் சுத்தமானான்.”
> — 2 இராஜாக்கள் 5:14
>
அந்தச் சிறுமிக்கு பகிரங்கமான வெகுமதி எதுவும் கிடைக்கவில்லை. அவளுக்குப் பாராட்டுப் பத்திரமும் தரப்படவில்லை. ஆனாலும், அவளது விசுவாசம் ஒரு மனிதனின் வாழ்க்கையை மாற்றியதுடன், தேவன் எப்படிச் செயல்படுகிறார் என்பதையும் உலகுக்கு வெளிப்படுத்தியது. வல்லமை படைத்தவர்களின் இதயங்களைத் தொட, தேவன் பெரும்பாலும் அமைதியான குரல்களையே பயன்படுத்துகிறார்.
யாராலும் கவனிக்கப்படாத நிலையில் நீங்கள் இருப்பது, உங்களை தேவன் பயன்படுத்த மாட்டார் என்று அர்த்தமல்ல. உங்கள் வலி உங்கள் நோக்கத்தை அழிப்பதில்லை. நீங்கள் எங்கிருக்கிறீர்களோ, அங்கிருந்தே தேவன் உங்கள் மூலம் கிரியை செய்ய முடியும்.
விசுவாசத்தோடு சொல்லப்படும் ஒரு வரி, இன்றும் அனைத்தையும் மாற்றக்கூடும்.
#✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன் வசனம்:
*"கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை"**
சங்கீதம் 16:8
# வாழ்வின் எல்லா சூழ்நிலைகளிலும், முடிவுகளிலும், சிந்தனைகளிலும் கர்த்தரை முதல் இடத்திலும், முன்னிலையிலும் வைத்திருப்பது அவசியம்.
# வலது பக்கம் என்பது உதவியையும், பாதுகாப்பையும் குறிக்கிறது. கர்த்தர் அருகிருந்து காக்கிறார், வழிநடத்துகிறார் என்பதற்கான நம்பிக்கை.
# எவ்வளவு பெரிய சோதனைகள் வந்தாலும், கர்த்தர் மீது நம்பிக்கை வைக்கும் ஒரு விசுவாசி பயப்படாமல், உறுதியுடன் நிலைத்திருப்பான்.
# மகிழ்ச்சி: கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிரசன்னம் மற்றும் பாதுகாப்பு, ஆத்துமாவில் மிகுந்த மகிழ்ச்சியையும், அமைதியையும், பாதுகாப்பையும் தருகிறது. ஆமென்.
#✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள் காலை ஜெபம்*
"ஆண்டவரே, என் எதிரிகள் எவ்வளவாய்ப் பெருகிவிட்டனர்! என்னை எதிர்த்து எழுவோர் எத்தனை மிகுந்துவிட்டனர்! ‘கடவுள் அவனை விடுவிக்கமாட்டார்’ என்று என்னைக் குறித்துச் சொல்வோர் பலர். ஆயினும், ஆண்டவரே, நீரே எனைக் காக்கும் கேடயம்; நீரே என் மாட்சி; என்னைத் தலை நிமிரச் செய்பவரும் நீரே. நான் உரத்த குரலில் ஆண்டவரிடம் மன்றாடுகின்றேன்; அவர் தமது திருமலையிலிருந்து எனக்குப் பதிலளிப்பார். நான் படுத்துறங்கி விழித்தெழுவேன்; ஏனெனில், ஆண்டவரே எனக்கு ஆதரவு. என்னைச் சூழ்ந்திருக்கும் பல்லாயிரம் பகைவருக்கு நான் அஞ்சமாட்டேன்.
ஆண்டவரே, எழுந்தருளும்; என் கடவுளே, என்னை மீட்டருளும்".
(திருப்பாடல் 3 : 1-7)
அகில உலகையும் படைத்த எம் இறைவா! இந்த அதிகாலை வேளையில் உம்மை போற்றுகின்றேன், புகழ்கின்றேன், நன்றி கூறுகின்றேன்.
இறைவா, என் அன்னையின் வயிற்றில் நான் கருவாக இருந்த காலம் முதல், இந்நாள்வரை எனக்காக நீர் செய்த அனைத்து நன்மைகளுக்காகவும் நன்றி. உமது மேலான ஆசீர்வாதங்களுக்காக நன்றி அப்பா.
இறைவா! அன்று நீதித் தலைவர்கள் சிங்கங்களின் வாய்களை அடைத்தார்கள்; தீயின் கொடுமையைத் தணித்தார்கள்; வாள் முனைக்குத் தப்பினார்கள்; வலுவற்றவராய் இருந்தும் வலிமை பெற்றார்கள்; போரில் வீரம் காட்டினார்கள்; மாற்றார் படைகளை முறியடித்தார்கள். இவை அனைத்தும் இறைவா, அவர்கள் உம் மீது கொண்ட, அசைக்க முடியாத நம்பிக்கையினாலேயே செய்ய முடிந்தது.
ஆனால் அப்பா! நான் என் நம்பிக்கையின்மையின் நிமித்தம், எதிர்மறை எண்ணங்களால் சவால்களை எதிர்கொள்ள இயலாமல், வாழ்வில் பின்வாங்கிய தருணங்களுக்காக உம்மிடம் மனம்வருந்தி மன்னிப்புக் கேட்கிறேன். என்னை மனமிரங்கி மன்னித்தருளும்.
தந்தையே! என் நம்பிக்கையை வளரச்செய்து, எனது நேர்மறை எண்ணங்களால் எனது வலுவின்மையை வலிமை மிக்கதாக மாற்றியருளும்.
இறைவா, நீர் அருளின இப்புதிய நாளை உமது பெயரால் துவக்குகின்றேன். நிறைவாய் ஆசீர்வதித்து வழிநடத்தும்.
இயேசு, மரி, சூசை என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.
*ஆமென்.*
விண்ணுலகில்... (1)
அருள் நிறைந்த... (3)
பிதாவுக்கும், சுதனுக்கும்... (1)
*ஆமென்.*
#✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன் சிந்தனை*
*“உள்ளவருக்குக் கொடுக்கப்படும்”*
துறவி ஒருவர் இருந்தார். ஒருநாள் அவரிடம் கடவுள்மீது நம்பிக்கை இல்லாத இளைஞன் ஒருவன் வந்தான்.
“சுவாமி! நான் கடவுள்மீது நம்பிக்கை இல்லாதவன். எனக்கு ஒரு சிறிய ஐயம். என்மீது ஒளிரக்கூடிய அதே கதிரவன்தானே கடவுள்மீது நம்பிக்கைகொண்ட ஒருவர்மீதும் ஒளிர்கின்றது. அப்படியிருக்கையில் ஒருவர் கடவுள்மீது நம்பிக்கை கொள்வதால் என்ன பயனை அடைகின்றார்? இதற்கு நீங்கள்தான் பதில் கூற வேண்டும்” என்று பணிவோடு கேட்டான் அந்த இளைஞன்.
துறவி அவனைக் கூர்ந்து பார்த்தார். பின்னர் அவர் அவனிடம், “உன்மீது ஒளிரக்கூடிய கதிரவன்தான் கடவுள்மீது நம்பிக்கைகொண்ட ஒருவர்மீதும் ஒளிர்கிறது என்றாலும், அவர்மீது இன்னொரு கதிரவன் ஒளிர்கின்றது. அந்தக் கதிரவன் அவருடைய உடல்மீது அல்ல, மாறாக, ஆன்மாவின் மீது” என்றார்.
ஆம், கடவுள்மீது நம்பிக்கை கொண்டு வாழும் ஒருவர்மீது அவரது ஆசியும் அருளும் ஒளியும் அபரிமிதமாக இருக்கும்! நற்செய்தியில் இயேசு, “உள்ளவருக்குக் கொடுக்கப்படும்” என்கிறார். இயேசு கூறும் இவ்வார்த்தைகளின் பொருள் என்ன என்பது குறித்து நாம் சிந்திப்போம்.
*திருவிவிலியப் பின்னணி:*
தொடக்க காலகட்டத்தில் கிறிஸ்துவின் நம்பிக்கை கொண்டதற்காக பலரும் பலவிதமாகச் சித்தரவதை செய்யப்பட்டர்கள். இதற்கு அஞ்சியே ஒருசிலர் தங்கள் கிறிஸ்தவ அடையாளத்தை மறைத்து வாழ்ந்து வந்தார்கள். இத்தகையோருக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் மாற்கு நற்செய்தியாளர், “விளக்கைக் கொண்டு வருவது எதற்காக, விளக்குத் தண்டின்மீது வைப்பதற்காக அல்லவா?” என்கிறார்.
இயேசு கூறுவதாய் மாற்கு நற்செய்தியாளர் கூறும் இவ்வார்த்தைகள் யாரும் எக்காரணத்தைக் கொண்டும் தங்கள் கிறிஸ்தவ அடையாளத்தை மறைத்து வாழ வேண்டாம். அவர்கள் விளக்குத் தண்டின்மீது ஏற்றி வைக்கப்பட்ட விளக்கைப் போன்று ஒளிமயமாக இயேசுவுக்குச் சான்று பகர்ந்து வாழட்டும் என்கிறார். இவ்வாறு எவர் ஒருவர் யாருக்கும் அஞ்சாமல், கிறிஸ்துவுக்குச் சான்று பகர்ந்து வாழ்கின்றாரோ, அவருக்கு இறைவன் தமது ஆசியை அபரிமிதமாக் கொடுப்பார் என்கிறார் மாற்கு.
முதல் வாசகத்தில் தாவீது மன்னர், ஆண்டவருக்கு முன்பு தன்னை ஓர் ஊழியனாகக் கருதி, அவரது ஆசி தனக்குத் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்று மன்றாடுகின்றார். அவர் மன்றாடியதுபோன்று ஆண்டவரது ஆசி அவருக்கு அபரிமிதமாகக் கிடைக்கின்றது. எனவே, நாம் ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்தவர்களாய், விளக்கைப் போன்று பிரகாசமாக எழுந்து நின்று ஒளிதந்து, இயேசுவுக்குச் சான்று பகர்வோம்.
*சிந்தனைக்கு:*
கிறிஸ்துவுக்காக மறைச்சாட்சியாக வேண்டுமே ஒழிய, மறைந்து வாழக் கூடாது.
நம்பிக்கை என்பது ஒளிபோன்றது. அதை மற்றவருக்குக் கொடுக்கக் கொடுக்க வளர்ந்து கொண்டே இருக்கும்.
நாம் குன்றின்மீது ஏற்றி வைக்கப்பட்ட விளக்குகள். அதனால் குன்றாமல் ஒளிவீசுவோம்.
*இறைவாக்கு:*
‘எழு, ஒளிவீசு’ (எசா 60:1) என்பார் ஆண்டவர். எனவே, நாம் எழுந்து ஒளிவீசுவோம். இயேசுவுக்குச் சான்று பகர்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
*- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.*
#🚹உளவியல் சிந்தனை #🤔புதிய சிந்தனைகள் 🙏இன்றைய சிந்தனை🙏
🌷29.01.2026🌷
🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩
உங்களைத் தள்ளி விட ஆயிரம் கைகள் வரும். ஆனால், உங்களைத் தாங்கிப் பிடித்துக் கொள்ள ஒரே ஒரு கை தான் வரும். அது உங்கள் தன்னம்பிக்கை மட்டுமே.
சொல்ல முடியாத சோகங்களும், நினைவுகளும் ஒவ்வொருவர் மனதிலும் உண்டு...
யாரும் மறந்து வாழ்வதில்லை. மறைத்துத் தான் வாழ்கிறோம்.
தேவைக்கு அதிகமாக நினைவுகளையும், கடனையும் சேர்த்து வைக்காதீர்கள். தூக்கத்தைப் பறி கொடுத்து விடுவீர்கள்.
வேண்டாம் என்று தூக்கி எறியப்பட்ட விதை கூட மரமாக வளர்ந்து வருகிறது. உங்களை வேண்டாம் என்று தூக்கி எறிந்தவர் மத்தியில் இருந்து எழுந்து வாருங்கள்.
வாழ்க்கையில் பயத்தோடு வாழாமல் துணிவோடு வாழ்ந்து காட்டுங்கள். உங்களை வெல்ல யாரும் இல்லை.
அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்தும் முன் யோசிக்க மறந்து விடாதே.
வாழ்க வளமுடன்.
🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩










![✝️இயேசுவே ஜீவன் - RI पनननवर ~]L +e 0 ಲೆ೯ೆ ப555 BRF RI पनननवर ~]L +e 0 ಲೆ೯ೆ ப555 BRF - ShareChat ✝️இயேசுவே ஜீவன் - RI पनननवर ~]L +e 0 ಲೆ೯ೆ ப555 BRF RI पनननवर ~]L +e 0 ಲೆ೯ೆ ப555 BRF - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_220171_33377291_1769654218759_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=759_sc.jpg)

