
CMO Tamilnadu
@cmotamilnadu
Office of the Chief Minister of TamilNadu.
சென்னை, காமராசர் சாலையில் நடைபெற்ற குடியரசு நாள் விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. ஆர்.என். ரவி அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @M.K.Stalin ஆகியோர் பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் திட்டங்களை விளக்கி அணிவகுத்து வந்த அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பினை பார்வையிட்டார்கள். #🇮🇳இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்🌼
சென்னை, காமராசர் சாலையில் நடைபெற்ற குடியரசு நாள் விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. ஆர்.என்.ரவி அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @M.K.Stalin ஆகியோர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களின் ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார்கள். #🇮🇳இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்🌼
மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. ஆர்.என்.ரவி அவர்கள் சென்னை, காமராசர் சாலையில் நடைபெற்ற குடியரசு நாள் விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @M.K.Stalin அவர்கள் முன்னிலையில் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
#🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
சென்னை, காமராசர் சாலையில் நடைபெற்ற குடியரசு நாள் விழாவில், வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கங்கள், காந்தியடிகள் காவலர் பதக்கங்கள், கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம், டாக்டர் நாராயணசாமி நாயுடு வேளாண்மை விருது, சிறந்த காவல் நிலையத்திற்கான முதலமைச்சரின் கோப்பைகள் ஆகிய பதக்கங்களையும், கோப்பைகளையும் பெற்றவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @M.K.Stalin அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
#🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @M.K.Stalin அவர்கள் குடியரசு நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. ஆர்.என்.ரவி அவர்களுக்கு மலர்கொத்து வழங்கி வரவேற்றார்.
#🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
கள்ளக்குறிச்சி மாவட்டம் மற்றும் வட்டம், உடையநாச்சி கிராமத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @M.K.Stalin அவர்கள் அறிவித்துள்ளார்.
#🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @M.K.Stalin அவர்கள் காஞ்சிபுரத்தில் நடைபெறும் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள செல்லும் வழியில் பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு இல்லத்திற்கு சென்று, அவரது திருவுருவச் சிலைக்கு மலர் மாலை வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தி, அங்குள்ள பதிவேட்டில் கையொப்பமிட்டார்.
#🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @M.K.Stalin அவர்கள் காஞ்சிபுரத்தில் நடைபெறும் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள செல்லும் வழியில் பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு இல்லத்திற்கு சென்று, அவரது திருவுருவச் சிலைக்கு மலர் மாலை வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
#🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
தமிழ்மொழி தியாகிகள் நினைவு நாளையொட்டி, சென்னை, மூலக்கொத்தளத்தில் அமைந்துள்ள மொழிப்போராட்டத்தின் வெற்றி வெளிச்சத்திற்கு ஒளிவிளக்குகளாய் நின்று உயிர்துறந்த திருவாளர்கள் தாளமுத்து நடராசன் ஆகியோரது நினைவிடத்தில் அவர்களது திருவுருவப் படங்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @M.K.Stalin அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
#🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
தமிழ்மொழி தியாகிகள் நினைவு நாளையொட்டி, சென்னை, மூலக்கொத்தளத்தில் அமைந்துள்ள மொழிப்போர் தியாகி, சமூகப் போராளி டாக்டர்.எஸ்.தருமாம்பாள் அம்மையார் அவர்களது நினைவிடத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @M.K.Stalin அவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்
#🎥இன்றைய முக்கிய தகவல்🗞️












