
⍣⃝𓄂☞coffee day ⍣⃝𓄂☞
@coffeeday
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
இன்னும் கொஞ்சம் நாள் தான் எல்லாம் மாறிடும்...
வாழ்க்கையா மச்சி,
இல்ல, காலண்டர்.... 😏
#🩺💊 புதிய தாக தெரிந்து கொள்வோம்💊🩺
"தெரியாததை"
அவர்களுக்கு சொல்லிக்கொடுக்கிற போது
இருக்கிற "பெருமை "
இருக்கிறதை இல்லாதவர்க்கு
கொடுக்க "இருக்குமானால்" ...
#நீங்களும்
#🩺💊 புதிய தாக தெரிந்து கொள்வோம்💊🩺
_*ஒரு சாமியாரின் ஆசிரமத்துக்கு அவர் நண்பர் ஒருவர் வந்தார்..!!*_
_அவருக்கு உணவு கொடுக்க விரும்பிய *"சாமியார்",* தான் வளர்த்த குரங்கைப் பார்த்து இலை போடு என்றார்.._
_*குரங்கு வாழை இலை எடுத்து வந்து போட்டது..*_
_உடனே சாமியார் தன் கையில் வைத்திருந்த பிரம்பால் குரங்கின் தலையில் ஓங்கி அடித்து சாதம் போடு என்றார்..!!_
_*குரங்கு சாதம் கொண்டு வந்து பரிமாறியது..*_
_திரும்பவும் தலையில் அடித்தார்..!!_
_அவர் சொன்னதை எல்லாம் குரங்கு சரியாகச் செய்தாலும் அடி விழுந்து கொண்டே இருந்தது..._
_*நண்பருக்கு மனம் பொறுக்கவில்லை..*_
_சாமி குரங்கு தான் நீங்கள் சொன்னதை எல்லாம் சரியாகச் செய்கின்றதே..??_
_*அந்த வாயில்லாச் ஜீவனை ஏன் அடித்துத் துன்புறுத்துகிறீர்கள் என்று கேட்டார்..!!*_
_சாமியார் எதுவும் பேசவில்லை.._
_*சிரித்து விட்டுப் பிரம்பை தானிருந்த பாயின் கீழே ஒளித்து வைத்தார்...*_
_சற்று நேரத்தில் குரங்கு தாவிப் பாய்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவரின் தோளில் ஏறி இருந்தது.._
_*காதைப் பிடித்து இழுத்தது..*_
_தலை மயிரைப் பிரித்துப் பேன் பார்த்தது..._
_*சாப்பிட்ட இலையில் வாலைத் தொங்க விட்டு ஆட்டியது..*_
_உடனே சாமியார் நண்பர்,_
_ஐயோ சாமி இந்தக் குரங்கின் தொல்லை தாங்க முடியவில்லை அடி போடுங்கள் என்றார் நண்பர்..!!!_
_*உடனே சாமியார் பிரம்பை எடுத்துக் குரங்கின் தலையில் அடித்தார்..*_
_அது போய் ஒரு மூலையில் அமைதியாக இருந்தது.._
_*உடனே*_
_*சாமியார் சொன்னார்...*_
_இந்தக் குரங்கைப்_ _போலத் தான்_
_மனித_ _மனங்களும்..._
_*நாம் சொன்னதை எல்லாம் மனம் கேட்டு நடக்கின்றதே என்று விட்டு விடக் கூடாது..!!*_
_*ஜபம், பூஜை, தியானம், தவவிரதங்கள் என்னும் பிரம்புகளால் தொடர்ந்து தட்டிக் கொண்டே இருக்க வேண்டும்..!!*_
_சற்று ஓய்வு கொடுத்தாலும் மனிதனின் மனம் தாவத் தொடங்கி விடும் என்றார்..!_
#🩺💊 புதிய தாக தெரிந்து கொள்வோம்💊🩺
_*இருள் உள்ள*_
_*இடத்தில்*_ _*விளக்கை வை*_
_*இருள் உள்ள*_
_*உள்ளத்தை விலக்கி வை.*_
_இதுவும்_
_கடந்து போகும் என நினைத்தால் நம்பிக்கை........._
_இதையும்_
_கடந்து போவேன் என நினைத்தால் தன்னம்பிக்கை._
_*பிரச்சனைகள்*_
_*இல்லாத*_ _*வாழ்க்கைக்கு*_ _*என்ன செய்ய வேண்டும்.*_
_*1) யாரையும் குறை*_ _*கூறாதீர்கள்.*_
_*2) யாரிடமும்*_ _*வாதத்தில் ஈடுபடாதீர்கள்.*_
_இந்த இரண்டைப் பற்றிய_ _உண்மையை_ _நீங்கள் உணர்ந்து கொண்டாலே,_ _உங்களுக்கு ஏற்படும்_ _முக்கால்வாசி_ _பிரச்சனைகளில் இருந்து,_
_நீங்கள் விலகி இருக்கலாம்._
#🩺💊 புதிய தாக தெரிந்து கொள்வோம்💊🩺
*சபரிமலைக்கு போகும்போதும், திரும்பும்போதும் தேங்காய் உடைப்பது ஏன்*🍀
வருடா வருடம் சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்கள் கல்லையும், முள்ளையும் காலுக்கு மெத்தையாக மிதித்துக் கடந்து சுவாமி ஐயப்பனை தரிசிக்கிறார்கள். இப்படி அவர்கள் கடினமான காட்டுப்பகுதியை கடந்து வரும்போது ஐயப்பன் அவர்களுக்குக் காவலாக இருப்பார். ஆனால், அந்த ஐயப்பனின் பக்தர்கள் வீட்டை காவல் காப்பது யார் தெரியுமா? அதைப்பற்றி இந்தப் பதிவில் காணலாம்.
ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்குச் செல்வதற்கு முன்பு வீட்டில் ஒரு தேங்காய் உடைத்துவிட்டுதான் கிளம்புவார்கள். அதேபோல, சபரிமலையில் இருந்து வீடு திரும்பியதும் வீட்டில் தேங்காய் உடைத்த பின்னரே வீட்டிற்குள் நுழைவார்கள்.
இதற்கான காரணம் என்னவென்று தெரியுமா? ஐயப்பன் கருப்பண்ண சுவாமியிடம், ‘மாலைப்போட்டு, விரதமிருந்து சபரிமலைக்கு வரும் பக்தர்களை நான் பார்த்துக்கொள்வேன். அவர்களுடைய குடும்பத்தாரை பார்த்துக்கொள்வது உனது பொறுப்பு’ என்று ஐயப்பன் கருப்பண்ணசாமிக்கு கட்டளையிடுகிறார்.
‘இதை நான் எப்படி தெரிந்துக்கொள்வது’ என்று கருப்பண்ணசாமி கேட்க, அதற்கு ஐயப்ப சுவாமி, ‘சபரிமலைக்கு வீட்டில் இருந்து செல்வதற்கு முன்பு ஒரு தேங்காய் உடைப்பார்கள். அந்த தேங்காய் சத்தத்தை கேட்டதுமே அவர்கள் வீட்டிலே போய் நீ காவலாக இருக்க வேண்டும்’ என்று கூறுகிறார்.
அதையடுத்து, ‘எவ்வளவு நாள் நான் காவலாக இருக்க வேண்டும்?’ என்று கருப்பண்ணசாமி கேட்கிறார். ‘சபரிமலையில் இருந்து அவர்கள் திரும்பி வந்ததும் இன்னொரு தேங்காய் உடைப்பார்கள். அந்தத் தேங்காய் சத்தத்தை கேட்டதும் நீ கிளம்பலாம்’ என்று ஐயப்பன் கூறுகிறார்.
சபரிமலைக்குச் சென்றுவிட்டு திரும்பிவரும் வரை அந்த பக்தர்களின் வீட்டில் காவலாக கருப்பண்ணசாமி இருக்கிறார். அதனால்தான் சபரிமலைக்கு போகும்போதும், சபரிமலையிலிருந்து திரும்பி வீட்டிற்கு வந்ததும் தேங்காய்கள் உடைக்கப்படுகிறது.
ஐயப்பன் வழிபாட்டில் தேங்காய் இன்றியமையாததாகும். இருமுடியில் நெய் தேங்காய் கட்டி எடுத்துச் சென்று தேங்காயை உடைத்து நெய்யை மட்டும் எடுத்து ஐயப்பனுக்கு அபிஷேகத்திற்குக் கொடுப்பார்கள். இதில் தேங்காய் என்பது உடல், நெய் என்பது நம்முடைய ஆன்மா என்று பொருள். அத்தகைய நெய்யை வைத்து ஐயப்பனை அபிஷேகம் செய்யும்போது நம்முடைய ஆன்மாவும் பரிசுத்தமாக அவனை நோக்கிச் செல்வதாகக் கூறப்படுகிறது.
தேங்காயில் எப்படி நார்கள் இருக்கிறதோ, அதேபோலதான் மனிதனின் இதயத்திலும் தசைநார்கள் உள்ளன. தேங்காயின் உள்ளே இருக்கும் நீரைப் போல மனிதனின் உள்ளேயுமே கலங்கலான எண்ணங்கள் அமைந்துள்ளள. இதை குறிப்பதற்காகத்தான் ஐயப்ப சுவாமி வழிபாட்டில் தேங்காய் பயன்படுத்தப்படுகிறது.🌹
#god
*கோரக்கர் சித்தர் தோன்றிய வரலாறு*
சிவபெருமானாலேயே பெயர் சூட்டப்பட்ட சித்தர், மச்சேந்திர நாதர்.
கோரக்கர் வரலாறு விரிவானது
சிவபெருமானாலேயே பெயர் சூட்டப்பட்ட சித்தர், மச்சேந்திர நாதர். அந்த சித்தர் ஒரு வீட்டு வாசலில் நின்று, உணவு கேட்டார். உணவு கொண்டு வந்த பெண், சித்தரை வணங்கி, "சுவாமி! எனக்குப் பிள்ளைப்பேறு கிடைக்க வேண்டும். ஆசி கூறுங்கள்!" என வேண்டி, பிட்சை இட்டாள். "உன் ஆசை நிறைவேறும்" என்ற சித்தர், விபூதியை மந்திரித்துப் பிரசாதமாக அளித்தார். "இதைச் சாப்பிடம்மா! உனக்கு ஆண் குழந்தை பிறக்கும்" எனக்கூறிச் சென்றார்.
அதைப் பார்த்துக் கொண்டிருந்த பக்கத்து வீட்டுக்காரி, "இந்த மாதிரி ஆளுங்க, மயக்கி இழுத்துக்கிட்டுப் போயிடுவாங்க. பேசாம அந்த விபூதிய அடுப்புல போட்டுடு!" என்றாள். அதை நம்பிய பெண், சித்தர் மந்திரித்துத் தந்த விபூதியை அடுப்புச் சாம்பலுடன் கலந்து, கொல்லைப்பக்கம் குப்பை மேட்டில் கொட்டி விட்டாள்.
ஒன்பது வருடங்கள் ஆயின. சித்தர் மறுபடியும் வந்தார். தான் ஏற்கனவே விபூதி தந்த பெண் வீட்டிற்குப் சென்று, "பெண்ணே! எங்கே உன் மகன்? நான் அவனைப் பார்க்க வேண்டும்" என்றார்.
அவர் காலில் விழுந்து வணங்கிய பெண், "சுவாமி! மன்னியுங்கள்! பக்கத்து வீட்டுக்காரியின் பேச்சைக் கேட்டு, தாங்கள் தந்த விபூதிப் பிரசாதத்தைக் குப்பைமேட்டில் போட்டு விட்டேன்" என்றாள்.
"சரிம்மா! அந்தக் குப்பைமேடு எங்கே இருக்கிறது?" எனக் கேட்டார் சித்தர். அவரை அழைத்துப்போய் குப்பை மேட்டைக் காட்டினாள் அந்தப் பெண். அங்கு போன சித்தர், "கோரக்கா!" என்றார்.
"என்ன?" எனக்குரல் வந்தது, குப்பை மேட்டில் இருந்து. சித்தர் உத்தரவின் பேரில் குப்பை மேட்டை கொஞ்சம் கொஞ்சமாக அகற்றினார்கள். அங்கே குப்பை மேட்டின் அடியில், ஒன்பது வயதான ஆண் குழந்தை ஒன்று, தவம் செய்யும் நிலையில் இருந்தது.
அந்தக் குழந்தைதான், கோரக்கர். இந்தக் கோரக்கரால் உருவானது தான் `கோரக்கர் மூலிகை'. இதன் மகிமையை 'அருளைக் கலம்பகம்' எனும் பழைமையான தமிழ்நூல் கூறுகிறது. கோரக்கர் வரலாறு விரிவானது.🌹
#god
*கருடன், 'கருடாழ்வார்' ஆனது எப்படி? கருடாழ்வாரை ‘பெரிய திருவடி’ என்று அழைப்பது ஏன்?*🌹
கருடனுக்குக் கருடாழ்வார் என்ற பெயருண்டு. இந்தப் பெயர் எப்படி வந்தது தெரியுமா?
கிருதயுகத்தில் அஹோபிலத்தைக் கொடுங்கோலனாக ஆட்சி செய்து கொண்டிருந்த இரண்யகசிபுவை அழித்துத் தன் பக்தனான பிரகலாதனைக் காப்பாற்ற விஷ்ணு எடுத்த தோற்றம், மனிதன் மற்றும் சிங்க உருவிலான நரசிம்மத் தோற்றமாகும். பிரகலாதனைக் காக்க இறைவன் நரசிம்ம மூர்த்தியாக இரண்யன் அரண்மணைத் தூணிலிருந்து தோற்றம் பெற்றதால், அவர் கருடன் மேல் எழுந்தருளி வராமல், கருடனை விடுத்துத் தனியாக வர வேண்டியதாயிற்று. இது பற்றி அறிந்த கருடன் மிகவும் துயரமடைந்து, இறைவனிடம் தனக்கு நரசிம்மத் தோற்றக் காட்சியைக் காட்டி அருளும்படி வேண்டினார். இறைவன் கருடனை அகோபிலம் சென்று தவமியற்றும்படி கூறி, தான் அங்கேயே நரசிம்மர் தோற்றத்தில் காட்சி தருவதாக உறுதியளித்தார். கருடனும் அகோபிலம் சென்று தவமியற்ற, இறைவன் அங்கிருந்த மலைக்குகையில் உக்ர நரசிம்மராய் அவருக்குக் காட்சியளித்தார். மாறாத பக்தி கொண்டு இறைவனின் சேவையே பெரிது என்று அவரிடம் முழுமையாகச் சரணடைந்ததால் கருடன், கருடாழ்வார் என்று போற்றி அழைக்கப்படுகிறார்.
கருடாழ்வாரை ‘பெரிய திருவடி’ என்று அழைப்பது ஏனென்று தெரியுமா?
வைணவச் சமய ஈடுபாடுடையவர்கள், கருடனைப் பெரிய திருவடி என்றும், அனுமனைச் சிறிய திருவடி என்றும் அழைப்பதுண்டு. கருடனின் வலிமையைக் கண்ட இறைவன் விஷ்ணு, கருடனைத் தனது வாகனமாக ஆக்கிக் கொண்டார். ‘இவனது வலிமை கண்டு திருமால் கேட்டுக் கொள்ள, வாகனமும் கொடியும் ஆனவன்’ என்று அபிதான சிந்தாமணி கருடனைப் பற்றிச் சொல்கிறது. வாகனத்தின் மீது ஏறி அமர்கின்ற போது, அதன் மீது திருமாலின் திருவடி படுகின்ற தன்மையால் ‘திருவடி’ என்னும் சிறப்புப் பெயர் விளங்குகிறது. கருடன்தான் இறைவன் விஷ்ணுவின் முதன்மை வாகனம் என்பதால், கருடன் பெரிய திருவடியாகிறார். அதன் பிறகு, இராமாயண காலத்தில் இறைவனுக்கு அனுமன் வாகனமாக இருந்ததால், அனுமன் ‘சிறிய திருவடி’ எனப்படுகிறார்.🌹
#god
*கோயில் குடமுழுக்கின்போது கருட தரிசனம் ஏன் தெரியுமா?*
திருக்கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெறும்போது அந்தக் குறிப்பிட்ட முகூர்த்த நேரத்தில் எங்கிருந்தாவது கருடன் வந்து விமானத்தையும் ராஜகோபுரத்தையும் திருக்கோயில் வளாகத்தையும் வட்டமிட்டு பறந்து சென்று விடுவது தவறாமல் நடைபெற்று வரும் அதிசய நிகழ்வாகும். அந்தத் தருணத்தில் பக்தர்கள் அனைவரும் பரவச நிலையை அடைவர். வைணவ திருக்கோயில்கள் ஆனாலும் சிவபெருமான் திருக்கோயில் ஆனாலும் முருகன், விநாயகர், அம்மன் திருக்கோயிலானாலும் குடமுழுக்கின்போது இவ்விதம் தவறாமல் கருடன் வந்து வட்டமடுகிறது.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் குருக்ஷேத்திர புண்ணிய பூமியில் ஸ்ரீமத் பகவத் கீதையில் ‘வைநதேயஸ்ச பக்ஷீணாம்’ என்று அருளியிருக்கிறார். அதாவது, ‘பறவைகளில் நான் வைநதேயனாக (கருடனாக) இருக்கிறேன்’ என்று பொருள். இதிலிருந்து பறவைகள் பட்சிகள் ஆகியவற்றில் கருடனே மிகச் சிறந்தவன் என்று தெரிகிறது அல்லவா? பறவைகளுக்கும் பட்சிகளுக்கும் சில விசேஷ தெய்வீக சக்தி உண்டு.
கருடனுக்கு மகாவிஷ்ணுவின் சக்தி உண்டு. காகத்திற்கு பித்ருக்களின் சக்தி உண்டு. ஆந்தைக்கு எமதர்மராஜனின் சக்தி உள்ளது. பச்சைக் கிளிக்கு மகாலட்சுமியின் சக்தி உண்டு. மயிலுக்கு முருகனின் சக்தி உண்டு. இதேபோன்று நாய்களுக்கும் பல்லி போன்றவற்றுக்கும் சில விசேஷ தெய்வீக சக்திகள் உள்ளன. விந்தையின் புதல்வனாகப் பிறந்ததால் கருடனுக்கு வைநதேயன் என்ற பெயரும் உண்டு. தேவர்களாலும் பூஜிக்கப்படும் பெருமை பெற்றவன் கருடன். அவனது மூத்த சகோதரரான மாதலி சூரிய பகவானின் தங்கமயமான ரதத்திற்கு சாரதியாகி சூரிய மண்டலத்தை வலம் வரும் பேறு பெற்றவன்.
அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம், குடமுழுக்கு, மகா சம்ப்ரோஷணம் என்றெல்லாம் புராதன நூல்களில் கொண்டாடப்படும் பிராண பிரயோக முறை நிலைகளின்போது பறவைகள், பட்சிகள், மிருகங்கள், பிராணிகள், மனிதர்கள் ஆகியோரிடமும் நல்ல விளைவுகளை ஏற்படுத்துகின்றன. அந்தக் குடமுழுக்கு புனித நீர் அத்தகைய மகத்தான வீரியம் செலுத்தப்பட்டதாகும். கிளி போன்ற சிறு சிறு பட்சிகள் கூட அந்தப் பிராண சக்தியின் வேகத்தினால் ஈர்க்கப்பட்டு குடமுழுக்கு நடக்கும் தருணத்தில் கோயில் விமானம், கோபுரம் ஆகியவற்றின் மீது பறப்பதைக் காணலாம்.
கருடன் விமான கலசத்தின் நேர் மேலே அங்கு தேங்கி உள்ள மந்திர சக்தியினால் வட்டமிடும். இதே காரணத்தினால்தான் கும்பாபிஷேக சமயத்தில் எங்கே இருந்தாவது ஒரு துறவி அல்லது சன்னியாசி அல்லது ஒரு சித்த புருஷர் அல்லது ஒரு மகா புருஷராவது எவ்விதமோ அங்கு வந்து விடுவார்கள்.
மனிதர்களின் உடல், உள்ளம் ஆகியவற்றில் உள்ள அனைத்து தோஷங்களையும் குடமுழுக்கு தரிசனம் போக்கிவிடும். ஆதலால் எந்தத் திருக்கோயிலில் குடமுழுக்கு நடைபெற்றாலும் அது சிறு கோயிலாக இருந்தாலும் சரி அல்லது மிகப்பெரிய கோயிலாக இருந்தாலும் சரி மக்கள் அனைவரும் தவறாமல் சென்று தரிசிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும்.🌹
#god
*மதுரை பாதாள குபேர பைரவர்*
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் பலவிதமான சுவாரசியமான சுவாமி சன்னதிகள் இருக்கின்றன.
அப்படி வெளிப்புறத்தில் இருக்கக்கூடிய சுவாரசியமான கோயில்களில் ஒன்றுதான் பாதாள குபேர பைரவர் கோயில்.
மதுரை வடக்கு கோபுர வாசல் மேற்கு கோபுர வாசல் சந்திக்கும் இடத்தில் பழைய பெமினாஜவுளி கோபி அய்யங்கார் கடை மூலையில் மீனாட்சி அம்மன் கோயில் பூந்தோட்ட வளாகத்தில் சரியாக தினமும் ராகு கால நேரத்தில் மட்டுமே திறந்து பூஜைகள் நடக்கும் அற்புத “குபேர பாதாள பைரவர் கோயில்”
அமைந்துள்ளது.
இந்த கோயிலின் சன்னதி ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மட்டுமே திறக்கப்படும்.
அதாவது ஒவ்வொரு நாளும் வரக்கூடிய ராகு காலத்தில் மட்டுமே கோயிலின் சன்னதி திறக்கப்பட்டு பூஜைகள் செய்யப்படும் என்பது சிறப்புகளாக இருக்கின்றது தற்பொழுது வரை அதே நடைமுறை பின்பற்றப்படுகிறது.
அதுவும் ராகு காலத்தில் நடை திறக்கப்பட்டு ராகு காலம் முடியும் நேரத்தில் நடை சாத்தப்படும்.ராகு காலத்தில் மட்டுமே இந்த பைரவருக்கு பூஜைகள் நடைபெறும்.
திங்களன்று
காலை 7.30 முதல் 9 மணி வரையும்
செவ்வாயன்று
மதியம் 3 முதல்
4.30 மணி வரையும்
புதனன்று
12 மணி முதல் 1.30மணி வரையும்
வியாழனன்று
மதியம்1.30 மணி முதல்
3.00 மணி வரை
வெள்ளிக்கிழமையனறு
10.30 முதல்
12 மணி வரையும்
சனிக்கிழமையன்று
காலை 9 முதல் 10.30 மணி வரையும்
ஞாயிறன்று
4.30 மணி முதல் 6 மணி வரை
மட்டுமே இந்த கோவில் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுகிறது.
ஒரு மணி நேரம் மட்டுமே திறக்கப்படும் இந்த பாதாள குபேர பைரவரை வழிபடுவதன் மூலமாக செல்வ செழிப்பிற்கு பஞ்சம் இருக்காது என்றும் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள் தீர வழி வகுக்கக் கூடியவையாகவும்,
திருமண தடை, குழந்தை பாக்கியம், நீண்ட ஆயுளுடன்ஆரோக்கியமாக வாழ வழிவகுக்கும் என்று சொல்லப்படுகின்றது
.இந்த பைரவர் பாதாள குபேர பைரவராக காட்சியளிப்பதால் செல்வச் செழிப்பிற்கு பஞ்சம் இருக்காது.
அது மட்டும் அல்லாது குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள்,
தடைகள், சிக்கல்கள், பில்லி, சூனியம் என அனைத்தையும் விரட்டி அடிக்கிறார்.பக்தர்கள் வேண்டும் வேண்டுதலுக்கு உடனே செவிசாய்த்து வேண்டுதலை நிறைவேற்றுகிறார்.
பூர்வ ஜென்ம பலன் இருப்பவரால் மட்டுமே இந்த பைரவரை தரிசிக்க முடியும்.
ராகு காலத்தில் மட்டும் திறக்கப்பட்டு பூஜை செய்யப்படும் இந்த குபேர பைரவர் சக்தி வாய்ந்த பைரவராக இருப்பதினால்
மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் போது இக்கோயிலுக்கு வந்து குபேர பைரவரை தரிசனம் செய்யலாம்.
#god
பஞ்ச புராணம் -
தேவாரம்
வேய் உறு தோளி பங்கன், விடம் உண்ட கண்டன், மிகநல்ல வீணை தடவி, மாசு அறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து, என் உளமே புகுந்த அதனால் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் வியாழம், வெள்ளி, சனி, பாம்பு இரண்டும், உடனே ஆசு அறு; நல்ல நல்ல; அவை நல்ல நல்ல, அடியார் அவர்க்கு மிகவே.
திருவாசகம்
பாரொடு, விண்ணாய், பரந்த, எம் பரனே! பற்று நான் மற்று இலேன் கண்டாய்; சீரொடு பொலிவாய், சிவபுரத்து அரசே! திருப்பெருந்துறை உறை சிவனே! ஆரொடு நோகேன்? ஆர்க்கு எடுத்து உரைக்கேன்? ஆண்ட நீ அருளிலையானால், வார் கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய்; வருக' என்று, அருள் புரியாயே
திருவிசைப்பா
தனதன்நல் தோழா சங்கரா! சூல பாணியே! தாணுவே சிவனே! கனகநல் தூணே! கற்பகக் கொழுந்தே கண்கள்மூன் றுடையதோர் கரும்பே! அனகனே குமர விநாயக சனக அம்பலத்து அமரசே கரனே ! நுனகழல் இணையென் நெஞ்சினுள் இனிதாத் தொண்டனேன் நுகருமா நுகரே
திருப்பல்லாண்டு
குழல் ஒலி யாழ்ஒலி கூத்தொலி ஏத்தொலி எங்கும் குழாம்பெருகி விழவொலி விண்ணள வுஞ்சென்று விம்மி மிகுதிரு வாரூரின் மழவிடை யாற்கு வழிவழி ஆளாய் மணஞ்செய் குடிப்பிறந்த பழவடி யாரொடுங் கூடிஎம்மானுக்கே பல்லாண்டு கூறுதுமே
பெரியபுராணம்
திருநாவுக்கு அரசர்வளர் திருத்தொண்டின் நெறிவாழ வருஞானத் தவமுனிவர் வாகீசர் வாய்மைதிகழ் பெருநாமச் சீர்பரவல் உறுகின்றேன் பேருலகில் ஒருநாவுக்கு உரைசெய்ய ஒண்ணாமை உணராதேன்!✍🏼🌹 #god












