@dmk_thoothukkudi
@dmk_thoothukkudi

DMK Thoothukkudi

Dravida Munnetra Kazhagam's official Sharechat account for Thoothukkudi Assembly Constituency.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஒரு நபர் கமிஷன் விசாரணைக்கு திருமதி.கீதாஜீவன் எம்எல்ஏ நேரில் விளக்கம் அளித்தார். மக்களின் உணர்வினை அரசு மதித்து நடக்க வேண்டும் என பேட்டியளித்தார். தூத்துக்குடியில் கடந்த ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் இறுதி நாளான மே 22-ம் தேதி அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பொதுமக்கள் பேரணி சென்ற பொழுது கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசு ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் கமிஷனை அமைத்து உத்தரவிட்டது. ஒரு நபர் கமிஷன் ஆணையமானது 15-வது கட்டமாக தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறது. பதினைந்தாவது கட்ட விசாரணையானது கடந்த 16ம் தேதி தொடங்கியது. இந்த விசாரணை நாளை 19ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. விசாரணைக்கு ஆஜராகுமாறு 20 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில் இன்று திருமதி.கீதாஜீவன் எம்எல்ஏ தனது ஆதரவாளர்களுடன் ஒரு நபர் கமிஷனர் ஆஜராவதற்காக வந்திருந்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், "தூத்துக்குடியில் கடந்த ஆண்டு மே 22 ஆம் தேதி நடைபெற்ற துயர சம்பவம் குறித்து நாம் அனைவரும் அறிந்ததே. துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என ஆணையம் சம்மன் அனுப்பியது. அதற்காக இன்று ஒருநபர் கமிஷன் முன்பு தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்து விளக்கம் அளிக்க வந்துள்ளேன். தூத்துக்குடியில் நடைபெற்ற இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு முழுக்க முழுக்க அரசின் அலட்சியப் போக்கே காரணம். அரசு மெத்தனமாக, மக்களின் உணர்வுகளை மதிக்காததே காரணம். நூறு நாட்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராடி இருக்கிறார்கள். போராட்டக்காரர்களிடம் அரசு சமாதானம் பேசவில்லை. அமைதி கூட்டங்களில் எதிர்ப்பாளர்களை அழைக்கவில்லை. சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைக்கவில்லை. ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாளர்களை மட்டுமே அழைத்து கூட்டம் நடத்தி இருக்கிறார்கள். துப்பாக்கிச்சூட்டுக்கு யார் அனுமதி தந்தார்கள் என்று இன்னமும் தெரியவில்லை. சம்பவத்தன்று மாவட்ட ஆட்சியர் இல்லை. முதலமைச்சர் துப்பாக்கிச்சூடு நடந்தது எனக்கு தெரியாது என்கிறார். எனவே இந்த சம்பவத்திற்கு முழுக்க காரணம் தமிழக அரசின் நிர்வாக சீர்கேடு தான். தலைவர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் சொன்னது போல மக்களின் உணர்வுகளை மதிக்கவேண்டும். மக்களுக்காகத்தான் அரசாங்கம் செயல்படுகிறது என்பதை உணர வேண்டும். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக திமுகவும் மக்களோடு மக்களாக போராட்டங்களை நடத்தி இருக்கிறது மக்களுக்காக குரல் கொடுத்து இருக்கிறது. ஆகவே மக்களின் உணர்வினை மதிப்பளித்து இந்த அரசு நடக்க வேண்டும் என்பதையே நானும் வலியுறுத்துகிறேன்" என்றார்.
#

DMKThoothukkudi

DMKThoothukkudi   - ShareChat
189 காட்சிகள்
2 நாட்களுக்கு முன்
#

நாங்குநேரி

நாங்குநேரி இடைத்தேர்தல் இரண்டாம் கட்ட பரப்புரைக்காக நமது கழகத் தலைவர் இன்று மாலை 4 மணிக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுகவுக்கு ஒதுக்கப்பட்ட பாளையங்கோட்டை ஒன்றியம் KTC நகர் வடபாகத்திற்கு வருகை தரவிருக்கிறார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் (மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, பேரூர், வட்டக் கழக நிர்வாகிகள், கழக சார்பு அணி நிர்வாகிகள்) அனைவரும் மற்றும் கழக உடன்பிறப்புகள் மாவட்ட பொறுப்பாளர் திருமதி. பெ.கீதாஜீவன் எம்எல்ஏ., அவர்கள் தலைமையில் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
172 காட்சிகள்
5 நாட்களுக்கு முன்
பேரறிஞர் அண்ணா அவர்களின் 111வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் திருமதி. கீதாஜீவன் MLA அவர்கள் தலைமையில் கீதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கவிதை மற்றும் கட்டுரை ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது. ஏராளமான மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்ச்சிக்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் திரு.ஜெகன் பெரியசாமி அவர்கள் முன்னிலை வகித்தார். இதில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி நிர்வாகிகள், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
#

DMKThoothukkudi

DMKThoothukkudi   - ShareChat
145 காட்சிகள்
8 நாட்களுக்கு முன்
மற்ற ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
லிங்க் காப்பி செய்ய
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட்...
Embed Post
மற்ற ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
அன்ஃபாலோவ்
லிங்க் காப்பி செய்ய
புகாரளி
தடுக்க
நான் புகார் தெரிவிக்கிறேன் ஏனென்றால்