@dmk_villupuram
@dmk_villupuram

DMK Villupuram

Dravida Munnetra Kazhagam's official Sharechat account for Villupuram Assembly Constituency.

இன்றைய முரசொலியில்..#DMKViluppuram #🧑 தி.மு.க
கள்ளக்குறிச்சி மாவட்டம், க.அலம்பலம் ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் திடக்கழிவை சேகரிக்க வழங்கப்பட்ட பேட்டரி வாகனத்தை வனிதா என்பவர் தனது மகனுடன் (பாலாஜி) ஓட்டி சென்ற போது எதிர்பாராத விதமாக சாலை ஓரம் உள்ள விவசாய கிணற்றில் வாகனத்துடன் விழுந்தனர். சிறுவன் பாலாஜி மட்டும் இந்த விபத்தில் உயிரிழந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொண்டு, பாலாஜியின் குடும்பத்தாரை கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் பொன்.கௌதமசிகாமணி அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிதியுதவி அளித்தார். ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். #DMKViluppuram #🧑 தி.மு.க
விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளர் முனைவர்  திரு.க.பொன்முடி எம்.எல்.ஏ அவர்கள், உடல் நலம் குன்றிய   விக்கிரவாண்டி மேற்கு ஒன்றியச் செயலாளர் வேம்பி ரவி அவர்களை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்து ஆறுதல் கூறினார். #DMKViluppuram #🧑 தி.மு.க
கள்ளக்குறிச்சி மூரார்ப்பாளையம் ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனையை கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் திரு.பொன்.கௌதமசிகாமணி அவர்கள் திறந்து வைத்து வாழ்த்துக்களை தெரிவித்தார், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.தா.உதயசூரியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். #DMKViluppuram #🧑 தி.மு.க
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் திரு.பொன்.கௌதமசிகாமணி அவர்கள் கள்ளக்குறிச்சி நகரச் செயலாளர் சுப்புராயலு அவர்களை சந்தித்து உடல்நலம் விசாரித்து ஆறுதல் கூறினார், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் தா.உதயசூரியன் மற்றும் பலர் உடன் இருந்தனர். #DMKViluppuram #🧑 தி.மு.க
விழுப்புரம் மத்திய மாவட்டம் கோலியனூர் கிழக்கு ஒன்றியம் அரசமங்கலம் ஊராட்சி செயலாளர் முருகானந்தம் இயற்கை எய்தினார், அன்னாரின் உடலுக்கு விழுப்புரம் மத்திய மாவட்டக் கழகச் செயலாளர் முனைவர் திரு.க.பொன்முடி எம்.எல்.ஏ அவர்கள் அஞ்சலி செலுத்தி அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். #DMKViluppuram #🧑 தி.மு.க
விழுப்புரம் தெற்கு மாவட்ட அவைத்தலைவர் ராமமூர்த்தி அவர்கள் ரயில்வே கமிட்டி உறுப்பினர் ஆனதை தொடர்ந்து கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் திரு.பொன்.கௌதமசிகாமணி  அவர்களை சந்தித்து வாழ்த்துக்களைப் பெற்று தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார். #DMKViluppuram #🧑 தி.மு.க