@drsuru
@drsuru

Dr. Sureshkumar Swamikkannu

Be happy and make others happy😍😍😍

#

🚹உளவியல் சிந்தனை

■எது வாழ்க்கை?■ 💮 *உலகப்பேரழகி கிளியோபாட்ராவின் கல்லறை வாசகம*். "உலகத்திலேயே அழகானப் பிணம் இங்கே உறங்கிக்கொண்டு இருக்கிறது. நல்ல வேளை இவள் பிணமானாள், இல்லாவிட்டால் இந்தக் கல்லறைக்குள் ரோமாபுரி சாம்ராஜ்யமே பிணமாகியிருக்கும்." 💮 *மகா அலெக்சாண்டரின் கல்லறை வாசகங்கள்*. "இந்த உலகம் முழுவதுமே போதாது என்று சொன்னவனுக்கு , இந்தக் கல்லறைக் குழி போதுமானதாக ஆகிவிட்டது." 💮 *ஒரு தொழிலாளியின் கல்லறை வாசகம*். "இங்கே புதை குழியில் கூட இவன் கறையான்களால் சுரண்டப்படுகிறான்." 💮 *அரசியல்வாதியின் கல்லறையில்*, "தயவு செய்து இங்கே கை தட்டி விடாதீர்கள், இவன் எழுந்து விடக்கூடாது." 💮 *ஒரு விலை மகளின் கல்லறை வாசகம்.* "இங்கு தான் இவள் தனியாகத் தூங்குகிறாள், தொந்தரவு செய்யாதீர்கள், பாவம் இனி வர முடியாது இவளால்." இவ்வளவு தானா வாழ்க்கை❓ ஆம் அதிலென்ன சந்தேகம். ஆனானப்பட்டவர்களின் ஆட்டமெல்லாம் அடங்கிப்போனது அடையாளம் தெரியாமல். உலகையே நடுங்க வைத்த *ஹிட்லர்* தன் சாவைக்கண்டு நடுங்கி ஒடுங்கி அடங்கிப்போனான். அவனோடு கூட்டு சேர்ந்து சர்வாதிகார ஆட்டம் போட்ட *முசோலினி* இறந்த போது ரஷ்ய தலை நகரில் முசோலினியின் பிணத்தை தலைகீழாக தொங்க விட்டு ஒரு வாரம் வரை அத்தனை பொதுமக்களும் தங்களது செறுப்பால் அந்தப்பிணத்தை அடித்து தங்கள் மனக்குமுறலை தீர்த்துக் கொண்டார்கள். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஆணவக்காரர்கள் அடங்கிப்போன கதைகளை. நாம் *எதை* ஆதாரமாக வைத்து ஆணவப்படுகிறோம்❓ ●நமது *பதவியா?* ●நாம் சேர்த்த சொத்து சுகங்களா? ●நமது *படிப்பா?* ●நமது *வீடா?* ●நம் முன்னோர்களின் *ஆஸ்தியா?* ●நமது *அறிவா?* ●நமது *பிள்ளைகளா?* எது நம்மைக் காப்பாற்றப் போகிறது? *ரத்தம் சுருங்கி, நமது சுற்றமெல்லாம் ஒதுங்கியபின் எதுவுமே நம்மை காப்பாற்றப்போவதில்லை*. *பசித்தவனுக்கு உணவு கொடுத்து, உடை இல்லாதவனுக்கு உடை கொடுத்து, எல்லாரையும் நேசித்து , மன தூய்மையான வாழ்க்கையை வாழுபவர்கள் மட்டுமே என்றென்றும் வாழ்பவர்கள்.* கேவலம் அற்ப சுகங்களுக்காக, தமது வாழ்க்கையை பாழாக்கிக்கொள்ளும் ஆண்களும், பெண்களும் பெருகி வரும் சமூகத்தில் வாழும் நாம் எச்சரிக்கையோடு நம்மை காத்துக்கொள்ள வேண்டும். *ஒரே முறை வாழப்போகிறோம*், எதை விதைக்கிறோமோ அதைத்தான் பல நூறு மடங்காக அறுவடை செய்யப்போகிறோம். நல்ல செயல்களை, எண்ணங்களை விதைப்போம். அளவில்லா மகிழ்ச்சியோடு அறுவடை செய்வோம் நன்மைகளை ஆயிர மடங்காக. ■பிறரை வாழ வைத்து வாழ்வோம்.■ #🚹உளவியல் சிந்தனை
374 காட்சிகள்
13 மணி நேரத்துக்கு முன்
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
அன்பாலோவ்
காப்பி லிங்க்
புகார்
தடுக்க
நான் புகார் தெரிவிக்கிறேன் ஏனெனில்