
பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை
@hnjbc
இயேசுவின் இரகசிய வருகைக்கு ஆயத்தமாகும் சபை...
இன்றைய வசனம் : 20/01/2026
#✝️இயேசுவே ஜீவன் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏ஆன்மீகம் #🙏கோவில் #✝பைபிள் வசனங்கள்
கடைசிக்காலத்திலே வெளிப்பட ஆயத்தமாக்கப்பட்டிருக்கிற இரட்சிப்பு. (1 பேதுரு 1:5)
#🙏ஆன்மீகம் #✝பைபிள் வசனங்கள் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில் #✝️இயேசுவே ஜீவன்
இன்றைய வெளிப்படுத்தின விசேஷ தியானம் : 19/01/2026
வெளிப்படுத்தின விசேஷம் விளக்கம் POST - 259
(V) iii) 4) சத்துருவாகிய சாத்தானை மேற்கொள்ள பரிசுத்தவான்கள் உபயோகிக்கும் இரண்டாவது ஆயுதமாகிய வசனம் மூன்று காரியங்களைக் குறிப்பிடுகிறது.
1. தேவனுடைய வார்த்தையாகிய வசனம்.
2. பரிசுத்தவான்களுடைய சாட்சியின் வசனம்.
3. ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்தைக் குறித்த சாட்சி.
அன்பான தேவனுடைய பரிசுத்த ஜனமே, சாத்தானை ஜெயங்கொள்ள வேண்டுமானால் தேவனுடைய வார்த்தையை நாம் அறிந்து, அதைக் கனம் பண்ணுகிறவர்களாகக் காணப்பட வேண்டும்.
"துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்த கார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு." (எபே 6:12) என்று கூறும் சத்திய ஆவியாகிய தேவன் "தேவனுடைய சர்வாயுத வர்க்கமாக" ஆறு காரியங்களைக் குறிப்பிடுகிறார்.
1. சத்தியம் என்னும் கச்சை.
2. நீதி என்னும் மார்க்கவசம்.
3. சுவிசேஷத்தின் ஆயத்தம் என்னும் பாதரட்சை.
4. விசுவாசம் என்னும் கேடகம்.
5. இரட்சணியம் என்னும் தலைச்சீரா.
6.தேவ வசனமாகிய ஆவியின் பட்டயம்.
மேற்காணும் தேவனுடைய ஆறு சர்வாயுதங்களில் தேவ வசனம் மட்டுமே எதிரியைத் தாக்குவதற்குப் பயன்படுத்தக்கூடியதாயிருக்கிறது. மற்ற ஐந்து ஆயுதங்கள் எல்லாம் எதிரியின் தாக்குதலில் இருந்து நம்மைப் பாதுகாக்க மட்டுமே பயன்படுகிறதாயிருக்கிறது. வனாந்தரத்திலே இயேசு பிசாசினால் சோதிக்கப்பட்டபோது, மூன்று முறையும் "எழுதியிருக்கிறதே" (மத் 4:4,7,10) என்று தேவ வசனத்தை உச்சரித்தே அவனை மேற்கொண்டர்.
இரண்டாவதாக சத்துருவை மேற்கொள்ள நம்மிடமிருந்து சாட்சியின் வசனம் புறப்பட்டு வர வேண்டும். கிறிஸ்துவையும், அவருடைய அன்பையும், அவருடைய கல்வாரி மரணத்தினால் உண்டான மீட்பையும் நாம் அறிந்திருந்தால் மட்டும் போதாது. அதைச் சாட்சியாக மற்றவர்களுக்கு அறிவிக்க வேண்டும். ஒரு சம்பவத்தைய பார்ப்பவர்கள் எல்லாரும் சாட்சிகள் ஆகிவிடமாட்டார்கள். அதை மற்றவர்களுக்கு அறிவிப்பவர்களே சாட்சிகள். கிறிஸ்துவை ஒரு ஆத்துமாவிற்கு அறிமுகம் பண்ணும் போதெல்லாம் சாத்தான் தோற்கடிக்கப்படுகிறான் என்பதை அறிந்துகொள்ள வேண்டியவர்களாயிருக்கிறோம். தேவன் நமக்குச் செய்த நன்மைகளை மற்றவர்களுக்குச் சொல்லும் போது சாத்தான் வெட்கமடைந்து ஓடிப்போகிறான்.
சாத்தானை ஜெயிக்க பரிசுத்தவான்கள் பயன்படுத்திய முதல் ஆயுதம் ஆட்டுக்குட்டியானவரின் இரத்தம் என்பதைத் தியானித்தோம். அந்த ஆட்டுக்குட்டியானவரின் இரத்தம் நமக்கு என்ன செய்தது என்பதைக் குறித்த சாட்சியே சாத்தானை முறியடிக்கும் வல்லமையான ஆயுதமாகும். அந்தச் சாட்சி சொல்லப்படாத நிலையில் இரத்தத்தின் வல்லமை வெளிப்படுவதில்லை.
கிறிஸ்து சவுக்கால் அடிக்கப்பட்டபோதும், முள்முடி சூட்டப்பட்ட போதும், சிலுவை மரத்தில் ஆணிகளால் அடிக்கப்பட்டபோதும், ஈட்டியினால் விலாவில் குத்தப்பட்டபோதும் சிந்தின இரத்தம் அந்த ரோம போர்வீரர்கள் மேல் தெளிக்கப்பட்டிருக்கும் என்பது உண்மையே. அதினிமித்தம் அவர்கள் எந்த நன்மையையும் பெற்றுக் கொண்டார்கள் என்று சொல்லப்படவில்லை. காரணம் ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தை குறித்த சாட்சியின் வசனம் அவர்களிடம் காணப்படவில்லை. இரத்தம் சிந்தப்பட்டு ஏறக்குறைய இரண்டாயிரத்து இருபத்தொன்று ஆண்டுகள் கழித்து வாழும் நாமோ இரத்தத்தினால் ஜெயம் என்று சொல்லும் சிலாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம். இரத்தத்தினால் பாவ மன்னிப்பு ஏற்பட்டது. இரத்தத்தினால் குணமானோம் என்று சொல்லுவதே இரத்தத்தைக் குறித்த சாட்சியாகும். இதைக் குறித்த சாட்சியே நமக்குப் பூரணமான வெற்றியைத் தருகிறது.
அன்பான கர்த்தருடைய பரிசுத்த தேவஜனமே, சாத்தானை நாம் ஜெயிக்க முடியும் என்பதை உண்மையாய் நம்ப வேண்டும்.
"இதோ, சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங் கொடுக்கிறேன். ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தக்கூடாது.' (லூக் 10:19)
"விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன; என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார்.” (மாற் 16:17,18) (அப் 28:3-6)
மேற்காணும் கர்த்தருடைய திருவசனங்கள், இயேசுவை உண்மையாய் நம்பி அவருடைய உத்தம மார்க்கத்தமைந்தவர்களாய் வாழ்கிறவர்களுக்கு, நிபந்தனையற்ற அதிகாரம் கொடுக்கிறதை அறிய முடிகிறது. இந்த அதிகாரம் கிறிஸ்துவின் இரத்தத்தினால் மட்டுமே உண்டாயிருக்கிறது. இயேசுவின் இரத்தத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களிடம் அதைப்பற்றிய சாட்சிகளின் ஜீவியத்தைக் காண முடியாது. சாத்தானிடம் இயேசுவின் இரத்தத்தை நினைவுபடுத்தும் போதெல்லாம் சுமார் இரண்டாயிரத்து இருபத்தொன்று ஆண்டுகளுக்கு முன்பு கல்வாரி சிலுவையில் தான் சந்தித்த மிகப்பெரிய தோல்வியை எண்ணிப் பார்த்து கலக்கமுற்று அவன் ஓடிப்போவான். ஆகையினால் எந்த சூழ்நிலையிலும் சாத்தானை ஜெயிக்க தேவாதி தேவனின் வாக்குத்தத்தங்கள் நமக்குக் கொடுக்கப்பட்டிருப்பதினால் ஜெயிப்போம் என்று சூளுரைப்போம்.
கிறிஸ்துவின் ஊழியப்பாதையிலே அப்போஸ்தலர்,
I. ஆசீர்வாதம்
"பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை"
மதுரை,
இந்தியா,
(தினந்தோறும் எங்களது Whatsapp Channel - மூலமாக வசனம் மற்றும் சத்தியங்களை அறிந்துக்கொள்ள இணையுங்கள். ஜெப தொடர்பிற்கு Pr.Arulnatharaj 8682882815, Pr Sam Gunaraj 8682882805)
https://whatsapp.com/channel/0029VaNA8Y66BIEhjWAI0K3ni.
#🖌பக்தி ஓவியம்🎨🙏 #✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள் #🙏கோவில் #🙏ஆன்மீகம்
இன்றைய வசனம் : 19/01/2026
#✝பைபிள் வசனங்கள் #🙏ஆன்மீகம் #✝️இயேசுவே ஜீவன் #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏
பெலனான நகரம் நமக்கு உண்டு, இரட்சிப்பையே அதற்கு மதிலும் அரணுமாக ஏற்படுத்துவார். (ஏசாயா 26:1)
#✝️இயேசுவே ஜீவன் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏ஆன்மீகம் #🙏கோவில் #✝பைபிள் வசனங்கள்
இன்றைய வசனம் : 18/01/2026
#🖌பக்தி ஓவியம்🎨🙏 #✝பைபிள் வசனங்கள் #🙏ஆன்மீகம் #🙏கோவில் #✝️இயேசுவே ஜீவன்
இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன், இவர்கள் என் துதியைச் சொல்லிவருவார்கள். (ஏசாயா 43:21)
#🙏ஆன்மீகம் #✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள் #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏
இன்றைய வசனம் : 17/01/2026
#✝பைபிள் வசனங்கள் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #✝️இயேசுவே ஜீவன் #🙏கோவில் #🙏ஆன்மீகம்
சத்தியத்தைக் கைக்கொண்டுவருகிற நீதியுள்ள ஜாதி உள்ளே பிரவேசிப்பதற்காக வாசல்களைத் திறவுங்கள். (ஏசாயா 26:2)
#✝️இயேசுவே ஜீவன் #🙏ஆன்மீகம் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில் #✝பைபிள் வசனங்கள்
இன்றைய வசனம் : 16/01/2026
#🖌பக்தி ஓவியம்🎨🙏 #✝பைபிள் வசனங்கள் #🙏ஆன்மீகம் #🙏கோவில் #✝️இயேசுவே ஜீவன்



