@inp_info
@inp_info

Infinity News ➕

தமிழ் தகவல் ஊடக தளம்༆ 📰உள்ளதை உள்ளபடி அறிய🗞️ Follow & Support செய்யுங்கள்.

#

📠 📃 செய்தி

🔰அதிர்ச்சி செய்தி ! சாலை விபத்தில் அதிமுக எம்.பி ராஜேந்திரன் உயிரிழப்பு! Saturday, 23 Feb, திண்டிவனம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில், விழுப்புரம் தொகுதி அதிமுக எம்.பி ராஜேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். விழுப்புரம் தொகுதியின்நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் ராஜேந்திரன். இவர் இன்று அதிகாலை திண்டிவனம் அருகே காரில் சென்று கொண்டிருந்தபோது, கார் கட்டுபாட்டை இழந்து சாலையின் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளனாது. இந்த விபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
7.2k views
8 hours ago
அடிப்பணிந்த பாகிஸ்தான்: ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைமை அலுவலகத்தை பாகிஸ்தான் கைப்பற்றியது! Friday, 22 Feb, புல்வாமா பகுதியில் இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய ஜெய்ஷ் இ முகமதி என்ற தீவிரவாத அமைப்பின் தலைமை அலுவலகத்தை பாகிஸ்தான் அரசு கைப்பற்றி உள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14ம் தேதி ஜெய்ஷ் இ முகமதி என்ற தீவராத அமைப்பை சேர்ந்த தற்கொலைப்படை நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 40 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இந்த கொடூர தாக்குதல் இந்திய அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானை குற்றம்சாட்டிய இந்தியா கடும் கண்டனத்தையும் தெரிவித்துக் கொண்டது. இத்தகைய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என அறிவித்த பிரதமர் மோடி, பொருளாதார ரீதியாகவும், ராணுவ நடவடிக்கையின் மூலமும் பாகிஸ்தானிற்கு நெருக்கடி கொடுக்க உத்தரவுப் பிறப்பித்தார். இதனை தொடர்ந்து இந்தியா மீது தாக்குதல் நடத்த தூண்டுகோலாக இருந்த பாகிஸ்தானுக்கு ஐ.நா.வின் பாதுகாப்பு படை அமைப்பு தனது கண்டனத்தை தெரிவித்துக் கொண்டது. அதுமட்டுமின்றி, தீவிரவாதிகளுக்கு செல்லும் பணத்தை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காத பாகிஸ்தான் அரசிற்கு சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பு அமைப்பு தனது கண்டனத்தை தெரிவித்தது. இருப்பினும், இந்தியா மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என பாகிஸ்தான் தொடர்ந்து கூறி வருகிறது. ஏற்கெனவே பொருளாதார நிலையில் சிக்கித்தவிக்கும் பாகிஸ்தான் இந்த தீவிரவாத தாக்குதல் மூலம் உலக நாடுகளின் எதிர்ப்பையும், கண்டனத்தையும் பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து 2008ம் ஆண்டு நடந்த மும்பை தாக்குதலுக்கு காரணமாக இருந்த தீவிரவாத அமைப்பை தடை செய்து பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், தற்போது புலாமாவில் தாக்குதல் நடத்திய ஜெய்ஷ் இ முகமது என்ற தீவிரவாத அமைப்பின் தலைமை அலுவகத்தை பாகிஸ்தான் அரசு கைப்பற்றியுள்ளது. லாகூரில் இருந்து 400 கி.மீ. தூரத்தில் உள்ள பஹவல்பூர் என்னுமிடத்தில் செயல்பட்டு வந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைமை அலுவலகத்தை பஞ்சாப் மாகாண அரசு கைப்பற்றியுள்ளதாக பாகிஸ்தான் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் பவாத் சவுத்ரி அறிவித்துள்ளார்.
#

📠 📃 செய்தி

📠 📃 செய்தி - जैश - ए - मोहम्मद मुर्दावाद । Pakistan ७ । । उस्तान मुबाद । । देश । दुश्मन न . 1 जैश - ए - मोहम्मद मुदबिाद - ShareChat
6.1k views
10 hours ago
#

📠 📃 செய்தி

கூட்டணி வைப்பதற்கு முன்பு வரை அ.தி.மு.க-ஐ கடுமையாக குற்றச்சாட்டி விட்டு இப்போது முதல்வர் துணை முதல்வருக்கு சைவ அசைவ விருந்து... Saturday, 23 Feb, அதிமுக கூட்டணியில் பாமக சமீபத்தில் இணைந்து ஏழு மக்களவை தொகுதிகளையும் ஒரு மாநிலங்களவை தொகுதியையும் பெற்ற நிலையில் இன்று கூட்டணி கட்சிகளுக்கு தைலாபுரத்தில் தடபுடல் விருந்து வைக்கின்றது இந்த விருந்தில் கலந்து கொள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மற்றும் அமைச்சர்கள், அதிமுக எம்.எல்.ஏக்கள் தைலாபுரம் வந்தனர். ராம்தாஸ் வீட்டில் நடைபெறும் இந்த விருந்தில் சிறப்பு உணவுகள் தயாராக உள்ளது, குறிப்பாக மீன், நண்டு, ஆட்டுக்கறி, கோழிக்கறி உள்ளிட்ட உணவுகள் அதிக அளவில் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், ஒருசிலருக்காக உயர் ரக சைவ உணவும் இருப்பதாகவும் செய்திகள் கசிந்துள்ளது இந்த விருந்தில் அனைத்து உணவுகளும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக ராமதாஸே உடன் நின்று சமையல் கலைஞர்களை வேலை வாங்கினாராம். அதிமுகவினர்களை கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை எந்த அளவுக்கு பாமகவினர் தாக்கி பேசினார்களோ, அதற்கு நேரெதிராக தற்போது தடபுடல் விருந்து வைத்திருப்பது அனைவரையும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. ஆனால் இந்த கூட்டணி தேர்தல் முடிவுகள் வெளிவந்த மறுநாள் இருக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
6k views
10 hours ago
முகிலன் எங்கே ? ரயிலில் முகிலன் பயணிக்கவில்லை- காவல்துறை Friday, 22 Feb, சுற்றுச்சுழல் செயற்பாட்டாளர் முகிலன் காணாமல்போன வழக்கில் விசாரணை அறிக்கையை மார்ச் 4ம் தேதி தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு, ஜல்லிக்கட்டு போராட்டம், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம், மணல் கடத்தலுக்கு எதிரான போராட்டம் எனப் பல்வேறு போராட்டங்களின் முன்னணியில் இருந்து செயல்பட்டவர் சமூக ஆர்வலர் முகிலன். தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான முகிலன் கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில், ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சில ஆதாரங்களை வெளியிட்டார். செய்தியாளர் சந்திப்புக்குப் பின்னர், மதுரை செல்வதற்காக எழும்பூர் ரயில் நிலையம் சென்ற முகிலனை காணவில்லை என்று கூறப்படுகிறது. ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் அவர் ரயில் நிலையத்தை விட்டு வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், 5 நாட்களுக்கு மேல் ஆகியும் அவர் எங்கு இருக்கிறார் என்ற தகவல் தெரியவில்லை. இந்நிலையில் முகிலன் மாயமானது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் சத்தியநாராயணன், நிர்மல் குமார் அமர்வு முன்பு இன்று நடைபெற்றது. விசாரணையின் போது தங்கள் தரப்பு தகவலை கூறிய எழும்பூர் ரயில்வே காவல்துறை முகிலன் ரயிலில் பயணிக்கவில்லை என்று தெரிவித்தனர். இது குறித்து நீதிபதியிடம் தகவல் தெரிவித்த ஒலக்கூர் எஸ்.ஐ., கூடுவாஞ்சேரியிலேயே முகிலனின் செல்போன் இணைப்பு துண்டிப்பட்டுள்ளது என்றும், முகிலன் போனதாக கூறப்படும் ரயில் ஒலக்கூரில் நிற்காது என்றும் தெரிவித்தார். இந்த வழக்கில் எழும்பூர் ரயில்வே போலீஸ், எழும்பூர் காவல் நிலையம், திருவல்லிக்கேணி துணை ஆணையர் ஆகியோரை எதிர்மனுதாரராக இணைத்துள்ள நீதிமன்றம், எழும்பூர் ரயில் நிலையத்தில் முகிலன் வந்து சென்றது தொடர்பான சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட ஆவணங்களை எழும்பூர் காவல்துறையினரிடம் தாக்கல் செய்ய இரயில்வே போலீசுக்கு உத்தரவு பிறப்பித்தனர். மேலும் முகிலன் காணாமல்போன வழக்கில் விசாரணை அறிக்கையை மார்ச் 4ம் தேதி தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
#

📠 📃 செய்தி

📠 📃 செய்தி - ShareChat
6.2k views
1 days ago
புல்வாமா தாக்குதல்: காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்ய முடியுமா ? தெரிந்து கொள்வோம் ! Friday, 22 Feb, ஜம்மு காஷ்மீரின் புல்மாவில் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதியன்று நடந்த தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனால் நாட்டில் கொந்தளிப்பு ஏற்பட்டதோடு, அரசமைப்பு சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்ய வேண்டுமா என்ற விவாதம் மீண்டும் எழுந்துள்ளது. "ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு சலுகைகள் வழங்கும் 370 சட்டப்பிரிவை நீக்க அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்" என வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் முன்னாள் ராணுவ ஜெனரல் விகே சிங் ஆகியோர் கூறியுள்ளனர். இந்திய அரசமைப்பின் 370 சட்டப்பிரிவு என்றால் என்ன? ஏன் இதில் இவ்வளவு சர்ச்சை? மற்றொரு முக்கியமான கேள்வி, இந்த சட்டப்பிரிவை ரத்து செய்ய முடியுமா? சட்டப்பிரிவு 370 எப்படி அமலுக்கு வந்தது? இந்திய அரசமைப்பின் சட்டப்பிரிவு 370, ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து பெற வழிவகை செய்கிறது. 1947ஆம் ஆண்டு, இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின்போது, ஜம்மு காஷ்மீர் தனிச்சையாக சுதந்திரமாக இருக்க வேண்டும் என அம்மாநிலத்தின் கடைசி மகாராஜாவாக இருந்த ராஜா ஹரி சிங் விரும்பினார். ஆனால் பின்னர் சில நிபந்தனைகளுக்கு பிறகு, இந்தியாவுடன் அம்மாநிலத்தை சேர்க்க ஒப்புக் கொண்டார். அந்த நேரத்தில்தான், இந்திய அரசமைப்பு சட்டத்தில், பிரிவு 370 இயற்றப்பட்டு, அதன் கீழ் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. அம்மாநிலத்தில் பாதுகாப்பு, வெளியுறவுத்துறை மற்றும் தகவல் தொடர்பு ஆகியவை குறித்து சட்டம் இயற்ற, நாடாளுமன்றத்துக்கு உரிமை உள்ளது. ஆனால், அம்மாநிலத்துக்கென தனி அரசமைப்பு கோரப்பட்டது. 1951ஆம் ஆண்டில், ஜம்மு காஷ்மீருக்கு என தனியே சட்டமன்றம் கூட்ட அனுமதி வழங்கப்பட்டது. நவம்பர் 1956 அன்று அம்மாநிலத்துக்கான அரசமைப்பு எழுதி முடிக்கப்பட்டு, 1957ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று சிறப்பு அந்தஸ்து அமலுக்கு வந்தது. சட்டப்பிரிவு 370 - இதன் அர்த்தம் என்ன? இந்திய அரசமைப்பின் 370 சட்டப்பிரிவானது, மத்திய அரசுக்கும், ஜம்மு காஷ்மீருக்குமான உறவின் ஒரு எல்லைக் கோடாக பார்க்கப்படுகிறது. அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அப்போதைய முதல்வராக இருந்த ஷேக் மொஹமத் அப்துல்லாவும், இது தொடர்பாக ஐந்து மாத காலம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகே இச்சட்டப்பிரிவு அரசமைப்பில் சேர்க்கப்பட்டது. சட்டப்பிரிவு 370ன் படி, பாதுகாப்பு, வெளியுறவு விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்பு விஷயங்களை தவிற, வேறு ஏதேனும் குறித்து சட்டம் இயற்ற வேண்டும் என்றால், மத்திய அரசு அம்மாநிலத்தின் அனுமதியை பெற வேண்டும். இந்த சிறப்பு அந்தஸ்தால், அரசமைப்பின் சட்டப்பிரிவு 356, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு பொருந்தாது. இதனால், அம்மாநில அரசை கலைக்கும் அதிகாரம், இந்திய குடியரசுத் தலைவருக்கு கிடையாது. சட்டப்பிரிவு 370 இருக்கும் காரணத்தினால் - ஜம்மு காஷ்மீர் மாநிலத்து மக்களுக்கு இரட்டை குடியுரிமை உள்ளது. இந்திய தேசிய கொடி அல்லாது, அம்மாநிலத்துக்கு என்று தனி கொடி உள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சட்டசபை காலம் ஆறு ஆண்டுகள் ஆகும். அம்மாநிலத்தின் 'நிரந்தர குடியாளர்கள்' யார் என்பதை வரையறுப்பது அரசமைப்பின் பிரிவு 35A. இது சட்டப்பிரிவு 370-ன் ஒரு பகுதியாகும். இதன்படி, இந்தியாவின் மற்ற மாநிலங்களில் வசிப்பவர்கள், ஜம்மு காஷ்மீரில் நிலமோ அல்லது சொத்தோ வாங்க முடியாது. நாட்டில் பொருளாதார அவசர நிலையை அமல்படுத்த வழிவகை செய்யும் சட்டப்பிரிவு 360-ம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு பொருந்தாது. அதாவது அம்மாநிலத்தில் பொருளாதார அவசர நிலையை அறிவிக்க குடியரசுத்தலைவருக்கு அதிகாரம் கிடையாது. மற்ற நாடுகளுடன் போர் ஏற்பட்டால் மட்டுமே அங்கு அவசர நிலையை பிரகடனப்படுத்த முடியும். அம்மாநிலத்தில் அமைதியற்ற சூழல் மற்றும் வன்முறை நிலவினால்கூட, குடியரசுத்தலைவரால் அவசர நிலை அறிவிக்க முடியாது என்று இதன்மூலம் தெளிவாகிறது. ஜம்மு காஷ்மீர் அரசு பரிந்துரை செய்தால் மட்டுமே அவசர நிலையை பிரகடனப்படுத்த முடியும். அரசமைப்பில் இருந்து சட்டப்பிரிவு 370-ஐ நீக்குவது சாத்தியமா? சட்டப்பிரிவு 370-ஐ நீக்குவது தொடர்பான வழக்கு ஒன்றினை 2015ஆம் ஆண்டு விசாரித்த உச்சநீதிமன்றம், அரசமைப்பில் இருந்து அதனை நீக்குவது தொடர்பாக நாடாளுமன்றம் மட்டுமே முடிவு செய்ய முடியும் என்று கூறியது. அப்போது தலைமை நீதிபதியாக இருந்த எச்.எல். தத்து கூறுகையில், "இது நீதிமன்றத்தின் வேலையா? சட்டப்பிரிவு 370-ஐ வைத்துக் கொள்ள வேண்டுமா அல்லது நீக்க வேண்டுமா என்று நீதிமன்றத்தால் நாடாளுமன்றத்திடம் கேட்க முடியுமா? இது நீதிமன்றத்தில் வேலை இல்லை" என்று கூறினார். அதே 2015ஆம் ஆண்டு, சட்டப்பிரிவு 370 நிரந்தரமானது என ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றம் கூறியது. "இடைக்கால ஏற்பாடு" என்று அரசமைப்பின் சட்டப்பிரிவு 21ல் குறிப்பிடப்பட்டிருந்தாலும், இது நிரந்தரமானது என்று தெரிவித்திருந்தது. சட்டப்பிரிவு 370, சரத் 3-ன் படி, இதனை ரத்து செய்யவோ அல்லது மாற்றவோ முடியாது என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. இது பிரிவு 35A- வை பாதுகாக்கிறது. மற்ற மாநிலங்களை மாதிரி ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணையவில்லை என்று தெரிவித்த நீதிமன்றம், இந்தியாவுடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட போது, ஓரளவுக்கு அதன் இறையாண்மையை பராமரித்து வந்ததாக கூறியது. அரசியல் கட்சிகள் சொல்வது என்ன? 2014 மக்களவை தேர்தலின்போது, சட்டப்பிரிவு 370 நீக்கப்படும் என பாஜக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. நீண்ட காலமாக இந்த சட்டப்பிரிவை எதிர்த்து வந்த பாஜக, பின்னர் இது குறித்து ஏதும் பேசாமல் அமைதியாக இருந்தது. சட்டப்பிரிவு 370 என்பது அரசமைப்பை உருவாக்கியவர்களால் செய்யப்பட்ட பிழை என்றே பாஜக கருதுகிறது. ஆனால், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பிரதான கட்சிகளான மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் தேசிய மாநாட்டு கட்சி ஆகியவை பாஜகவின் நிலைக்கு எதிராக உள்ளன. "இந்தியாவையும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தையும் 370 சட்டப்பிரிவு இணைக்கிறது. 370 தொடர வேண்டும். இல்லையென்றால், காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்காது" என்று 2014ஆம் ஆண்டு தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஒமர் அப்துல்லா ட்வீட் செய்திருந்தார். சட்டப்பிரிவு 370-க்கு எதிராக போராட்டங்கள் நடந்த போது பேசிய மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் முதலமைச்சரான மெஹபூபா முஃப்தி, "இச்சட்டப்பிரவு, ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு செய்து கொடுக்கப்பட்ட சத்தியம். இந்த சத்தியம் மதிக்கப்பட வேண்டும்" என்றார். இச்சட்டப்பிரிவினால் மட்டுமே, ஜம்மு காஷ்மீர் மாநிலம், இந்தியாவுடன் இணைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
#

📠 📃 செய்தி

📠 📃 செய்தி - el - ShareChat
5.9k views
1 days ago
Share on other apps
Facebook
WhatsApp
Copy Link
Delete
Embed
I want to report this post because this post is...
Embed Post
Share on other apps
Facebook
WhatsApp
Unfollow
Copy Link
Report
Block
I want to report because