🌷☘️🌷☘️🌷🌷🌷☘️🌷☘️🌷☘️🌷☘️🌷☘️🌷🌷உலகத்தில் கடினமான காரியங்கள் நிறைய உண்டு, ஆனால் முடியாத காரியம் என்று எதுவும் கிடையாது. உயர்ந்த நோக்கங்கள் ஒருபோதும் கீழே விழுவதில்லை.
யாரையும் காயப் படுத்தவோ, குறைத்து நடத்தவோ செய்யாதீர்கள். இன்று நீங்கள் பலம் மிக்கவராக இருக்கலாம், ஆனால் காலம் உங்களை விடப்பலம் வாய்ந்தது.
பழி வாங்கும் எண்ணத்தால் எதிரி ஆவதை விட, மன்னிக்கும் எண்ணத்தால் மனிதன் ஆகலாம்.
நன்றியும், மன்னிப்பும் உங்களிடம் அதிகமாக இருந்தால் பிறருடைய மனதில் உங்களுக்கென்று ஓர் தனியிடம் உண்டு. வாழ்க்கை அழகாக இருக்க என்ன செய்யலாம். மற்றவர்களின் மனநிலைக்கு தகுந்தது போல் உங்களை மாற்றிக்கொள்ளுங்கள்.
விட்டு கொடுத்துப் பழகுங்கள். நான் ஏன் விட்டு கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் வேண்டாம். எந்த வகை பிரச்சனை வந்தாலும் சம்பந்தபட்ட நபரிடம் நேரடியாகப் பேசிப் பாருங்கள். கேட்கவில்லையாதுஷ்டனைகெ கண்டால் தூர விலகு என்று விலகிவிடுங்கள்.
பிரச்சனைக்கு தீர்வு என்னவென்று தேடுங்கள். அதற்குப்பதிலடி கொடுக்க முயற்சி செய்யாதீர்கள். நீங்கள் நினைப்பது போல் உங்கள் குடும்ப உறவுகள் நண்பர்கள் கேட்க வேண்டும் என்ற எண்ணம் வைக்காதீர்கள்.
மற்றவர்களிடம் நாம் காட்டும் வெறுப்பு நம் மனதினை மேலும் மேலும் அமைதியை இழக்கிறது, அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள். மனது அமைதியாகும்.
பிறகு பாருங்கள் உங்கள் சந்தோஷத்தினைஉங்கள் மனதில் பயத்தை உருவாக்கி விட்டால், உங்களுக்கு இன்னொருவர் தீங்கு செய்யத் தேவையில்லை. உங்களுக்குப் பயம் வந்து விட்டால் இன்னொரு எதிரி உங்களுக்குத் தேவையில்லை.
இப்பூவுலகில் விதைகள் தனக்கு தகுந்த இடத்தை தேடி முளைப்பதில்லை.மாறாக கிடைத்த இடத்தில்,
தன்னை மரமாகவோ செடியாகவோ மாற்றிக்கொள்கின்றன.
விழுந்த இடத்திலேயே இருந்து,
எழுந்து வாருங்கள். 24 மணி நேரத்தை இளமையோடு வைத்திருந்தால்வெற்றி நிச்சயம்.💕💜💗💜💗💜💗💜💕💜💗💕💜💗💜💕💗💜💕💗💜🍃💗💜
*#வாழ்த்துகள்*.
*இனிய காலை வணக்கம் உறவுகளே*💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 #💝இதயத்தின் துடிப்பு நீ