#🖌பக்தி ஓவியம்🎨🙏 கிருத்திகை நட்சத்திரம்.தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் ஏரகரம் அருள்மிகு ஸ்ரீ சங்கரநாயகி சமேத கந்தநாத சுவாமி ஆலயத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் அருள்மிகு ஶ்ரீ ஆதி சுவாமிநாத சுவாமி 🙏🙏
*இத்தலம் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி ஆலயத்தை விட முந்தையது
*முருகனின் திருநாமம் ஆதிசுவாமிநாதன்
*இந்த ஆலயம் சிவத்தலமாக இருந்தாலும் இங்கு முருகனே பிரசித்தியுடன் அருள் பாலிக்கிறார்
*இக்கோவில் முருகனின் நான்காம் படை வீடான சுவாமிமலைக்கு அருகில் உள்ளது. இத்தலம் அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல் பெற்றது
*ஒரு சமயம் அசுரர்களால், முனிவர்களின் தவத்திற்கு இடையூறு ஏற்பட்டது. அப்போது சிவபெருமான் முருகனை அழைத்து முனிவர்களைக் காத்திடும்படிக் கூறியதோடு, ஒரு அஸ்திரத்தையும் வழங்கி அதைச் செலுத்தும் இடத்தை அவருடைய அகமாக அமைத்துக்கொள்ளும்படி அருளியுள்ளார். முருகனின் அஸ்திரம் பூமியில் பாய்ந்த இடம் ஏரகம்.
*முற்காலத்தில் ஏர் எனும் அழைக்கப்பட்ட தலம் பின் ஏரகம் என மருவி தற்போது ஏரகரம் என அழைக்கப்படுகிறது
*காமியத்தழுந்தி என தொடங்கும் திருப்புகழில் ஏரகத்தமர்ந்த பெருமாளே என இத்தல முருகனைத் தான் பாடியுள்ளார்
*இத்தலத்து இறைவன் சன்னதியின் பின்புறம் முருகன், ஆதிகந்தநாதசுவாமி திருநாமத்தோடு எழுந்தருளி உள்ளார். இச்சன்னதியில் முருகன் ஒரு முகம், நான்கு கரங்கள் கொண்டு நின்ற நிலையில் ராஜகோலத்தில் உள்ளார். பின் கரங்களில் வஜ்ர சக்தியும் திரிசூலமும் கொண்டுள்ளார். முன் வலக்கரத்தால் அபயம் காட்டிய இடக் கரத்தை இடுப்பில் ஊன்றியபடியும் அருள்பாலிக்கிறார்
*இத்தலத்தில் தான் முருகன் சிவபெருமானைப் பூசித்து சூரசம்ஹாரத்திற்குப் பல அஸ்திரங்களைப் பெற்றார்.
*அருள்பாலிக்கும் முருகன் கையிலிருக்கும் வேல் இத்தலத்தில் உள்ள அருள்மிகு சங்கரி அம்மனிடம் இருந்து பெறப்பட்டது
*இக்கோவிலில் ஐப்பசி மாதம் நடைபெறும் கந்தசஷ்டி விழாவில், முருகன் சங்கரியம்மையிடம் சக்திவேல் பெற்று சூரசம்ஹாரத்திற்கு செல்லும் வைபவம் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது
*கச்சியப்ப சிவாச்சாரியார், நக்கீரர் மற்றும் அருணகிரிநாதர் ஆகியோர் இத்தல சுப்பிரமணியரைப் பாடியுள்ளது தலச்சிறப்பாகும்
*இத்தலம் அப்பர் திருவாக்கில் இடம்பெற்றுள்ள சோழ நாட்டு வைப்புத்தலமாகும்.
*கும்பகோணத்திலிருந்து சுவாமிமலை செல்லும் பாதையில் மூப்பக்கோயிலிலிருந்து பிரியும் சாலையில், ஆசூர் வாய்க்காலுக்கு மேற்புறம் இக்கோயில் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலமான இன்னம்பரில் இருந்து திருப்புறம்பியம் செல்லும் சாலை வழியில் வலதுபுறம் ஏரகரம் செல்லும் சாலை பிரிகிறது.
அவ்வழியாகச் சென்றும் ஏரகரம் அடையலாம்
*இது சுவாமிமலைக்கு முந்திய காலத்தியது. இங்கு தான் முருகன் சிவபெருமான், அகத்தியர் ஆகியோருக்கு பிரணவ மந்திர உபதேசம் செய்தார். இங்கு முருகனுக்கு அருகில் அகத்தியரும் உள்ளார்
*அதே பிரணவ மந்திர உபதேசத்தை முருகன் அம்பாளுக்கும் அருளினார்
*3 ஆம் நூற்றாண்டில் நக்கீரர் பாடிய திருமுருகாற்று்படை யில் இந்த தலம் பற்றி பாடல் உள்ளது
*12ஆம் நூற்றாண்டு கல் வெட்டு பதிப்புகள் இந்த ஆலயம் மூன்று பிரகாரங்களுடன் பெரிய ஆலயமாக விளங்கியது என தெரிகிறது.
காலப்போக்கில் இந்த ஆலயம் குறுகி சிறிய அளவில் உள்ளது.













