@ksridhar64901883
@ksridhar64901883

K.SRIDHAR

பிறப்பு ஒரு முறை அதில் சில நிமிடப் பதிவுகள்.. .

அதிகமாக தண்ணீர் குடிப்பதால் உங்களுக்கு ஏற்படும் ஆபத்துகள் என்னென்ன தெரியுமா? மனிதன் வாழ அடிப்படை தேவைகளில் ஒன்று நீராகும். நீர் இல்லையெனில் இந்த உலகத்தில் மனிதர்களின் வாழ்க்கை என்பது நினைத்து பார்க்க முடியாக அளவிற்கு மோசமானதாக மாறிவிடும். மெல்ல மெல்ல நாம் அந்த நிலையை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறோம். தண்ணீரின் அவசியம் தெரிந்த நமக்கு அதனை எப்படி பாதுகாக்க வேண்டும் என்ற ஞானம் இன்னும் வரவில்லை என்றுதான் கூறவேண்டும் ஒரு நாளைக்கு குறிப்பிட்ட அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது நமது ஆரோக்கிய வாழ்விற்கு அடிப்படையானதாகும். இந்த நீரின் அளவு குறையும்போது நமது உடலில் பல பிரச்சினைகள் எழ நேரிடும். அதேபோலத்தான் அதிகமாக நீர் குடிப்பதும் பல பாதிப்புகளை உண்டாக்கும். உங்களுக்கே தெரியாமல் ஆரோக்கியம் என்ற பெயரில் நீங்கள் அதிக தண்ணீரை குடித்து கொண்டிருக்க வாய்ப்புள்ளது. உங்கள் உடலில் தோன்றும் சில பிரச்சினைகள்தான் அதற்கான அறிகுறிகள். இந்த பதிவில் நீங்கள் அதிகம் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பது பார்க்கலாம் அடிக்கடி சிறுநீர் கழிப்பது அடிக்கடி சிறுநீர் கழிப்பது அசௌகரியமாகவம், சங்கடமாகவும் இருக்கலாம். இதற்கு பல மருத்துவ காரணங்கள் இருக்கலாம் ஆனால் முதன்மையான காரணம் அதிகம் தண்ணீர் குடிப்பதுதான். ஒருநாளைக்கு 7 முறைக்கு மேல் நீங்கள் சிறுநீர் கழிக்க நேர்ந்தால் நீங்கள் குடிக்கும் தண்ணீரின் அளவை சோதித்து பார்க்க வேண்டியது அவசியமாகும். இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேர்ந்தால் படுக்கைக்கு செல்லும் முன் அதிக நீர் குடிப்பதை தவிர்க்கவும். உங்கள் சிறுநீர் தெளிவாக இருக்கும் சிறுநீரின் நிறம் அடர் மஞ்சளாக இருப்பது பிரச்சனையின் அறிகுறியாகும். எனவே நீங்கள் அதனை சரி செய்ய அதிகளவு தண்ணீர் குடிப்பீர்கள். உங்கள் சிறுநீர் எந்த நிறமும் இன்றி தெளிவாக இருப்பதுதான் ஆரோக்கியம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால் அது தவறான ஒன்றாகும். ஏனெனில் போதுமான அளவு தண்ணீர் குடித்து ஆரோக்கியமாக இருந்தால் உங்கள் சிறுநீரின் நிறம் மெல்லிய மஞ்சள் நிறத்தில் இருக்கும். எனவே உங்கள் சிறுநீர் நிறமற்று இருந்தால் நீங்கள் அதிக தண்ணீர் குடிக்கிறீர்கள் என்று அர்த்தம்.,எனவே எதிலும் அளவோடு இருங்கள்.. !
#

தெரிந்துகொள்வோம்

தெரிந்துகொள்வோம் - ShareChat
110 காட்சிகள்
15 நாள் முன்
பல்லி சாஸ்திரப்படி, பல்லி நம் உடலில் எங்கே விழுந்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா? இந்திய புராணத்தின் படி, மிருகங்கள் என்பது என்றுமே ஒரு நல்ல இடத்தை பிடித்துள்ளது. ஆனால் அதில் நமக்கு மிகவும் பிடிக்காத ஒன்று உள்ளது என்றால் அது தான் வீட்டில் காணப்படும் பல்லி. ஊர்ந்து செல்லும் உயிரின வகைகளில் நாம் அதிகமாக வெறுப்பது இந்த வீட்டு பல்லியாக தான் இருக்கும். அப்படி நாம் வீட்டில் பல்லியை பார்க்கும் போது, நாம் உடனே கொடுக்கும் ரியாக்ஷன் - அருவருப்பாக உணர்வது. அதோடு நில்லாமல் அதனை விரட்டுவதில் குறியாக இருப்போம். ஆனால் நம் பண்டைய இந்திய புராணத்தில் இதற்கனவே ஒரு படிப்பு இருந்தது உங்களுக்கு தெரியுமா? அது தான் பல்லி சாஸ்திரம் பல்லி - கேது:-- பல்லி என்பது கேதுவை குறிக்கிறது. கேது என்பது ஸ்வரபானு அசுரனின் உடலாகும். அவனுடைய தலையை வெட்டியது விஷ்ணு பகவானாகும். பல்லி கத்துவது முதல், அது நம் உடலில் எங்கே விழுகிறது என்பது வரை பல முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. ஒவ்வொன்றும் ஓர் அர்த்தத்தை நமக்கு எடுத்துக்காட்டுகிறது. தீபாவளியன்று வீட்டில் பல்லியை காணவில்லை என்றால் வெளிச்சங்களின் பண்டிகையான தீபாவளி முழுமை பெறுவதில்லை. தீபாவளி அன்று பல்லியை காண நேர்ந்தால் குடும்பத்திற்கு செல்வமும் வளமும் வந்து சேரும் என நம்பப்படுகிறது. பல்லி தலையில் விழுவதன் அர்த்தம் பல்லி ஒருவரின் தலையில் விழுந்தால், வரப்போகும் கெட்ட நேரத்திற்கு அவர் தன்னை தானே தேற்றிக் கொள்ள வேண்டும். இவர்களுக்கு மற்றவர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு, அலைக்கழிக்கப்பட்ட மன நிம்மதி அல்லது குடும்பத்தில் மரணம் ஏற்படலாம். ஆனால் தலையில் விழுவதற்கு பதிலாக முடியின் மீது விழுந்தால் ஏதோ வகையிலான நன்மை கிட்டும். முக பகுதியில் புருவம், கன்னத்தில் விழுந்தால்... ஒருவரின் முகத்தில் பல்லி விழுந்தால், சீக்கிரமே உங்கள் வீட்டு கதவை உறவினர் தட்டலாம். உங்கள் புருவத்தின் மீது விழுந்தால், ராஜ பதவியில் இருப்பவரிடம் இருந்து உங்களுக்கு உதவி கிடைக்கும். ஆனால் அதுவே உங்கள் கன்னம் அல்லது கண்களில் விழுந்தால், ஏதோ ஒன்றுக்காக நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள். மேல் உதடு, கீழ் உதடு, மூக்கு, வலது காதில் விழுந்தால்... மேல் உதட்டின் மீது விழும் போது செல்வ இழப்பு ஏற்படும். அதுவே கீழ் உதடு என்றால் சொத்து பெருகும் என அர்த்தமாகும். உங்கள் மூக்கின் மீது பல்லி விழுந்தால், நீங்கள் நோய்வாய் படலாம். வலது காதின் மீது பல்லி விழுந்தால் நீண்ட ஆரோக்கியமான வாழ்வை நீங்கள் வாழ்வீர்கள் என அர்த்தமாகும். வாயில் அல்லது கழுத்தில் விழுந்தால்... உங்கள் வாயின் மீது விழுந்தால், ஏதோ ஒன்றை கண்டு நீங்கள் பயப்பட போகிறீர்கள் என அர்த்தமாகும். ஆனால் கழுத்தின் மீது விழுந்தால் உங்கள் விரோதிகள் அழிக்கப்படுவார்கள் இடது கை அல்லது வலது கையில் விழுந்தால்... இடது கையின் மீது பல்லி விழுந்தால், உங்களுக்கு பாலியல் ரீதியான சந்தோஷங்கள் கிடைக்கும். இதுவே வலது கை என்றால் உங்கள் உடல்நலம் பெருவாரியாக பாதிக்கப்படும் வலது மணிக்கட்டு, தொப்புள், தொடை, முட்டி, கணுக்கால், பிட்டம் வலது மணிக்கட்டில் விழுந்தால், ஏதோ வகையில் பிரச்சனை எழலாம். பல்லி விழும் இடம் உங்கள் தொப்புள் என்றால் உங்களுக்கு மதிப்புமிக்க கற்களும், ரத்தினங்களும் கிடைக்கும். மறுபுறம், அது உங்கள் தொடையில் விழுந்தால் உங்கள் பெற்றோருக்கு நீங்கள் வருத்தத்தை ஏற்படுத்துவீர்கள். முட்டி, கணுக்கால் மற்றும் பிட்டத்தின் மீது விழுந்தால் பொதுவான நன்மை ஏற்படும் பாதத்தில் அல்லது பிறப்புறுப்பில் விழுந்தால்... பாதத்தில் பல்லி விழுந்தால் வருங்காலத்தில் பயணம் மேற்கொள்வீர்கள். பிறப்புறுப்பின் மீது விழுந்தால் கஷ்டகாலம் மற்றும் வறுமையை அது குறிக்கும். குறிப்பு:--- மேற்கூறிய பட்டியல் ஒரு சாராம்சம் மட்டுமே. காரணம் பல்லி விழுந்தால் ஏதோ பலன் உண்டு என்பதை குறிக்கும் வகையில் நம் உடலில் 65-க்கும் அதிகமான உறுப்புகள் உள்ளது. அதே போல் ஒருவரின் பாலினத்தை பொருத்தும் இது மாறுபடும். பல்லி கத்துவது:--- பல்லி கத்துவதையும் கூட இந்த வகையில் கூறலாம். எந்த திசையில் இருந்து உங்களுக்கு சத்தம் கேட்கிறது, அந்த நாளின் நேரம், அந்த வாரத்தின் நாள் போன்ற சில விஷயங்களையும் நீங்கள் கருத வேண்டும். அப்போது தான் அதன் சரியான அர்த்தம் புரியும்.
#

தெரிந்துகொள்வோம்

தெரிந்துகொள்வோம் - ShareChat
115 காட்சிகள்
16 நாள் முன்
good night sweet dreams...... friend,s.... கோலம் போடும்போது இதை செய்யவே கூடாது...!! அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்னரே கோலமிடவேண்டும். கோலத்தில், சானத்தின் பசுமையானது விஷ்ணுபெருமானையும், மாவின் வெண்மையானது பிரம்மாவையும், காவியின் செம்மையானது பரமேஸ்வரரையும் குறிக்கின்றன. வீட்டு வாசலை அழகாகச் சுத்தப்படுத்தி, வாசலில் பசுஞ்சாணம் தெளித்து கோலம் போடவேண்டும். முடியாதவர்கள் நீர் தெளித்தும் கோலம் இடலாம். ஏற்கெனவே பயன்படுத்தாத தூய்மையான தண்ணீரில்தான் வாசலைச் சுத்தப் படுத்தவேண்டும். அரிசி மாவில் கோலமிடுவது சிறப்பான ஒன்று. அதிலும் பூஜை அறையில் போடக்கூடிய கோலங்கள் வேறு, வாசலில் போடக்கூடிய கோலங்கள் வேறு. கோலத்தின் தொடக்கம் மற்றும் முடிவானது, அதன் மேற்புறமாகத்தான் இருக்கவேண்டும். ஆல்காட்டி விரலை பயன்படுத்தாமல் கோலமிட வேண்டும். வலது கையால்தான் கோலமிடவேண்டும். இடதுகையால் கோலமிடக்கூடாது. குனிந்தபடி நின்றுதான் கோலம் போடவேண்டுமே தவிர, அமர்ந்துகொண்டு கோலம் போடக்கூடாது. தெற்கு திசையை நோக்கியோ, அல்லது தெற்கு திசையில் முடியும்படி கோலமிடக்கூடாது. வாசல்படிகளில் குறுக்குக்கோடுகள் போடக்கூடாது. சுபதினங்களில் ஒற்றைக்கோடுகளில் கோலம் இருக்கக்கூடாது. இரட்டைக் கோடுகளாகத்தான் இருக்க வேண்டும். தெய்விக யந்திரங்களைக் குறிக்கும் ஹ்ருதய தாமரை, ஐஸ்வர்யக் கோலம், ஸ்ரீசக்ர கோலம், நவகிரக கோலங்கள், போன்றவற்றை பூஜை அறைகளில் மட்டும்தான் போடவேண்டும். மேலும், இதை அரிசி மாவிலோ அல்லது மஞ்சளிலோ மட்டும்தான் போடவேண்டும். அமாவாசை மற்றும் முன்னோர்களுக்குச் சிராத்தம் செய்யும் நாள்களில் கோலம் போடக்கூடாது.
#

தெரிந்துகொள்வோம்

தெரிந்துகொள்வோம் - ShareChat
106 காட்சிகள்
16 நாள் முன்
கோயிலில் நெய் விளக்கு ஏற்றுபவர்கள் இதைப் படிக்கவும்!.....! நெய் தீபம் எனும் பெயரில் பொய் தீபம் ஆலயங்களில் நடக்கும் நெய் தீப ஊழல் பற்றி ஒரு சின்ன தகவல் பார்ப்போம்..... ஆலயங்களில், அறநிலையத்துறையின் அனுமதியோடு, ஏலம் மூலம் நிபந்தனையின் பேரில், வியாபார நோக்கத்தில் விற்கப்படும், போலியான நெய் விளக்குகள், அதன் வியாபார நுணுக்கங்கள் பற்றிய ஒரு பதிவுதான் இது. இன்று ஆலயங்களில் விற்கப்படும் நெய் விளக்கு தயாராகும் முறை பற்றிப் பார்ப்போம்: அந்த விளக்குகளில் நிரப்பப்படும் “நெய்” போன்ற நிறம், தோற்றம் கொண்ட திடமான “பசை”யானது, சைவ மற்றும் அசைவ உணவகங்களில் உபயோகப்படுத்தப்பட்ட, எண்ணெய்களை இலவசமாகவோ, மிகக் குறைந்த விலையிலோ வாங்கி, அதை வடிகட்டி, மீண்டும் மீண்டும் கொதிக்க வைத்து, அதில் மரவள்ளிக்கிழங்கு மாவு, டால்டா, மெழுகு மற்றும் பசைமாவு, மஞ்சள் நிறத்திற்காக வண்ணப் பொடியினை கலந்து விளக்குகளில் அடைத்து,”நெய் விளக்கு” என்று, பொய் சொல்லி, பொய்யான “பசை விளக்கினை” பொது மக்களின் பணத்தினை குறிவைத்து விற்பனை செய்து, கோடிக்கணக்கில் கொள்ளை அடிக்கின்றார்கள். முதலில் இந்த கடைகளில் உள்ள நெய்விளக்குகளை ஒருநாளாவது முகர்ந்து பார்த்து இருக்கின்றீர்களா? ஒரு நெய் விளக்கு "3 ரூபாயில்" ஏற்ற முடியுமா? இன்றைய நாளில், ஒரு கிலோ “தூய பசு நெய்யின்” விலை 1 கிலோ, 450 முதல் 550 ரூபாய் வரை. ஒரு கிலோ பசு நெய்யில், அதிகபட்சமாக 75 விளக்குகளை ஏற்றுவதாக வைத்துக் கொண்டாலும், விளக்கு மற்றும் திரி உள்பட குறைந்தது 6.50 ரூபாய் செலவாகும். ஆனால் 10 ரூபாய்க்கு 3 நெய் விளக்கு எப்படி, ஆலயங்களில் இவர்களால் விற்கப்படுகிறது? உண்மையான பசு நெய் கொண்டு, ஏற்றப்படும் விளக்கின் ஒளி, ஒரே சீராக வெள்ளை ஒளியாக, நறுமணத்தோடு இருக்கும். அந்த ஒளி வெள்ளத்தில், அந்த இடத்தில் உள்ள காற்று தூய்மையாகி, பிராண வாயு சுத்தமாகக் கிடைக்கும். ஆனால் இந்தமாதிரி, தரமற்ற “பசை விளக்குகள்” சரிவர எறிவதும் இல்லை, அதோடு ஒருவித நாற்றமும் அடிக்கிறது. வருடம் முழுவதும் கொளுத்தும் 100 டிகிரி வெய்யிலில் நமது உடம்பே உருகி விடும்போது இருக்கின்ற நிலையில், இந்த “பசை விளக்குகள்” அக்னி வெய்யிலில் கூட உருகாமல், கல்லுமாதிரி இருப்பதைக் கவனியுங்கள். முன்பு எல்லாம் மக்கள் தங்களின் வீடுகளில், பசுவினை வளர்த்து, அதன் பாலில் இருந்து, தயிர், வெண்ணெய், நெய் முதலானவற்றை ஆலயங்களில் உள்ள இறைவனுக்கு உபயோகப் படுத்தினார்கள். பின்னர், கால ஓட்டத்தின் காரணமாக, கடைகளிலிருந்து "வெண்ணெய்" வாங்கி காய்ச்சி, உருக்கி, அதிலிருந்து நெய்யை உபயோகப்படுத்தினார்கள். பின்னர் கடைகளில் "பசு நெய்" வாங்கி விளக்கு ஏற்றினார்கள். நாள்படப் பசு நெய் என்பது மறைந்து, பல வண்ண டப்பாக்களில், பல வித பெயர்களில் கடைகளில் விற்கப்படுகின்ற "நெய்யினைக்" கொண்டு விளக்கேற்றினார்கள். உண்மையான நெய்:---- ஆனால் தற்பொழுது, நெய் வாங்கி விளக்கு ஏற்றுவதை மறந்து, சோம்பலின் காரணமாகவும், வசதியின் பொருட்டும், தற்பொழுது ஆலயங்களில், “நெய் தீபம்” என்ற பெயரில் விற்கப்படும், “பசை விளக்குகளை... கோயிலின் உள்ளே கடைவிரித்து ஏமாற்றுகின்ற போலி வியாபாரிகள் கொள்ளையடிக்க நெய் விளக்கு என்ற பெயரில், விலை கொடுத்துப் பொய் விளக்கை வாங்கி, கோயிலில் ஏற்றிவிட்டு, விளக்கு ஏற்றும்போது கைகளில் பட்டுவிட்ட, நாற்றம் பிடித்த “பசையினை” கோயில் தூண்களில் தடவி கோயிலையும் நாறடித்துவிட்டுப் போவது அல்ல பக்தி என்பதை நினைவில் கொள்ளுங்கள், நாம் கோயிலுக்குச் செல்வதே பாவங்களைத் தொலைக்கத்தான். அப்படி இருக்க இந்தமாதிரி போலியான பொய் விளக்குகளை” வாங்கி, மேலும் மேலும் பாவச் செயல்களைச் செய்ய வேண்டாம். நம்முடைய இயலாமை, சோம்பேறித்தனம், மற்றும் பணத்தினை கொண்டு அனைத்தையும் வாங்கிக் கொள்ளலாம் என்ற தவறான சிந்தனை ஒன்றே இன்று ஆலயங்களில் கூட, அநியாயங்கள் அளவின்றி நடைபெறக் காரணமாக இருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மேற்கூறிய அனைத்து விவரங்களும் நல்லெண்ணெய் விளக்கேற்றுதலுக்கும் பொருந்தும். பொய் விளக்கேற்றி உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள் உறவுகளே! ஏமாற்றுபவர்களுக்கும் நமக்கும் என்ன வேறுபாடு? வளர்க சிந்தனை ...! வாழ்க வளமுடன்....!
#

ஆன்மீகத் தகவல்:---(ஏமாற்று வேலை)😂😂😓😬☠

ஆன்மீகத் தகவல்:---(ஏமாற்று வேலை)😂😂😓😬☠ - ShareChat
98 காட்சிகள்
16 நாள் முன்
போக்குவரத்து காவல் துறையின் புதிய அறிவிப்பு!! இனி யாரும் எஸ்கேப் ஆக முடியாது.!! நவீன வசதிகள் கொண்ட புதிய இ-சலான் இயந்திரங்கள் மற்றும் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து காவல் அதிகாரிகள் பயன்படுத்தக்கூடிய GCTP Citizen Services என்னும் கைபேசி செயலி ஆகியவற்றை தொடங்கி வைத்தார் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன் காவல் ஆணையாளர் அலுவலகம் இரண்டாம் தளத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் , போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதம் வசூலிக்க பயன்படுத்தப்படும் அதி நவீன வசதிகள் கொண்ட புதிய இ-சலான் இயந்திரங்கள் மற்றும் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து காவல் அதிகாரிகள் பயன்படுத்தக்கூடிய GCTP Citizen Services என்னும் கைபேசி செயலி ஆகியவற்றை தொடங்கி வைத்தார். முன்னதாக போக்குவரத்து காவல் துறை பிடித்தால், லஞ்சம் கொடுத்தும், அல்லது எதையாவது கூறி சமாளித்து விடுவார்கள். ஆனால், இனி அது முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
#

தெரிந்துகொள்வோம்

தெரிந்துகொள்வோம் - ShareChat
99 காட்சிகள்
16 நாள் முன்
good morning..... friend,s.... எச்சரிக்கை; இனி ரேஷன் கார்டுகள் ரத்தாகும் அபாயம்:---- எச்சரிக்கை; இனி ரேஷன் கார்டுகள் ரத்தாகும் அபாயம் ரேஷன் கார்டின் உரிமையாளர் அல்லாமலோ மற்றும் ரேஷன் பொருட்கள் வாங்காமலோ அல்லது ரேஷன் கார் பயன்படுத்தி உறவினர்களையும் மற்றும் வீட்டு வேலையாட்களையும் ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ள அனுமதிப்போரின் ரேஷன் கார்டுகளை ரத்து செய்யபடும் என்று உணவுத்துறை அறிவித்துள்ளது. தமிழக ரேஷன் கடைகளில் அரிசி மற்றும் கோதுமை இலவசமாகவும், சர்க்கரை மற்றும் பாமாயில் போன்றவை மானிய விலையிலும் வழங்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 2.03 கோடி ரேஷன் கார்டு பயனாளர்களில் 50 ஆயிரம் பேர் எந்த பொருளும் வாங்காதவர்கள் தவிர, மற்றவர்களுக்கு, மேற்கண்ட பொருட்கள் வழங்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது. அதற்காக தமிழக அரசு ஆண்டுக்கு 6,000 கோடி ரூபாய் செலவளிக்கிறது. வசதி உள்ளவர்கள் ரேஷனில் அரிசி, கோதுமை மற்றும் பல பொருட்களைரேஷனில் வாங்குவதில்லை என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அதனால் மற்றவர்கள் கார்டுகள் வாயிலாக கிடைக்கும் ரேஷன் பொருட்களைஹோட்டல்கள் மற்றும் மளிகை கடைகளில் விற்பனை செய்கின்றனர். அது குறித்து உணவுத்துறை மற்றும் கூட்டுறவு அதிகாரி ஒருவர் கூறியதாவது என்னவென்றால்: ரேஷன் முறைகேடுகளை தடுப்பதற்காக ஆதார் எண் அடிப்படையில் ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்பட்டது என்பது நாம் அறிந்த ஓன்று, இருந்தாலும் தவறுகள் முழுவதுமாக குறைக்கபடவில்லை. அதற்கு முக்கியகாரணம் வசதியானவர்கள் பொருட்களை வாங்காமல் மற்றவர்களிடம் வாங்கி கொள்ளும்படி கூறுவதே ஆகும். ரேஷன் பொருட்கள் வாங்க விருப்பப்படாதவர்கள் அந்த பொருட்களை பொது வினியோக திட்ட இணையதளம் வாயிலாக அரசுக்கு விட்டு கொடுக்கலாம் என்கிற வசதியும் உள்ளது, அனால் இதை யாரும் பயன்படுத்துவதில்லை. விரல் ரேகைகளை பதிவு செய்து ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த சற்று அதிக அவகாசம் தேவைப்படுகிறது. எனவே, மற்ற நபர்களிடம் தங்கள் ரேஷன் கார்டுகளை கொடுத்து பொருட்கள் வாங்க கூறுவோரின் ரேஷன் கார்டுகளை கண்டறிந்து, அந்த கார்டுகள் ரத்து செய்யப்பட உள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
#

தெரிந்துகொள்வோம்

தெரிந்துகொள்வோம் - HOUSEHOLD CARD CIWANXXXX - - - - - - - - 三生 - ShareChat
105 காட்சிகள்
16 நாள் முன்
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
அன்பாலோவ்
காப்பி லிங்க்
புகார்
தடுக்க
நான் புகார் தெரிவிக்கிறேன் ஏனெனில்