'மனைவி இல்லை, மரியாதை போய்விட்டது'- ரூ.100 லஞ்ச வழக்கில் 39 ஆண்டுக்குப் பின் விடுவிக்கப்பட்டவரின் கதை - BBC News தமிழ்
பிளவுபடாத முந்தைய மத்தியப் பிரதேசத்தின் மாநில சாலை போக்குவரத்து கழகத்தில் எழுத்தராகப் பணியாற்றிய ஜாகேஷ்வர் பிரசாத் அவதியா, 1986-ல் 100 ரூபாய் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். தற்போது, சுமார் 39 ஆண்டுகள் கழித்து நீதிமன்றம் அவரை மரியாதையுடன் விடுதலை செய்திருக்கிறது.