
mariappan kumaravel
@mariappan0462
நன்றி மறவாத நல்ல மனம் போதும், என்பதே என் மூலதனம்.
#👌இந்த நாள் நல்ல நாள்🤝
இதேநாளில் பிறந்த "லீ ஜூன் ஃபேன் புரூஸ்" (Lee Jun-fan) (நவம்பர் 27, 1940 – ஜூலை 20 1973) என்ற இவரின் திரைப்படப் பெயரான "புரூஸ் லீ" என பரவலாக அறியப்படும் ஆங்காங் மற்றும் அமெரிக்கத் திரைப்பட நடிகர், இயக்குநர் (திரைப்படம்), தற்காப்புக் கலைஞர், தற்காப்புக் கலைகள் பயிற்றுநர், மெய்யியலாளர்கள், ஜீத் குன் தோ எனும் உஷூ அல்லது சீன சண்டைக் கலையைத் தோற்றுவித்தவரும் ஆவார்.
இவர் ஊடகவியலாளார்கள், விளக்கவுரையாளர்கள், விமர்சகர்கள், மற்றும் தற்காப்புக் கலைஞர்களால் அனைத்துக் கால தற்காப்புக் கலைகளில் சக்திவாய்ந்த ஆளுமையாகப் பார்க்கப்படுகிறார்.
20-ஆம் நூற்றாண்டின் பரப்பிசை பண்பாடு கால குறி உருவமாகப் பார்க்கப்பட்டார்.
புரூஸ் லீ சான் பிரான்சிஸ்கோ, சைனா டவுனில் நவம்பர் 27, 1940 இல் பிறந்தார். இவர்களின் பெற்றோர் ஆங்காங்கில் பிறந்து கவுலூனில் குடியேறினர். இவரின் தந்தையால் இவர் திரைஉலகத்திற்கு அறிமுகம் ஆனார். சில திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். தனது 18 ஆவது வயதில் மேற்படிப்பிற்காக அமெரிக்க ஐக்கிய நாடு சென்றார். சியாட்டில், வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பயின்றார். அங்கு பயின்ற சமயத்தில் தற்காப்புக் கலைகளை பயிற்றுவித்தார்.
இவரின் ஆங்காங் மற்றும் ஹாலிவுட் திரைப்படங்கள் ஆங்காங்கின் பாரம்பரிய தற்காப்புக் கலைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இந்தப் புதுமையான வடிவத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
1970 களில் சீன சண்டைக் கலைகள் பற்றிய தாக்கம் அதிகரித்தது. இவரின் புதுவகையான இயக்கும் பாணியானது அமெரிக்க ஐக்கிய நாடு, ஆங்காங் மற்றும் உலகின் பிற பகுதிகளிலும் தற்காப்புக் கலைகள் மற்றும் தற்காப்புக் கலைகள் பற்றிய திரைப்படங்களின் தாக்கத்தில் மாற்றம் ஏற்படச் செய்தது.
இவர் 1971 இல் லோ வீ இயக்கிய "த பிக் பாஸ்",
1972 இல் "ஃபிஸ்ட் ஆஃப் ஃபியூரி," கோல்டன் ஹார்வஸ்ட் இயக்கிய ராப்ர்ட் கிளவுஸ் இயக்கத்தில் "வே ஆஃப் த டிராகன்", 1978 இல் "தெ கேம் ஆஃப் டெத்" போன்ற திரைப்படங்களின் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்படுகிறார். இவர் உலக அளவில் குறிவுருவமாக பார்க்கப்பட்டார், குறிப்பாக இவரின் திரைப்படங்களில் சீன தேசியக் கருத்துகள் அதிகம் இருந்ததனால் சீனர்களால் குறிவுருவமாகப் பார்க்கப்படுகிறார்.
இவர் துவக்கத்தில் விங் சுன் எனும் சீன சண்டைக் கலைகளில் பயிற்சி எடுத்தார். இவர் ஆங்காங் மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடு ஆகிய இரட்டைக் குடியுரிமை பெற்றுள்ளார்.
புரூஸ் லீ ஆங்காங்கிலுள்ள கௌலூன் டாங்கில் தனது 32 ஆம் வயதில் சூலை 20, 1973 இல் மரணமடைந்தார்.
ஆரம்பகால வாழ்க்கை:-
புரூஸ் லீ நவம்பர் 27, 1940 இல் சான் பிரான்சிஸ்கோ, சீன நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் பிறந்தார். சீன சோதிடத்தின் படி இவர் பிறந்த ஆண்டு மற்றும் நேரம் ஆகிய இரண்டும் டிராகன் (சீன சோதிடம்) ஆகும். அவர்களின் மரபு படி இது வலிமையான சகுனமாகப் பார்க்கபப்டுகிறது. புரூஸ் லீ மற்றும் இவரது பெற்றோர் , இவருக்கு மூன்று வயது இருக்கும் போது மீண்டும் ஆங்காங்கிற்கு சென்றனர்.
புரூஸ் லீயின் தந்தை லீ ஹோய் சுன் ஹான் சீனர், தாய் கிரேச் ஹோ , பறங்கியர் மரபைச் சேர்ந்தவர்.
கிரேஸ் , ஹோ கோம் தாங் மற்றும் சர் ராபர்ட் ஹோ தங் தம்பதியின் தத்து எடுத்த குழந்தை ஆவார். இவர்கள் இருவரும் ஆங்காங்கின் குறிப்பிடத் தகுந்த தொழில் முனைவோர், மற்றும் வள்ளல் ஆவர்.
புரூஸ் லீயின் பெற்றோருக்கு பெபே லீ, ஆக்னஸ் லீ, பீட்டர் லீ, புரூஸ் லீ, ராபர்ட் லீ ஆகிய ஐந்து குழந்தைகள் உள்ளனர். இவர்களில் புரூஸ் லீ நான்காவதாகப் பிறந்தார்.
பெற்றோர்:-
புரூசின் பெற்றோர் பற்றிய குறிப்புகள் தெளிவாக இல்லை. லிண்டா லீ, தனது 1989 ஆம் ஆண்டு எழுதிய "தி ப்ரூஸ் லீ ஸ்டோரி", என்ற சுயசரிதையில் லீயின் தாயார் கிரேசுக்கு ஒரு ஜெர்மன் தந்தை இருந்ததாகவும், அவர் கத்தோலிக்கராக இருந்ததாகவும் கூறுகிறார்.
1994 ஆம் ஆண்டு புரூஸ் தாமஸ் என்பவர் எழுதிய "புரூஸ் லீ: ஃபைட்டிங் ஸ்பிரிட்" என்ற சுயசரிதையில், கிரேஸுக்கு ஒரு சீனத் தாயும் ஒரு ஜெர்மன் தந்தையும் இருந்ததாகக் கூறுகிறார். லீயின் உறவினர் எரிக் பீட்டர் ஹோ, தான் 2010 ஆம் ஆண்டு எழுதிய "ட்ரேசிங் மை சில்ட்ரன்ஸ் லினேஜ்" என்ற புத்தகத்தில், கிரேசுக்கு சாங்காயில் சியுங் கிங்-பாவம் என்ற யூரேசியப் பெண்ணுக்குப் பிறந்தார் என்று கூறுகிறார். எரிக் பீட்டர் ஹோ, கிரேசு ஒரு கலப்பு இனம் சாங்காயின பெண்ணின் மகள் என்றும் அவரது தந்தை ஹோ கோம் டோங் என்றும் கூறினார். கிரேசு லீ தனது தாயார் ஆங்கிலம் என்றும், அவரது தந்தை சீனர் என்றும் கூறினார்.
பெயர்கள்:-
லீயின் தாயார் லீ யூன்-பேன் (李振藩) என்று பெயரிட்டார். இதற்கு "மீண்டும் திரும்பு" என்று பொருள்படும். மேலும் லீக்கு அவர் பெரியவனானதும் அமெரிக்காவிற்கு செல்வார் என்று உணர்ந்தார். அவரது தாயின் மூடநம்பிக்கை காரணமாக, அவர் முதலில் அவருக்கு ஒரு பெண்ணின் பெயரான சாய்-ஃபோன் (細 鳳) என்று பெயரிட்டார், இது "சிறிய பீனிக்ஸ் " என்று பொருள்படும் . "புரூஸ்" என்ற ஆங்கில பெயர் மருத்துவமனையில் மருத்துவர் டாக்டர் மேரி குளோவரால் வழங்கப்பட்டதாக கருதப்படுகிறது.
குடும்பம்:-
லீயின் தந்தை, லீ கோய்-சுவென், அந்த நேரத்தில் முன்னணி கான்டோனீஸ் ஓபரா மற்றும் திரைப்பட நடிகர்களில் ஒருவராக இருந்தார், மேலும் ஆங்காங்கில் சப்பானிய படையெடுப்பிற்கு முன்னதாக தனது குடும்பத்தினருடன் ஒரு வருட கால ஓபரா சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருந்தார். அவர் பல ஆண்டுகளாக அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து அங்கு ஏராளமான சீன சமூகங்களில் நடித்து வந்தார்.
அமெரிக்காவில் புதிய வாழ்க்கை:-
தனது18 வயதில் லீ அமெரிக்கா திரும்பினார். பல மாதங்கள் சான் பிரான்சிஸ்கோவில் வாழ்ந்த பின்னர், அவர் தனது உயர்நிலைப் பள்ளி கல்வியைத் தொடர 1959 இல் சியாட்டலுக்கு குடிபெயர்ந்தார், அங்கு அவர் ரூபி சோவுக்காக உணவகத்தில் நேரடி பணியாளராக பணியாற்றினார்.
சோவின் கணவர் லீயின் தந்தையின் சக ஊழியராகவும் நண்பராகவும் இருந்தார். லீயின் மூத்த சகோதரர் பீட்டர் லீ (李忠琛) அவருடன் சியாட்டிலில் சிறிது காலம் தங்குவதற்காக மினசோட்டாவுக்குச் செல்வதற்கு முன்பு கல்லூரியில் சேந்தார். டிசம்பர் 1960 இல், லீ தனது உயர்நிலைப் பள்ளி கல்வியை முடித்து, சியாட்டிலிலுள்ள கேபிடல் ஹில்லில் உள்ள எடிசன் தொழில்நுட்ப பள்ளியில் சான்று பெற்றார்.
மார்ச் 1961 இல், லீ வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கு நாடக கலைகள், தத்துவம், உளவியல் மற்றும் பல்வேறு பாடங்களைப் பயின்றார். லீயும் பலரும் கூறியிருந்தாலும், பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் பத்திரிக்கை வெளியீட்டில் 1999 ஆம் ஆண்டின் ஒரு கட்டுரையின் படி லீ க்கு மிகவும் முக்கியமானது தத்துவத்தை விட நாடகமாகும்.
அவர் தனது வருங்கால மனைவி ஆசிரியர் பயிற்சி படிக்கும் சக மாணவியான "லிண்டா எமெரி"யை சந்தித்தார், அவர்கள் 1964 ஆகஸ்டில் திருமணம் செய்து கொண்டனர். இத்தம்பதியருக்கு பிராண்டன் (1965-1993) மற்றும் ஷானன் லீ (பிறப்பு 1969) என்ற இரண்டு குழந்தைகள் பிறந்தது
தற்காப்பு கலை வாழ்க்கை:-
லீ 1959 இல் அமெரிக்காவில் தற்காப்புக் கலைகளை கற்பிக்கத் தொடங்கினார். அவர் அதை ஜுன் ஃபேன் குங் ஃபூ (அதாவது புரூஸ் லீயின் குங் ஃபூ) என்று அழைத்தார். இது அடிப்படையில் விங் சுனுக்கான அவரது அணுகுமுறை ஆகும்.
லீ சியாட்டிலில் சந்தித்த நண்பர்களுக்கு குங் ஃபூவை கற்பித்தார், ஜூடோ பயிற்சியாளர் ஜெஸ்ஸி குளோவர் தொடங்கி, லீயின் ஆரம்பகால நுட்பங்களை தொடர்ந்து கற்பித்தார். டக்கி கிமுரா லீயின் முதல் உதவி பயிற்றுவிப்பாளராக ஆனார், மேலும் லீ இறந்தபின்னும் தனது கலை மற்றும் தத்துவத்தை அவர் தொடர்ந்து கற்பித்தார்.
லீ தனது முதல் தற்காப்புக் கலைப் பள்ளியை சியாட்டிலில் தொடங்கி அதற்கு "லீ ஜுன் ஃபேன் குங் ஃபூ இன்ஸ்டிடியூட்" என்று பெயரிட்டார்.
அவர் மர்மமான முறையில் 32 வயதில் உயிரிழந்தபோது, அவருடைய இறப்புக்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டன. மாஃபியா கும்பல்கள் கொலை செய்து விட்டன என்பது முதல் 2018ஆம் ஆண்டில் சொல்லப்பட்ட வெப்ப அதிர்ச்சி வரை அந்தக் காரணங்களை தனித் தனியாகப் பட்டியலிடும் அளவுக்கு நீளமானது.
ஐரோப்பிய சிறுநீரக சங்கத்தின் அதிகாரபூர்வ ஆய்விதழான கிளினிக்கல் ஜர்னல் ஆஃப் கிட்னியின் இந்த ஆண்டுக்கான டிசம்பர் மாத பதிப்பு வெளியாகியுள்ளது.
அதில், புரூஸ் லீயின் இறப்பு மற்றும் அது குறித்த ஆய்வுகள் என்று கிடைக்கக்கூடிய தகவல்களை அடிப்படையாக வைத்து நடத்தப்பட்ட ஆய்வில், அவர் செரபிரல் ஒடிமா எனப்படும் மூளை வீக்கத்தால் பாதிக்கப்பட்டு, அதனால் ஏற்பட்ட ஹைபோநெட்ரீமியா என்ற பாதிப்புக்கு உள்ளாகி உயிரிழந்ததாகக் கூறுகிறது.ஹைபோநெட்ரீமியா இருந்ததற்கான பல காரணிகள் ப்ரூஸ் லீயிடம் இருந்ததாகவும் அந்த ஆய்வுக் கட்டுரை கூறுகிறது.
அதில் “நாள்பட்ட அதிக திரவ உட்கொள்ளலைத் தூண்டக்க்கூடிய வகையில், தாகத்தை கடுமையாக அதிகரிக்கும் காரணிகள்(கஞ்சா பயன்பாடு), ஆன்டிடியூரிக் ஹார்மோன் சுரப்பதை ஊக்குவிப்பதன் மூலம் சிறுநீரகத்துடைய நீரை வெளியேற்றும் திறனைக் குறைப்பது அல்லது சிறுநீரகக் குழாய்களின் நீர் வெளியேற்ற வழிமுறைகளில் குறுக்கிடக்கூடிய மருந்துகளை உட்கொள்ளுதல் (ஸ்டெராய்ட், அழற்சி எதிர்ப்பு மருந்துகள், ஓபியாய்டுகள்), மது அருந்துதல், கடுமையான சிறுநீரக காயம், கடந்த காலத்தில் கடுமையான சிறுநீரக காயம்” போன்றவை இருந்ததாகக் குறிப்பிடுகிறது.
புரூஸ் லீ உயிரிழந்த நாளில் என்ன நடந்தது
புரூஸ் லீ உயிரிழந்த நாளன்று என்ன நடந்தது என்பதைக் குறித்து பொதுவெளியில் இருக்கக்கூடிய தகவல்களை இந்த ஆய்வுக்கட்டுரை விவரிக்கிறது. அந்த விவரங்கள்:
அவர் உயிரிழந்த நாளன்று, புரூஸ் லீயும் அவரது படங்களுக்கு தயாரிப்பாளராக இருந்த ரேமண்ட் சோ"வும் லீயின் காதலி என்று கருதப்பட்ட "பெட்டி டிங் பெயின்" வீட்டிற்கு காரில் சென்றனர்.
டிங் பெய் உடன் லீ சில மணிநேரத்தைத் தனியாகக் கழித்தார்.
பிறகு அங்கு தன்னுடைய வரவிருந்த திரைப்படத்தின் சில காட்சிகளைத் தீவிரமாக நடித்துப் பார்த்தார். அவர் வீட்டிற்குச் செல்வதற்கு முன்பாக கஞ்சாவை பயன்படுத்தியிருந்தார்.
இரவு 7:30 மணியளவில் தண்ணீர் குடித்த அவருக்கு, தலைவலியும் தலை சுற்றலும் ஏற்பட்டது. டிங் பெய் அவருக்கு ஒரு ‘எக்வாஜெசிக்’ மாத்திரையைக் (அவர் முன்பே எடுத்துள்ள மெப்ரோபாமேட் மற்றும் ஆஸ்பிரின் கலவை) கொடுத்தார். லீ ஓய்வெடுப்பதற்காகப் படுக்கையறைக்குச் சென்றார்.
அந்த நேரத்தில் ரேமண்ட் சோவ் அங்கிருந்து கிளம்பினார். இரவு 9:30 மணியளவில், லீ மயங்கிய நிலையில் இருப்பதை டிங் பெய் கண்டார். அவரை எழுப்ப முயன்றும் எந்தப் பலனும் இல்லை.
பிறகு கிளம்பிச் சென்ற சோவை அழைத்தார். அவர்கள் ஒரு மருத்துவரை அழைத்தனர். மருத்துவர் 10 நிமிடத்திற்கு சிபிஆர் முறை மூலம் இதயத்தை மீண்டும் துடிக்க வைக்க முயன்று தோல்வியுற்றார்.
லீ அருகிலிருந்த மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
பிரேத பரிசோதனையில் வெளிப்புற காயங்களோ நாக்கைக் கடித்ததற்கான அறிகுறியோ எதுவும் இல்லை. கடுமையான பெருமூளை வீக்கத்தால் 1,400 கிராம் எடை இருக்க வேண்டிய மூளை 1,575 கிராம் எடைக்கு இருந்தது.
வயிற்றில் கஞ்சாவின் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ப்ரூஸ் லீயின் மரணம் எக்வாஜெசிக் மாத்திரைக்கு அதிக உணர்திறன் கொண்டிருந்ததால் ஏற்பட்ட பெருமூளை வீக்கம் தான் காரணம் என்று அதிகாரபூர்வமாகத் தீர்மானிக்கப்பட்டது.லீ மரணத்தின் மற்ற காரணங்களும் புதிய ஆய்வு சொல்லும் விளக்கங்களும்
“லீ அந்த மாத்திரையை முன்பும் பயன்படுத்தியுள்ளார். அவர் உயிரிழந்த நாளன்று கூட, உடல்நலம் சரியில்லாமல் போன ‘பிறகு தான்’ அதை எடுத்துள்ளார். ஆகவே அவருக்கு இந்த மாத்திரையை எடுக்கும் முன்னரே அறிகுறிகள் தென்பட்டன.
மேலும், எக்வாஜெசிக் மாத்திரை தான் காரணமாக இருந்திருந்தால், உடற்கூறாய்வில் மூளை வீக்கம் மட்டுமே ஒரு தடயமாகக் கிடைத்திருக்காது,” என்று கிளினிக்கல் கிட்னி ஜர்னலில் வெளியாகியுள்ள புதிய ஆய்வு கூறுகிறது.
அவர் இறப்பதற்கு முந்தைய மாதமான மே 10ஆம் தேதியன்று அவருக்கு வலிப்பு ஏற்பட்டது. ஆகவே அவருடைய மரணத்திற்கு 'வலிப்பு' காரணமாக இருக்கலாம் என சொல்லப்பட்டது.
ஆனால், “அது ஒரேயொரு நிகழ்வு தான்” எனக் கூறும் இந்த ஆய்வுக்கட்டுரை, அவர் மே 29, 30 ஆகிய தேதிகளில் நரம்பியல் மருத்துவர் டேவிட் ரெய்ஸ்போர்டிடம் முழு நரம்பியல் பரிசோதனையைச் செய்திருந்ததாகவும் அந்தப் பரிசோதனைகளில் அவருடைய மூளையின் செயல்பாட்டில் எந்தவொரு பிரச்னையும் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் கூறுகிறது.மேலும், “அவருக்கு ஃபெனிடோய்ன் என்ற மருந்து பரிந்துரைக்கப்பட்டிருந்தது. அதை அவர் உயிரிழந்த நாள் வரை எடுத்துள்ளார்.
ஒருவேளை வலிப்பு ஏற்பட்டு இறந்திருந்தால், அவருடைய நாக்கு கடிக்கப்பட்டிருக்க வேண்டும், மூளை வீக்கத்தோடு, நுரையீரலும் அதிக திரவம் சேர்ந்து வீங்கியிருக்க வேண்டும். இவை எதுவும் இல்லையென்று உடற்கூராய்வு பதிவுகள் கூறுகின்றன. அதனால் அவர் வலிப்பு நோயால் இறக்கவில்லை,” என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
1973ஆம் ஆண்டில், அவர் உயிரிழந்த ஜூலை 20ஆம் தேதியன்று அதிகபட்ச வெப்பநிலை பதிவானதாகவும் அதில் ஏற்பட்ட வெப்ப அதிர்ச்சியால் (Heat stroke) அவர் உயிரிழந்ததாகவும் 2018ஆம் ஆண்டு கூறப்பட்டது.
ஆனால், “வெப்ப அதிர்ச்சியின்போது உடலுறுப்புகளின் வெப்பநிலை 40 டிகிரி செல்ஷியஸுக்கும் மேலே இருக்கும். தோல் வெப்பம் மிகுந்து, வறண்டு காணப்படும். மத்திய நரம்பு மண்டலத்தில் அசாதாரணங்கள் தென்பட்டிருக்கும்.”
“2018ஆம் ஆண்டில் வெப்ப அதிர்ச்சியே காரணமென்று கூறிய மேத்யூ போல்லி, மே 10ஆம் தேதியன்று ப்ரூஸ் லீக்கு வியர்வைச் சுரப்பிகள் அகற்றப்பட்டதாகவும் அது அவர் வெப்ப அதிர்ச்சிக்கு உள்ளாவதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தியதாகவும் கூறியுள்ளார்,” எனக் கூறும் புதிய ஆய்வு, வெப்ப அதிர்ச்சிக்கான வாய்ப்புகளை இது அதிகரிக்காது என்று வாதிடுகிறது.
அதுமட்டுமின்றி, அவர் உயிரிழந்த நாளன்று ஹாங்காங்கில் 25 முதல் 32 டிகிரி செல்ஷியஸ் வரை இருந்ததாகவும் இது அங்கு வழக்கமான வெப்பநிலையே என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.
அதில் “நாள்பட்ட அதிக திரவ உட்கொள்ளலைத் தூண்டக்கூடிய வகையில், தாகத்தை கடுமையாக அதிகரிக்கும் காரணிகள்(கஞ்சா பயன்பாடு), ஆன்டிடியூரிக் ஹார்மோன் சுரப்பதை ஊக்குவிப்பதன் மூலம் சிறுநீரகத்துடைய நீரை வெளியேற்றும் திறனைக் குறைப்பது அல்லது சிறுநீரகக் குழாய்களின் நீர் வெளியேற்ற வழிமுறைகளில் குறுக்கிடக்கூடிய மருந்துகளை உட்கொள்ளுதல் (ஸ்டீராய்ட், அழற்சி எதிர்ப்பு மருந்துகள், ஓபியாய்டுகள்), மது அருந்துதல், கடுமையான சிறுநீரக காயம், கடந்த காலத்தில் கடுமையான சிறுநீரக காயம்” போன்றவை இருந்ததாகக் குறிப்பிடுகிறது.அத்துடன், “லீ மே 10ஆம் தேதியன்றே மூளை வீக்கத்தால் பாதிக்கப்பட்டார். அவர் ஹாங்காங்கில் ஒரு டப்பிங் வேலையில் இருக்கும்போது, தலை வலியும் தலை சுற்றலும் ஏற்பட்டது. அதன் பிறகு அவர் மதியம் சாப்பிட்டதையும் வாந்தியெடுத்துள்ளார். அவரால் நிற்க முடியாமல் தடுமாறியுள்ளார்.
அவரை அருகிலிருந்த பாப்டிஸ்ட் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, மூளை வீக்கம் ஏற்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
அதன்பிறகு அவர் அமெரிக்காவில் மருத்துவர் ஹேரால்ட் எல்.கார்ப்மனிடம் மே 25ஆம் தேதியன்று மீண்டும் பரிசோதனை மேற்கொண்டபோது மே 10ஆம் தேதி பாப்டிஸ்ட் மருத்துவமனை பரிசோதனையில் அவருடைய ரத்த யூரியா நைட்ரஜன் அளவு அசாதாரணமாக இருந்ததாகவும் 25ஆம் தேதி இயல்பாக இருந்ததாகவும் தெரிகிறது. இது அவருக்கு முன்பே சிறுநீரக காயம் ஏற்பட்டிருந்ததைக் காட்டுகிறது,” என்று புதிய ஆய்வு கூறுகிறது.
தண்ணீரை அதிகமாகச் சேர்த்துக் கொள்வதற்கு மேற்குறிப்பிட்ட காரணங்கள் போக, “லீயின் மனைவி லிண்டா, அவருடைய அதிக நீர்ச்சத்து கொண்ட உணவுமுறை குறித்தும் கூறியுள்ளார்.
அவர் உயிரிழந்த நாளிலும் போல்லி, அவர் அதிகளவு தண்ணீர் அருந்தியதைப் பற்றி பேசினார்,” என்று குறிப்பிடும் இந்த ஆய்வுக்கட்டுரையில், புரூஸ் லீ மூளை வீக்கத்தால் ஏற்பட்ட ஹைபோநெட்ரீமியாவால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
#👌இந்த நாள் நல்ல நாள்🤝
ஓம் சரவணபவ ஓம் முருகா சரணம் சஷ்டி விரதம் 💐🌷🌹🍀🌺🌸🙏🙏🙏🙏🙏🙏நற்காலை வணக்கம்
#👌இந்த நாள் நல்ல நாள்🤝
முருகன் என்றே முழங்குது என் மனசு
கடலைப்போல உன் கருணை பெரிசு
ஓம் முருகா
செவ்வாய்க்கிழமை
நற்காலை வணக்கம்💐🙏
#👌இந்த நாள் நல்ல நாள்🤝
ஃபேஸ்புக் வாட்சப் அடிக்ஷன் சரிசெய்யப்படும்...
"டாக்டர் இவன் என் பேரன்"
"என்ன செய்து இவருக்கு"?
"அவனுக்கு ஒன்னும் செய்யல அவன்தான் எந்நேரமும் ஃபோனை போட்டு நோண்டிட்டிருக்கான். பக்கத்தூட்டு புள்ளதான் சொல்லுச்சு இந்த சீக்குக்கு புதுசா ஆஸ்பத்திரி தொறந்துருக்காக போய் காட்டுங்கன்னு"
"படிக்கிறியாப்பா"?
"இல்ல டாக்டர் நான் வொர்க் பண்றேன்"
"பாட்டி.... நீங்க வெளியே இருங்க... நான் பேசுறேன்"
"ஏம்ப்பா எந்நேரமும் அதில இருக்கே.... தப்பில்லையா"?
"உங்களுக்கு ஃபேஸ்புக் அக்கவுண்ட் இருக்கா டாக்டர்"?
"இருக்குப்பா"
"ஸ்டேட்டஸ்லாம் போடுவீங்களா"?
"எனக்கு எங்கே அதுக்குலாம் நேரம்"?
"போங்க டாக்டர் நீங்க சுத்த வேஸ்ட்டு...."
"நான் பெரிய ஸ்பெஷலிஸ்ட்டுபா.... என்னப்போயி"
"இருந்து என்ன செய்ய? உலகம் தெரியாத ஆளா இருக்கியளே"?
"நான் லண்டன்ல படிச்சிருக்கேன்பா"
"அட போங்க டாக்டர்..... எப்ப பாரு ஊசி மாத்திரை பேஷண்ட்டுன்னு.... அங்க போயி பாருங்க டாக்டர்... எவ்ளோ அழகான உலகம்னு"
"அப்டி என்னதாம்ப்பா இருக்கு"?
"ஆயிரத்தெட்டு பிரச்சனை இருந்தாலும் ஒவ்வொருத்தரு புலம்பல பாத்து நம்ம ராஜா மாதிரி இருக்குற ஃபீல் வரும்"
"இன்ட்ரஸ்டிங் அப்புறம்"?
"திடீர்னு ரத்தம் தேவைப்பட்டா என்ன பண்ணுவீங்க"?
"ப்ளட் பாங்க்குக்கு தகவல் சொல்லிட்டு கைய பிசைஞ்சிட்டு நிப்போம்"
"நாங்க ஒரு ஸ்டேட்டஸ் தட்டுனா போதும்.... பத்து பேர் இரத்தம் குடுக்க வந்திடுவாங்க... நாலு வருசத்துக்கு முந்துனத கூட அக்கறையா ஷேர் பண்ணுவோம்னா பாத்துக்கோங்க"
"உசுர் காக்கும் விசயமாச்சேப்பா"
"வீட்ல திட்னா என்ன பண்ணுவீங்க டாக்டர்"
"ரொம்ப சேடாகிருவேன்பா..... சமயத்தில் பெரிய சண்டையாகிடும்"
"என்னத்த திட்டுனாலும் நாங்க சேடாக மாட்டோம்..... சூடு சொரணைலாம் மருந்துக்கும் இருக்காது.... ஏன்னா எங்களுக்கு காதுலயே விழாது. இதையே பாத்துட்டு ஈஈஈஈஈன்னு உக்காந்துருப்போம்"
"இதுலாம் எங்கேப்பா கத்துக்கிட்டே"?
"பத்து நிமிசம் ஃபோனை கொடஞ்சா ஆட்டோமேட்டிக்கா வந்துடும்.... என்னோட ஒரு செல்ஃபிய எடுத்து.... க்ளினிக்கில் ஃப்ரெண்டுடன்னு கேப்ச்சர போட்டு அப்லோட் பண்ணுங்க"
"எல்லோரும் வாழ்த்து சொல்றாங்க.... எதுக்குப்பா"?
"அப்டித்தான் சொல்வாங்க. ஏன்னு நமக்கும் தெரியாது அவங்களுக்கும் தெரியாது"
"நான் க்யூட்டா இருக்கேனாம் ஒரு பொண்ணு சொல்லுதுப்பா..... நர்ஸ் ஒரு அர மணி நேரம் ஓ.பி ய நிறுத்திக்கோமா"
அடேய்..... இவ்ளோ நேரம் என்னடா பண்ற? மருந்து மாத்திரைலாம் வாங்கிட்டியாடா"?
"இல்ல பாட்டி நான் எல்லாமே அவருக்கு சொல்லி கொடுத்துட்டேன்...... அவர் ஃபோனை ஆப்ரேட் பண்ணிட்டு இருக்காரு"
#👌இந்த நாள் நல்ல நாள்🤝
ஆறே நாட்களில் கோட்டை கட்டி ஆங்கிலேயருக்கு எதிராக சைகை மொழியில் படை நடத்திய 'ஊமைத்துரை' *“இறுதி தருணங்களில் கட்டபொம்மனிடம் ஒருவித துணிச்சலும் கர்வமும் தென்பட்டது. ஆனால் தூக்குமேடையை நோக்கி நடந்துச் செல்லும்போது, ஒருவரைப் பற்றி மட்டும் மிகவும் கவலைப்பட்டார் என என்னிடம் தெரிவிக்கப்பட்டது. அது அவரது தம்பி ஊமைத்துரை”
அக்டோபர் 16, 1799 அன்று கயத்தாறில், வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டது குறித்து ஆங்கிலேய அரசின் (மதராஸ் மாகாணம்) செயலருக்கு மேஜர் பானர்மேன் எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது 1881-இல் மதராஸ் அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட, ராபர்ட் கால்டுவெல் எழுதிய 'திருநெல்வேலி மாவட்டத்தின் அரசியல் மற்றும் பொது வரலாறு' என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் கிழக்கிந்திய ராணுவத்தில் அதிகாரியாக இருந்த ஜெனரல் ஜேம்ஸ் வெல்ஷ், 1830இல் வெளியிட்ட ‘Military Reminiscences’ என்ற புத்தகத்தில், “நான் அறிந்ததிலேயே மிகவும் அசாதாரணமான ஒரு மனிதர், ஊமைத்துரை தான்” என்று கூறியுள்ளார்.
தமிழறிஞர் மா.பொ.சிவஞானம் எழுதிய ‘கயத்தாற்றில் கட்டபொம்மன்’ என்ற நூலில், “வீரபாண்டியனை விட ஊமைத்துரையே ஆங்கிலேயரை எதிர்த்து அதிகம் போராடினார்” என்று கூறியுள்ளார். *கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட போது, அவரது தம்பி ஊமைத்துரை பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரது இயற்பெயர் குமாரசுவாமி.
இவர் பின்னர் பாளையங்கோட்டை சிறையில் இருந்து தப்பித்துச் சென்று, ஆங்கிலேயர்களுக்கு எதிராக பல நாட்களுக்கு போர் செய்தார். இறுதியில், நவம்பர் 16, 1801ஆம் ஆண்டு பாஞ்சாலங்குறிச்சியில் தூக்கிலிடப்பட்டார். *‘சைகை மொழியில் போர்களை வழிநடத்தியவர்’
ஊமைத்துரை குறித்து தனது ‘Military Reminiscences’ புத்தகத்தில் விரிவாக எழுதியுள்ளார் ஜெனரல் ஜேம்ஸ் வெல்ஷ். இவர் 1790 முதல் 1848 வரை பிரிட்டிஷ் கிழக்கிந்திய ராணுவத்தில் பணிபுரிந்தவர். இந்திய வரலாற்று ஆய்வுகளில் இவரது ‘Military Reminiscences’ புத்தகம் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.
“கட்டபொம்மனுக்கு மிகவும் நெருக்கமான நபராக இருந்தவர் ஊமைத்துரை. அவரால் பேச முடியாது, அவருக்கு காதும் கேட்காது. எனவே அவரை ஆங்கிலத்தில் ‘Dumb brother’ என்றே அழைத்தோம்” என்று எழுதியுள்ளார் ஜேம்ஸ் வெல்ஷ்.
அவரது தோற்றம் குறித்து, “மெலிந்த தேகம் கொண்ட இளைஞர், ஆனால் சிக்கலான நேரங்களில் சிறப்பாக செயல்படக் கூடியவர், அபாரமான மனவலிமை உடையவர். அவர் மீது அதீத நம்பிக்கை கொண்ட மக்கள் அவரை கடவுளாகப் பார்த்தனர், ‘சாமி’ என்று அழைத்தனர்.” என்று விவரித்துள்ளார் ஜேம்ஸ் வெல்ஷ்.
மேலும், “ஊமைத்துரை மக்களால் போற்றப்பட்டார். அவரது சிறு சைகை கூட மக்களுக்கு இறைவாக்கு, ஒவ்வொரு மனிதனும் அவர் கட்டளையிட்டதை நிறைவேற்ற துடித்தார். அவர் தலைமை தாங்காத எந்த சபையும் அங்கே கூடவில்லை. அவர் தலைமை தாங்காத எந்த துணிச்சலான சாகசமும் மேற்கொள்ளப்படவில்லை,” என்று எழுதியுள்ளார் ஜெனரல் ஜேம்ஸ் வெல்ஷ்.
பாளையங்கோட்டையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தமிழ்ப் பேராசிரியர் மற்றும் எழுத்தாளர் வே. மாணிக்கம் பிபிசியிடம் பேசுகையில், “பலருக்கும் ஊமைத்துரையின் சாமர்த்தியம் மற்றும் வீரம் குறித்து தெரியாது. சைகைகள் மூலமாகவே பல நாட்களுக்கு ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரை தலைமையேற்று நடத்தியவர். இவரைப் போல ஒருவரை வரலாற்றில் காண்பது அரிது” என்கிறார்.
“ஆங்கிலேயப் படைகள் வருவதை தன் வீரர்களுக்கு உணர்த்த, இடது கையில் வைக்கோல் புற்களை வைத்துக் காட்டி, வலது கையால் தொப்பி அணிவது போல சைகை செய்வார். அவர்களைத் தாக்குங்கள் என்று சொல்வதற்கு ஒரு வித்தியாசமான சத்தத்தை எழுப்புவார்.” என்று கூறுகிறார் வே. மாணிக்கம்.
ஜேம்ஸ் வெல்ஷ் தனது புத்தகத்தில், ஊமைத்துரையின் போர் தந்திரங்களைக் குறிப்பிட்டு, “ஆங்கிலேயர்களுக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்துவதில் முதன்மையானவராக இருந்தார். அவர் எங்கு சென்றாலும், அவரது கட்டுக்கடங்காத வீரம் வெற்றியை உறுதி செய்தது. எனினும் இறுதியாக தூக்கு மேடை ஏற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். அதற்கு முன் நடந்த ஒவ்வொரு சண்டையிலும், அவர் எங்களிடம் இருந்து தப்பித்தது பெரும் அதிசயம் தான்” என்று எழுதியுள்ளார். *கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட பிறகு என்ன நடந்தது?
கட்டபொம்மன், ‘வரி ஒழுங்காகக் கட்டவில்லை, கலெக்டர் அழைத்த போது சந்திக்க மறுத்தார், சிவகிரியாரின் மகனுக்கு ஆதரவாகப் படைகள் அனுப்பினார், மேஜர் பானர்மேன் அதிகாரத்திற்கு கட்டுப்பட்டுச் சரணடையாமல் எதிர்த்து போரிட்டார்,’ உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டு, அக்டோபர் 16, 1799 அன்று தூக்கிலிடப்பட்டார் (‘திருநெல்வேலி மாவட்டத்தின் அரசியல் மற்றும் பொது வரலாறு' நூல்).
அந்த சமயத்தில், அவரது தம்பி ஊமைத்துரை மற்றும் சிவத்தையா உட்பட பாஞ்சாலங்குறிச்சியைச் சேர்ந்த முக்கியமான நபர்கள் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
அந்தப் பகுதியில் ஆங்கிலேயப் படைகளுக்கு மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றிய ஜார்ஜ் ஏ.ஹியூஸ், ‘The Madras Journal of Literature and Science’ எனும் இதழில் பின்வருமாறு தெரிவித்துள்ளார் (இது 1844இல் வெளியிடப்பட்டது).
“1800ஆம் ஆண்டின் தொடக்கத்தில், கட்டபொம்மனை தூக்கிலிட்ட மேஜர் பேனர்மேன் ஐரோப்பாவுக்கு திரும்பினார். அதன் பின்னர் மேஜர் ராபர்ட் டூரிங் வந்தார். பிறகு அந்த இடத்திற்கு மேஜர் காலின் மெக்காலே வந்தார்.”
இந்த மேஜர் மெக்காலே தான், ஊமைத்துரை மற்றும் அவரது படைகளுக்கு எதிராக ‘இரண்டாம் பாஞ்சாலங்குறிச்சி போரின்’, முதல்கட்ட தாக்குதலில் ஆங்கிலேயப் படைகளை வழிநடத்தினார்.
ஊமைத்துரை மற்றும் அவரது சகாக்கள் சிறையில் இருந்து தப்பியது குறித்து தனது நூலில் விவரிக்கும் ஜெனரல் ஜேம்ஸ் வெல்ஷ், “1801ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி, பாளையங்கோட்டையிலிருந்து சுமார் முப்பது மைல் தொலைவில் உள்ள சங்கரநயினார் கோவிலில் எங்கள் படை முகாமிட்டிருந்தது. சுமார் இருபது ஆங்கிலேய பெண்கள் மற்றும் ஆண்கள், மேஜர் மெக்காலே வீட்டு விருந்தில் இருந்தனர்.”
“அதுமட்டுமல்லாது அப்போது சின்னம்மை பரவல் இருந்ததால், அபாயகரமான கைதிகளின் இரும்பு கை விலங்குகளை அகற்றியிருந்தோம். இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி பாளையங்களைச் சேர்ந்த கைதிகள், தங்களது படையினரை வரவைத்து, காவலர்களைத் தாக்கி தப்பினர். பல நாட்கள் தீட்டப்பட்ட திட்டம் இது. விடிவதற்கு முன் அவர்கள் பாஞ்சாலங்குறிச்சியை அடைந்துவிட்டனர்” என்று எழுதியுள்ளார். *அந்த பல நாள் தீட்டப்பட்ட திட்டம் என்பது சுவாரசியமான ஒன்று எனக் கூறும் எழுத்தாளர் மாணிக்கம், அதை பின்வருமாறு விவரிக்கிறார், “ஊமைத்துரையின் ஆட்கள் சிலர் தொடர்ந்து சிறைச்சாலை இருந்த பகுதியில் உளவு பார்த்து, படைக்கு தகவல் தெரிவிக்கின்றனர். பின்னர் சுமார் 200 பேர் காவடி எடுத்துச் செல்வது போல பாளையங்கோட்டை எல்லைக்கு வருகின்றனர். பின்னர் 100 விறகுக் கட்டுகளுக்குள் ஆயுதங்களை மறைத்து ஒரு கட்டுக்கு 2 பேர் என விறகு விற்பவர்கள் போல ஊருக்குள் வருகிறார்கள்”
“அப்படி வருகிறவர்களை உண்மையான வியாபாரிகள் என நினைத்து மக்கள் விறகு வாங்க அணுகக்கூடாது என்பதற்காகவே ‘ஒரு கட்டு விறகு 5 ரூபாய்’ என மிக அதிகமான விலையைக் கூறுகிறார்கள். சிறைச்சாலையை நெருங்கியவுடன் அதிரடியாக உள்ளே நுழைந்து, தாக்குதல் நடத்தி ஊமைத்துரையை மீட்கிறார்கள்”
இந்தத் தாக்குதலின் போது, குறைவான ஆங்கிலேயர்களே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போதிலும், அவர்களை ஊமைத்துரையின் படை கொல்லவில்லை என்பதைச் சுட்டிக்காட்டும் வே. மாணிக்கம், “பாஞ்சாலங்குறிச்சி செல்லும் வழியில் கூட ஆங்காங்கே சிதறி இருந்த ஆங்கிலேயக் குழுக்களை அவர்கள் நினைத்தால் எளிதாக கொன்றிருக்கலாம். ஆனால் போர் என்பது நேர்மையாக இருக்க வேண்டும் என ஊமைத்துரை நினைத்தார்” என்கிறார்.
இதைப் பற்றி ஜெனரல் ஜேம்ஸ் வெல்ஷ் தனது ‘Military Reminiscences’ புத்தகத்தில், “அந்தப் படை தப்பிக்கும் அவசரத்தில் எங்களை கொல்லும் வாய்ப்பை நழுவ விட்டார்கள். அவர்கள் நூற்றுக்கணக்கில் இருந்தார்கள், வழியில் இருந்த சிறு ஆங்கிலேயப் படைகளும் அவர்களை எதிர்கொள்ள தயார் நிலையில் இல்லை.”
“ஒருவேளை எங்களைத் தாக்கியிருந்தால், மிகப்பெரிய சேதம் ஏற்பட்டிருக்கும். ஆனால் அவர்கள் ஆயுதங்களை மட்டுமே பறித்துக் கொண்டார்கள். அன்று பாளையங்கோட்டையில் இருந்த அத்தனை ஆங்கிலேய சிப்பாய்களும் சேர்ந்திருந்தாலும் அவர்களை தடுத்திருக்க முடியாது” என்று எழுதியுள்ளார். *சேதத்தை சந்தித்தது. கோட்டைக்கு அருகே வந்த ஒவ்வொரு ஆங்கிலேய படை வீரரும் ஈட்டியால் குத்திக் கிழிக்கப்பட்டார்” என்கிறார்.
ஜெனரல் ஜேம்ஸ் வெல்ஷ் இந்த சம்பவம் குறித்து தனது புத்தகத்தில், “தாக்குதல் நடத்திய குழுவில் இருந்த நூற்று இருபது ஐரோப்பியர்களில் நாற்பத்தி ஆறு பேர் மட்டுமே காயமின்றி தப்பினர். அதிகாரிகள், பீரங்கிப் படையினர் உட்பட நூற்று ஆறு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் காயமடைந்தனர்.” என்று விவரிக்கிறார். *கர்னல் பீட்டர் ஆக்னியூவின் வருகை
பாஞ்சாலங்குறிச்சியின் பரம்பரை எதிரிகளான எட்டயபுரம் பாளையத்தார்கள், சுமார் 1000 பேர் கொண்ட படையுடன் வந்தார்கள் என்றும், ஆனால் அவர்களாலும் வெற்றி பெற முடியவில்லை, அவர்கள் பக்கம் எத்தனை இறப்புகள் என்பது தெரியவில்லை எனவும் ஜேம்ஸ் வெல்ஷ் குறிப்பிடுகிறார்.
"மேஜர் மெக்காலேயின் இந்தத் தோல்விக்குப் பிறகு, விழித்துக் கொண்டது ஆங்கிலேய அரசு. கர்நாடகா, மலபார் கடற்கரை போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து படைகள் வரவழைக்கப்பட்டன. குதிரைப் படை ஒன்று அங்கே அனுப்பப்பட்டது. திருச்சிராப்பள்ளியிலிருந்து பீரங்கிப் படை கிளம்பியது. போருக்கு தலைமையேற்க ஒரு புதிய அதிகாரி வரவழைக்கப்பட்டார்."
"அவர் கர்னல் பீட்டர் ஆக்னியூ. சிறந்த ராணுவ அனுபவம் வாய்ந்தவர், பல ஆண்டுகளாக ஆங்கிலேய ராணுவத்தின் துணை ஜெனரலாக நன்கு அறியப்பட்டவர்." (‘திருநெல்வேலி மாவட்டத்தின் அரசியல் மற்றும் பொது வரலாறு', அத்தியாயம் 7, பக்கம் 202)
இதைத் தொடர்ந்து நடைபெற்ற சம்பவங்களை ஜார்ஜ் ஏ.ஹியூஸ், ‘The Madras Journal of Literature and Science’ இதழில் பின்வருமாறு விவரிக்கிறார்.
“எதிர்பார்க்கப்பட்ட படைப்பிரிவுகள் அனைத்தும் மே மாத மத்தியில் (1801ஆம் ஆண்டு) பாஞ்சாலங்குறிச்சியை வந்தடைந்தன. கர்னல் அக்னியூ மே மாதம் 21ஆம் தேதி தலைமைப் பொறுப்பை ஏற்றார். அவரது வருகையிலிருந்து மூன்றே நாட்களுக்குள், மே 24ஆம் தேதி கோட்டை கைப்பற்றப்பட்டது.”
“அந்த மூன்று நாட்களில் பீரங்கிகள், கையெறி குண்டுகள், என இடைவிடாத கடும் தாக்குதல் இரவும், பகலும் தொடர்ந்தது. இதனால் எதிரிகளுக்கு (ஊமைத்துரை மற்றும் அவரது படையினர்) சேதத்திலிருந்து மீள அல்லது அடுத்தகட்டம் குறித்து யோசிக்க அவகாசம் கிடைக்கவில்லை. அவர்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டது, கோட்டையை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது”
கோட்டையிலிருந்து சுமார் 2000 பேர் வரை தப்பித்திருப்பார்கள் என்றும், கோட்டைக்குள் ஆங்கிலேயப் படைகள் நுழைந்தபோது 450 பேரின் உடல்கள் கிடந்தன என்றும் ஜார்ஜ் ஏ.ஹியூஸ் பதிவிட்டுள்ளார்.
“அந்தப் போரில் பலத்த காயமடைந்த ஊமைத்துரை, கோட்டைக்கு சில மைல்கள் தூரத்தில் மயங்கிக் கிடந்தார். அவர் உயிர் பிழைத்தது பெரும் அதிசயம், குறிப்பாக மக்கள் அவரைக் கடவுளாகப் பார்த்தது தான் அதற்கு காரணம்” என்கிறார் எழுத்தாளர் வே. மாணிக்கம்.ஜெனரல் ஜேம்ஸ் வெல்ஷ் தனது ‘Military Reminiscences’ புத்தகத்தில், “கோட்டையிலிருந்து தப்பியோடியவர்களில் சிலர், மூன்று மைல்கள் தூரத்தில் உள்ள ஒரு கிராமத்தில், படுகாயமடைந்து கிடந்தனர். அதில் தன் மகனைத் தேடித் சென்ற ஒரு தாயும் அவரது உறவினர்களும், அவனை அடையாளம் கண்டுகொண்டு தூக்குகிறார்கள்.”
“அப்போது அந்த மகன், ‘அம்மா, என்னைக் காப்பாற்ற முயற்சி செய்யாதே. என்னருகே சாமி கிடக்கிறார், அவரை முதலில் காப்பாற்று’ என்று சொல்ல, அப்போதுதான் அவர்கள் அங்கு உயிருடன் கிடந்த ஊமைத்துரையைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, அவரை வீட்டிற்கு கொண்டு செல்கிறார்கள்” என்று விவரிக்கிறார்.
இதில் ஊமைத்துரையை ‘சாமி’ என்று அழைப்பதைக் குறிப்பிட்டு, “இறக்கும் தருவாயிலும் அவரைக் காப்பாற்ற நினைத்த அந்த மகனின் செயலில் இருந்து, ஊமைத்துரையை அந்த மக்கள் கடவுளாகவே பார்த்தனர் என்ற எனது கூற்று நிரூபணமாகிறது.” என்று ஜெனரல் ஜேம்ஸ் வெல்ஷ் எழுதியுள்ளார்.
மேலும், “அதன் பிறகு அந்தத் தாயின் வீட்டில் வைத்து ஊமைத்துரைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவரையும் மீதிமிருந்த அவரது படைவீரர்களையும் ஆங்கிலேயரும், எட்டயபுர படைகளும் தேடிக் கொண்டிருந்தன.”
“எட்டயபுர படைகள் அந்த கிராமத்திற்குள் நுழைந்தவுடன், ஊமைத்துரையின் உடலில் ஒரு வெள்ளைத்துணியைப் போர்த்தி, ‘அது சின்னம்மையால் இறந்த ஒரு இளைஞனின் உடல்’ என அங்கிருந்த பெண்கள் கூறிவிட்டனர். சின்னம்மை என்று சொன்னவுடன் பயந்து, அங்கிருந்து எட்டயபுர படைகள் வெளியேறிவிட்டன. இது ஊமைத்துரையின் உயிரை மட்டுமல்ல, பலரின் உயிரைக் காப்பாற்றியது” என்று ஜெனரல் ஜேம்ஸ் வெல்ஷ் தனது நூலில் எழுதியுள்ளார். *மருது சகோதரர்கள் - ஊமைத்துரை நட்பு
அதைத் தொடர்ந்து நடந்தது குறித்து எழுத்தாளர் வே.மாணிக்கம் விவரிக்கிறார், “சில நாட்கள் கழித்து, காயங்களில் இருந்து குணமடைந்து, கமுதி சென்ற ஊமைத்துரை, மருது சகோதரர்களைச் சந்தித்தார். குறிப்பாக சின்ன மருது, ஊமைத்துரை மீது பெரும் மதிப்பு வைத்திருந்தார். அவர்களோடு சில நாட்கள் சிறுவயல் ஊரில் தங்கியிருந்தார் ஊமைத்துரை.”
“இதை அறிந்துகொண்ட கர்னல் பீட்டர் ஆக்னியூ, ஊமைத்துரையை உடனே தன்னிடம் ஒப்படைக்கும்படி மருது சகோதரர்களுக்கு உத்தரவிட்டார். அவர்கள் மறுத்துவிட்டனர். மீண்டும் பெரும் போர் வெடித்தது. இம்முறை மருது சகோதரர்களும் அதில் இணைந்தனர். ஆனால், அவர்களால் வெற்றி பெற முடியவில்லை.” என்கிறார்.
போரின் முடிவில், மருது சகோதரர்கள் திருப்பத்தூர் கோட்டையின் உயரமான கொத்தளத்தில் தூக்கிலிடப்பட்டனர். ஊமைத்துரையும் அவரது சகோதரரும் (சுப்பா நாயக்கர்) பாஞ்சாலங்குறிச்சிக்கு கொண்டுவரப்பட்டு, கோட்டைக்கு அருகே இருந்த சிறு குன்றின் மீது தூக்கிலிடப்பட்டனர். (‘திருநெல்வேலி மாவட்டத்தின் அரசியல் மற்றும் பொது வரலாறு', அத்தியாயம் 9, பக்கம் 222)
“அதோடு பாளையக்காரர்களின் கிளர்ச்சி மொத்தமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இதைக் குறித்து எந்த சுவடும் இருக்கக்கூடாது என பாஞ்சாலங்குறிச்சி கோட்டை மொத்தமாக அழிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 10 மாதங்களுக்கு மேல் ஊமைத்துரை நடத்திய இந்த போருக்கு சாட்சியாக இன்று எஞ்சி இருப்பது, அப்போது இறந்துபோன ஆங்கிலேய சிப்பாய்கள், அதிகாரிகளின் கல்லறைகள் மட்டும் தான்” என்கிறார் எழுத்தாளர் வே.மாணிக்கம்
#👌இந்த நாள் நல்ல நாள்🤝
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
திங்கள்கிழமை
நற்காலை வணக்கம்💐🍀🙏🙏🙏🙏
#👌இந்த நாள் நல்ல நாள்🤝
ஐயப்பா
சரணம் ஐயப்பா
கார்த்திகை ஞாயிற்றுக்கிழமை
இனிய காலை வணக்கம் 💐🙏





