-
ShareChat
click to see wallet page
@mohammedsms4358
mohammedsms4358
-
@mohammedsms4358
மதுரை நேசன் keep calm
#இஸ்லாம் *பெருமானாரின் ﷺ பத்துக் கட்டளைகள்* 1443 ஆண்டுகளுக்கு முன் ஹிஜ்ரி பத்தாம் ஆண்டு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் அரபாத் பெருவெளியில் நிகழ்த்திய வரலாற்று சிறப்புமிக்க இறுதி உரை., அதில் பத்து விஷயங்களை தமது அன்புக்கட்டளைகளாக உலகின் முன் வைத்தார்கள். 1.*மக்களே !* நன்றாகக் கவனத்துடன் கேட்டுக் கொள்ளுங்கள். ஏனெனில், அடுத்த வருடம் இதே நாளில் இதே இடத்தில் உங்கள் மத்தியில் நான் இருப்பேனா என்பது எனக்குத் தெரியாது. இந்த நாளும், இந்த மாதமும், இந்த நகரமும் பரிசுத்தமானவை. அதுபோலவே உங்களது உயிரும், உடைமையும், கண்ணியமும் பரிசுத்தமானவை ஆகும். இறுதிநாள் வரை அவை பரிசுத்தமாக இருக்க வேண்டும். யாரும் அவற்றில் தலையிடவோ, அபகரிக்கவோ கூடாது. இறைவனின் சமூகத்திலே இவற்றிற்கெல்லாம் நீங்கள் கணக்களிக்க வேண்டியதிருக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். 2. *மக்களே !* ஒருவர் குற்றம் செய்தால் அந்த குற்றத்தின் தண்டனை அவரது குடும்பமத்தினருக்கு கல்ல, அவருக்கே வழங்கப்படும். தந்தை தன் பிள்ளைக்கோ, பிள்ளை தன் தந்தைக்கோ அநியாயம் செய்ய வேண்டாம். தந்தையின் குற்றத்திற்காக பிள்ளையையோ, பிள்ளையின் குற்றத்திற்காகத் தந்தையையோ தண்டிக்கப்பட மாட்டாது. 3.*மக்களே !* அஞ்ஞான காலத்தில் இஸ்லாத்திற்கு முன்பு ஏற்பட்ட கொலைகளுக்கும், கொடுஞ் செயல்களுக்கும், பழிவாங்கும் உரிமை இன்று முதல் ரத்து செய்யப்பட்டு விட்டது. முதலாவது எனது குடும்பத்தைச் சார்ந்த ரபீஆ இப்னுல் ஹாரிதின் கொலைக்கு பழிவாங்குவதை நான் மனப்பூர்வமாக நிறுத்திவிட்டேன். அறியாமைக்காலத்தில் நிலவிய பழிக்குப்பழியும் உயிர்போக்கும் மடமையும் இனி கூடாது. 4.*மக்களே !* வட்டி வாங்குதல் இனி உங்களுக்குத் தடுக்கப்படுகிறது. அஞ்ஞான காலத்தில் ஏற்பட்ட வட்டித் தொகையனைத்தும் இன்று முதல் ரத்து செய்யப்படுகின்றன. கடன்பட்டவர்கள் முதலை மட்டும் திருப்பிக் கொடுத்து விட்டால் போதுமானது. முதலாவது எனது பெரிய தந்தையார் அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப் அவர்களுக்கு வரவேண்டிய,வட்டித்தொகையனைத்தும் தள்ளுபடி செய்து விட்டேன். 5. *மக்களே !* பெண்கள் குறித்து அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். உங்கள் மனைவியர் மீது உங்களுக்கு உரிமை உள்ளது போல், உங்கள் மீதும் உங்கள் மனைவியர்க்கு உரிமையுண்டு. அவர்கள் உங்கள் கைகளிலே ஒப்படைக்கப்பட்ட அமானிதம் அடைக்கலப் பொருள்களாவர். அல்லாஹ்வின் பெயரால் அவர்களை உங்கள் மனைவியராகப் பொறுப்பேற்றிருக்கிறீர்கள்அவர்களின் கடமை, நீங்கள் விரும்பாதவர்களை உங்கள் இல்லத்திற்குள் அனுமதிக்கலாகாது. மீறினால் படுக்கையை விட்டு சிறிது காலம் விலக்கி வைக்கவோ, காயம் ஏற்படாத வாறு அடிக்கவோ செய்யுங்கள். அதுபோல உங்களது கடமை நீங்கள் அவர்களுக்கு வேண்டிய உணவு, உடைகளை வழங்கி அன்புடனும் கருணையுடனும் நடந்து கொள்ளுங்கள். இறைவனுக்குப் பயந்து அவர்களது நன்மைகளைப் பேணி வாருங்கள். 6.*மக்களே !* எனது வார்த்தைகளை கவனத்துடன் கேளுங்கள், கேட்டு நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். எல்லாமுஸ்லிம்களும்,ஒருவருக்கொருவர் சகோதரரே என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.ஒரேசகோதரத்துவத்தைச் சேர்ந்தவர்கள் *நீங்கள் !* ஒருவருடைய பொருளை அவர் மனப்பூர்வமாகக் கொடுத்தாலன்றி, *மற்றவர் எடுப்பது ஹராம்* தடுக்கப்படுகிறது. அநியாயம் செய்வதிலிருந்து கவனத்துடன் விலகிக் கொள்ளுங்கள். 7.*மக்களே !* எனக்குப் பிறகு எந்த ஒரு இறைதூதரும் நபியும் இல்லை. உங்களுக்குப் பின் எந்தஒருசமுதாயமும் வரப்போவதில்லை. தெரிந்து கொள்ளுங்கள் *!* உங்களைப் படைத்துக்காக்கும்,உங்கள்இறைவனையே வணங்குங்கள். உங்களுக்குக் *கடமையாக்கப்பட்ட ஐவேளைத் தொழுகைகளை* சரிவர நிறைவேற்றி வாருங்கள். ரமலான் என்னும் புனித மாதத்தில் நோன்பு நோற்று வாருங்கள். உங்கள் செல்வத்துக்குரிய ஜகாத்தை கணக்கிட்டு உங்ளைப் பரிசுத்தப் படுத்துவதற்காக வழங்கி வாருங்கள். உங்கள் இறைவனின் இல்லத்திற்குச் சென்று ஹஜ்ஜுக் கடமையையை நிறைவேற்றி வாருங்கள். உங்களை ஆளும் தலைவர்களுக்குக் கட்டுப்படுங்கள். இவற்றால் நீங்கள் உங்களுக்காக உறுதிப்படுத்தப்பட்டுள்ள சுவனத்திற்குச் செல்வீர்கள். 8 *மக்களே !* உங்கள் இறைவனை மிக விரைவில் நீங்கள் சந்திப்பீர்கள். அவன் உங்கள் செயல்கள் அனைத்தையும் பற்றி விசாரணை செய்வான். எனக்கு பிறகு நீங்கள் உங்ளுக்கிடையே கொலைக் குற்றம் புரிந்து வழிகேடர்களாக மாறி விட வேண்டாம். *அறிந்து கொள்ளுங்கள் !* நிச்சயமாக ஷைத்தான் உங்களை இந்த பூமியில் அவனை வணங்குவதைக் குறித்து ஏமாற்றமடைந்து முற்றிலும் நிராசையடைந்து விட்டான். ஆயினும் நீங்கள் மிக இலேசாகக் கருதும் செயல்களில் அல்லாஹ்வுக்கு மாறு செய்ய வைத்து ஷைத்தானுக்கு உடன்பட்டு தலைவணங்குவீர்கள். அதன் மூலம் அவன் மகிழ்சியடைவான். எந்தவகையிலும் சைத்தானியச் செயல்களுக்கு இசைந்து விடாதீர்கள். 9. *மக்களே ! அறிந்து கொள்ளுங்கள் ! உங்கள் இறைவன் ஒருவனே ! உங்கள் தந்தையும் ஒருவரே !* இறையச்சம் கொண்டோரைத்தவிர, அரபிகள் அஜமி அரபியல்லாதார்களை விட உயர்ந்தோருமல்ல. அதுபோல் அஜமிகள்அரபிகளை,விட,உயர்ந்தோருமல்ல. வெள்ளை நிறத்தவர் கறுப்பு நிறத்தவரை விடவோ, கறுப்பு நிறத்தவர் வெள்ளை நிறத்தை விடவோ சிறந்தோருமல்ல. *அனைவரும் ஆதமுடைய மக்களே !* அந்த ஆதம் மண்ணால் படைக்கப்பட்டவரே. *ஜாதித்திமிர், நிறத்திமிர், குலத்திமிர் அனைத்தையும் இதோ எனது காலின் போட்டு மிதிக்கிறேன்*. சொற்பொழிவை முடித்த வள்ளல் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வெள்ளம்போல் திரண்டிருந்த கூட்டத்தினரை நோக்கிக் கேட்டனர். 10. *மக்களே ! இறைவனது கட்டளைகளை நான் உங்களுக்கு அறிவித்து விட்டேனா ? இறைவன் எனக்களித்த தூதை நிறை வேற்றிவிட்டேனா ? என என்னைப்பற்றி உங்களிடம் விசாரிக்கும் போது, இறுதித் தீர்ப்பு நாளில் என்ன பதில் கூறுவீர்கள் ?* *நிச்சயமாக இறைவனது கட்டளைகளை எங்களுக்கு அறிவித்துவிட்டீர்கள் ! இறைவன் தங்களுக்கு வழங்கிய தூதுவத்தை நபித்துவத்தை முழுமையாக நிறைவேற்றிவிட்டீர்கள் ! எங்கள் வாழ்வுக்குத் தேவையான அனைத்து அறிவுரைகளையும் வழங்கிவிட்டீர்கள். என்றும் சாட்சியம் கூறுவோம்.!* அந்த மாபெரும் மனிதக்கடலிலிருந்து ஒருமுகமாக வான்முட்ட எழுந்தது இந்தப் பேரொலி. இதைக்கேட்ட *இறுதித்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்* அவர்கள் வானத்தை நோக்கி தங்களது திருக்கரங்களை உயர்த்தி, *அல்லாஹும்மஷ்ஹது ! அல்லாஹும்மஷ்ஹது !! அல்லாஹும்மஷ்ஹது !!!* *இறைவா ! நீயேஇதற்கு சாட்சி ! இறைவா !நீயே இதற்கு சாட்சி !* *இறைவா ! நீயே இதற்கு சாட்சி ! என்று மும்முறை முழங்கினார்கள்*. *மேலும் இங்கு வந்திருப்பவர்கள், வராதவர்களுக்கும் என்னுடைய இந்தச் செய்திகளைத் தெரிவித்துவிடுங்கள். ஏனெனில் நேரில் கேட்போரைவிட கேள்விப்படுவோரில் சிலர் நன்கு விளக்கமுடையோராக இருப்பர்*. கட்டளையை நடைமுறைப்படுத்த....!
இஸ்லாம் - ShareChat
#வேடிக்கை காலை வணக்கம்
வேடிக்கை - godmng சித்திக்பாய் godmng சித்திக்பாய் - ShareChat
#வேடிக்கைஇருக்குடா உங்களுக்கும்
வேடிக்கை - ரொம்ப சந்தோஷம் 2026 HAPPY+ NEW*YEAR அப்புடியேல்லாம் என்ன நினைச்சுராதிங்க இனிமேல் வச்சுசெய்வேன் பாருடா தான் ரொம்ப சந்தோஷம் 2026 HAPPY+ NEW*YEAR அப்புடியேல்லாம் என்ன நினைச்சுராதிங்க இனிமேல் வச்சுசெய்வேன் பாருடா தான் - ShareChat
#வேடிக்கை
வேடிக்கை - NEI YEAR மலரும் புத்தாண்டில் உங்கள் 8 வாழ்க்கை வளமாகட்டும் 8 துன்பங்கள் கரைந்து இன்பங்கள் நிறையட்டும்கனவுகள் நனவாகி வெற்றிகள் குவியட்டும் அன்பான உறவுகளுக்கு இனியபுத்தாண் வாழ்த்துக்கள். 4 NEI YEAR மலரும் புத்தாண்டில் உங்கள் 8 வாழ்க்கை வளமாகட்டும் 8 துன்பங்கள் கரைந்து இன்பங்கள் நிறையட்டும்கனவுகள் நனவாகி வெற்றிகள் குவியட்டும் அன்பான உறவுகளுக்கு இனியபுத்தாண் வாழ்த்துக்கள். 4 - ShareChat
#🚹உளவியல் சிந்தனை
🚹உளவியல் சிந்தனை - 2025 எப்பாடி போச்சு? நான் பாசம் வைக்க, நேசம் வைக்க, எல்லாரும் எனக்கு ஆப்பு வைக்க, ஒரே ஜாலியா போச்சு  !! 2025 எப்பாடி போச்சு? நான் பாசம் வைக்க, நேசம் வைக்க, எல்லாரும் எனக்கு ஆப்பு வைக்க, ஒரே ஜாலியா போச்சு  !! - ShareChat
#🚹உளவியல் சிந்தனை
🚹உளவியல் சிந்தனை - 81 8606078ಶ உன கருத்துச்சொல் 81 8606078ಶ உன கருத்துச்சொல் - ShareChat
#வேடிக்கை
வேடிக்கை - fb page miss you शवाहा 09 काजल Happy New Year $ 2028, कुशवाहा काजल fb page miss you शवाहा 09 काजल Happy New Year $ 2028, कुशवाहा काजल - ShareChat
#வேடிக்கை இது இறைவனின் கணக்கு... ஒரு கல் மண்டபத்தில் இரண்டு வழிப் போக்கர்கள் அமர்ந்திருந்தனர். இரவு நேரம்…, பெருத்த மழை வேறு..., அப்போது அங்கே மற்றொருவரும் வந்து சேர்ந்தார். வந்தவர் "நானும் இரவு இங்கே தங்கலாமா என்று கேட்டார். அதற்கென்ன? தாராளமாய் தங்குங்கள் என்றார்கள். சிறிது நேரம் கழித்து எனக்கு சாப்பிட ஏதாவது கிடைக்குமா? என்றார் வந்தவர். இருவரில் ஒன்னாம் நபர் சொன்னார், என்னிடம் ஐந்து ரொட்டிகள் இருக்கின்றது என்றார். இரண்டாமவர் என்னிடம் மூன்று ரொட்டிகள் இருக்கின்றது என்றவர், ஆக மொத்தம் எட்டு ரொட்டிகள், இதனை நாம் எப்படி மூவரும் சமமாய் பிரித்துக்கொள்ள முடியும்? என்றார். மூன்றாம் நபர், இதற்கு நான் ஒரு வழி சொல்கிறேன், என்றார். ( தேவை உள்ளவன்தான் தீர்வு சொல்வான்!) நீங்கள் உங்கள் ரொட்டிகளை, ஒவ்வொரு ரொட்டியையும் மூன்று துண்டுகள் போடுங்கள். இப்பொது இருபத்து நான்கு துண்டுகள் கிடைக்கும்! நாம் மூவரும் ஆளுக்கு எட்டு துண்டுகள் எடுத்து கொள்ளலாம் என்றார். இது சரியான யோசனை என்று அப்படியே செய்தனர்… ஆளுக்கு எட்டு துண்டு ரொட்டிகளை சாப்பிட்டுவிட்டு உறங்கினார்கள்...பொழுது விடிந்தது, மழையும் நின்றது. மூன்றாவதாய் வந்தவர் கிளம்பும்போது, உங்கள் உதவிக்கு மிக்க நன்றி, என்று சொல்லி எட்டு தங்க நாணயங்களை கொடுத்து, நீங்கள் உங்களுக்குள் பிரித்து கொள்ளுங்கள், என்று சொல்லிவிட்டு விடை பெற்றார். மூன்று ரொட்டிகளை தந்தவர், அந்த காசுகளை சமமாகப்பிரித்து, ஆளுக்கு நான்காய் எடுத்துக்கொள்ளலாம் என்றார். மற்றவர் இதற்கு சம்மதிக்கவில்லை. மூன்று ரொட்டிகள் கொடுத்த உனக்கு மூன்று காசுகள். ஐந்து ரொட்டிகள் கொடுத்த எனக்கு ஐந்து காசுகள் என்று வாதிட்டார்.(3:5) மூன்று ரொட்டிகள் கொடுத்தவர் ஒப்புக் கொள்ளவில்லை, என்னிடம் மூன்றே ரொட்டிகள் இருந்தபோதும், நான் பங்கிட சம்மதித்தேன்… நிறைய இருப்பவன் கொடுப்பது ஒன்றும் பெரிய செயல் ஆகாது. அதனால் என் செய்கையே பாராட்டத்தக்கது, என்றாலும் பரவாயில்லை, சமமாகவே பங்கிடுவோம் என்றார். சுமுகமான முடிவு எட்டாததால், விஷயம் அரச சபைக்கு சென்றது. அரசனுக்கு யார் சொல்வது சரி, என்று புரியவில்லை. நாளை தீர்ப்பு சொல்வதாய் அறிவித்து, அரண்மனைக்கு சென்றார். மன்னருக்கு இரவு முழுவதும் இதே சிந்தனை. வெகு நேரம் கழித்தே தூங்க முடிந்தது… மன்னருக்கு, கனவில் இறைவன் தீர்வு அளித்து, தீர்ப்பும்,விளக்கமும் தந்தார். இறைவன் சொன்ன தீர்ப்பும், விளக்கமும் மன்னரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அடுத்த நாள் சபை கூடியது. மன்னர் இருவரையும் அழைத்தார். மூன்று ரொட்டிகளை கொடுத்தவருக்கு ஒரு காசும், ஐந்து ரொட்டி கொடுத்தவருக்கு ஏழு காசுகளும் கொடுத்தார். ஒரு காசு வழங்கப்பட்டவர், "மன்னா...! இது அநியாயம். துரோகம். அவரே எனக்கு மூன்று காசுகள் கொடுக்க ஒப்புக் கொன்டார்" என்றார். அரசர் சொன்னார். நீ கொடுத்தது ஒன்பது துண்டுகள். அதிலும் எட்டு துண்டுகள் உன்னிடமே வந்து விட்டது. அவன் தந்தது பதினைந்து துண்டுகள். அவனுக்கும் எட்டுத்துண்டுகள்தான் கிடைத்தது. ஆக நீ தருமம் செய்தது ஒரு துண்டு ரொட்டி. இதற்கு இதுவே அதிகம் . அவர் தருமம் செய்தது ஏழு துண்டுகள். ஒரு துண்டுக்கு ஒரு காசு வீதம் பிரித்துக் கொடுத்திருக்கிறேன்(1:7) என்றார்... ஆம் ! இறைவன் கணக்கு இப்படி துல்லியமாகதான் இருக்கும்… நீங்கள் இழந்ததை எல்லாம் தருவது அல்ல, அவன் கணக்கு... எது உங்களுக்கு தகுதியானதோ அதுதான் உங்களுக்கானது. நீ செய்த புண்ணிய கணக்கு...! நாம் செய்யும் செயலில் இறைவன் இருக்கிறார் என்பதை மறவாதீர்கள். முழுமையாக தன்னை அறிந்தவனை இறைவன் அறிவான்...
வேடிக்கை - YEAR HAPPY N5 कुशवाहा काजल @ कुशवाहा 2026 hlulc YEAR HAPPY N5 कुशवाहा काजल @ कुशवाहा 2026 hlulc - ShareChat
#வேடிக்கை ஜெய் ஹிந்த் " என்ற மாபெரும் முழக்கம் கொண்ட இந்த வார்த்தையை 1941ல் உருவாக்கியவர் "ஆபித் ஹசன் சப்ரானி" எனும் இஸ்லாமியர். "இங்குலாப் ஜிந்தாபாத்" எனும் சொல்லை உருவாக்கியவர் "ஹஸ்ரத் மொஹானி" எனும் இஸ்லாமியர். "மா தேரே வதன் பாரத் மாத்தா கி ஜெய்" எனும் மாபெரும் எழுச்சிமிகு வார்த்தையை முதன் முதலில் உச்சரித்தவர் "அஸீமுல்லா கான்" எனும் இஸ்லாமியர். மகாத்மா காந்தியின் பெயரில் சொல்லப்படும் (QUIT INDIA) "குய்ட் இந்தியா" எனும் தலைப்பை உருவாக்கியவர் சுதந்திர போராட்ட வீரரும், 1942ல் பம்பாய் மேயருமாயிருந்த "யூசுப் மெஹர் அலி" எனும் இஸ்லாமியர். "சாரே ஜஹான்சே அச்சா, ஹிந்துஸ்தான் ஹமாரா" எனும் தேசப்பற்று மந்திரத்தை நமக்கு எழுதித்தந்தவர் "முஹம்மது இக்பால்" எனும் இஸ்லாமியர். சுதந்திர போராட்ட வீரர்களுக்காக "சர்பரோஷ் கி தமன்னா" என்கிற தேசபக்தி பாடலை 1921ல் எழுதியது உருது கவிஞர் "பிஸ்மில் அஸ்மாதி" எனும் இஸ்லாமியர். அதே போல, சுதந்திரம் தர முடிவான பின் அதிகார கைமாற்றம் குறித்து பேச ஆங்கிலேயரால் மூன்று தரப்பு அழைக்கப்பட்டது. 1. பாகிஸ்தான் தரப்பு 2. இந்தியா தரப்பு 3. 542 சமஸ்தானங்கள் தரப்பு. மூன்றிற்கும் தலைமை வகித்தவர்கள் முறையே முகமது அலி ஜின்னா, மௌலானா அபுல் கலாம் ஆசாத், பீகார் நவாப். அனைவருக்கும் இந்திய முஸ்லிம்கள், முஸ்லிம் தலைவர்கள் விடுதலைப் போரில் பெரும் பங்கு தலைமை வகித்தனர், வழி நடத்தினர் என சொல்ல ஏராளம் உண்டு. ஆனால் இந்திய மக்களிடம் வெறுப்பை மட்டுமே விதைக்கும் இந்த பாசிச தலைவர்கள் வழிகாட்டிகள் காட்டிக் கொடுத்தவர்கள், மன்னிப்புக் கடிதம் கொடுத்தவர்கள், மதரீதியான பிளவுபடுத்தி விடுதலைப் போரை சீர்குலைக்க ஆங்கிலேயரிடம் கைக்கூலியாக மாதாந்திர ஊதியம் பெற்றவர்கள். இந்தியாவில் வசிக்கவே தகுதியற்ற இந்த இழிபிறவிகள் நம்முடைய பெருந்தன்மையால், சகோதரத்துவம், அன்பு, பகைவருக்கும் அருளும் நன்னெஞ்சால் இங்கு வாழும் உரிமை பெற்ற இவர்கள்.நம் தலைமுறையை நிம்மதி இல்லாமல் வாழ அனைத்து திட்டங்களையும் செய்கிறார்கள். தேசத்தின் தலைமுறை ஒற்றுமை, நிம்மதிக்காக இந்தியர்கள் இவர்களுக்கெதிராக நிற்க வேண்டும். -Krishnan. இன்குலாப் சிந்தாபாத் அன்பும், உண்மையும் என்றும் அழிவதில்லை. காலம் மிகச்சிறந்த சாட்சி
வேடிக்கை - அசைவபலிக்குசமமானசைவபலி ஏதுனுதெரியுமா2 ஒரு ஊமத்தை பலி 21 பன்றிக்கு பலிக்கு சமம் ஒரு எலுமிச்சை பலி மூன்று கோழி பலிக்கு சமம் ஒருதும்மட்டிகாய் பலி மூன்று ஆடு பலிக்கு சமம் பூசணிக்காய் பலி ஒரு ஒரு மனித பலிக்கு சமம் அசைவபலிக்குசமமானசைவபலி ஏதுனுதெரியுமா2 ஒரு ஊமத்தை பலி 21 பன்றிக்கு பலிக்கு சமம் ஒரு எலுமிச்சை பலி மூன்று கோழி பலிக்கு சமம் ஒருதும்மட்டிகாய் பலி மூன்று ஆடு பலிக்கு சமம் பூசணிக்காய் பலி ஒரு ஒரு மனித பலிக்கு சமம் - ShareChat