@news_news
@news_news

சுடச்சுட செய்திகள்

உங்களுக்காக சுடச்சுட செய்திகள்

சேலம் மாவட்டம் நரிப்பள்ளம் என்ற இடத்தில் இரண்டு பேருந்துகள் மோதிக் கொண்டதில், 5 பேர் உயிரிழந்தனர். நேபாள நாட்டு தலைநகர் காத்மாண்டுவை சேர்ந்த 32 பேர், தமிழகத்திற்கு ஆன்மிக சுற்றுலா வந்துள்ளனர். தமிழகத்தில் உள்ள கோயில்களை தரிசனம் முடித்துக் கொண்டு, ராஜஸ்தான் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக மின்னல் வேகத்தில் வந்த ஆம்னி பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் நேபாளத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 28 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
#

📠 📃 செய்தி

📠 📃 செய்தி - KOSO தனலமுனற BHARAT அதிவிரைவு - ShareChat
126 காட்சிகள்
16 மணி நேரத்துக்கு முன்
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த கருங்காலிகுப்பம் கிராமத்தில் 30 ஆண்டுகள் பழமை வாய்ந்த எம்ஜிஆர் சிலை ஒன்று உள்ளது. கடந்த ஜனவரி மாதம் 17-ம் தேதி எம்ஜிஆர் பிறந்ததினம் கொண்டாடப்பட்டது. இதற்கு முன் தினம் எம்ஜிஆர் சிலையை அதிமுக நகர செயலாளர் ஓசி முருகன் தலைமையில் தூய்மைப்படுத்தி காவி நிறத்தில் சட்டை அணிவிக்கப்பட்டு பின்னர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து கடந்த இரண்டு மாத காலமாக இந்த கிராமத்தில் உள்ள எம்ஜிஆர் சிலை காவி நிறத்தில் காணப்படுகிறது. வழக்கமாக எம்ஜிஆர் சிலைக்கு வெள்ளை நிறத்தில் மட்டுமே சட்டை அணிவிக்கப்பட்டு இருக்கும் ஆனால் தமிழகத்தில் எந்தப் பகுதியிலும் இல்லாத வகையில் கருங்காலிகுப்பம் கிராமத்தில் உள்ள இந்த சிலைக்கு மட்டுமே காவி நிறத்தில் காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது
#

📠 📃 செய்தி

📠 📃 செய்தி - ShareChat
152 காட்சிகள்
17 மணி நேரத்துக்கு முன்
தற்போது இந்தியா முழுவதும் ரயில் நிலையங்களில் பயணிகளின் பயன்பாட்டிற்காக ’ப்ரீ வைபை’ என்ற பெயரில் இலவச இணையதள சேவை பயன்பாட்டில் உள்ளது. 2015-ம் ஆண்டு இந்திய பிரதமர் மோடியாலும், கூகுளின் சிஇஓ சுந்தர் பிச்சையாலும் இணைந்து அறிவிக்கப்பட்ட இந்த திட்டம், 2016ம் ஆண்டு மும்பையின் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் முதன்முறையாக ‘ரெயில் டெல்’ என்ற நிறுவனத்துடன் இணைந்து பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. தற்போது இந்த திட்டம் இந்தியாவின் பெரும்பாலான ரயில் நிலையங்களில் அமலில் உள்ளது.இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளில் ஜியோ உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வருகையாலும், சந்தையில் ஏற்பட்ட கடும் போட்டியாலும் இணையதள சேவைக்கான கட்டணங்கள் பெருமளவில் குறைந்துள்ளன. இதனால் மக்கள் பெரும்பாலும் வைபை போன்ற சேவைகள் மீது நாட்டம் காட்டுவதில்லை என்ற காரணத்தால் தாங்கள் இந்த ‘ப்ரீ வைபை திட்டத்தில்’ இருந்து விலக முடிவெடுத்திருப்பதாக கூகுள் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
#

📠 📃 செய்தி

📠 📃 செய்தி - FREE WIFI 02708 FREE WIFI IN ENORIU - ShareChat
10.5k காட்சிகள்
1 நாட்களுக்கு முன்
CAA, NRC மற்றும் NPR-க்கு எதிராக சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர் போராட்டம் நடந்து வருகிறது. இன்று தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை முற்றுகையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.ஆனால், சட்டப்பேரவை முற்றுகைப் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இந்த நிலையில், அனுமதியின்றி இன்று போராட்டம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.காலை முதலே போராட்டக் காரர்கள் கடற்கரை சாலையில் திரண்டனர். இதனால், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.சிசிடிவி மற்றும் ட்ரோன் கேமரா மூலம் கூட்டத்தை கண்காணிக்க போலீசார் சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
#

✊CAA போராட்டம்

✊CAA போராட்டம் - சேப்பாக்கம் ) 18 NEWS தமிழ்நாடு * rtly சிசிடிவி கேமராக்கள் உதவியுடன் கண்காணிப்பு - ShareChat
24.1k காட்சிகள்
1 நாட்களுக்கு முன்
மற்ற ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
லிங்க் காப்பி செய்ய
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட்...
Embed Post
மற்ற ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
அன்ஃபாலோவ்
லிங்க் காப்பி செய்ய
புகாரளி
தடுக்க
நான் புகார் தெரிவிக்கிறேன் ஏனென்றால்